.

Thursday, June 21, 2007

7க்கும் 9க்கும் நடுவில்

7 ஏன் பயங்கரமான நம்பர் தெரியுமா?
ஏண்ணா seven ate nine.

இப்ப வலைப்பதிவுல 8 போட்டாத்தான் லைசன்ஸ் குடுப்பாங்களாம். சேவியர் அவர்கள் அன்பாய் அழைத்ததன்பேரின் என்னைப் பற்றி 8 குறிப்புக்கள்.

என்னத்த சொல்ல. பலமுறை சொல்லியாச்சே... சரி ரிப்பீட்டானா மன்னிச்சுருங்க.

1. பிறந்து வளர்ந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகிய கடற்கரை கிராமம் முட்டத்தில். முட்டம் போன்ற ஒரு எளிய கிராமத்திலிருந்து வந்து எங்களாலேயும் கலக்க முடியும்ணு காமிக்குறோம்ல. அதான் பெருமையான விஷயம்.

2. ரெம்ப மிஸ் பண்றது எங்க ஊரத்தான். என்னதான் சிக்காகோ சியாட்டல்னு சுத்துனாலும் நம்ம சொந்த ஊர்ல இருந்தக் காலங்கள் மறக்க இயலாதவை. இப்பவும் சினமா எதுலையாச்சும் முட்டம் காண்பிச்சாங்கண்ணா நினைவுகள் 'அடி ஆத்தாடீ'ன்னு பறந்துடும்.

3. திருப்பத்தூர் டான் போஸ்கோ பள்ளிக்கூடத்துல +1 & +2 படிச்சத மறக்க முடியாது. பள்ளியில கிட்டத்தட்ட ஒரு ஹீரோ அந்தஸ்த்து கெடச்சது. அங்க நடந்த எல்லா நிகழ்ச்சிகள்லேயும் நான் மேடையில இருப்பேன். மேக் அப் போட்டுகிட்டோ அல்லது இல்லாமலோ. நான் மேடைக்கு வந்ததும் கூட்டம் தன்னாலே சிரிக்கும். அருமையான ஆசிரியர்கள். ஒரு தோழனப் போல வளர்த்து விட்டாங்க. நான் மீண்டும் போக விரும்பும் ஒரு இடங்களில் ஒன்று என் பள்ளிக்கூடம், டான் போஸ்கோ, திருப்பத்தூர்.

4. பள்ளிக்கூடப் போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் 15 வருஷமா ஒண்ணுமே எழுதாம பின்பு வலைப்பதிய ஆரம்பிச்சேன். அதற்கு வழிகாட்டி ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஒரு சிறந்த அனுபவமா, அங்கீகரிப்பா அமைந்துவிட்டது பதிவுகள். இணைய போட்டிகளில் கிடைத்த வெற்றிகள் பெருமைக்குரியவை. தேன்கூடு போட்டிகளில் முதல் பரிசு இரண்டாம் பரிசுன்னு இருமுறை கிடத்தது. தமிழ் சங்கத்தின் கவிதைப்போட்டியில் முதல் பரிசு, அன்புடன் குழுமத்தில் என் பாட்டுக்கு கிடைத்த 2ஆம் பரிசு. சுவையான, ஊக்கமூட்டும் அனுபவங்கள்.

