.

Tuesday, March 28, 2006

இறை நேசனுக்கான பின்னூட்டம்

கால்கரி சிவா எழுதிவரும் தொடரை எதிர்த்து வந்த விவாதங்கள் யோசிக்கவைக்கின்றன. அவர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, சிலருக்கு நெஞ்சம் குறுகுறுக்கிறது. இறை நேசனின் கீழ்கண்ட பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம்.

http://copymannan.blogspot.com/2006/03/blog-post_27.html

இறை நேசன் உங்கள் பதிவில் அடிப்படை 'வாதம்' தெரிகிறது. கால்கரி சிவ தன் அனுபவங்களை பதிக்கக்கூடாதென்பது எந்த ஊர் நியாயம்?

அவர் அல்லாவையா குறைசொன்னார் அநியாயம் செய்பவரைத்தான் சொன்னார்? எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள். உங்களுக்குத் தெரிந்த அயோக்கியர்களைப்ப்ற்றி நீங்கள் எழுதுங்கள் அவருக்குத் தெரிந்ததை அவர் எழுதட்டும்.
சாதி மட்டுமா மனிதனை பிரிக்கிறது, பணக்காரன் ஏழை என பாகுபாடு காடுவதில்லையா நாம்? நம் வீட்டுக்கு வேலை செய்யவரும் ஆட்களை கட்டித்தழுவி கொண்டாடவா செய்கிறோம்? உங்கள் மதம் சார்ந்த எதுவும் விமர்சிக்கப்படக்கூடாதென்பதே அடிப்படைவாதம் இல்லையா? இதைத்தான் இப்போது உலகம் முழுவதும் பார்க்கமுடிகிறது.


நீங்கள் மதம் மாறியதை பெருமையாய் சொல்கிறீர்கள் நல்லது, இந்த மதம் மாறுவதற்க்கான சுதந்திரம் நீங்கள் வக்காலத்து வாங்கும் அரேபிய நாடுகளில் இல்லையே. இந்தியாதானே உங்களுக்கு அந்தச் சுதந்திரம் கொடுத்துள்ளது? இதை மறந்துவிட்டு காதலித்து திருமணம் செய்பவர்களை வெட்டிப்போடப்போகிறீர்கள் இதுதான் உங்கள் மார்க்கமா(வழியா என படிக்கவும்)?

உங்களைப்போலத்தான் எல்லாருக்கும் தங்கள் மதம், மற்றும் நம்பிக்கை மீது உணர்வுகள் இருக்கும். அழகாய் தமிழ் எழுதுகிறீர்கள் அதை வெறுப்பை வளர்க்க ஏன் பயன் படுத்தவேண்டும்?

சிவா தன் அனுபவத்தை சொன்னார், அதைவைத்து அவரை இந்து வெறியன் போலப் பேசுவது எந்தவகையிலும் நியாயமில்லை.

இந்துக்கள் பல கடவுள்களை வணங்கினால் உங்களுக்கென்ன? இப்படி உங்கள் வழிபாட்டு முறையை யாராவது குறைசொன்னால் எப்படி துடிப்பீர்கள்.

மதங்கள் மனிதர்களின் ஓப்பியம் என்பதை நிச்சயமாக உங்கள் போன்றோரை வைத்து கணக்கிட முடிகிறது.

கருத்து ரீதியாக எந்த எதிர்ப்பையும் வைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் ஒருவரை திட்டித்தீர்க்கவும் பட்டம் கட்டவும் உங்களுக்கு உரிமையில்லை.
இன்னொரு முறை செய்யுமுன் யோசியுங்கள் நண்பர் சொன்னது போல, உங்கள் நம்பிக்கையில் இறந்தபிந்தான் தண்டனை ஆனால் இந்து நம்பிக்கையிலே வாழும்போதே தண்டனை.

ஆடி அடங்கும் வாழ்க்கையில் மனிதனை நேசியுங்கள் அதன் வழியாக இறைவனை நேசிக்கலாம்.

காந்தி சொன்னது போல சாதாரண இந்து கோழையாகத்தானிருக்கிறான் போல. இந்த பதிவுக்கு ஏன் அதிகம் எதிர்ப்புவரவில்லை? இவர் போல பலர் தேவையில்லாமல் இந்து மதத்தையும் இந்தியாவையும், பிராமணர்களையும் கண்டபடி இழித்து எழுதுகிறார்கள். இவர்களை பலரும் புகழத்தான் செய்கிறார்கள். அதே சமயம் சிவாவின் மதம் சாராத சமூக அனுபவப் பதிவையும் அவர் தொடர்ந்து எழுத முடியாதபடிக்கு இவர்கள் எதிர்க்கிறார்கள்.

வலைப்பதிவர்களே படித்த நமக்குள்ளே இவ்வளவு வெறுப்பு இருக்குமென்றால் ...? வெறும் மாயப் பெயருக்குள் நின்றுகொண்டு அடுத்தவர்களை என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம் என நினப்பவர்களை எல்லோரும் சேர்ந்து எதிர்ப்போம்.

ஒரு மனித உயிருக்குமுன் எந்தக் கொள்கையும் பெரியதல்ல. மனித உறவே முதன்மையானது இறைவன் எல்லாம் அப்புறம்தான். கொஞ்சம் யோசிப்போம்.

'என்னடா சிறில் இவ்வளவு அப்பாவியா இருக்கறியே' எனக் கேட்பவர்களுக்கு என்ன சொல்ல?

40 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

நல்லா சொன்னீங்க அலெக்ஸ்

Anonymous said...

Nalla pathivu cyril alex.Highly matured thoughts

sudhakar

சுட்டுவிரல் said...

அரேபியரைப் பற்றிய தன் அனுபவங்களை கா.சிவா தாராளமாக எழுதட்டும். தவறேயில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம். அது தான் வாழ்க்கை.

ஆனால் 'இப்பதிவு இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ குறை கூற அல்ல' என்று முன் குறிப்பு கொடுத்து விட்டு அதே சமயம் பின்(னூட்டக்)கதவு வழியாக இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு கக்குவதையே தொழிலாகவும் வாழ்க்கையாகவும் கொண்டவர்களை அனுமதிப்பது நியாயமா? அனுமதிப்பது அவர் விருப்பம் என்றால் 'இஸ்லாத்தை/முஸ்லிம்களை குறை காண்பது நோக்கமல்ல' என்ற முன்குறிப்பை எடுத்து விடலாமே. என்பதைத் தான் என் சுட்டுவிரல் (அவருக்கும்) உணர்த்தியது.

