இயக்குநர் ஷங்கர் சிவாஜிக்கு அடுத்ததாக எடுக்கப்போகும் படத்தின் கதை இப்போதே லீக் ஆகிவிட்டது.
ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு 'பாதிக்கப்பட்ட' உதவி இயக்குநர் 'தட்டிக்' கேட்டால் எப்படி இருக்கும்.
திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். 'நான் ஆணையிட்டால்' பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் தலைவர் வசனம் பேச ஆரம்பிக்கிறார்.
"டேய் மூதேவி. இதுவரைக்கும் எத்தன படம் எடுத்திருக்க?"
கட்டிவைக்கப்பட்டிருப்பவர் வலியால் முனகுகிறார்.
"சொல்லமாட்ட?" எம்.ஜி.ஆர் முகம் சிவக்கிறது. சிவப்பு வெளிச்சம் முகத்தில் அடிக்கிறது. சாட்டை சுழல்கிறது.
"நாலு.. நாலு படம் எடுத்திருக்கேன்"
"ம்.. ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவு?"
"முதல் படம் 10 கோடி, ரெண்டாவது 25, முணாவது 40 4வது 60 கோடி."
சாட்டை சுழல்கிறது.
"இல்ல 70.. 70"
"எத்தன கோடி லாபம் பாத்த?"
"நூறு கோடிக்கும் மேல."
"எத்தன கோடி கணக்குல காமிச்ச"
"25"
"அடப்பாவி."
"ஊர்ல ஒலகத்துல இல்லாததயா நான் செஞ்சுட்டேன். ஒவ்வொரு எம் எல் ஏவும் எவ்வளவு சம்பாதிக்கிறான், மந்திரி, எதிர்கட்சி, வட்டம், மாவட்டம்ணு அரசியல்ல என்னவெல்லாமோ நடக்குது."
"டேய் அதெல்லாம் தட்டிக்கேக்க அன்னியன், இந்தியன் தாத்தா, முதல்வன் எல்லாம் இருக்காங்கடா ஆனா உன்னப்போல அநியாயம் செய்யுற சினிமாக்காரங்கள தண்டிக்கத்தாண்டா நான் இருக்கேன்."
"நீ யாரு"
"இயக்குனன் ஹா ஹா ஹா" சிரிப்போடு சீன் மறையுது. பெயர் போட ஆரம்பிக்கிறாங்க.
படம் பேரு 'இயக்குனன்'
இயக்குனனோட ஸ்டைல் என்னண்ணா அளவுக்கதிகமா காசப்போட்டு படம் எடுக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அவங்களுக்கு பணம் குடுக்கிற கந்துவட்டிக்காரர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளி ஒரு 'மெசேஜ்' சொல்ல வர்றாரு. ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு வேஷத்துல வருவாரு. அதாவது முதல்ல எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி வந்தார்ல அதுபோல 16வயதினிலே கமல், பாட்சா ரஜினி, கடலோரக் கவிதைகள் சின்னப்பதாஸ், கட்டபொம்மன் சிவாஜின்னு பல வேஷங்களில் வந்து கொலை செய்வார்.
ஏன் இயக்குனனுக்கு இந்தக் கொல வெறி?
வழக்கம்போல ஒரு கிராமத்துப் பின்னணி ஃப்ளாஷ் பேக்.. எடுத்துக்காட்டு.
கிராமத்துல சினிமாக் கொட்டக முன்னால இட்லிக் கட வச்சிருக்கிறாங்க இயக்குனனோட அம்மா. அவங்க எவ்வளவு சினிமா பைத்தியம்ணா, ஊர்ல இருக்கிற அவங்க பண்ண வீட்ட வித்துட்டு சினிமா தியேட்டர் முன்னால கட வச்சிருக்காங்க. பாட்டுக்குள்ளாக அவங்க இட்லிக்கடையில எப்படி சந்தோஷமா இருக்காங்கண்ணு காமிக்கிறாங்க. பிரமாண்டத்துக்காக தங்க இட்லித் தட்டுல அவங்க இட்லி அவிக்கிறதா காமிக்கிறாங்க. பண்ண வீட்ட வித்த காசையெல்லாம் வச்சி கலக்குறாங்க. ரெண்டு ரூபா வடையிலேந்து எண்ணைய பிழிஞ்சு எடுக்கிறதுக்கு 100 ரூபா நோட்ட குடுப்பாங்க. அம்மாவோட சினிமா பைத்தியத்துல சொத்தெல்லாம் கரைஞ்சுடுது. அப்பா குடிக்கிறதுக்குண்ணு வச்சிருந்த காச எடுத்து சினிமாவுக்குப் போறாங்க. அப்பா துக்கம் தாங்காம சினிமா கட் அவுட்ல தூக்குல தொங்கி எறந்து போறாரு. ஒரு கட்டத்துல அம்மாவுக்கு சினிமா பைத்தியம் முத்திப் போயி பசங்களோட பாடப் புத்தகங்கள கிழிச்சி ஹீரோ அறிமுகக் காட்சியில பேப்பர் தூவுறதுக்கு எடுத்துட்டுப் போறாங்க. இதுனால பசங்க படிப்பு கெடுது. இயக்குனன் குறைஞ்ச படிப்ப வச்சிட்டு நிறைய சம்பாதிக்க என்ன வழின்னு யோசிக்கிறான்.
