.

Monday, January 22, 2007

குமுதம் வேண்டாம் குழந்தை சாமியாவது வெளியிடுவாரா?

என்சைக்ளோப்பீடியாவை புரட்டிக்கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜா. சுதா. தன் மனைவி சுதாவின் பெயரில் எழுதுபவர். அறிவியல் இலக்கியம் ஆன்மீகம் அரசியல் என இவர் கால்பதிக்காத இடமேயில்லை.

டெலிஃபோன் மணி சிரித்தது.

"ஹலோ".

"அப்பா நாந்தான்." அமெரிக்காவிலிருந்து அவர் மகன் பேசினான்.

"சொல்லுடா எப்படியிருக்க?"

"நல்லாருக்கேன்பா."

"நேத்துதானே பேசின?"

"இல்லப்பா அவ உங்கள பாக்கணுங்கிறாப்பா?"

"அவன்னா?"

"தெரியாததுபோல கேக்குறீங்களே?"

"ஓ அவளா?"

"சரி வரச்சொல்லு."

"இந்த வீக் எண்ட் சென்னை வர்றோம்."

"பர்மிஷன் வாங்காமலே ப்ளான் போட்டாச்சா?"

"ம்ம்"

அந்த வீக் எண்ட். தன் மகன் ஒரு ஜப்பானியப் பெண்ணோடு வருவதைக் கண்டு வியந்து நிற்கிறார். ஜா. சுதா.

"டேய் இவளா அவ?"

"ஆமா. பேரு டோக்கியோனா"

"ஷங்கர் படத்துல வர்ற விளையாட்டோட பேர்போல இருக்குது?"

"அது டிக்கிலோனாப்பா"

"இவங்க எந்த ஊர்?"

"ஜப்பான்ல ஒரு குக்கிராமம். என் கூட படிக்கிறா"

"டேய் ஏண்டா போயும் போயும் ஒரு ஜப்பான்காரிய.. நம்ம ஊர்க்காரி யாரையாவது..."

"அப்பா.. நான் சின்ன வயசுல வாட்ச் கேட்டேன் ஜப்பான் வாட்ச் வாங்கித் தந்தீங்க... வெளையாட பொம்ம கேட்டேன் ஜப்பான் எலக்ட்ரானிக்ஸ் பொம்ம வாங்கித்தந்தீங்க... நம்ம வீட்ல டிவி வீடியோ கார் எல்லாம் ஜப்பான் மேக்கா இருக்கும்போது பொண்ணு ஜப்பான் பொண்ணா இருக்கக்கூடாதா?"

"அதில்லடா நாம என்ன.."

"சாதீன்னு கேக்கறீங்களா? வெளிநாட்டுக்காறங்க என்ன சாதின்னு நமக்குத் தெரியாதேப்பா. சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?"

"ம்ம்ம் நீ சொல்றதும் பாயிண்ட்தான்?"

"நம்ம ஊர்ல டாய்லட் கழுவுறவரோட பொண்ண எனக்கு கட்டி வப்பீங்களா?"

"என்னடா சொல்ற?"

"ஆமா டோக்கியோனாவோட அப்பா ஜப்பான்ல..."

ஜா. சுதா மூர்ச்சையாகிறார்.

மருத்துவமனையில் விழித்தெழும்போது டோக்கியோனாவின் கண்ணீர் அவரது கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.

"டேய் நாம அமெரிக்கவுக்கே போயிடலாம். அங்க நைட் ஷியாமளன், ஸ்பீல்பர்க் போல யாருக்காவது ஸ்க்ரீன்ப்ளே எழுதி பொழச்சுக்கலாமா பாரு."

"நெனப்பப் பாரு" மகன் கோபமாய் பார்க்க மீண்டும் ஒரு குறுகிய மூர்ச்சை நிலைக்குப் போனார் ஜா. சுதா.

(டிஸ்கி: யார் மனதையும் புண்படுத்த அல்ல. ஜாலியா! கதா பாத்திரங்கள் அனைத்தும் ஷங்கர் படத்தில் வருவது போன்ற கற்பனைகளே)

33 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//"என்னடா சொல்ற?"

