.

Wednesday, March 01, 2006

விபூதி புதன்

இந்த வருடம் மார்ச் 1 விபூதி புதன்(Ash Wednesday).

உலகெங்கும் கத்தோலிக்க கிறித்தவர்கள் இந்தநாளை சிறப்பாக அனுசரிக்கின்றனர். விபூதி புதன் துவங்கி ஈஸ்டர் வரையிலான 40 நாட்களும் (ஈஸ்டர் தவிர்த்து) 'தவக் காலம்' என அழைக்கப்படுகிறது.

தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் தவமுயர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

விபூதி புதன் பூசையின்போது நெற்றியில் சாம்பல்கொண்டு சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.

பக்தி முயற்சிகளை தீவிரப்படுத்தும் இந்த 40 நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.

7 comments:

ஜோ/Joe said...

சிறில்,
'விபூதி புதன்' பற்றி பதிவு போடலாமா என நினைத்து விட்டு தமிழ்ம்ணம் திறந்தால் முகப்பில் உங்கள் பதிவு.

பாதிரியார் அனைவருக்கும் நெற்றியில் சாம்பலை பூசி விடும் போது சொல்லும் வாசகம் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய்.மண்ணுக்கே திரும்புவாய்..மறவாதே என்றும்"

சிறில்,'ஆழி சூழ் உலகு' பற்றி எழுதியிருந்தேன்,படித்தீர்களா?

G.Ragavan said...

சிறில் இந்தப் பழக்கம் எப்படி வந்தது? இது கிட்டத்தட்ட சைவர்கள் இட்டுக் கொள்வதைப் போலவும் வைணவர்கள் இழுத்துக் கொள்வதையும் போல உள்ளதே. நல்ல தகவல். இப்படிச் செய்வது எதைக் குறிக்கிறது என்றும் விளக்குங்களேன்.

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
கொஞ்சம் பிசி. திடீரென அலுவலகத்தில் ஆள்குறைப்பு..அதனால் வேலை அதிகம் பதிவுகள் போடுவதும் படிப்பதுமே கடினமாகிவிட்டது.

பார்க்கிறேன்..

சிறில் அலெக்ஸ் said...

ராகவன்... விரிவாக எழுதத்தான் ஆசை..
இன்னொரு பதிவு போட்டால் போச்சு.

Vaa.Manikandan said...

ragavanai vazi mozikiReen

சிறில் அலெக்ஸ் said...

ராகவன்/மணிகண்டன்..
கீழேயுள்ள சுட்டியில் இன்னும் கொஞ்சம் செய்திகள் உள்ளன.

http://www.newadvent.org/cathen/01775b.htm

Simulation said...

Ash Wednesday என்பதனை 'சாம்பல் புதன்' என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.விபூதி புதன் என்ற பதம் புதிதாக உள்ளது.

சிறில் அலெக்ஸ்