அவன் அம்மா தலைவர் படத்துக்கு வச்சிருந்த முதல் ஷோ டிக்கெட்ட ப்ளாக்ல வித்து 'சென்னைக்குப் போய் ஒரு பெரிய இயக்குநர் ஆயிடுப்பான்னு அனுப்பி வைக்கிறாங்க'. மிகவும் சோகமான காட்சி. "அம்மா ஒன்னோட டிக்கெட்ட வித்து...?" உருகுகிறார் ஹீரோ. அம்மா ஒரு சி.டிய எடுத்துக் காமிக்கிறாங்க. "திருட்டு வி.சி.டில நேத்தே பாத்துட்டேன்பா."
சினிமாவால பாழான தன் வாழ்க்கைய சினிமாவாலயே மீட்டெடுக்க கனவோடு சென்னைக்கு வர்றான்.
சினிமா உலகத்துல இவனோட சிம்பிள் கிராமத்து கதைகளை படமா எடுக்க யாரும் முன்வரல. எல்லாரும் ஹீரோவ பச்சையா காமிக்க முடியுமா?, இந்துமா சமுத்திரத்த செட்டிங் போட்டு பாட்டு செய்ய முடியுமா? நிலாவுல லொக்கேஷன் பண்ணலாமாண்ணு இவன டார்ச்சர் பண்ணுறாங்க.
ஒரு கட்டத்துல இயக்குனன் இது வேலைக்காகாது ஏதாவது பிசினஸ் பண்ணலாமாண்ணு பேங்க்ல போய் லோன் கேக்கிறான். பேங் மேனேஜர் இவனத் திட்டி வெளிய விடுறார். இவன் ஜன்னல்வழியா பாக்கும்போதே ஒரு ப்ரொட்யூசருக்கு கோடிக்கணக்குல காச அள்ளிக்குடுக்கிறாரு மேனேஜர். இதேபோல ஒரு கந்து வட்டிக்காரரும் சினிமாவுக்கு காசு குடுக்கிறாரு ஆனா இவனுக்கு மறுக்கிறாரு. அதுலேந்து சூடாகிறான் இயக்குனன்.
சுஜாதா டையலாக் சூடு பறக்குது.
"இண்ணைக்கு இந்தியாவுல ஒரு வருஷத்துக்கு இத்தன படம் எடுக்கிறாங்க. தமிழ்ல எடுக்கிற படங்கள் இத்தன, அதுக்கு ஆகிற செலவு இத்தன, இதுல பேங்க் லோன் இவ்வளவு, சேட்டு இவ்வளவு, கந்து வட்டி இவ்வளவு, ப்ரொட்யூசர் சொத்த வித்தது இவ்வளவு. படத்துக்கு A செண்டர்ல 10% வருமானம், Bல 10% மீதி 80% C, D செண்டர்லேந்து வருது. ஏண்ணா திருட்டு சிடி அவங்களுக்கு கிடைக்கிறதில்ல. இந்த C,D செண்டர்ல உள்ளவனுக்கு மாத வருமானம் இவ்வளவு, அவனுக்காக அரசாங்கம் செலவு செய்யுறது இவ்வளவு கோடி, அங்க நடக்குற தோழில் முதலீடு இத்தனகோடி... அப்படி பாக்கும்போது கிராமங்கள்ல நடக்கிற தொழில் முதலீட்ட விட அவங்க பாக்குற சினிமாவ்ல முதலீடு அதிகமாயிருக்குது.." அப்படியே புள்ளிவிபரங்கள அடுக்குறார் சுஜாதா.
"சினிமாவுல முதலீடு குறஞ்சா வங்கிகள் என்ன மாதிரி தொழில் செய்யுறவங்களுக்கு கடன் தரலாம்ல, ்தரலாம்லதொழில் முதலீட்டுக்கு கந்துவட்டிக் காரன் குறஞ்ச வட்டியில கடன் தருவான்ல?" இதுதான் படத்தின் மையமா இருக்குது.
க்ளைமேக்ஸ்ல 'இயக்குனன்' சீர்திருத்தத்த கொண்டு வர்றான். மக்களெல்லாம் சினிமாவுக்கு ஒருதரம் போய் பாத்துட்டு அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. ரசிகர் மன்றங்கள் ஒவ்வொண்ணா குறையுது, எல்லாரும் வங்கி, தனியார்கிட்ட கடன் வாங்கி சிறப்பா தொழில் செய்யுறாங்க.
