.

Friday, June 29, 2007

அறிமுகம் - தமிழ் பீட்டர்ஸ்

நண்பர்களே... தமிழ் பீட்டர்ஸ் என தமிழ் வழி ஆங்கிலம் பேச/எழுத உதவும் குழு பதிவொன்றை ஆரம்பித்துள்ளோம். தமிழ்மணத்தில் தெரிய சில நாட்கள் ஆகலாம். அதுவரை நேரடிகாகச் சென்று படிக்கவும்.

இதில் இணைந்து பதிவிட விரும்பும் மக்கள் பதிவிலுள்ள முகவரிக்கோ என் மின்னஞ்சலுக்கோ மடல் செய்யுங்கள். உங்கள் ஆதரவு இருக்கும்வரையே இந்த முயற்சி தொடரும் எனும் மிரட்டலையும் முன்வைக்கிறேன்.

என் ஆங்கிலம்ம் பேசலாம் வாங்க பதிவைப் படித்த அண்ணன் பாலபாரதி மற்றும் பொன்ஸ் அவர்களின் வேண்ட்டுகோள்களுக்கிணங்க, ரவிஷங்கர் மீண்டும் நினைவூட்டியதில் பீட்டர்ஸ் ஆரம்பமாகிவிட்டது.

:)

பீட்டர்ஸ் தளத்துக்குச் சென்று நோக்க நோக்க நொடியில் நோக்க

8 comments:

யோசிப்பவர் said...

கோபப்படலைன்னா, ஒரே ஒரு கேள்வி. வலைப்பதிவு 'எழுதுபவர்கள்/படிப்பவர்கள்'இல் ஆங்கிலம் தெரியாதவர்கள் இருக்கிறார்களா?

சிறில் அலெக்ஸ் said...

நிச்சயமா இருப்பாங்க. ஓரளவுக்குத் தெரிந்தாலும் தயக்கமின்றி, இலக்கணம் புரிஞ்சு பேசுறவங்க குறைவாக இருக்கலாம்.

நான் சொன்னதுபோல சென்னை சந்திப்பின்போது பாலபாரதியும் பொன்சும் ஆங்கிலம் பேசலாம் வாங்க பகுதியை தொடர்ச் சொன்னாங்க (அதனால அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுண்ணு சொல்ல வரல) மட்டுமல்ல அந்த பதிவுக்கும் நல்ல வரவேர்ப்பிருந்தது.

நாங்க 100 விஷயம் எழுதி அதுல 10 விஷயம் ஒருவருக்கு பயனாயிருந்தா அது போதுமே

//கோபப்படலைன்னா//
என்னையா ஆளாளுக்கு இதையே சொல்லிட்டிருக்க்கீங்க. நான் எத்தனபேர்மேல கோபப்பட்டிருக்கேன்? :)
ஜாலிய உரையாடலாம். பிரச்சனையே இல்லை.

:)

G.Ragavan said...

சிறில் நல்ல முயற்சி. நமக்குத் தெரிஞ்சத அடுத்தவங்களுக்குச் சொல்லிக் குடுக்குறது. ஆனா வலைப்பதியுறவங்கள்ள எத்தன பேருக்கு இது தேவைப்படும்னு தெரியலை. ஆனாலும் தொடருங்க. ஏத்துன விளக்குல எங்கையாவது இருள் போனா நல்லதுதான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வாழ்த்துக்கள்.

விவேகானந்தா கல்வி நிலையத்தில் இருந்து யாரும் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி :) ரொம்ப அடிப்படையாக எழுதும்போது ஏற்கனவே நன்கு ஆங்கிலம் தெரிந்த பல தமிழ் வலைப்பதிவர்கள் வந்து எட்டிப் பார்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், தொடர்ந்து எழுதினால், புதிதாக ஆங்கிலம் கற்பவர்களுக்கு நாளடைவில் இது ஒரு நல்ல உசாத்துணையாக (reference) ஆக இருக்கும்.

செய்திக்கு சற்றுமுன் என்பது போல், ஆங்கிலம் குறித்து கேட்டுத் தெளிய peters என்று வளர மீண்டும் வாழ்த்துக்கள்.

வெங்காயப் பதிவு (சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெங்காயம், நம்ம ஊரு வெங்காயம்?) எப்போ :)

சிறில் அலெக்ஸ் said...

நண்பர்களின் கருத்துக்கு நன்றி.

ஆதரவு இருந்தால் மட்டுமே தொடரும்.

//வெங்காயப் பதிவு (சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெங்காயம், நம்ம ஊரு வெங்காயம்?) எப்போ :)//

யாருமே ஆவலாயில்ல அதனால யோசிக்கிறேன். எங்கூட சேந்தா கெட்டுப் போயிருவோம்ணு பயப்படறாங்க
:)

யோசிப்பவர் said...

//என்னையா ஆளாளுக்கு இதையே சொல்லிட்டிருக்க்கீங்க. //

இதுக்கெதுக்கு இவ்வளவு கோவப்படறீங்க?;-))

சிறில் அலெக்ஸ் said...

//இதுக்கெதுக்கு இவ்வளவு கோவப்படறீங்க?;-)) //

சூப்பரா யோசிக்கிற்றீங்க :))

Anonymous said...

நண்பரே
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். கூடவே சின்னச் சின்ன கதைககளையும் கொடுத்து மொழி
பெயர்க்கச் சொல்லுங்களேன். உரைநடையை சிறிது சிறிதாகப் புரிந்து கொள்ளும் போது
இலக்கணமும் நன்றாகப் புரியத் தொடங்கும். புரிந்ததை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதல் வாரம் ஆங்கிலக் கதை. அடுத்த வாரம் அதன் மொழிபெயர்ப்பு என்று கூடச்
செய்யலாம். இன்னும் சுவாரசியமாக்க, நமக்குப் பிடித்த பிரபலங்களைப் பற்றிய செய்திக்குறிப்புகளாகக்கூட இது இருக்கலாம். Just a suggestion

சிறில் அலெக்ஸ்