.

Friday, January 26, 2007

இந்தவாரம் வலைப்பூவில் சம்பாதித்தது

கெட்டபெயர் - 10 முறை

நல்லபெயர் - 5 முறை

பின்னூட்டங்கள் - ஏதோ சில

அனானியின் அட்டகாசம் - 6 முறை

நண்பர்களின் அறிவுரை - 4

பகைவர்களின் புகழுரை - 0

காசு பணம் - $0.000000000000000000000

வயித்தெரிச்சல் தீர ஆன்டாசிட் செலவு - $2

யாரும் கணக்கு கேட்காமலே வந்து தாங்கள் சம்பாதித்ததை (மட்டுமே!?) சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பும் பதிவர்(களு)க்கு சமர்ப்பணம்.

இந்த வருமானத்துக்கு தவறாமல் வரி கட்டுங்கள். நீங்கள் வாட்டின்கீழ் (Vat) வருகிறீர்களா எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

:)

ஒவர் டு பெனாத்தல் சுரேஷ். இதப்பத்தி ஃப்ளாஷ் பதிவொண்ணு போடுங்க.

33 comments:

Anonymous said...

வருமான வரித்துறைக்கு பயந்துகினு பொய் புளுகுறீங்களா?
எவ்வளவு டாலர் சம்பாதிச்சீங்கனு எங்கிட்ட கணக்கு இருக்குது.
விஜயகாந்த கதிதான் உங்களுக்கும்!

இலவசக்கொத்தனார் said...

அடுத்த முறையாவது நல்லதா எழுதி கெட்ட பேரை விட நல்ல பேர் வாங்கப் பாருங்க.

இந்த முறை நல்லா எழுதலையான்னு பதில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

ஐயாம் தி எஸ்கேப். :)))

சிறில் அலெக்ஸ் said...

மாசிலா,
மாட்டி விட்றாதீங்க..

//விஜயகாந்த கதிதான் உங்களுக்கும்! //

இதுனாலத்தான் நான் கல்யாண மண்டபம் கட்டல.

:)

(என் கல்யாணமே மண்டபத்துல நடக்கல)

இதுபோல பின்னூட்டம் போடும்போது ஒரு ஸ்மைலியையும் போட்டுக்குங்க.. சீரியசா சொல்றீங்களோன்னு பயமா இருக்குது.

:)

Anonymous said...

:-)

சிறில் அலெக்ஸ் said...

//அடுத்த முறையாவது நல்லதா எழுதி கெட்ட பேரை விட நல்ல பேர் வாங்கப் பாருங்க. //

அல்வா செய்வது எப்படி?
பெல்ட் போடுவது எப்படி? ன்னு பதிவு போட்டாத்தான் நல்ல பெயர் வாங்கமுடியும். இத தவிர்த்து என்ன எழுதினாலும் வச்சு தீட்டிற்றாங்களே.

:)

Anonymous said...

//அல்வா செய்வது எப்படி?
பெல்ட் போடுவது எப்படி? ன்னு பதிவு போட்டாத்தான் நல்ல பெயர் வாங்கமுடியும். இத தவிர்த்து என்ன எழுதினாலும் வச்சு தீட்டிற்றாங்களே.//

என்ன அல்வா? தோல் பெல்டா? இப்படியும் சிக்கல் வரலாம் தானே! :)

பதிவு போட்ட பின்னாடி முதுகில டின் கட்டிக்க வேண்டியது தான் சிறில். :)))

ஜோ/Joe said...

சிறில்,
எப்படீங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க!

கோவி.கண்ணன் [GK] said...

சொ.செ.சூ எல்லாம் கணக்கில் வராதா ?
:)))))))))))

சிறில் அலெக்ஸ் said...

//பதிவு போட்ட பின்னாடி முதுகில டின் கட்டிக்க வேண்டியது தான் சிறில். :))) //

டின்ன நாம கட்டவேண்டாம் அவங்களே கட்டிடுவாங்க.

:)

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்,
எப்படீங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க! //

ஜோ,
நீங்க அடிக்கடி கேக்கிறதப் பாத்தா எனக்கே சந்தேகம் வருது.

:)

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//சொ.செ.சூ எல்லாம் கணக்கில் வராதா ?//

நாம சம்பாதிக்கிறதெல்லாமே சொ.செ.சூ கேட்டகரிலதானே வருது.

:)

Anonymous said...

ஆட்டோ வருகை பற்றி கணக்கில் வரவில்லையே!

:))

//யாரும் கணக்கு கேட்காமலே வந்து தாங்கள் சம்பாதித்ததை (மட்டுமே!?) சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பும் பதிவர்(களு)க்கு சமர்ப்பணம்.
//

இந்தப் பின்னூட்டமும் அவர்களுக்கே!

:))

நம்ப வலைப்பூவுக்கு மட்டும் விளம்பரமே வர மாட்டேங்குதே!

Anonymous said...

சிறில் அலெக்ஸ் //யாரும் கணக்கு கேட்காமலே வந்து தாங்கள் சம்பாதித்ததை (மட்டுமே!?) சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பும் பதிவர்(களு)க்கு சமர்ப்பணம்.//

இருந்தாலும் இம்மாம் பொச்சரிப்பு கூடாதுபா!

சிறில் அலெக்ஸ் said...

//ஆட்டோ வருகை பற்றி கணக்கில் வரவில்லையே! //

சிகாகோல ஆட்டோ இல்லாததால கணக்குல வரல.
:)

//நம்ப வலைப்பூவுக்கு மட்டும் விளம்பரமே வர மாட்டேங்குதே! //

:) அதே அதே

சிறில் அலெக்ஸ் said...

//இருந்தாலும் இம்மாம் பொச்சரிப்பு கூடாதுபா! //

பொச்சரிப்புன்னா என்னதுங்க மாசிலா?

