.

Monday, June 04, 2007

பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!

நண்பர் பாலபாரதி சொன்ன அறிவுரையின்பேரில் Fire Fox உலவியை பயன்படுத்த ஆரம்பித்தேன். அபாரம், அற்புதம். பதிவர்களுக்கான பல கருவிகளையும் இதில் எளிதில் இணைத்துக்கொள்ள முடிகிறது.

அபாரமான RSS Reader!
Sage என ஒரு அருமையான செயலியின் துணைகொண்டு எளிதில் RSS ஓடைகளைத் தேடி, வாசிக்க இயல்கிறது.

StumbleUpon! எனும் செயலி வலையில் இருக்கும்ம் சுவாரஸ்யமானவைகளை கண்டுகொள்ள வழ்ழி செய்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தலைப்புக்களில் சிறப்பானவை என மற்றவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தளங்களை சென்று பார்க்க இயல்கிறது. நீங்களும் பரிந்துரைகள் செய்யலாம்.

StumbleUpon! வழியாக கண்டுகொண்டவற்றை சேகரித்து வைக்கவோ, மெயிலில் அனுப்பவோ அல்லது நேரடியாக பதிவில் போடவோ நினைத்தால் Clipmarks எனும் செயலியை பயன்படுத்தலாம். இதன்மூலம் தளங்களிலிருந்து படங்கள், பத்திகள் என எதையும் உங்களால் சேகரித்து பாதுகாக்க இயலும்.

Stumble! மற்றும் Clipmarks உதவியுடன் நான் செயல் படுத்தும் பதிவு இது.

எனவே பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!

முந்தைய பதிவு!

10 comments:

வடுவூர் குமார் said...

உங்கள் useenthis உள்ள காய்கறி படங்கள் அருமையிலும் அருமை.
எழுத்தில்லா கவிதை.
சில குபுக் என்று சிரிப்பை வரவழைக்கின்றன.
தொடுப்பு கொடுக்க உங்கள் அனுமதி தேவை.

வடுவூர் குமார் said...

இந்த உலாவி உபயோகப்படுத்திய பிறகு வேறெங்கும் திரும்பிப்பார்க்கக்கூட நேரமில்லை.
ஏன்,இப்படி தமிழில் தட்டச்சு செய்வது கூட அதிலிருந்து தான்.

சிறில் அலெக்ஸ் said...

வடுவூர். சுகமா?
நானே சுட்டு வச்சிருக்கேன் இதிலேந்து சுட அனுமதி தேவையா. Formalஆ பயன்பட்டுத்த அந்தந்த ட்தளங்களை தொடர்புகொள்ளலாம். என் பதிவில் மூலம் உள்ளது (எனக்கல்ல)
:)

வெங்கட்ராமன் said...

//////////////
பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!
//////////////

அப்புடியே நெருப்பு நரிக்கும் (Fire Fox) ஒரு ஓ போடலாமே.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதை பயன் படுத்தி வருகிறேன் சிறப்பான ஒரு மென்பொருள்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாறிப் பார்த்த பின்ன தான் அருமை தெரியு இல்ல :) ..நானும் wordpress, tamil99, ubuntuக்கு மாறுங்க மாறுங்கன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்..மாறிப் பார்த்துட்டு எனக்கும் ஓ போட்டு ஒரு பதிவு போடுவீங்க தானே :)

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... இப்பத்தான் பார்த்தேன்.

ஜே
நன்றி

எல்லாமே கட்டற்ற மென்பொருளுக்கு போய் சேர வேண்டியது. அடியேன் அதை பாவிப்பவர்களில் ஒருத்தன். இப்போ நீங்களும்...!

மிகுந்த மகிழ்வளிக்கிறது.

உண்மைத்தமிழன் said...

நல்லாயிருங்க சாமிகளா.. நல்லாயிருங்க..

சுந்தர் / Sundar said...

அண்ணுக்கு , ஜே !

சிறில் அலெக்ஸ் said...

//மாறிப் பார்த்த பின்ன தான் அருமை தெரியு இல்ல :) ..நானும் wordpress, tamil99, ubuntuக்கு மாறுங்க மாறுங்கன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்..மாறிப் பார்த்துட்டு எனக்கும் ஓ போட்டு ஒரு பதிவு போடுவீங்க தானே :)//

உபண்டுவுக்கு மாற கொஞ்சம் தயக்கம் இருக்குது. இதுகுறித்து விபரங்கள் சொல்லுங்க. குறிப்பா பார்டிஷனிங், விண்டோஸுக்கு திரும்புவது போன்ற விதயங்கள் குறித்து.

அப்புறமா நிச்சயம் ஓ போடுறேன்

சிறில் அலெக்ஸ் said...

//சுந்தர் / Sundar said...

அண்ணுக்கு , ஜே ! //

ஒரு கூட்டமாத்தான் திரியுறாங்கப்பா..
:)

சிறில் அலெக்ஸ்