5. கடந்த ஏப்ரல் 22ல் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு அருமையான அனுபவம். பதிவுலக மக்களை சந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பு. மக்கள் தொலைக்காட்சி பேட்டி, தினகரன்ல படம்ணு அமர்களமாயிடுச்சு வேற. இன்னும் பெரிய நிலையை நோக்கி நாம (பதிவர்கள்) பயணிக்கணும் மக்களும், ஊடகமும் நம்மைத் தேடி வரவேண்டும். இந்த சந்திப்பில் என்னுடைய எழுத்தை மக்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என நேரடியா தெரிய முடிந்தது. பாலபாரதி, வரைவனையான், லக்கிலுக், ரோசாவசந்த், நாமக்கல் சிபி, பொன்ஸ், பாஸ்டன் பாலா, பிரகாஷ், வடுவூர் குமார், பாலராஜன் கீதா, சுகுணா திவாகர், ஓகை, மோகன்தாஸ், கிருபா ஷங்கர், தருமி, ஓசை செல்லா, நவீன், தங்கவேல், ஜி.ரா, கௌதம், இன்னும் பல நண்பர்களையும் சந்திக்க முடிந்ததுல ரெம்ப மகிழ்ச்சி. முதலில் வந்த தொலைபேசி அழைப்புக்களிலேயே ரெம்ப ஆடிப்போயிட்டேன். இணைய நண்பர்கள் இனிய நண்பர்கள்.

6. இன்னொரு பெருமை தரும் விஷயம் சற்றுமுன். இதற்கு நான் முழுமையான காரணம் அல்ல. நண்பர்கள் சும்மா அசுர வேகத்தில் சற்றுமுன்னை வளத்துட்டாங்க. இப்ப பேரச் சொன்னாலே அதிருதுல்ல. :) (thought only spoils the life) சற்றுமுன் விரைவில் இன்னும் பெரிதாக செயல்பட வேண்டிய முயற்சிகளை எடுக்க திட்டம் இருக்கிறது். சென்னை வந்தபோது பாலபாரதியின் ஆபீசுக்கு போயிருந்தேன். (அத ஆபீஸ்னு சொல்லலாம்முங்களா?) அங்க ஒருவர் தீவிரமா சற்றுமுன் வாசித்துட்டிருந்தார். அப்பத்தான் எனக்கு இதன் வெற்றி முதன் முதலாய் புரிந்தது.

விளம்பர இடைவெளி: சற்றுமுன் போட்டிக்கு உங்கள் படைப்புக்களை அனுப்பிவிட்டீர்களா?

இன்னும் ரெண்டு பாயிண்ட் எழுதணுமா? ஹையோ...

7. எனக்கு பிடித்த உணவுன்னா மீன்வகைகள்தான். (வேற என்னவாயிருக்க முடியும்?) நண்டு எறால் மீனுண்ணு ஒரு கட்டு கட்டிட்டிருந்த என்ன டையபட்டீஸ் இருக்குண்ணு கட்டி போட்டுட்டாங்க. இப்பெல்லாம் ரெம்ப யோசிச்சு சாப்பிடவேண்டியிருக்கு. இனிமையானவன்ணா டையபட்டீஸ் உள்ளவண்ணு அர்த்தமா? என்ன இருந்தாலும் உடம்ப வெயிட்ட குறச்சிட்டு அளவா சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்வதுல ஒரு ஆனந்தம் இருக்குது. சும்மா பதிவேண்ணு இருக்காம இப்பெல்லாம் காலையில அரைமணி நேரம் ஜாகிங் சாயங்காலம் டென்னிஸ். ஆபீஸ் சீட்ல உக்காந்து கால ஆட்றதெல்லாம் எக்சர்சைஸ் இல்லையாம்..

8. நான் இப்டி இணையத்துல ஓரளவு தெரியப்பட்ட பதிவர் என்பதை என் மனைவியத் தவிர என் குடும்பத்தில் யாரும் முழுதாய் உணரவில்லை. மக்கள் டிவி பேட்டியைக் கூட என் பெற்றோர் முழுதாய் பார்க்கவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான தகவல்ணே சொல்லலாம். தோராயமா ஏதோ நான் எழுதுறேன் என்கிற தகவல்தான் அவங்களுக்கு தெரியும். அவங்களும் படிக்க ஆரம்பிச்சுட்டா கூச்சமாப் போயிரும் எனக்கு. :)

அப்படா ஒரு ்வழியா வழியா 8 போட்டுட்டேன். அடுத்து 8 பேரக் கூப்பிட்டு சங்கடத்துல ஆழ்த்தணுமாம்.