"ஆமா டோக்கியோனாவோட அப்பா ஜப்பான்ல..."//

சிறில்,
நீங்களூமா ...?
நல்ல நகைச்சுவையாக இருந்தது !!!
:)))

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்,
நீங்களூமா ...?//

ஹாட் டாப்பிக்ல ஏதாவது போடலாம்னு...

:)

✪சிந்தாநதி said...

கொஞ்சம் ஆறிப்போன மாதிரி இருக்கே?

ஆனாலும் நல்லாத்தேன் இருக்கு;)))

Anonymous said...

சுஜாதாவின் கதைக்கு ஒரு மறுப்பு என்பதைத் தாண்டி எழுத்தில் நல்ல கட்டுக்கோப்பு தெரிகிறது.

சிறில் சார். வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து ஒரு சிறப்பு சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.

மெலட்டூர்.இரா.நடராஜன்.

சிறில் அலெக்ஸ் said...

//கொஞ்சம் ஆறிப்போன மாதிரி இருக்கே?//

ஆமா.. மைக்ரோவேவ்ல சூடுபண்ணியிருக்கேன். :)

//ஆனாலும் நல்லாத்தேன் இருக்கு;))) //

நன்றி நட்சத்திரம்

சிறில் அலெக்ஸ் said...

//சுஜாதாவின் கதைக்கு ஒரு மறுப்பு என்பதைத் தாண்டி எழுத்தில் நல்ல கட்டுக்கோப்பு தெரிகிறது.//

நன்றி மேலட்டூர்..

//சிறில் சார். வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து ஒரு சிறப்பு சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.
மெலட்டூர்.இரா.நடராஜன்.//

என் முந்தைய கதைகளை படிச்சிருக்கீங்களா?

aathirai said...

என்ன இருந்தாலும் சுஜாதா வலைப்பதிவில் புதிய
கதாசிரியர்கள் உருவானதற்கு காரணமாக இருந்தவர்.
இதுவும் ஒரு சாதனை.

சிறில் அலெக்ஸ் said...

ஆதிரை,
சுஜாதா நிச்சயமாய் ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன். இந்தக் கதைக்கும் அவரை எனக்குப் பிடிப்பதற்கும்(பிடிக்காததற்கும்) எந்த சம்பந்தமுமில்லை.

:)

நான் புதிய கதாசிரியரில்லையே.

:)

Anonymous said...

நல்ல கதை சிறில் :)

Anonymous said...

சாரி சிறில்,

ரசிக்க முடியவில்லை.

உங்களிடமிருந்து இது மாதிரி எதிர்பார்க்கவில்லை.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி திரு.

சிறில் அலெக்ஸ் said...

//சாரி சிறில்,

ரசிக்க முடியவில்லை.

உங்களிடமிருந்து இது மாதிரி எதிர்பார்க்கவில்லை. //

ம்ம்ம். என்னிடம் ஒருவகை எதிர்பார்ப்பு இருப்பதுபற்றி மகிழ்ச்சி..

கொஞ்சம் லேசா நினச்சு முடிஞ்சா சிரியுங்கள்.

சுஜாதாவின் கதையில் சாதீயக் குறியீடுகள் பெரிதாய் எதுவுமில்லை எனச் சொன்னவர்களில் நானும் ஒருவன். ரெம்ப யோசனைக்கப்புறமே இதை எழுதினேன்.

Sivabalan said...

சிறில்,

நல்லாயிருக்குங்க..

// சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?" //


சிரிப்பைவிட சிந்திக்க வைத்தது..

Anonymous said...

சிரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும், எழுதலாம் என்ற நியதியில் எனக்கு உடன்பாடு இல்லை.

அதுவும், பிரச்னையைக் கிளப்பியிருந்த ஒரு தலைப்பினை பின்பற்றி இன்னொரு தலைப்பு வைத்து..

லேசா நினைச்சுங்கிற வார்த்தை, உம் போன்ற தரமிக்க (?!) பதிவரிடமிருந்து வேண்டாம்.

Radha Sriram said...