'நான் உன்னை அடிக்க மாட்டேன். ஆனால் நான் அழைத்து வருகிற 'மதிப்பிற்குரிய' என் ஆள் அடிப்பான். அதை நான் ரசித்துப்பார்ப்பேன்' என்பது நயவஞ்சகமல்லவா?

உங்களைப் போன்ற நண்பர்கள் அதை அவருக்கு புரியவைக்கவேண்டாமா?

Amar said...

(ஒரு பின்னூட்டம் இட முயற்சித்து 404 பக்கம் வந்துவிட்டது.அது கிடைக்காவிட்டால் இதை பதிக்கவும்)

சிறில், வேறு ஒரு மதத்தை பற்றி மோசமாக விமர்சனம் செய்யபட்டு இருந்தாலும் நீங்கள் வந்து அதை கண்டித்ததை பார்க்கும் போது தான் நம் நாட்டில் radicalsகளை வென்று ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

சுட்டுவிரல்,
சிவாவின் பதிவில் நேர்மை இருக்கலாம் என நீங்கள் நினைப்பது மதிப்புக்குரியது.

மலர்மன்னன் கருத்துக்கலை சிவா முற்றிலும் ஏற்காத ப்டசத்தில் அவர் ஒரு குறிப்பு அந்த பதிவில் போட்டிருக்கலாம். இதை அவரிடம் பேசும்போது சொல்லியிருக்கிறேன்.

ஆனால் யாருக்கும் பயந்து அவர் செயல்படவேண்டுமென்பது என் எண்ணமல்ல. மலர்மன்னன் என்னை பாராட்டியிருந்த போதும் அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.

சிவாவின் பதிவில் நேர்மையிருக்கிரது அவர் இஸ்லாமை சாடவில்லை என்பது எனக்கு தெளிவாய் தெரிகிறது. இதுபோல நம்மவர்கள் காசு சம்பாதிக்கப் படும் பாடுகளை எல்லோரும் பதிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

என்னை முன்வைத்து சிவாவை புரிந்து கொள்ள முடிகிறது. வலைப்பதிவுக்கு வரும்வரை தமிழ் இலக்கிய சமூக எழுத்தில் இப்போது என்ன நிலமை நிலவுகிரது என்பது எனக்கு தெரிந்திருக்கவேயில்லை. செயமோகன்ன் எனக்கு அனுபிய மின்மடலை பதித்திருந்தேன் அதை ஒருவர் நக்கல் செய்தார், உங்களுக்கு செயமோகனை பிடிக்கவில்லை என்பதற்காக நான் அவரை வெறுக்க முடியுமா?

தனிமனித தாக்கலை தவிர்க்கவேண்டும், பிற மனிதர்கள் மனம் புண்படும் கருத்தை முன்வைக்கும்போது கொஞ்சம் சிந்திக்கவேணும் என்பதே என் ஆவல்.

வாழ்க வளமுடன்!!!(மறைந்த பெரியவரின் நினைவாக)

Anonymous said...

Nethi adi.

munna

சிறில் அலெக்ஸ் said...

முன்னா,
நெதி அடி அடிக்கவேண்டும் என நான் இந்தப் பதிவை எழுதவில்லை. நானா நீயா என வேண்டாத விவாதங்களை வளர்ப்பது இதுபோன்ற பின்னூட்டங்கள்கூடத்தான்.

உங்கள் ஆதரவை நல்ல கருத்துக்களை சொல்வதன் மூலம் தெரிவியுங்கள்.
நன்றி.

Anonymous said...

Alex,

This feedback is not for publishing. You have the liberty to publish if you choose to.

My utmost respect to you. Especially after I realised you are not a Hindu. Respecting a religion to which you belong to, is what a religion is all about.

Hats off.

munna

சிறில் அலெக்ஸ் said...

முன்னா,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.மதங்கள் எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.

மதம் கடவுளை சுட்டிக்காட்டும் ஒரு வழிகாட்டும் பலகைதான். பலரும் அந்த வழிகாட்டும் பலகையை பிடித்துக்கொண்டு கடவுள் நோக்கிய பயணத்தை முடித்துக்கொள்கிறோம்.

சென்னை 100. கி.மி எனச் சொல்லும் ஒரு அறிவிப்பை பிடித்துக்கொண்டு இதுதான் சென்னை என சொன்னால் எப்படி.

கடவுளை நம்பலாம் மதங்களை துணைக்கெடுத்துக்கொள்ளலாம். ஆனால் மதம்தான் எல்லாம் என்பது கொஞ்சமும் கூடாது. மதங்கள் ஆண்டாண்டுகாலமாக மனிதனின் சுயநலத்தினால் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது கொஞ்சம் யோசிப்பவர்களுக்குத் தெரியும். எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

Anonymous said...

Hats off Cyril

People are so narrow minded that they cannot think rationally.

I wish these people come out of their illusion...

Anonymous said...

அல்லாவின் பெயரில் இப்படி அருவருப்பான சண்டைகள் போடுவதை எப்போது இறை நேசர்கள் நிறுத்துகிறார்களோ அப்போதுதான் எம் மார்க்கத்தின் மகத்துவம் உணரப்படும்.

அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

- சையத்

சிறில் அலெக்ஸ் said...

சையத்,
அருமையாகச் சொன்னீர்கள். உண்மையில் இஸ்லாமிய நம்பிக்கைகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கவும், ஒருவகையில் வெறுக்கவும் செய்யச்செய்வது ஒருசில விஷம இஸ்லாமியர்களே. இதே பொன்றவர்கள் பலரும் எல்லா மதத்திலும் இருக்கின்றனர். நாங்கள் எல்லாருமே உத்தமர்கள் நீங்களெல்லாம் நீசர்கள் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

தைரியமாய் இப்படி ஒரு பின்னூட்டமிட்ட உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

// 'கலக்கிட்டீங்க', 'அவனுகளை ஒழிச்சிட்டீங்க' போன்ற பின்னூட்ட ஊறுகாய்களுக்கு, ரொம்ப நாள் இந்த போதை தாக்குப்பிடிக்காது.//

அழகாய் சொன்னீங்க அப்பாவித்தமிழன்.

kirukan said...

I avoid all blogs discussing religion.

People writing about religion should think about it.

கால்கரி சிவா said...

