.

Saturday, March 11, 2006

போட்டி போட்டி போட்டி

மதங்கள் தேவையா தேவையில்லையா? என்கிற தலைப்பில் பட்டிமன்றமொன்று நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அணிக்கு இருவர் என்று எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் மற்றும் தன் அணியின் விவரங்களுடனும் எந்த தலைப்பில் எழுதப் போகிறீர்கள் என்றும் விவரங்களை
cvalex@yahoo.com மிற்கு அனுப்பவும்.

வெற்றிபெறும் இரு அணிகளுக்கு பரிசு உண்டு.

என்னோடு மதிப்பிட இன்னுமொரு நடுவரும் தேவை யாராவது நடுவராயிருக்க விரும்பினால் அவர்களும் மின்னஞ்சலனுப்பவும்.

முதலில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு அணிகள் பதிவிட அடுத்து வருபவர்கள் அதற்கு எதிர் கருத்தையும் புது கருத்தையும் எழுதலாம்.

9 comments:

நாமக்கல் சிபி said...

பட்டி மன்றம் என்னிக்கு தலைவா?
(எஜமான் ஸ்டைலில் வாசிக்கவும்)

பட்டி மன்றம் என்னிக்கு, எப்போ வச்சிக்கலாம்?
(இது கரகாட்டக்காரன்)

கரெக்டா டைம் சொன்னா நான் கவுண்ட் டவுன் ஆரம்பிச்சிருவேன்.
(இது பாபா)

பலபேரு அடிச்சிக்கொள்ள நீதிபதி முடியைப் பிக்க தீர்ப்பு சொல்ல நாள் வருமே அப்போ! எப்போ?
(இது பரவை முனியம்மா!)


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

சிறில் அலெக்ஸ் said...

சிபி,
பட்டி மன்றத்துக்கு ஆதரவு அவ்வளவாக இல்லை ..
:(

இன்னும் 2 அணிகளாவது தேவை. யாராவது உண்டா?

நாமக்கல் சிபி said...

என்னடா இது! பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை! நமக்கு எதிரணியில் யாருமே இல்லையா!

(தலை, கைப்பூ! போட்டியணி சேர இருந்தவிருங்க வீட்டுப்பக்கம் போய் விறகு வித்தீங்களா என்ன? எல்லாரும் எஸ்கேப்பா? திருவிளையாடல் சிவாஜி மாதிரி :-) )

அப்போ போட்டியிட யாரும் வரவில்லை என்றால் அனப்போஸ்ட்டில் நாங்கள் வென்றதாகத்தானே அர்த்தம்?

எதற்கும் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம்.(பெருந்தன்மை) :-)

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Anonymous said...

வணக்கம் சிறில் அலெக்ஸ். எனது வலைப்பூவில் உங்களின் பின்னூட்டத்தை தொடர்ந்து இங்கே வந்தேன். நல்ல தலைப்பு பட்டிமன்றத்திற்கு. ஆனால் தேவையா தேவையில்லையா என்பதன் கூட, இன்னொரு தலைப்பையும் சேர்க்கலாம். "மதம் ஓர் சமூக அமைப்பில் இன்றியமையாதது. இருந்தே தீரும்" என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த அணியில் நான் "உள்ளேன் ஐயா" :D

சிறில் அலெக்ஸ் said...

சித்தார்த்,
மதம் இருந்தே தீரும் என்பது தீர்ப்பாக இருக்கலாம், வாதமாக?

ரெம்ப யோசிக்கவேண்டியதாயிருக்கிறது உங்கள் கூற்று.

:)

கால்கரி சிவா said...

சிறில். மதங்கள் தேவையில்லை என்ற அணியில் வாதாட தயாரக உள்ளேன். சிபியும் அந்த அணிதானே.

சிவா

சிறில் அலெக்ஸ் said...

சிவா,
சிபி எந்த அணி என்று தெரியவில்லை.
நாளைக்கு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

இது தொடர்பான மின்னஞ்சல் இன்று அனுப்புகிறேன்.

Sam said...

இந்த ஊரில் (அமெரிக்க்காவில்) ஒருவரின் மலரும் நினைவுகளில் இதைப் படித்தேன். சிறு வயதில் பள்ளியில், அவரே ஒன்றை வேண்டும், வேண்டாம் என்று பேச வேண்டி இருந்ததாம். எனக்கு வியப்பாக இருந்தது. இந்த மாதிரிப் ப்யிற்சி சின்ன வயதிலேயே ஒருவருக்குக் கிடைத்தால், வாழ்க்கையப் பார்க்கும் விதமே வேறாக இருக்குமே!
அன்புடன்
சாம்

Sam said...

இந்த ஊரில் (அமெரிக்க்காவில்) ஒருவரின் மலரும் நினைவுகளில் இதைப் படித்தேன். சிறு வயதில் பள்ளியில், அவரே ஒன்றை வேண்டும், வேண்டாம் என்று பேச வேண்டி இருந்ததாம். எனக்கு வியப்பாக இருந்தது. இந்த மாதிரிப் ப்யிற்சி சின்ன வயதிலேயே ஒருவருக்குக் கிடைத்தால், வாழ்க்கையப் பார்க்கும் விதமே வேறாக இருக்குமே!

அன்புடன்
சாம்

சிறில் அலெக்ஸ்