.

Thursday, December 14, 2006

திருக்குறள் குழுமம்

பதிவுகளில் குறள் விளக்கங்களை 'மயிலை மன்னார்' தருவதுபோல வேறு யாரும் தரவில்லை.

திருக்குறளுக்கென்றே ஒரு பதிவைத் துவங்கி ஒவ்வொரு பதிவிலும் ஒரு அதிகாரமென எளிமையாய் இனிமையாய் விளக்கம் அளிக்கலாம் எனும் எண்ணத்தில் ஒரு பதிவை துவங்கியுள்ளேன்.

இதை தனியாய் செய்வதைவிட குழுவாய் செய்வதே எளிதானதாகும் என்பதால் இந்த அறிவிப்பு.

'குறள் பக்கங்கள்' எனும் இந்த புதிய குழுமப் பதிவில் பங்குபெற விரும்புபவர்கள் cvalex at yahoo .com அல்லது cyril.alex@gmail.com ற்கு தனிமடல் அனுப்பவும்.

விரைவில் எதிர்பாருங்கள் 'குறள் பக்கங்கள்'.

பி.கு: SK, மயிலை மன்னாரை குழுமத்துக்கு வரவேற்பது எங்கள் மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும்.

18 comments:

குமரன் (Kumaran) said...

சிறில். நான் இன்பத்துப் பாலை எழுதத் தொடங்கி கொஞ்சம் தான் பதிவிட்டிருக்கிறேன். தற்போது நேரமில்லாததால் அந்தப் பதிவையே கூட்டுப் பதிவாகக் கொண்டு நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்களா? அழைப்பை அனுப்புகிறேன்.

நீங்கள் ஏற்கனவே பதிவைத் தொடங்கியிருந்தால் அங்கேயே தொடருங்கள்.

குமரன் (Kumaran) said...

http://inbame.blogspot.com/

இன்பத்துப் பால் பதிவின் சுட்டி

வடுவூர் குமார் said...

"மயிலை மன்னார்" எளிமை இனிமை & அருமை.
அந்த அளவுக்கு அறிவு இல்லாததால் படித்துவிட்டு சிரித்துவிட்டு போகிறோம்.
உதவ முடியாததற்கு வருந்துகிறேன்.

கோவி.கண்ணன் [GK] said...

சிறில் ! குழுவென்றாலே பீதியாகிறது. :)
வலைப்பதிவில் குழுக்கள் அதிகமாக அதிகமாக புழுக்கம் அதிகமாகிறது என்று எங்கேயோ முன்பு எழுதினேன். :)

திருக்குறளுக்காக குழு அமைக்கிறீர்கள் ! நற்செயல் பாராட்டுக்கள். மாமன்னர் மன்னார் மவராசனுக்கு வாழ்த்துக்கள் !

Anonymous said...

வாழ்த்துகள் ஐயா .

Anonymous said...

//சிறில் ! குழுவென்றாலே பீதியாகிறது. :)
வலைப்பதிவில் குழுக்கள் அதிகமாக அதிகமாக புழுக்கம் அதிகமாகிறது என்று எங்கேயோ முன்பு எழுதினேன்.//

ஒரு குழுவிற்க்குள் அழையா விருந்தாளியாக தானாக நுழைந்து கொண்டு, இவர் அடிக்கிற லூட்டியை கேட்பாரில்லையா?

VSK said...

அன்பு சிறிலாரே!

பாராட்டத்தக்க முயற்சி.
வள்ளுவனை பலர் கருத்துகளின் மூலம் கேட்கவைக்கும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

உங்கள் பதிவை மன்னாரிடம் காட்டினேன்.

"அட, இன்னாபா! இதுக்கு போய் என்னியவெல்லாம் கேட்டுகினு?
நா ஸொல்றதை ஸொல்லப்போறேன்.
எளுதறவன் நீ!
அத்த எங்கே போடணுமா அங்கனே போடறது ஒன்னிஸ்டம்"

என்று சொல்லிவிட்டான்.

தங்கள் பதிவு ஆரம்பித்தவுடன், இதுவரை போட்டதையும்,இனி போடப்போவதையும்,உங்கள் பதிவுக்கே மாற்றிவிடலாம்.

அழைப்புக்கு மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

நாண்ரி வாய்ச்சொல் வீரன் ..
(நல்ல புனைபெயர் - நன்றி பாரதியா?)

சிறில் அலெக்ஸ் said...

