.

Friday, June 08, 2007

ஒரு ஓடை நதியாகிறது - 2

ஓடைகளை கூகிள் ரீடரில் சேர்த்து படிப்பது எப்படி எனப் பார்த்தோம்்.

ஓடைகளை ஒழுங்குற சேர்த்து உங்களுக்கென ஒரு தனி திரட்டி செய்துகொள்வது எப்படீன்னு பார்க்கலாம்.

என்னோட பக்கப்பட்டையில் கவனிப்பில் இருப்பவை என ஒரு குறும்பட்டை(Widget) இருக்குது பாருங்க. இதில் நான் பொதுவாக விரும்பிப் படிக்கும் சில பதிவுகளின் ஓடைகளை ஒன்றாக்கியிருக்கிறேன்.

இதை செய்ய கூகிள் ரீடரில் உங்களுக்கு பிடித்த பதிவுகளை ஒரு Folderல் போட்டு வைக்கவேண்டும். கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.

இப்ப எனக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளை Watching எனும் Folderல் போட்டுவைத்திருக்கிறேன். இனி போய் Watching எனும் Folderஐ Public ஆகா மாற்றி அதற்கான ஓடையை பெற இயலும்.

இது குறித்து ரவிஷங்கரின் விரிவான பதிவு இதோ.

சரி. இப்படி உங்களுக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளைச் சேர்த்து ஒரு ஓடை உருவாக்கியபின்னர் அடுத்து திரட்டி செய்வதுதான் மிச்சம்.

ஓடைகளை அழகுற ஒருங்கிணைக்க Pageflakes எனும் தளம் இருக்கிறது.

pageflakes.com போய் ஒரு கணக்கை துவங்குங்க. Create a Page எனப் போட்டு ஒரு பக்கத்தை ஏற்படுத்துங்க. அடுத்ததா ADD FEED என்பதை சுட்டி உங்க ஓடைகளை சேர்க்க ஆரம்பிக்கலாம். உங்கள் பக்கத்தை மாற்றி வடிவமைக்க வார்ப்புருக்களும் உள்ளன. வெறும் ஓடைகள் மட்டுமன்றி சின்ன விளையாட்டுக்கள், கருவிகள், பயனுள்ள செயலிகள் என பலவற்றை உங்கள் தளத்தில் சேர்க்க முடிகிறது. இதற்கு ADD FLAKE எனும் சுட்டியை தேர்ந்தெடுங்கள்.

இதில் பல ஓடைகளை ஒன்றாக காண்பிக்க இயலும்.

அடுத்து Share என்பதைச் சுட்டி உங்கள் திரட்டியை வெளியிடுங்கள். உங்கள் திரட்டிக்கென ஒரு உரல்/சுட்டி கொடுக்கப்படும்.

உங்கள் திரட்டியை ஒரு குழுவிற்குள்ளாய் பகிர்ந்து கொள்ளவும் இயலும்.

அவ்வளவுதான். நீங்களும் திரட்டிசெய்துவிட்டீர்கள்.

என்னுடைய Page Flakes திரட்டி இதோ.

இது பாஸ்டன் பாலாவின் திரட்டி

இதை செய்துவிட்டு பின்னூட்டத்தில் காண்பியுங்கள். (ஹோம் வொர்க்).

வேறு கேள்விகள் இருந்தாலும் கேளுங்க.
சமயம் இல்லாததால் இப்படி சுருக்கி வெறும் தகவல்களையே தருகிறேன். மன்னிக்கவும்.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.//

சிறில் இது பிழை. கூகுள் திரட்டியில் folder, folderஆகத் தான் இருக்கிறது. ஓர் ஓடையை ஒரு அடைவில் (folder) மட்டும் தான் போட முடியும். label அல்லது tag எனப்படும் குறிச்சொற்களை மட்டும் தான் ஓர் இடுகைக்கு (ஓடை / பதிவுக்கு அல்ல) எவ்வளவு வேண்டுமானால் தரலாம். சோதித்துப் பாருங்கள்.

அப்புறம், ஒரு பல வலைப்பதிவுகளில் என் பெயரை ரவிஷங்கர் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. தயவுசெய்து ரவி என்றோ ரவிசங்கர் என்றோ எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்

சிறில் அலெக்ஸ் said...

என்னால முடியுதே ரவி. இரண்டு அடைவில் ஒரே ஓடையை சேர்க்க இயல்கிறதே.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இப்ப தான சோதிச்சுப் பார்த்தேன்..நான் சொன்னது பிழை :( மன்னிக்கவும். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு அடைவில மட்டும் தான் போடுற மாதிரி தான் இருந்ததா நினைவு. தகவலுக்கு நன்றி. உண்மையிலேயே நல்ல வசதி இது.

பொன்ஸ்~~Poorna said...

சிறில்,
வலைபதிவர் உதவிப்பக்கத்தில் இந்த தொடரையும் சேமிப்போமே...

சிறில் அலெக்ஸ் said...

கட்டாயமா பொன்ஸ். இன்னும் ஒரே ஒரு பதிவுதான்.

சிறில் அலெக்ஸ்