என்னத்த சொல்ல..வயித்தெரிச்சல்தான்.. ஒத்துக்கிறேன்.

:)

Anonymous said...

நான் அப்பவே நெனைச்சேன்... கேப்பீங்கனு.
நம்ம பாண்டிச்சேரி பஷைல 'பொசரிப்பு'ன்னா வெறித்தனமான பொறாமைனு அர்த்தமூங்க.

Anonymous said...

மிக ரசித்தேன் சிறில். இப்படியெல்லாம் போடுங்க அடிக்கடி. சிரிச்சிக்கிட்டாவது இருக்கலாம்:))

Anonymous said...

மாசிலா,
பாண்டிச்செரிபாஷையா.. ஹ்ம்ம்.
கலக்குங்க!(Mix பண்ணுங்க எனும் அர்த்தம் கொள்க)

:)

Anonymous said...

//மிக ரசித்தேன் சிறில். இப்படியெல்லாம் போடுங்க அடிக்கடி. சிரிச்சிக்கிட்டாவது இருக்கலாம்:)) //

நன்றி.. ஆமா சிரிச்சிக்கிட்டாவது இருக்கலாம்.

:)

Anonymous said...

கலக்கல்!!!
எப்படித்தான் யோசிப்பாங்களோ???

Boston Bala said...

நல்லா இருக்குங்க சிறில்

---நண்பர்களின் அறிவுரை - 4
பகைவர்களின் புகழுரை - 0---

குழம்பிட்டேன். அறிவுரை கொடுத்தால் பகைவர். புகழுரை கொடுத்தால் நண்பர் என்பது என் லாஜிக் : P

சிறில் அலெக்ஸ் said...

//கலக்கல்!!!
எப்படித்தான் யோசிப்பாங்களோ???//

வெட்டிப்பசங்க நாங்க!!!

:)

நன்றி

சிறில் அலெக்ஸ் said...

பாபா,

//
குழம்பிட்டேன். அறிவுரை கொடுத்தால் பகைவர். புகழுரை கொடுத்தால் நண்பர் என்பது என் லாஜிக் : P //

இதுக்குத்தான் அடிக்கடி அறிவுரை கொடுக்கறீங்களா?

:)

Anonymous said...

ஹூம்...

அடுத்தப் பகுதிக்காக காத்துக்கிட்டு இருக்கேன்....

Anonymous said...

ஓ! ஐ எம் த சாரி... அது தொடர் கதையோன்னு, போஸ்ட்ட படிக்காமலையே பின்னூட்டம் போட்டுட்டேன்..

சிறில் அலெக்ஸ் said...

ஜி,
இது வாரா வாரம் தொடரும் கதைதான்

:)

சேதுக்கரசி said...

//ஓ! ஐ எம் த சாரி... அது தொடர் கதையோன்னு, போஸ்ட்ட படிக்காமலையே பின்னூட்டம் போட்டுட்டேன்..//

:-))))))))))))))))))))))))))

இலவசக்கொத்தனார் said...

//பெல்ட் போடுவது எப்படி? ன்னு பதிவு போட்டாத்தான் நல்ல பெயர் வாங்கமுடியும்.//

இந்த மாதிரி அரைகுறையா எழுதினா எப்படி நல்ல பேர் வாங்கறது? நான் சொல்வது இடுப்பு பெல்ட், கிராஸ் பெல்ட் இல்லை (வாங்க வேண்டிய பேரைப் பொறுத்து கிராஸ் பெல்ட், இடுப்பு பெல்ட் இல்லை!) அப்படின்னு டிஸ்கி எல்லாம் போட வேண்டாமா?

உங்களுக்கு நல்ல பெயர் சீக்கிரத்தில் வருமுன்னு தோணலை!

சிறில் அலெக்ஸ் said...

//இந்த மாதிரி அரைகுறையா எழுதினா எப்படி நல்ல பேர் வாங்கறது? நான் சொல்வது இடுப்பு பெல்ட், கிராஸ் பெல்ட் இல்லை (வாங்க வேண்டிய பேரைப் பொறுத்து கிராஸ் பெல்ட், இடுப்பு பெல்ட் இல்லை!) அப்படின்னு டிஸ்கி எல்லாம் போட வேண்டாமா?

உங்களுக்கு நல்ல பெயர் சீக்கிரத்தில் வருமுன்னு தோணலை! //


:)) hahahaha

too good.

பொன்ஸ்~~Poorna said...

//அனானிகளின் அட்டகாசம்// :))))) நல்லா இருந்தது சிறில் :)))

Anonymous said...

ஹிஹி.....நல்லா எழுதி இருக்கீங்க:-)

http://internetbazaar.blogspot.com

SP.VR. SUBBIAH said...

சிறில், இந்தக் கணக்கையெல்லாம்
பார்க்காதீர்கள்!

நீங்கள் உங்கள் மனத்திருப்திக்கு மட்டுமே எழுதுங்கள். அதற்கு கணக்கெல்லாம்
வைத்துக் கொள்ள முடியாது!

முட்டமும், அதன் அழகான கடற்கரையும் உங்களுக்கும் எனக்கும்
சந்தோஷத்தைக் கொடுக்கும். அது மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைக்
கோடுக்கும் என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்?

நாம் பதியும் பதிவுகளும் அப்படித்தான்!

அவை நமக்கு மட்டும் சந்தோஷத்தையும் மனநிறைவையும் கொடுத்தால் போதும்!!!!

சிறில் அலெக்ஸ் said...

சுப்பையா சார். சும்மா ஜாலியா போட்ட பதிவு. நீங்க சொல்கிற கருத்துக்களும் உண்மையே.

:)

சிறில் அலெக்ஸ்