சிரில்,
இது காமெடியா இல்ல சீரியஸ் பதிவா?? ஏதாவது மெஸ்ஸெஜ் சொல்ல வரீஙளா? ஜோதில ஐக்க்யமாவதுன்ன்னு முடிவு பண்ணீடீங்க?

//டேய் இவளா அவ?"

"ஆமா. பேரு டோக்கியோனா"

"ஷங்கர் படத்துல வர்ற விளையாட்டோட பேர்போல இருக்குது?"

"அது டிக்கிலோனாப்பா?//


இதுக்கு சிரிச்சேன்...

பெனாத்தலார் கிட்ட சொல்லி ட்யுஷன் ஏர்ப்பாடு செய்யட்டுமா??

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சிவபாலன்.

சிறில் அலெக்ஸ் said...

அனானி.. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. என்னிடம் உள்ள எதிர்பார்ப்பை தகர்த்தமைக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

என் மேல் இருக்கும் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//சிரில்,
இது காமெடியா இல்ல சீரியஸ் பதிவா?? ஏதாவது மெஸ்ஸெஜ் சொல்ல வரீஙளா? ஜோதில ஐக்க்யமாவதுன்ன்னு முடிவு பண்ணீடீங்க?//

தெரியலியே.. சிலர் சிரிச்சிருக்காங்க சிலச் சிந்திச்சிருக்காங்க.

பெனாத்தலாரிடம் ட்யூஷன் எடுக்காமலா இதையெல்லாம் எழுதுறோம். நான் கொஞ்சம் மக்குப் பயதான். ஒத்துக்கறேன்.

:)

பின்னூட்டத்துக்கு நன்றி.

Radha Sriram said...

மக்கெல்லாம் இல்ல சிரில் உங்களோட regular வாசகி நான்.
காமெடி உங்க line இல்லியோன்னு தோணுச்சு அவ்வளோதான்.:)

no hard feelings!!!!!

Oh!! i see your smiley!!

சிறில் அலெக்ஸ் said...

//மக்கெல்லாம் இல்ல சிரில் உங்களோட regular வாசகி நான்.//
மிக்க மகிழ்ச்சி

//காமெடி உங்க line இல்லியோன்னு தோணுச்சு அவ்வளோதான்.:)//

அடிப்படையில நான் ஒரு காமெடியன். எனக்கே வியப்பா நான் சீரியசா எழுதுறேன். :)

//no hard feelings!!!!!//
not at all. I am greatful for your feedback. It helps me do better.

//Oh!! i see your smiley!! //
one more :)

அரவிந்தன் நீலகண்டன் said...

சிரில் சார். எல்லாத்துக்கும் சாதி கண்ணோட்டம் கொடுத்தா எல்லாத்துக்கும் கொடுக்கலாம். எல்லாத்துக்கும். உதாரணமா கீழ உள்ள கதய பாருங்க. படு அபத்தம் அப்படீன்னு உங்களுக்கு படுதா... ஆனா மனுவை வச்சு இந்துதருமமே சாதீயம் அப்படீன்னு ஒரு கும்பல் கூலிக்கு மாரடிக்குதே அது போல கீழ உள்ள விசயத்தை டெவலப் பண்ணி ஏசு சொன்னதுதான் 'அபர்தைட்'டுக்கு காரணம். அப்படீன்னு ஜல்லியடிச்சா எப்படி இருக்கும். என்ன அப்படி ஒரு மூவ்மெண்டை finance செய்ய மிசிநரி கும்பல் இல்லை அவ்வளவுதான். நீங்க ஒரு ஸோஃபிஸ்டிகேட்டட் கத்தோலிக்க அடிப்படைவாதியாச்சே. அதுனால் உங்க பதிவில இத போட்டுருக்கேன். 'பூங்கா இதை வெளியிடுமா' அப்படி நெஞ்ச நிமித்தின தலைப்போட கீழே உள்ள கதையை போடலாம். நீங்களும் உங்க ஈவெரா அபிமான தோழமை கும்பலும் சுஜாதா கதையில சாதீயத்தை கண்டு பிடிச்சுருக்கதுக்கும் கீழ உள்ளதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிசா வித்தியாசமில்லை.