//சிறில். நான் இன்பத்துப் பாலை எழுதத் தொடங்கி கொஞ்சம் தான் பதிவிட்டிருக்கிறேன். தற்போது நேரமில்லாததால் அந்தப் பதிவையே கூட்டுப் பதிவாகக் கொண்டு நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்களா? அழைப்பை அனுப்புகிறேன்.

நீங்கள் ஏற்கனவே பதிவைத் தொடங்கியிருந்தால் அங்கேயே தொடருங்கள்//

குமரன்,
உங்கள் ஆர்வத்துக்கும் ஆஃபருக்கும் நன்றி. ஒரே பதிவில் எல்லா அதிகாரங்களையும் பார்த்திட வகை செய்யவேண்டும் என்பதேன் என் ஆவல். உங்கள் பதிவுகளை உங்கள் பதிவிலேயே போடுங்கள் ஆனால் அவற்றை கடன் வாங்க எனக்குத் தந்தால் போதும் உங்கள் பெயரிலே புதிய பதிவிலே போட்டுவிடலாம்.

Please let me know.

சிறில் அலெக்ஸ் said...

வடுவூர் குமார்,
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. நான் பெரிதாய் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. எளியமுறையில் எல்லா குறள்களுக்கும் தெளிவுரை தரமுயல்வதே என் முயற்சி. இதை கலர்போட்டும் சொல்லலாம் வெறுமனே கறுப்பு வெள்ளையிலும் சொல்லலாம். உங்களுக்கு வெறும் தெளிவுரை எழுதத் தெரிந்தாலே போதுமானது.

சிறில் அலெக்ஸ் said...

கோவி கண்ணன்,
இந்தமாதிரி பொதுவான குழுவில் சேரவும் பயமா?

நல்ல மனசுக்காரங்க நாம (!!!) இதெல்லாம் சும்மா விடக்கூடாது வாங்க ஜோதியில ஐக்கியமாகுங்க.

:)

வாழ்த்துக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

SK சார்,
உங்க சம்மதம் ரெம்ப சந்தோஷம்.
அதுவும் மயிலை மன்னாரிடம் கேட்டு சொல்லியிருக்கீங்க.

உங்க பதிவிலேயும் பதியுங்க. குழு பதிவுல மறு பதிப்பாகவே போடலாம்.

உங்க மின்னஞ்சல் முகவரிய எனக்கு தந்தீங்கன்னா தனிமடலில் குழுவில் சேர அழைப்பு தர வசதியாயிருக்கும்.

நன்றி.

கோவி.கண்ணன் [GK] said...

//Anonymous said...
ஒரு குழுவிற்க்குள் அழையா விருந்தாளியாக தானாக நுழைந்து கொண்டு, இவர் அடிக்கிற லூட்டியை கேட்பாரில்லையா?
//

ஆறிய குழுவா, சூடான திரா' விட்டக் குழுவா ?
அனானி அண்ணா சொல்லிட்டுப் போங்க ! மண்டை காயுது !

இரண்டுபக்கமும் ஆளுங்களும் எனது பின்னூட்ட சத்தமும் உண்டு ! அதான் கேட்டேன் .

மதுமிதா said...

/////சிறில் ! குழுவென்றாலே பீதியாகிறது. :)///


உண்மைங்க சிறில்
ஆனா திருக்குறள் என்பதால் விருப்பம் இருக்கு

நல்ல பணி தொடருங்கள்

Anonymous said...

//இரண்டுபக்கமும் ஆளுங்களும் எனது பின்னூட்ட சத்தமும் உண்டு ! அதான் கேட்டேன்//

தெரியுமே, நீங்க எந்த பக்கம் அப்படிங்கறதும் தெரிகிறது உங்களது பதிவுகளில்.....அதுவும் பல வாராது வந்த மாமணிகளெல்லாம் வந்தல்லவா அல்லவா உங்களுக்கு பின்னூட்டமிடுகிறார்கள்....

Mohan Madwachar said...

அரும்பணி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

naan varalangala ?

inaiyaththukku puthu aal.. unga pathivu paththu ithukkagave vezham nu pathivu thodangirukkEn

சிறில் அலெக்ஸ் said...

//naan varalangala ?

inaiyaththukku puthu aal.. unga pathivu paththu ithukkagave vezham nu pathivu thodangirukkEn//

வேழம்,
நிச்சயம் வரலாம். இந்த முயற்சி தமிழ்சங்கத்தோட இணைக்கப்பட்டிருக்கு. மேல் விபரங்களுக்கு எனக்கு தங்கள் மின்னஞ்சல் முகவரியோடு தனிமடல் அனுப்பவும்.

சிறில் அலெக்ஸ்