சிறில்,


நிஜப் பெயர் தெரியாதவரின் பின்ன்னூட்டங்களை அனுமதிக்கபோவதில்லை அதே போல் நிஜப் பெயர் தெரியாவதவர் பதிவுகளில் பின்னூட்டமிடுவதில்லை என முடிவுசெய்திருக்கிறேன். இன்று ப்ரொஜெக்ட் மீட்ட்டிங் நடுவில் தமிழ்மணத்தைப் பார்த்தேன் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

மதத்தைப் பார்த்தா உங்களின் தொலைபேசி நம்பரை வாங்கி பேசினேன். இல்லை நான் பேசும் போது உங்கள் ஜாதியையோ மதத்தைப் பற்றி பேசினேனா?

நான் மலர்மன்னனின் கடிதத்தை வெளியிட்ட பிறகும், அவருடைய கருத்துகளில் வேறுபாடுக் கொண்ட நீங்கள் என்னை அழைத்து பேசவில்லையா?

இதுதான் சார் மனிதநேயம்.

நம் இருவர் கண்களின் மதம் சாதி தெரியவில்லை. நட்பு மட்டும் தான் இருந்தது. நான் வலைப் பதிவிற்கு வந்த பலனை உங்கள் நட்புக் கிடைத்தவுடனே அடைந்து விட்டேன்.

நாம் பார்த்த உண்மைகளைச் சொல்லுவோம்.

மத இன ஜாதி கடந்த சமுதாயத்தை உருவாக்குவோம்

அன்பு கலந்த நன்றியுடன்

கால்கரி சிவா

சம்மட்டி said...

பெறும்பாண்மை பெற்றுள்ள இந்துங்கள் நிறைந்த தமிழ்னாட்டில், பி.ஜே.பி. இன்றைக்கு அனாதை கட்சியாக நிற்கிறதென்றால், பெறுவாறியான இந்துக்களின் மதச்சார்பின்மைதான். தொட்டதெற்கெல்லாம் தன் மதத்தைபிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் இறைனேசன் போன்றவர்கள் மூஸ்லிம் கட்சிகளை புறக்கணிக்க தம் மக்களுக்கு அறிவுறுத்துவார்களா ?. முஸ்லிம் நாடு என்ற காரணத்தால் அரபு நாடுகளுக்கு வாள் பிடிப்பவர்கள், சொந்த நாட்டின் அல்லது ஒரு தமிழன் என்ற முறையில் கால்கரி சிவா போன்றோர் தன் அனுபவங்களை எழுதுவதை மதத்தின் மீதெழுந்த மானப் பிரச்சனையாக நினைத்து அவர்கள் துவேசிப்பது சக இந்தியன் / தமிழன் என்ற வகையில் மிகுந்த வேதனை அளிக்கிறது.

சம்மட்டி

Anonymous said...

யோவ் சிறிலு,

அந்தாளு பாஸ்போட்டு காப்பிலாம் கேக்குறார்யா? உங்கிட்ட இருந்துச்சி... காட்டி சிவாகிட்ட தோஸ்தாயிட்டே. எம்பேரு, புனைபேரு, பூனைபேரு, எங்க கோத்ரம் பேரு, ஒரிஜினல் பாஸ்போட்டு, ஜெராக்ஸ்காபில நாலு, ஈமெயிலு, காக்காமெயிலு இதெல்லாம் கொடுத்துதான் அவராண்ட நான் தோஸ்தாகனும்னா அது எனக்கு தேவை இல்லைய்யா.

முகமூடியோட ஒரிஜினல் பேரு தெரியுமா இந்தாளுக்கு? நேசகுமார் என்பதே புனைபெயர்தான்னு தெரியுமா சிவாவுக்கு? இறைநேசன் என்பதே புனைபெயர்தான். மதம் என்பது ஒரு மார்க்கம். அதை வைத்துக்கொண்டு அடுத்த மதத்தினை இகழ்வதுதான் நல்ல மாந்தர்க்கு அழகா என்ன?

நேசகுமாரும், மலர்மன்னனும் சாணி அடிப்பதை அனுமதித்த அந்த ஒரு காரணம் மட்டுமே போதும் சிவாவை நான் குற்றம் சொல்ல. சிவா சாணி அடித்தார் என்று நான் சொல்லவில்லை.

இங்கே சையது என்ற பெயரில் எழுதியதுகூட ஒரிஜினல் இஸ்லாமியர் இல்லை. இது பின்குறிப்புக்காக. மதம் என்ற பெயரில் அடித்துக் கொள்வதை வுட்டுட்டு போயி வேலைய பாருங்கய்யா.

ஜோ/Joe said...

சிறில்,
பொதுவாக மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் நான் விவாதம் செய்வதில்லை .உங்கள் இந்த வெளிப்படையான கருத்துக்களுக்கு என் பாராட்டுக்கள் .உங்களைப் போல எல்லா மதத்தையும் அதன் நிறை குறைகளோடு மதிப்பவன் நான் .அதில் நான் பெருமைப்படுகிறேன்.கரிக்கோல் சிவா அவர்கள் அரேபிய அனுபவங்கள் எழுதுவதை நான் வரவேற்கிறேன் .இன்னும் சொல்லப்போனால் நேரடியாக இல்லாவிடினும் பலர் மூலமாக இதை விட கொடுமையான அரேபிய அனுபவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .நண்பர் இறைநேசன் எழுதியதில் சில தேவையில்லாத தாக்குதல்கள் அவருடைய மற்ற பயனுள்ள கருத்துக்களை மறைத்து விட்டதாக கருதுகிறேன் .இறைநேசன் பிற மதத்தை தாக்கியது தவறு .அதுபோல மலர் மன்னன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் இதைவிட அதிகமாக பிற மதங்களை தாக்கி எழுதி வருகிறார்கள் .அதை கரிக்கோல் சிவா அவர்களும் உணர வேண்டும் .மதம் கலக்காத கோணத்தில் ,அல்லது மதவாதிகளின் பாராட்டையும் ,மறைமுக தூண்டுதலையும் தலை மேல் வைத்து கொண்டாடாமல் ,அவர் தன் சொந்த கோணத்தில் தனது சமூகம் சார்ந்த அனுபவங்களை தொடர நானும் விருபுகிறேன்.

G.Ragavan said...

சிறில்....பொதுவாகவே நான் சாதி மதப் பாகுபாடுகள் பார்ப்பதில்லை. சாதிகளில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லக் கூடாது என்று சொல்கின்ற பலர் மதங்களில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லும் பக்குவமற்ற நிலையில்தான் உள்ளன. ஆகையால்தான் நான் பொதுவாகவே இது போன்ற திரிகளைக் கண்டு கொள்வதில்லை.

