.

Thursday, January 18, 2007

நடையிழந்த கால்கள்தன்னில்...

'நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்'. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். 'காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை' என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.

ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து வெற்றிபெறுபவர்கள் தங்கள் பின்புலங்க்களை வெளிப்படுத்துவதே ஒரு புரட்சிகரமான வெளிப்பாடுதான். இதை எல்லோரும் செய்வதன்மூலமே கீழே இருக்கும் யாரும் என்றைக்கும் கீழே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல என்பது எல்லோருக்கும் உறைக்கும்.

முழுக்கால்சட்டை போடுவது கிறீத்துவக் கலாச்சாரமா? சேலை உடுத்துவது இந்து கலாச்சாரமா? (வாட் ய சில்லி கொஸ்டின்) இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் பொங்கல் தமிழர் திருநாளா இல்லையான்னு கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கிறேன். கலாச்சாரக் கூறுகளை எடுத்தாழ்வது அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை. இவற்றை விலக்கிவைக்கக் கூட உரிமை இருக்கிறது. இந்துப் பண்டிகையை கிறீத்துவர்கள் கொண்டாடும்போது அதில் இந்துமதக் கூறுகளை அகற்றிவிட்டே அதை கொண்டாடுகிறார்கள். 'கலாச்சார உள்வாங்கல்' எனவே இதை வகைப் படுத்தலாம்.

சாதி அமைப்பை கிறீத்துவர்கள் பின்பற்றுவதும் ஒரு கலாச்சார தாக்கமே. இதை இந்துப் பழக்கம் என உரிமைகொண்டாட யாரும் முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.
லாரன்ஸ் இராகவேந்திரா கிறீத்துவரா இந்துவா? (அவரையே கேழுங்க)

இன்னொரு நிகழ்ச்சியில் மதுரைப்புயல் வடிவேலு தன் மாமியார் ஊரை சுறிக்காண்பித்தார். மண்ணின் மணம் வீசிய நிகழ்ச்சி.

வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகளிர் கூட்டத்தோடு தரையில் அமர்ந்து அவர்கள் வைத்திருந்த மீனை சுவைத்தார். அந்தம்மா பசங்க வெளிநாட்ல படிக்குதாம். இட ஒதுக்கீடுக்காக சண்டைபோட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தெளிவான பாடம்.

வெட்டிமன்றம் 'வாழ்க்கைக்கு மிகவும் உதவுவது....' எனும் தொடரில்(Series) இந்தமுறை 'படிப்பறிவா? பட்டறிவா?' என காமெடி செய்தனர். ரசிக்கும்படியாகவே இருந்தது. வழக்கம்போல ராஜா அணி தோல்வியைத் தழுவியது.

நடிகர், நடிகைகளின் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன. ஓவர் டோஸ் என்றே சொல்லவேண்டும்.

சரி நீ பொங்கல் கொண்டாடினியா?

என் மனைவி வைத்த சர்க்கரைப் பொங்கலை நான் சாப்பிடவில்லை. அவரே அதை சாப்பிடல. ஏன்னா அது சரியா வரல. ஆனா வெண்பொங்கலை வயிறு(பாதி கேஸில்) நிரம்ப கொட்டிக்கொண்டேன்.

பக்கத்து வீட்டுக்கும் தூங்கிக்கொண்டிருந்த என் மகனுக்கும் கேட்காதபடி மெதுவாக 'பொங்கலோ பொங்கல்' சொல்லிவிட்டு என் மனைவி பொங்கிய பொங்கல். கடல்கடந்து பொருள்தேடும் மக்களின் பேரிழப்பு கலாச்சாரம்தான். இதில் கொடுமை என்னண்ணா இந்த இழப்பை பலரும் உணர்வதே இல்லை.

என் பக்கத்து வீட்ல கலை கிரிஷ்னு தம்பதிங்க இருக்காங்க. ரெண்டுபேரும் அமெரிக்காவிலேயே பிறந்துவளந்த மாதிரி நடந்துக்கிறாங்க. அவரு ஐயாராம் கலை கொஞ்சம் தாழ்ந்த சாதியாம். ஆனா பாத்தா எந்த வித்தியாசமும் தெரியல. இவங்க அமெரிக்க வாழ்க்கையோட ஐக்கியமாயிட்டதால இங்க கோவில்ல வேலை செய்ய வாய்ப்பிருந்தும் க்ரிஷோட அப்பாவ கூட்டிட்டுவரலியாம். அவங்க அப்பாவுக்கு ஒரு எழுத்தாளர் பால்ய ஸ்னேகிதராம்.

8 comments:

Sivabalan said...

சிறில்

பொங்கலை இங்கே கொஞ்சம் பார்சல் பண்ணியிருக்கலாம்?!!!

சரி விடுங்க...

ம்ம்ம்ம்ம்....

குமரன் (Kumaran) said...

கலை கிருஷ் இருவரையும் கேட்டதாகச் சொல்லவும் சிறில். பொங்கலோ பொங்கல். (தயவு செய்து தமிழ்மணத்தில் வைக்கப்படும் பொங்கலை பற்றி மட்டும் அவர்களிடம் சொல்லிவிடாதீர்கள்).

சேதுக்கரசி said...

//ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர்.//

ஆமாம், இந்நிகழ்ச்சி மனம் நெகிழச் செய்தது.

//கடல்கடந்து பொருள்தேடும் மக்களின் பேரிழப்பு கலாச்சாரம்தான்.//

உண்மை தான். நாம் கட்டிக் காப்பாத்த முயன்றாலும் முழுமையாகச் செய்யமுடியாது.

VSK said...

முழுக் கட்டுரையின் தாக்கமும் ஏக்கமும் அந்தக் கடைசி வரிகளில் மிளிர்ந்தது!

:))
ராஜேந்தர் பாடல் வரி கொஞ்சம் தப்பு என நினைக்கிறேன்!

"நடையிழந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்!
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
விடிந்துவிட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகத்தை வெறுக்கிறேன்!"

சிறில் அலெக்ஸ் said...

சிவபாலன் சாருக்கு ஒரு பொங்கல் பார்சல்

சிறில் அலெக்ஸ் said...

//கலை கிருஷ் இருவரையும் கேட்டதாகச் சொல்லவும் சிறில். பொங்கலோ பொங்கல். (தயவு செய்து தமிழ்மணத்தில் வைக்கப்படும் பொங்கலை பற்றி மட்டும் அவர்களிடம் சொல்லிவிடாதீர்கள்).//

:)

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சேதுக்கரசி.

சிறில் அலெக்ஸ் said...

SK...
கலக்கலா பாடலை தந்ததற்கு நன்றி.

நான் இப்படித்தான் பாட்டு புரியலன்னா என்னோட வார்த்தைகளப் போட்டுக்குவேன்..

:)

நடயிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன் - நல்லாத்தான் இருக்கு :)

சிறில் அலெக்ஸ்