அவர் நிமிந்து பாத்தாரு. கண்ணுக்கெட்டுற தூரம் வரைக்கும் ஒரே பாலைவனம். அமைதியா எந்திச்சாரு. திரும்பி தன்னோட நிக்கிற சீசங்கள பாத்தாரு. அப்படியே நடக்க
ஆரம்பிச்சாரு. சீடங்களும் கூடவே ஆனா பின்னாடி நடக்குறாங்க. பாலைவனத்துக்குள்ள கூட்டுட்டு போறாரே இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் மேலவந்துட்டுன்னா
செத்துபூடுவோமேனு எல்லாருக்கும் பயந்தான். ஆனா கூட்டிட்டு போறவரு சாதாரணமானவரா மெஸியா ஆச்சே. அதுனால அப்படியே கப்சிப்னுட்டு...ஒரு மணல் மேட்டுக்கு அப்பால்ல போனா அங்கே ... எல்லாருக்கிட்டேயிருந்தும் 'மகிமை மகிமை' அப்படீன்னுட்டு சத்தம். ஒருத்தர் இன்னான்னா 'உன்னதங்களிலே ஓசான்னா' அப்படீன்னுகிட்டே ராகம் இழுத்துகிறாரு. அங்கே...அங்கே ஒரு பாலைவன சோலை. தண்ணியிருக்கு. மணல் மேடு மறச்சுட்டு இருந்தது யாருக்கும் தெரியலை. ஆனா மீட்பருங்கிறவரு சாதாரண ஆளா அவருக்கு தெரிஞ்சுருக்கு. மீட்பர் மனசுக்குள்ளே பெஞ்சமின் கோத்திரகாரிக்கு நன்றி சொல்லிகிட்டாரு. அவதான் கைய பிடிச்சு இந்தால இட்டாந்தா. மீட்பரு அங்க குந்திகிட்டு ஒரு கத சொன்னாரு. ஒருத்தன் அடி பட்டு கிடக்கிறான். அந்தாப்பில்ல ஒரு பரிசேயன் வந்தாப்பில அவனும் கண்டுக்கலயா. அப்புறம் ஒரு பணக்காரன் வந்தாப்பல அவனும் கண்டுக்கலயா இப்படீன்னு கத போயி கடைசில இந்த ஒதுக்கப்பட்ட சாதி பய - அதுதாம்ல சமாரியன் - அவன் வருதான். அவன் மட்டும்தான் கெல்ப் பண்ணுதான். இப்ப சொல்லுங்கலே என் சீடப்பயலுவளா எவம்முலே அடிப்பட்டு கிடக்கவனு அணுக்கப்பய' அப்படீங்காரு மீட்பராகப்பட்டவரு. இப்ப எல்லா பயலுவளும் கிசுமுசுன்னு பேசிக்கிடுதானுவ. அவனுவ மூஞ்சியிலே ஒரே அதிர்ச்சி. மீட்பருக்கு மூஞ்சியில ஒரே சந்தோசம். பெஞ்சமின் கோத்திரக்காரி சரியாத்தான் சொல்லியிருக்கா. இந்தகத பயலுவளுக்கு ஒரு செம அதிர்ச்சியா இருக்கும்ன்னு அவ சொன்னது சரிதான்னு மீட்பருக்கு ஒரே சந்தோசமான சந்தோசம். அப்ப இந்த பேதுரு பய (அதாம்ல பாறாங்கல்லு) மெதுவா கிசுகிசுத்துட்டு இருக்கான். என்ன தெரியுமா...எம்லே யோவானே இந்த யெசுவா உண்மையிலே தாவீது வழிதாம் வந்திருப்பானாலே ஒருவேளை இவன் சமாரியனா இருப்பானாலே... இது அந்தாளுக்கு கேட்டுப்போட்டுது. எந்த ஆளுக்கு? நம்ம மீட்பர் ஆசாமிக்கு. சாதிய சொன்னா சும்மாவா இருப்பாவை? வந்துச்சு நம்ம மீட்பருக்கு ஆத்திரம். ஆத்திரம்னா ஆத்திரம் அடங்காத ஆத்திரம். உடனே அவன் எந்திச்சு கத்துறான், 'லேய் ஏதோ கதைக்காங்காட்டி சமாரியன் உதவுனான் அப்படீன்னா...உடனே தாழ்ந்த சாதிக்காரன போல என்னயும் நினச்சுறிவியளோ! நான் தாவீது வம்சத்துல பிறந்தவனாக்கும். ராச பரம்பரையாக்கும். உயந்த சாதியாக்கும். லேய் பன்னிரண்டு பயக்களும் நல்லா கேட்டுக்கிடுங்கலே. நீங்க இஸ்ரவேல் காரன்கிட்ட மட்டும் போணும் சரியா. அதுக்காக எல்லா யூதன் கிட்டயும் போறேன்னுட்டு தாழ்ந்த சாதிக்கார சமாரியனுங்க இருக்கிற வீட்டில இல்லை அவனுவ இருக்குற வீதில ...வீதி என்னல வீதி அந்த தாழ்ந்த சாதி சமாரியன் இருக்குற ஊருக்குள்ள கூட நுழையக்கூடாது. சரியால்ல!" அப்படீன்னு ஆவேசம் வந்தவன் கணக்கா கத்துறாரு மீட்பரு. இத கேட்ட எல்லா பயலுவளுக்கும் சந்தோசம்.
ஆகா நம்ம மீட்பரு சாதி பாக்குற குலம் அந்தஸ்து பாக்குற நல்ல ராச சாதி மீட்பருதாம்லே" அப்படீன்னுட்டு. மீட்பருக்க பிரசங்கத்த ஒளிஞ்சிருந்து கேட்டிட்ருந்த மதலேனா 'நம்ம எவ்வளவு சொல்லியும் இந்த மனுசன் திருந்தலியே' அப்படீன்னு மூர்ச்சையாயிட்டா!