இந்தத் தமிழ்மணத்தில் ஒரு ஆயிரம் பேர் இருப்போமா? இந்த ஆயிரம் தமிழர்களுக்கும் என்னென்ன சண்டைகள். என்னென்ன பிரச்சனைகள். வெறுப்புகள். சீச்சீ. நினைக்கவே வேதனையாக இருக்கிறது. நல்லதை நல்ல வழியிலேயே அடைய முடியும் என்ற நம்பிக்கையே பலருக்குப் போய் விட்டது போலும். கோடாலியைப் போட்டுக் காய் பறிக்க நினைக்கிறார்கள். ம்ம்ம்ம்.. தன்னுடைய பெயரைக் கூட சொல்ல முடியாத ஒரு எழுத்தை எழுதுகின்றவனை என்ன சொல்வது? நாகரீகமாகச் சொல்கின்றவர்களுக்குத் தன்னுடைய பெயரைப் போடும் துணிச்சல் இருக்கும். சரி...விடுங்கள் இந்தக் கோழைகளை.

இது போன்ற பதிவுகளுக்குக் கண்டிப்பாக எதிர்ப்புப் பின்னூட்டம் போட வேண்டும் என்று தேவையில்லை. இந்த வக்கிரங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும். குறைந்து போகும்.

இதையெல்லாம் நினைத்து மனம் வருந்திக் கொண்டிருந்த பொழுது இதமாக வந்தது உங்கள் பதிவு. நம்பிக்கையின் ஊற்று என்றுதான் சொல்ல வேண்டும். தமிழன் தன்னுடைய பண்பாட்டை முழுமையாகத் தொலைத்து விடவில்லை என்று சொல்வது போல. நன்றி சிறில்.

நண்பர்களே....நாகரீகம் பயிலுங்கள். அன்பை வளருங்கள். இல்லையேல்....விளைவு நிச்சயம் தீமைதான். அன்பே சிவம். அல்லது அன்பே கடவுள்.

அப்துல் குத்தூஸ் said...

சிறில்,

இறைநேசன் எழுதுவது தவறு என்றாலும், இந்த கால்கரி சிவா மட்டும் எந்தவிதத்தில் சரியாக உங்களின் கண்ணோட்டத்தில் தெரிகின்றார்? உங்களுக்கு சிந்திப்பதற்கு சிறிது நேரம் கூட கிடைக்கவில்லையா அல்லது இந்த இஸ்லாமியர்களை எந்தவிதத்திலாவது இழிவுபடுத்துவதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என விரும்புகின்றீர்களா? உலகத்தில் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான இந்த அரபுச் சமுதாயத்தை 99.9% கேடுகெட்ட சமுதாயமாக சித்தரிக்கின்றார் அதையும் நீங்கள் அப்படியா இன்னும் சொல்லுங்கள் என தூண்டி விடுகின்றீர்கள்? இது உங்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டவில்லையா? அல்லது நீங்களும் அந்த மலர்மன்னன் கூட்டத்தில் ஒருவரா?

ஏதோ தனக்கும் கதை எழுதத்தெரியம் என்பதால் தனது அரபு வாழ்கையில் ஏற்பட்ட ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு தன்னுடைய வக்கிரத்தைக் கதையாக வடித்துக் கொண்டிருக்கின்றார். அதை உண்மையாக்க நீங்களெல்லாம் முயற்சி செய்துக் கொண்டுள்ளீர்கள். இப்படிப்பட்ட உங்களின் நடவடிக்கைத்தான் இறைநேசர் போன்றோர்களை அப்படி எழுதத் தூண்டுகின்றீர்கள். இறைநேசரின் ஒவ்வொருச் செயலுக்கும் நீங்களும் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள். பிறகு குத்துதே, குடையுதே எனக்கூக்குரல் இடுகின்றீர்கள். நடுநிலைமைத்தன்மை உங்களுக்கு இல்லை என்பதே என்னுடைய வாதம்.

Amar said...

நீண்ட நாட்களுக்கு முன்பு நான் படித்த ஓமர் கயாம் கவிதை...இங்கே போட வேண்டும் என்று தோன்றியது

(வழக்கம் போல இதையும் தமிழில் மொழிபெயர்த்து கொடுங்கள் ;) )

And do you think that unto such as you;
A maggot-minded, starved, fanatic crew:
God gave the secret-and denied it me?
Well, well, what matters it? Believe that, too.

Harishena

Geetha Sambasivam said...

Very neutral and beatiful pathivu. Hats off to you Cyril.I used to read your blog regularly for its wonderful justification in each and everything.

Anonymous said...

இங்கு நான் எழுதியிருக்கும் கருத்துக்களை ஏதோ கால் கரி சிவா அவர்களின் அனுபவத்தை எழுதுவதை எதிர்த்து நான் எழுதியதாக சிலர் திசை திருப்புகின்றனர். அந்த தவறை சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களும் செய்வது தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை என்னுடைய பதிவினை முழுமையாக படிக்காததாலோ/உள்கொள்ளாததாலோ இத்தவறு நடந்திருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

ஏனெனில் நான் இப்பதிவில் என்ன எழுதியிருக்கிறேனோ அதே கருத்தைத் தான் சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களும் எனக்கு பின்னூட்டம் என்ற பெயரில் பதிவாக போட்டிருக்கிறார்.

என் பதிவில் நான் கூறியிருப்பது:

- அரேபியாவில் எல்லா நாடுகளையும் போல் எல்லாவித மனிதர்களும் உள்ளனர் என்ற சாதாரண உண்மை மெத்த படித்த மேதாவிகளுக்கே கூட தெரியவில்லை.

- இங்கு(சு.சொர்க்கத்தில்) எல்லோரும் உத்தமர்களா? இல்லை. உலகில் எப்படி எந்த நாட்டிலும் எந்த சமூகத்திலும் எப்படி எல்லோரும் உத்தமர்களில்லையோ அப்படி இங்கும் இல்லை. எல்லா வித மனிதர்களும் மனித இயல்புகளும் இங்கும் உண்டு.

சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்கள் எனக்கு கூறியிருப்பது :

- எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள்.

சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்கள் எனக்கு கூறியிருப்பது :

- சாதி மட்டுமா மனிதனை பிரிக்கிறது, பணக்காரன் ஏழை என பாகுபாடு காடுவதில்லையா நாம்?

என் பதிவில் நான் கூறியிருப்பது:

அவன் திமிர் செல்வத்தால் ஆனது. மதத்தினால் அல்ல.

என் கருத்தோடு சகோதரர் சிறில் அலெக்ஸ் ஒத்துப் போகிறார். பின் ஏன் இந்த தவறு நடந்தது என எனக்கு விளங்கவில்லை.

சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களே!

நான் ஒரு இடத்தும் கால்கரி சிவா அவருடைய அனுபவங்களை எழுதுவதை எதிர்த்து எழுதவில்லையே. கண்டிப்பாக அவர் எழுதத் தான் வேண்டும் இப்படிப்பட்ட மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளை அனைவருக்கும் தோலுரித்துக் காட்ட(அவர் கூறும் விஷயங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில். அவர் சந்தித்ததில் ஒருவர் கூடவா நல்லவர் இல்லை?). ஆனால் அதனை மதத்தோடு சம்பந்தப் படுத்தி ம.ம, டோண்டு, நேச குமார் போன்றோர் பின்னுட்டம் இட்ட போது அவர்களுடன் சேர்ந்து அந்த காட்டுமிராண்டிகள் செய்ததை மதத்தோடு தொடர்பு அடித்து ஜல்லியடித்ததால் தான் நான் இவ்வாறு எழுத நேர்ந்தது. இல்லாமல் எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இதற்கு மேல் நான் எழுதியதில் மத ரீதியாக உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் நான் கூற விரும்பியது பார்ப்பனர்களின் பித்தலாட்ட/திசை திருப்பல் முயற்சியையும் அவர்களின் ஆதிக்க அடக்கு முறை எண்ணத்தை மட்டுமே. உண்மையாக பாதிக்கப் பட்ட கால்கரி சிவா அவர்கள் அவரை பாதித்தவைகளை தாராளம் எழுதட்டும் - அதற்கு மதச் சாயம் பூச முயற்சிப்பவர்களுடன் சேர்ந்து ஜல்லியடிக்காமல். (எல்லா பாதிப்புகளையும் சகித்துக் கொண்டு அங்கு இருந்ததன் காரணம் அது ஒரு வியாபாரம் என்ற சிவா அவர்கள் - இந்தியா வந்த அந்த சகோதரிகளுடன் பிறக்காத காட்டுமிராண்டி அறபி நம் இந்திய சகோதரியின் கற்புக்கு விலை வைத்ததை அறிந்தும் அதைத் தட்டிக் கேட்காமல் இருந்ததற்கும் வெறும் வியாபார நோக்கம் தான் காரணம் என்கிறாரா?)

அன்புடன் இறை நேசன்.

dondu(#11168674346665545885) said...

ஜோ அவர்களே, கால்கரி சிவா அவர்களை கரிக்கோல் சிவா ஆக்கி விட்டீர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

யோசிப்பவர் said...

//இதுதான் உங்கள் மார்க்கமா(வழியா என படிக்கவும்)?//

அவசியமான அடைப்புக்குறி!!!

//பல பதிவர்கள், ஆபாச வார்த்தைகள் இல்லாத வரையில் எல்லா பின்னூட்டத்தையும் அனுமதிப்பார்கள். அதையே நேர்மை என்றும் நினைக்கிறவர்களும் நிறைய உண்டு.//

உண்மையான நேர்மையும் அதுதான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சிறில் அலெக்ஸ் said...

இறைநேசன்,
உங்களிடமிருந்து இந்த பின்னூட்டத்தை எதிர்பார்க்கவில்லை மீண்டும் ஏதாவது சர்ச்சையிலேயே முடியுமோ என கவலையோடேயே இருந்தேன்.

கால்கரி சிவாவுக்கு மதம் சார்ந்த எண்ணம் இருப்பதாக எனக்குப் படவில்லை ஆனால் உங்கள் பதிவு அப்படியாகத் தெரியவில்லை, நீங்களே பதிவில் சொல்லியிருப்பதுபோலவே வெறும் உணர்ச்சிவசப்பட்ட எழுத்தாகவே காணப்பட்டது அதிலும் இந்து மதம் பற்றிய உங்கள் கருத்தெல்லாம் ச்சரியானதாகப் படவில்லை.

பின்னூட்டமிடுபவரின் கருத்தெல்லாம் எழுதுபவரின் கருத்தாய் இருக்கமுடியாது. சிவா மலர்மன்னனின் கடிதத்தை பதிவு செய்யும்போது அவை தன் கருத்தல்ல என்பதையும் பதிவு செய்திருக்கலாம். இதை அவரிடம் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் பின்னூட்டத்தில் இருக்கும் நேர்மையையும் நல்லெண்ணத்தையும் உங்கள் பதிவில் பார்க்கமுடியவில்லையே.

'வந்தேறிகள்' என ஒரு இனத்தை குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம். ஒன்று கடவுள் நம்மை ஆதாம் ஏவாள் துவங்கி படைத்தார் என நம்புங்கள் அப்படியானால் இந்தியா எனும் பகுதிக்கு எல்லோரும் குடியேறியவர்கள்தான், இல்லை பரிமாணவளர்ச்சியில் நம்பினீர்களென்றால் ஆப்ரிக்காவிலிருந்து மனித இனம் பரவியது என்பது உண்மை.

ஆரியர்கள் "வந்தேரிய காலத்தில்" எல்லோருமே இப்படி நாடோடிக் கூட்டமாகத்தான் இருந்திருப்பாஅர்கள். யாரும் இருக்கும் இடத்தில் முளைத்துவந்துவிடவில்லை இல்லையா?

உங்களை படித்துப் புகழும் சிலர் மகிழ்வதற்காக பிற மதத்தையும் அவர்களைன் நம்பிக்கைகளையும் குறைசொல்ல வேண்டாமே. இந்த விஷயங்களை மிதமாகவும் பொதுவானவைகளை மீதமாகவும் எழுதலாம்.

சிவாவின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்கள் எல்லாம் மலர்மன்னன் கருத்தை எதிர்த்தே. அவரே என்னை பாராட்டியிருந்தபோதும் அவருக்கு எதிரான கருத்தை,எனக்குப் பட்ட உண்மையை கணியமாக முன்வைத்திருந்தேன்.

நீங்கள் என்னிடம் மன்னிப்புக்கோரத்தேவையில்லை பிற இந்து நண்பர்களிடம் கேளுங்கள் போதும்.

சிவாவின் பதிவில் நேர்மையிருப்பதை நம்புகிறேன், உங்கள் பின்னூடமும் நேர்மையாகாவே படுகிறது.

அன்புடன் எல்லோரையும் அரவணைப்போம், வெறுப்பு வேண்டாமே.

சிறில் அலெக்ஸ் said...