1. புளியமரம் தங்கவேல்
2. விவசாயி இளா
3. நிர்மல்
4. சிவபாலன்
5. சர்வேசன்
6. மணியன்
7. கவிதா(33% இட ஒதுக்கீட்டில்*)
8. அருட்பெருங்கோ

* இட ஒதுக்கீடு அணிலுக்குத்தான் கவிதாவுக்கல்ல :)

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

13 comments:

SurveySan said...

Thanks for the invite.

அனானியா சுத்தர நான், சொந்த வாழ்க்கையிலேருந்து ஒரு எட்ட போடணும்னா, சிக்கல்தான் :)
ஆனாலும், யோசிச்சு, மண்டைய கொடஞ்சு போட்டுருவோம்ல. வரேன் எட்டோட :)

ஜோ/Joe said...

//நண்டு எறால் மீனுண்ணு ஒரு கட்டு கட்டிட்டிருந்த என்ன டையபட்டீஸ் இருக்குண்ணு கட்டி போட்டுட்டாங்க. //

டையாபட்டீஸ் இருக்குரவங்க மீன் சாப்பிடக்கூடாதா?

கவிதா | Kavitha said...

//* இட ஒதுக்கீடு அணிலுக்குத்தான் கவிதாவுக்கல்ல :)
//

நான் கோச்சிக்கிட்டேன்..... :((((((((

Unknown said...

அழைத்தமைக்கு நன்றி சிறில்...
விரைவில் பதிக்கிறேன்...

உங்கள் எட்டு விசயங்கள் சுவாரசியமாதான் இருக்கு

Santhosh said...

சிறில் நம்ம ஊருல தான் படிச்சீங்களா? வாங்க ஒரு முறை ஊருக்கு :))

Anonymous said...

Thanks & Super !

SurveySan said...

pottaachchu!

click here to see my ettu

நிர்மல் said...

சிறில்,

பாலாவும், விக்கியும் கூட என்னையை ஒரு எட்டு போட சொல்லியிருந்தாக.

இங்கன

மணியன் said...

உங்கள் எட்டு விதயங்களும் மனதிற்கினியவையாக இருந்தன. வலைப்பதிவுகளில் நிச்சயம் உங்கள் தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள். சற்றுமுன் தளம் ஒருங்கிணைப்பு மிக முக்கிய சாதனையாகும். வாழ்த்துக்கள் !

உங்கள் தயவில் என் மலரும் நினைவுகள் ஆரம்பித்துள்ளன. வார இறுதியில் எட்டு போட்டுவிடுகிறேன்.

G.Ragavan said...

நீங்களும் எட்டு போட்டாச்சா! அதான நீங்கள்ளாம் மொத ரவுண்டுலயே போட்டிருக்கனுமே :)

அடடே! உங்களுக்கு சர்க்கரை இருக்கா. மீன் சாப்பிடக் கூடாதுன்னு இல்லை. சாப்பிடலாம். நண்டு எறால் எல்லாம் சாப்பிடலாம். ஆனா அளவோட. கொஞ்சம் உடற்பயிற்சியும் அவசியம்.

// இப்பவும் சினமா எதுலையாச்சும் முட்டம் காண்பிச்சாங்கண்ணா நினைவுகள் 'அடி ஆத்தாடீ'ன்னு பறந்துடும். //

அதுக்குக் காரணம் நீங்க அங்கயே இல்லாலதுதான். அங்கயே இருந்தா அடியோட சரி. ஆத்தாடியெல்லாம் வராது :)

லொடுக்கு said...

அருமையான ஒரு பாசக்கார 8 போட்டிருக்கீங்க. நானும் குமரி சுத்தியிருக்கிறேன். அழகான ஊருதான்.

மணியன் said...

நம்மபிட்டை இல்லை எட்டை இங்கே போட்டிருக்கிறேன்.

சுந்தர் / Sundar said...

நல்லது நண்பரே ....

சிறில் அலெக்ஸ்