அந்தப்பன்னிருவரையும் அனுப்பும் போது இயேசு அனுப்புகையில் அவர்களுக்கு கட்டளையிட்டு சொன்னதாவது நீங்கள் புறசாதியார் நாடுகளுக்கு செல்லாமலும் சமாரியர் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன ஆடுகளான இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு போங்கள் : மத்தேயு (10:5-6)

Boston Bala said...

நன்றாக இருந்தது. நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

நீலகண்டன்.
அருமையான கற்பனை சார். என்னதும் கற்பனைதான். நான் சுஜாதாவின் கதையில் சாதீயக் குறியீடுகள் பெரிதாய் இல்லை என நினைத்தேன்.. அப்படியே பின்னூட்டங்களிமிட்டிருக்கிறேன்.

இந்தக் கதையில நான் சொல்ல வந்தது நம்ம ஊர் மக்கள் இங்க சாதி மதம்னு சண்டபோட்டுக்கிறவங்க.. மத்த சாதியில பெண் எடுக்காதவங்க வெளிநாடுகளில் எதிஅயும் பார்க்காமல் எடுக்கிறாங்களேண்றதப் பத்திதான். இத சுஜாதா கதை சர்ச்சையின் பின்னணியில சொல்லத் தோணிச்சு.

இயேசு புறவினத்தாரிடம் போய் போதிச்சதும், அவர்களோடு பழகியதும் பைபிள்ல இருக்குதே.. நீங்க படிச்சிருப்பீங்க.

நீங்களெல்லாம் வலைப்பதிவுக்கு வருவதற்கு முன்னரே பல பதிவுகளில் இந்து மதத்துக்கு சார்பாக எழுதியிருக்கும் என்னை கத்தோலிக்க அடிப்படைவாதி என்பதை கண்டறிந்து சொல்லியதற்கு நன்றி. :)
May be I have a lot to change. I am human after all.

பின்ன்ஊட்டத்துக்கு மீண்டும் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//நீங்களும் உங்க ஈவெரா அபிமான தோழமை கும்பலும் சுஜாதா கதையில சாதீயத்தை கண்டு பிடிச்சுருக்கதுக்கும் கீழ உள்ளதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிசா வித்தியாசமில்லை.//

100% உண்மை..'நீங்களும்'கிறதத் தவிர.

அரவிந்தன் நீலகண்டன் said...