வெங்காயம்,
பெரியார் பாணியில் நீங்கள் சொல்லியிருப்பதும் நல்ல கருத்துக்களே.

சிவா வலைப்பதிவுகளுக்குப் புதியவர். இங்கே என்னென்ன நடக்கிறது என புதியவர்கள் பலருக்கும் புரியவில்லை என்பதே உண்மை.

சொல்லப்போனால் சிவாவிடம் பேசிப் பாருங்கள் அவர் நம்மைப்போல ஒர் சாதாரண ஆள்தான் என்பது புரியும்.

சிறில் அலெக்ஸ் said...

//.நண்பர் இறைநேசன் எழுதியதில் சில தேவையில்லாத தாக்குதல்கள் அவருடைய மற்ற பயனுள்ள கருத்துக்களை மறைத்து விட்டதாக கருதுகிறேன் .இறைநேசன் பிற மதத்தை தாக்கியது தவறு .அதுபோல மலர் மன்னன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் இதைவிட அதிகமாக பிற மதங்களை தாக்கி எழுதி வருகிறார்கள் .அதை கரிக்கோல் சிவா அவர்களும் உணர வேண்டும் .மதம் கலக்காத கோணத்தில் ,அல்லது மதவாதிகளின் பாராட்டையும் ,மறைமுக தூண்டுதலையும் தலை மேல் வைத்து கொண்டாடாமல் ,அவர் தன் சொந்த கோணத்தில் தனது சமூகம் சார்ந்த அனுபவங்களை தொடர நானும் விருபுகிறேன். //

உண்மை. நன்றி ஜோ.

சிறில் அலெக்ஸ் said...

//இந்தத் தமிழ்மணத்தில் ஒரு ஆயிரம் பேர் இருப்போமா? இந்த ஆயிரம் தமிழர்களுக்கும் என்னென்ன சண்டைகள். என்னென்ன பிரச்சனைகள். வெறுப்புகள். சீச்சீ. நினைக்கவே வேதனையாக இருக்கிறது.//

உண்மை ராகவன். உங்கள் பின்னூட்டமும் இதமாய் இருக்கிறது. நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

அப்துல் குத்தூஸ்
அரபிகள் எனும் பதம் ஒரு பகுதியில் வாழும் மக்களை குறிக்கும் சொல். சிவாவின் அரபிகள் எல்லோரும் மோசமானவர்கல் எனும் கருத்தை என்னாலும் ஏற்கமுடியவில்லை. அதை 'நீங்கள் சந்தித்த நல்லவர்கள் பற்றி எழுதவேண்டும்' எனச் சொல்லியிருக்கிறேன்.

ஒரு பகுதியில் வாழும் இந்துக்கள் செய்யும் கொடுமை கண்டு இந்துக்கள் எல்லோர்மேலும் உங்களுக்கு வெறுப்பு வருகிறதே அது எப்படி?

இப்படி மாறி மாறி அடித்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் இந்தப் பதிவு.

சிறில் அலெக்ஸ் said...

எல்லோருக்கும் தனித்தனி பதில் போட்டு (குமரன் சொன்னபடி) பின்னூட்டத்தை வளர்க்கவிருப்பமில்லை.

என்னைஇ பாராடியவர்கள் ஏதேனும் உள்நோக்கத்தோடு பாராட்டியிருந்தால் அந்த பாராட்டு எனக்குத் தேவையில்லை. யாருக்கும் நெதி அடி கொடுக்கவோ அல்லது வக்காலத்து வாங்கவோ நான் இதை எழுதவில்லை.

இறைநேசன் எழுதிய சில தகவல்கள் என்னை பாதித்தது அதைவைத்தும் ராகவன் சொல்வது போல ஆயிரம்பேர் இருக்கும் இந்த வலைப்பதிவில் எரியும் இந்த வெறுப்புத் தீயை தணிக்க முடியும் எனும் நம்பிக்கையில் இதை எழுதினேன்.

கொஞம் பொறுமையாக யோசித்தால் மற்றவரின் நியாயம் புரியும்.

வானம்பாடி said...

// இந்த பதிவுக்கு ஏன் அதிகம் எதிர்ப்புவரவில்லை? இவர் போல பலர் தேவையில்லாமல் இந்து மதத்தையும் இந்தியாவையும், பிராமணர்களையும் கண்டபடி இழித்து எழுதுகிறார்கள்.//

மத துவேஷப் பதிவுகளை படிப்பதை பலரும் தவிர்க்கவே விரும்புகிறார்கள். இவர்களுடைய மனங்களில் வேறுப்பைத் தவிர வேறொன்றும் இருப்பதில்லை. அதனாலேயே பலரும் இவற்றை படிப்பதையோ, படித்தாலும் பின்னூட்டுவதையோ தவிர்க்கிறார்கள்.

யாரும் அரபிக்களை விமர்சிக்கக்கூட கூடாது, ஆனால் தம் பதிவுகளில் இந்துக் கடவுள்களைப் பற்றி எவ்வளவு இழிவாக வேண்டுமானாலும் எழுதலாம். நல்ல நியாயமப்பா.

நேர்மையான, தெளிவான பதிவு சிறில், நன்றிகள்!

சிறில் அலெக்ஸ் said...

சமுத்ரா,
வழக்கம்போல தமிழாக்கம் (நக்கலா?)

And do you think that unto such as you;
A maggot-minded, starved, fanatic crew:
God gave the secret-and denied it me?
Well, well, what matters it? Believe that, too.

புழுமதியோடே (அறிவுப்) பஞ்சதிலுழன்ற குற்றறிவுக்கூட்டமுமக்கு
தெய்வம் உண்மைபுகன்றென்னை மறந்ததென எண்ணுவாயோ?
என்ன சொல்ல?
அதையும் நம்பு.

(சரியா வரவில்லை என நினக்கிறேன் - நல்ல கவிதை)

கால்கரி சிவா said...

அன்புள்ள வலைப்பதிவாளர்களே,

நான் சந்தித்த கெட்டவைகளை எழுதிவிட்டு பிறகு நல்லவைகளைக் கூறி இனிய நினைவுகளால் என் கட்டுரையை முடிக்காலாம் என்றிருந்தேன். நான் சந்தித்த நல்லவர்கள் எனக்கு ஏற்பட்ட நண்மைகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

எஜண்டுகள் தொடங்கி, கடைசியில் ஊருக்கு வரும் போது கஸ்டம் அதிகாரிகள், டாக்ஸி டிரைவர்கள் வரை சுரண்டும் ஏழை சகோதர்களின் அவல நிலையை எழுத சற்றே பின்வாங்குகிறேன்

வெங்காயாம் போன்ற நண்பர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை என மனவருத்ததில் இருப்பதால், என் முடிவை மாற்றிக் கொள்கிறேன். எல்லாருடைய கருத்தையும் நான் வெளியிடுகிறேன்.