அதோட படம் முடியல.. கடைசியா ஒரு ட்விஸ்ட் பண்ணுறார் டைரக்டர். டி.வி.யில வரக்கூடிய செல்வி, செல்வி, செல்வி பாட்டு கேக்குது, திரையில செல்வியா ராதிகா வர்றாங்க. "நீதானேடா சீரியல் டைரக்டர்? சீரியல எப்ப முடிப்ப?" கத்திய ஓங்க. 'சினிமா கில்லர சீரியல் கில்லராக்கிட்டீங்களே'. படம் முடியுது.
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
20 comments:
சிறில்,
என்னாச்சு??? இவ்வளோ எழுத்துப்பிழைகள்??? :((
excellent :))
---இவ்வளோ எழுத்துப்பிழைகள்?---
Tam99 ;) ??
//என்னாச்சு??? இவ்வளோ எழுத்துப்பிழைகள்??? :((//
மன்னிக்கவும். அவசரம் அதான்.
இன்னொரு முறை வாசிச்சதுல ஒண்ணே ஒண்ணுதான் சரி செஞ்சேன்..
I am not that good at this I guess.
:)) and :((
அந்த 'கவுரவ'க் கதாபாத்திரத்தில் நடிக்கிறது ஷங்கர் தானே!
:) மொதப் பாதி புரிஞ்சது. பயங்கர காமெடி. ஆனா கடைசிப் பகுதி புரியலை.
பேசாம இகலப்பைலயே அடிக்க வேண்டியதுதானே.
Syril,
Good One!!
Ha Ha Ha..
கிட்டத்தட்ட இதே ஸ்டைலில் ஒரு சிவாஜி - II பதிவு போட இருந்தேன்.
வேலை மிச்சமாச்சு.
//:) மொதப் பாதி புரிஞ்சது. பயங்கர காமெடி. ஆனா கடைசிப் பகுதி புரியலை.//
இதுல புரியிறதுக்கு என்ன இருக்குது?
எது புரியலண்ணு சொல்லுங்க மாத்தப் பாக்குறேன்
:)
எவ்வளவு தான் படம் எடுத்தாலும், ம(மா)க்கள் திருந்த மாட்டார்கள், சினிமா காரனும் திருந்த மாட்டான்.
இன்னா இது கத ஒன் பேஜர் குடுக்கும் போதே கயிதையின்னு திட்டற? என்னாது? அது கயிதை இல்லை கைதையா? ஓ! கதையின்றதைத்தான் அப்டி சொல்றியா.
கண்ணா, ஓடற ஆத்துக்கு நடுவுல இருக்கிற பாறை பட்டா படகு கவுந்துடும் அந்த மாதிரி படிக்கும் போது உன் எழுத்துப் பிழைகள் வந்து படுத்துதே. அதைக் கொஞ்சம் பார்த்து சரி செய்யக் கூடாதா?
அப்படியே 'சூப்பர்' கதை!
//அப்படியே புள்ளிவிபரங்கள அடுக்குறார் சுஜாதா.//
??????????????????
சுஜாதா?
ஸ்பெல்லிங் மிஸ்டேக்?
'விஜயகாந்த்' னு இருக்கணுமுல்லெ? :-)))))))))
நல்லாயிருக்கு கற்பனை :)
athu seri, intha movie-ku budget evvalvo?! oru 100 crores ;-)
தலைவா, ஏதோ ஆனியன் பதிவுன்னு படிக்க ஆரம்பிச்சேன். சுஜாதாவ, லியாகத் அலிகான் ஸ்டைல்ல வசனமெல்லாம் எழுத வுட்டிருக்கீங்க?
ஏனுங்க, சினிமா பாக்குறது ஆவ்வளவு தப்பா?!?!
//ஏனுங்க, சினிமா பாக்குறது ஆவ்வளவு தப்பா?!?!//
சினிமா பாக்குறவங்கள நம்மாளு ஒண்ணும் செய்யமாட்டான். சினிமா எடுக்கிறவங்களத்தான்...
அதுவும் சும்மா காசக் கரியாக்கி சினிமா எடுக்கிறவங்கள. :))
சங்கரின் சோசியல் மெசேஜ்களில் உள்ள அபத்தங்களைக் கூட்டும்போது நம்ம கதையில அபத்தம் கம்மிதான்னு நினைக்குறேன்.
:))
யோசிப்பவரின் தகவலுக்கு..
நான் சிவாஜி இரண்டுமுறை திரையரங்குக்கு சென்று பார்த்தேன். மொத்த செலவு (குடும்பத்தோடு சேர்த்து $100க்கும் மேல்)
இத எங்க போய் சொல்ல..
ஷங்கர் படத்தப் போல படிச்சோமா ரசிச்சோமான்னு விடுங்க...
அத உட்டுட்டு 'யோசிச்சிட்டிருந்தா' கஷட்்டம்டம்
கடைசில :) போட மறந்துட்டேன் யோசிப்பவர்... இதுவும் 'எழுத்துப் பிழைதான்'
SARIYANA MOKKAI....
THANGA MUDIYALE....
This had me in splits for a long time.. You better copyright it.. Lollusabhaa kaaranga paathanganna script kai-taavidum..
Brilliant stuff :)
Post a Comment