சிறில், பொதுவாகவே சாதி என்பது இந்தியாவில் மட்டும் உள்ளது. அந்தணர்களால் நயவஞ்சகமாக திணிக்கப்பட்டது என்பது போல ஒரு எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணவோட்டத்தை நீங்களும் பிரதிபலிக்கிறீர்கள். "சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?" ஆனால் உண்மை இதற்கு எதிரானது. அதுவும் உங்கள் ஜப்பானிய எடுத்துக்காட்டில். ஜப்பானில் சாதீயமும் தீண்டாமையும் உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா? எப்படி மிகவும் சரியாக ஒரு தவறான எடுத்துக்காட்டினை தந்துள்ளீர்கள்: இது caste குறித்த விக்கிபீடியா கட்டுரையிலிருந்து: Japan has historically subscribed to a feudal caste system. While modern law has officially abolished the caste hierarchy, there are reports of discrimination against the Buraku or Burakumin undercastes, historically referred to by the insulting term "Eta". சிறில் காலனிய பரவலுக்கு முந்தைய ஐரோப்பாவில் குறிப்பிட்ட சாதிகளுக்கு (ஆம் - பிறப்படிப்படையிலான தொழில் குழுமங்கள்) எதிராக தீண்டாமையும் அவர்களால் தொடப்பட்டால் தீட்டாக கருதப்பட்டமையும் உண்டு. பாரதத்தை பொறுத்தவரையில் சமுதாய தேக்கத்தின் விளைவான ஜனநாயக சமூக கட்டமைப்புக்கு எதிரான அனைத்து தன்மைகளையும் சாதீயம் கொண்டுள்ளது. ஆனால் அதனை அழியவிடாமல் பார்த்துக்கொள்வதில் அதனை வைத்து முதலெடுப்பதில் அரசியல்வியாதிகளுக்கும் மிசிநரிகளுக்கும் உள்ள பங்கு முக்கியமானது. எனவே "சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?" என்கிற வசனம் தவறானது. ஒருவேளை இப்படி இருக்கலாம் வசனம்.
" 'தாழ்த்தப்பட்ட மக்கள் மேலே வருவதற்கு கட்டாயம் இட ஒதுக்கீடு அவசியம் அவுங்க திறமை என்னோட வேலை பார்க்கும் எந்த மற்ற நண்பர்களுக்கும் குறைஞ்சது கிடையாது' அப்படீன்னு எழுதினீங்களே அப்பா ஞாபகம் இருக்கா" என்றான் அவன். "ஆமா ஆனா அப்படி மனுசங்களை தாழ்த்தி வச்சது நம்ம நாட்டிலதானப்பா அதுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு?" என்றார் எழுத்தாளர். "இவ என்னோட வேலை செய்கிறாப்பா. திறமையிலே என்னை விட உயர்ந்தவதான். ஆனாலும் என் கிட்ட அன்பா பழகி அது கடைசில காதல் ஆயிருச்சு. ...ம்ம்ம் " என்று இழுத்தான் மகன். அவளுக்கு முன்னால் எப்படி சொல்வது என்ற தயக்கத்தில். அவளே முந்திக்கொண்டாள், "ஏற்கனவே என்க்கு உங்க பத்தி உங்க சன் சொல்லியிருக்கு த்திரு.ஸ்ஸுதா. உண்மைலே இங்க தீண்டத்தகாதவர் அப்படீங்கற ,மாதிரி நிப்பானிலும் ஒரு சமுதாயம் கால் காலா இருந்து வர்றாங்க. புராகுமின் அப்படீம்பாங்க. எக்னாமிக் க்ரோத் டெக்னிக்கல் அட்வான்ஸ்மெண்ட் அல்கா மறைச்சுட்ட நிப்பானிய அவலங்கள்ல அதுவும் ஒன்னு. 'ஈடா' ந்னு கூப்பிடப்பட்ட ஜப்பனிய தலித் நாங்க." எழுத்தாளர் உறைந்து நின்றார். "அங்குமா!" என்ற அவரது கம்மிய குரலுடன் அவர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் டோ க்கியானாவின் கைகளில் விழுந்து தெரித்தது.

சிறில் அலெக்ஸ் said...