நான் வலைப் பதிவிற்கு வந்தது நட்பை சம்பாதிக்க, வெறுப்பை வளர்ப்பதற்கல்ல.

மற்ற தளங்களின் மூலம் எனக்கு உலகின் எல்லா நாடுகளிலும் தமிழ்/இந்திய நண்பர்கள் உள்ளனர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

கால்கரி சிவா

Anonymous said...

Dear Cyrl,

Well-done cyrl. For your matured thoughts and unbiased comments. I am proud of you. Kindly allow me to share some of my thoughts. I am also working in Saudi Arabia, Like Siva I also had lot of bad experience with Arabs. At the same time I was also blessed with very nice experience with Indian Muslims brothers... Saudi Arabia gave me a chance to know more about Islam and especially about malayalai Muslims. They always treat me as a brother with lots of love. And for your information for the past 5years me and my family are sharing a single apartment with a malayali Muslim family. Although I am being a brahmin by birth, I always felt like being a family with them. My wife (she is also hails from kerala) is a sister to my friend, and she treats their child like our son and daughter. My sisters (My friend’s wife) always provides me with very delicious food, with lots love and affection. Occasionally we also accompany them in the religious seminars which are meant for teaching non Muslims about Islam. These all thing gave me very good light about Islam. Even I joked my wife (some time seriously) about conversion.

At this point I came to know about tamil blogs. I thought blogs are very informative and useful, But after going through the poisonous thoughts of Tamil Muslims, (in that case some Hindus Also) especially the from the Educated, elite groups of blog, now I am really depressed. What sort of a welcome shall a normal converter can receive from Islam? Preaching about the evil things of his old religion?? Why not the Islam blogers are coming up with constructive points of Islam. Without hurting others?? If Siva told bad examples of Arabs, give him good examples of Arabs. But speaking bad about him and his religion, how will it justify your point??? Even if so called educated Muslims behave in this way, what can we expect from the innocent illiterate Tamil Muslim community? My ancestor might have done lot of evil things to dalidhs, and we are really sorry for that. And we can not change it now. But what evil we did to Muslims??? Why they are so venomous about Brahmins, if such comments came from dalith brothers, I can understand. But this not that case.

If eari nashen is really believes in Islam, What should be his opinion about Hindus?? It must be that “ Hindus are mis leaded group of Muslim” (Because as per Islam, all are Muslims by birth). But after reading erai neashn post did any one can say that??????

The funny thing is he called himself as ERAI Neshan. What difference is between him and Siva??? Siva is teling all arabs are evil.. Erai nashen is telling all brahmins are evil... Who is good and who is bad.. God Knows....I am thinking about our Swami Vivekandha and Christian nuns who believe service and love to man kind is the way to salvation. If erail Nashen think by spitting venom he can reach GOD. Let God help him…My question is where is Nalladiar??? Is he supports him????? I want to know his opinion…..
Tamilan.....

Sami said...

அனானிமஸ் நண்பர் குறிப்பிட்டுள்ளதை நான் மிகவும் ஆமோதிக்கிறேன்.நானும் ஒரு மூன்று மாதங்கள் சவுதியில் இருந்தேன்,எனது புராஜெக்டில் இருந்த பெரும்பான்மையான தோழர்கள்,இஸ்லாம் மதத்தினர்.ஆனால் எங்களுக்குள் எந்த ஒரு கருத்து பரிமாற்றமும் இது போல் நடந்தில்லை.எனது அலுவலகத்தில் இருந்த அரேபிய நண்பர்களை பொறுத்த வரையில் அவர்களும் எங்களை இந்திய இந்துக்கள் அல்லது இந்திய முஸ்லிம்கள் என்று பிரித்து பார்த்ததில்லை.அவர்களை பொறுத்தவரையில் நாங்கள் இந்தியர்களாகவே பார்க்கபட்டோம்.

கருத்துகளுக்கு மறுப்பு தெரிக்கவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு,ஆனால் அதை வன்முறையாக கையாலுவதை தவிர்த்தால்,தமிழ் மிகவும் மணம் பெறும் என்னுடைய தாழ்மையான கருத்து.

நல்லடியார் said...

//அவர் அல்லாவையா குறைசொன்னார் அநியாயம் செய்பவரைத்தான் சொன்னார்? எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள். உங்களுக்குத் தெரிந்த அயோக்கியர்களைப்ப்ற்றி நீங்கள் எழுதுங்கள் அவருக்குத் தெரிந்ததை அவர் எழுதட்டும்.//

திரு.சிரில் அலெக்ஸ்,

திரு.கால்கேரி சிவா அவர்கள் அரேபிய நாடுகளில் கசப்பான அனுபவங்களை சந்தித்தார் என்பது அவரின் தொடர் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. நீங்கள் சொன்னது போல் "எல்லா இடங்களிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள்" என்பது திரு.சிவாவுக்குத் தெரியாதா? கசப்பான அனுபக்களைச் சொல்லி இஸ்லாமிய வெறுப்பை விதைப்பதன் மூலம் முஸ்லிம்கள் அல்லாத எல்லோரும் யோக்கியர்கள் என்று சொல்ல விரும்புகிறாரா உங்கள் நண்பர்? தற்போது பணி புரியும் கனடாவில் அவர் சந்தித்த எல்லா மனிதர்களும் நேர்மையானவர்களாகவும் யோக்கிய சிகாமணிகளாகவும் தெரிவதற்கு அவர்கள் இஸ்லாமியர் அல்லர் என்பதலா?

திரு.கால்கேரி சிவா அவர்களே,

ஒவ்வொருவரும் தங்கள் கசப்பான அனுபவங்களை முன்வைத்து பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டிருந்தால் இவ்வுலகில் மனிதனைவிட அருவருப்பான உயிரினம் இல்லை என்ற அளவுக்கு அனுபவங்களை எழுத முடியும். உங்கள் விமர்சன நேர்மையை அளவிட உங்களின் பதிவுகளில் சொல்லப்பட்ட சில விசயங்கள் நெருடலாக இருக்கின்றன.

என்னைப் பொருத்தவரை உங்களின் உல்லாச (ROMATIC & PLAYBOY?) மனநிலைக்கு சவூதி போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த நாடுகள் ஒத்து வராது. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்டு தாய்மண்ணை விட்டுப்பிரிந்த கோடானு கோடி இந்தியர்கள் உலகமெங்கும் நீங்கள் சொல்லும் அவலங்களில் உழன்றே நம் அன்னியச் செலவாணி இருப்பை கட்டிக் காத்து வருகின்றனர்.

இதற்கு அந்தந்த நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்களின் அலட்சியமும் புரையோடிப்போன ஊழலுமே காரணம். அழுக்கான துடைப்பக்கட்டையால் சுத்தம் செய்ய முடியாது நண்பரே! முடிந்தால் இவற்றைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி NRI இந்தியர்களின் அவலம் நீங்க முயற்சி செய்யுங்கள்.

//இங்கு நான் எழுதியிருக்கும் கருத்துக்களை ஏதோ கால் கரி சிவா அவர்களின் அனுபவத்தை எழுதுவதை எதிர்த்து நான் எழுதியதாக சிலர் திசை திருப்புகின்றனர். அந்த தவறை சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களும் செய்வது தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை என்னுடைய பதிவினை முழுமையாக படிக்காததாலோ/உள்கொள்ளாததாலோ இத்தவறு நடந்திருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.// - இறைநேசன்

சகோதரர் இறைநேசன்,

பழுத்த மரம் கல்லடிபடும் என்பதை தமிழ்மணத்தில் எழுதும் சில பதிவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களிலிருந்து உணர்கிறேன். 'கால்கேரி' சிவா தன் அரேபிய அனுபவங்களை எழுதியது போல் நீங்களும் என் "அரேபிய அனுபவங்கள்" என்று உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருந்தீர்கள் என்றாலும் கூட கோமேனியும், பின்லாடனையும் முன்னிருத்தியோ அல்லது வேறு ஏதாவது சொல்லியோ இஸ்லாத்தைக் கரித்துக் கொட்டியும் காரித் உமிழ்வதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் தமிழ்மணத்தில் புழங்குகிறார்கள் என்பதை அறிவோம்.

உங்கள் பதிவில் "இப்பதிவு இந்து மதத்தையோ இந்துக்ககளையோ குறை கூற அல்ல" என்ற முன்குறிப்பு இட்டிருந்தீர்கள் என்றால் திரு.சிவா அவர்களின் நியாயம் உங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கலாம். 'வந்தேரிகள்' என்ற பதப்பிரயோகம் சற்று அன்னியத்தனமாக இருப்பதால்,அவர்களின் அணுகு முறையில் உடன்பாடு இல்லாதவர்களும் கூட விமர்சிக்கும்படி ஆயிற்று.தவறு செய்வதும் சுட்டும்போதும்/சுடும்போதும் திருத்திக் கொள்வதும் மனித இயல்பு என்பதை உங்களின் பதிவும் பின்னூட்டமும் உணர்த்தியது.

நண்பர் டோண்டு ராகவன் சொன்னது போல், இந்து மதத்தை இந்துக்கள் விமர்சிப்பதில் நியாயமுண்டு; ஆனால் அம்மதம் சாராதவர் விமர்சிப்பது காழ்புணர்ச்சி என்ற அளவுகோல் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கும் பொருந்தும். இதை நேசகுமார்களும் நீலகண்டன்களும் உணரும்பட்சத்தில் இறைநேசன்களும் நல்லடியார்களும் உணர்ச்சிவசப்பட வேண்டியதிருக்காது.

//மதம் கடவுளை சுட்டிக்காட்டும் ஒரு வழிகாட்டும் பலகைதான். பலரும் அந்த வழிகாட்டும் பலகையை பிடித்துக்கொண்டு கடவுள் நோக்கிய பயணத்தை முடித்துக்கொள்கிறோம்.//

சிந்திக்க வைத்த பொன்வரிகள். வெல்டன் அலெக்ஸ்! மனிதன், மனிதனாக வாழும் பட்சத்தில் மதங்களுக்கு அவசியம் இருந்திருக்காது. அவன் நெறிதவறி விடக்கூடாது என்பதற்காகவே மதமும் வேதங்களும்தோன்றின. இதை அனைத்து மதத்தவரும் உணர்ந்து கொண்டால் நமக்குள் சண்டை சச்சரவு இருக்காது.

அன்புடன்,

Anonymous said...

இப்போ எல்லோரும் ஆளாளுக்கு சொல்லுங்க
நேசகுமார் தவறு, நீலகண்டன் தவறு, 99 சதவீதம் தவறுன்னு.

இந்த நியாயத்தை முதல்லியே சொல்லியிருந்தா இந்தாளு இறைநேசன் அவர்பாட்டுக்கு
பலதார மணம், ஓரிறை கொள்கைன்னு அவர் வேலையை பார்துதுட்டு
இருப்பாருல்லே...

விதி யாரை விட்டது

Sundar Padmanaban said...

அலெக்ஸ்

இது தொடர்பான பதிவுகள் அனைத்தையும் படித்தாலும் மெளனம் சாதிப்பதே உத்தமம் என்று பட்டதால் வாயை மூடிக்கொண்டிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துகளைப் பார்க்காது சொல்லும் ஆளைப் பார்க்கும் கலாசாரத்தில் ஊறியிருப்பவர்களின் விவாதத்தில் பங்குபெறுவது நெரவிரயம் என்பதால். இருந்தாலும் சுருக்கமாகச் சில வார்த்தைகள்.

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று." என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால் இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்ற அலட்சியம்.

அனுதினமும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஆபாசம் என்பதை மட்டுமே "காசுக்காக" வெளியிடும் ஒலி ஒளி பரப்பும் ஊடகங்களுக்கும் இப்படி "கசப்பை" மட்டும் பேசி "அடித்துக் கொள்பவர்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

சக மனிதனை மனிதனாக நடத்தாமல் ஆணவத்துடன் நடந்து கொள்வது அரேபியாவில் மட்டும் என்றில்லை. எல்லாவிடங்களிலும் - ஏன் வீட்டுக்குள் ரத்த பந்தங்களுக்குள்ளேயே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

எதிரே ஒரு விரலைச் சுட்டிக்காட்டும்போது மூன்றுவிரல்கள் நம்மை நோக்கித் திரும்பியிருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறோம்.

கருத்துச் சுதந்திரம் என்ற பிரயோகத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது.

நிதானம் தவறியவர்கள் நிதானம் பெறட்டும்.

எல்லாவற்றையும் இயக்கும் அந்தப் பரம்பொருள் இவர்களைச் சாந்தப் படுத்தட்டும்.

சிறில் அலெக்ஸ்