நீலகண்டன்,
ஜப்பானிய சாதி முறைகளைப்பற்றி அறியத் தந்ததற்கு நன்றி. ஆனா அதற்கும் நம்ம சாதீயமுறைகளுக்கும் சம்பந்தமில்லியே.

பின்னூட்டத்தில் நான் இந்தக்கதையின் கருத்தை சொல்லியிருக்கேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி.

Anonymous said...

உங்கள் நண்பர் குழாம் எல்லாம் வந்து நல்லாயிருக்கு..நல்லாயிருக்குன்னு சொல்லிட்டுப் போவாங்க..அவங்களுக்கு நீங்க என்ன எழுதுனாலும் நல்லா இருக்கும். நல்ல நண்பன் என்பவன், சும்மா எல்லாத்துக்கும் 'ஆமாம்' சாமி போடறவங்களா இருக்கக் கூடாது.

நானும், முந்தைய அனானி கருத்தை வழி மொழிகிறேன். உங்களுக்கு ஏன் சார் இந்த வேலை, சாதி இல்லை, சாதி பார்க்கக் கூடாது என்பதற்கு, ஜா.சுதா பாத்திரம்தான் தேவைப் பட்டதா?

சுஜாதா கதையில் ஜாதி இல்லைன்னு நீங்க சொல்லியிருந்தாலும், இந்த கதையில ஏன் அவரு குடும்பத்தை இழுத்துருக்கணும்.

பாஸ்டன் பாலா உட்பட, எல்லோரும் 'ஆஜர் சார்' போடுற மாதிரி நல்லாருக்கு போட்டுட்டு போயிருக்காங்க..

நானும் உங்க நண்பந்தாங்க, ஆனா, உங்களது இந்தக் கதையில், எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே..

இனியாவது, இது மாதிரி எழுதுகையில், கொஞ்சம் யோசித்துச் செய்வீங்க என்ற நினைப்புல சொல்லியிருக்கேன் சிறில்.

மத்தது உங்க விருப்பம்..

Anonymous said...

நல்ல நகைச்சுவை பாணி. கதை பிடித்திருந்தது

Anonymous said...

ஜப்பானிலோ ஐரோப்பாவிலோ ஜாதி இருந்தால் இருந்துவிட்டுப் போகிறது, அது அவர்கள் பிரச்னை. ஜப்பானிலோ ஐரோப்பாவிலோ மலத்தைத் தின்றால் நாமும் தின்னவேண்டுமா என்ன?

சிறுதுளி said...

அருமையாக இருக்கிறது

கார்த்திக் பிரபு said...

oruvari ilandha pin avari pugalvadhu tamil natukkey uriya oru valakkam..adhe pola thaan nam ellarum varutha paduvom sujathavai ilandha pin

eludhavdhai ellam eludhi vittu pin kuripil idhu yar mnadhaiyum punpaduththu eludha villai endru pottu vittaal podhuma..inimelavadhu eludhum podu yosithu eludhungal nanbrae

G.Ragavan said...

கொஞ்ச நாள் கழிச்சிப் போட்டிருக்கீங்க. இப்ப இது டிரெண்டு இல்லையே சிறில். :-)

அந்தக் கதைக்கு அளவுக்கு அதிகமாகவே விளம்பரம் கிடைச்சிருச்சு. அதுக்கு வலைப்பூவுல நிறைய பேர் காரணமாயாச்சு.

அது சரி? பின்னூட்ட ஜாங்கிரி நீக்கலுக்கு இன்னும் ஸ்கிரிப்ட் சேக்கலையா? ஜாங்கிரி எக்கச்சக்கமா இருக்குதே சிறில்.

சிறில் அலெக்ஸ் said...

ஜி.ரா

இந்தப் பதிவு போட்டு கொஞ்ச நாள் ஆச்சு. :)

பலரும் இத விரும்பாததால யாருக்கும் 'நன்றி' பின்னூட்டம் போடல.

ஜிலேபிய மறைக்க புது வார்ப்புரு வேணும். நான் இன்னும் பழச பயன்படுத்துறேன்.. 200 கொண்டாட்டம் (?!!!) முடிஞ்சதும் மாத்திடுவேன்.

:)

சிறில் அலெக்ஸ்