.

Thursday, March 23, 2006

சந்திர பாபு - 1 - தாங்காதம்மா தாங்காது

சந்திர பாபு எனும் ஒரு கலைஞனை ரசிக்காதவர்கள் இல்லை. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் ஒளிர்ந்தவர். நான் மிகவும் ரசித்த இவரது பாடல்கள் சில ஒரு மினி தொடராக.

'தாங்காதம்மா தாங்காது' சந்திரபாபு பாடல்களில் பெரிய ஹிட் எனச் சொல்லமுடியாது. சிலருக்கு இந்தப் பாடலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சந்திரபாபு பாடல் என்றாலே நமக்கு 'பம்பரக்கண்ணாலே' அல்லது 'குங்குமப் பூவே' தான் நியாபகம் வரும்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தியின் (வி-ரா) இசையில் தாங்காதம்மா தாங்காது அரிய மெட்டு. இடையிடையே ஹம்மிங் செய்யும் பெண்ணும் கலக்கலாக பாடியிருப்பார். உச்சக் குரலில் கர்நாடக இசயில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சந்திரபாபுவின் குரல் இனிய மாற்று. இவர் பாடிய எள்ளல் பாடல்களில் இதுவும் ஒன்று.

வி-ரா இசையில் மேற்கத்திய இசைக்கருவிகளின் தாக்கமிருக்கும் இந்தப் பாடலும் 'செலோ'வில் ஆரம்பிக்கிறது.வழக்கமான 'க்ளாரினட்' இசை பல இடங்களில். கித்தாரில் ஒரு கார்ட் (Chord) தாளத்தோடு சேர்கிறது.

பாடல் வரிகளோ 'சம்சாரம்' எப்படி கடினமானது என்பதைச் சொல்கிறது.

தாங்காதம்மா தாங்காது (சுட்டி)
சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமல் மாலையிட்டாலும்
அடியேன் மனசு தாங்காது..

கையில் காசுமில்லே
கடனும் கிடைக்கவில்லை
வீடும் சொந்தமில்லே
ஆண்டி மடத்தில் இடமுமில்லை
ஈயும் ஊயும் ஈயும் ஊயும் வே - (அழகாய் பாடுகிறார் பெண்)
அவசரமாக தாலி கட்டினா அடுத்தநாள்வரை தாங்காது
சபலத்தினாலே ஜோடியச் சேர்த்தா சம்சாரம்போல் ஆகாது
தாங்காது தாங்காது தாங்காது.

இருந்தால் ஒருவீடு
இல்லே பலவீடு
கிடைத்தால் சாப்பாடு அம்மா
இதுதான் என்பாடு
காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் காவியமாக முடியாது
பாத்து சிரிச்ச பாவத்துக்காக பத்தினியாக்க முடியாது
தாங்காது தாங்காது தாங்காது.

11 comments:

வெளிகண்ட நாதர் said...

நல்ல பாட்டு, ரொம்ப நாளாச்சு, சந்தரபாபு பாட்டு கேட்டு, நன்றி சிறில்!

சிறில் அலெக்ஸ் said...

நானும் ரெம்ப நாள் கழிச்சு கேட்டேன்.. நம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவட்டுமே என பதித்தேன்.

நன்றி.

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... நீங்க.. நம்ம ஆளு... எனக்கும்கூட பிடித்த பாடகர்களில் முதலிடம் பெறுவது அவர் தான்.
நன்றி சிரீல்... அந்த ம்க்த்தான கலைஞனை... நினைவு படுத்தியமைக்கு...
எனது பழிய பதிவு.. http://balabharathi.blogspot.com/2006/03/blog-post_06.html

சிறில் அலெக்ஸ் said...

நன்றி பால பாரதி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிறில் இதுவரை நான் கேட்காத பாடல் தான். சுட்டி தந்ததற்கு மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

வாங்க குமரன்..
ரெம்ப நாள் ஆச்சு.

பாட்ட எஞ்ஜாய் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்,

G.Ragavan said...

நல்ல பாட்டு...சரி...இதென்ன படம்?

இன்னோன்னு தெரியுமா...சந்திரபாபு தூத்துக்குடிக்காரர். அவரோட தங்கச்சி வழி வந்த பசங்க சேவியர்ஸ்ல படிச்சாங்க....

சிறில் அலெக்ஸ் said...

ராகவன்,
தூத்துக்குடிகாரர் எனத்தெரியும்.
படம் செந்தாமரை.

அது சரி, சந்திரபாபு சரிதை புத்தகம்பற்றி எங்கோ படித்தேன் நீங்க படிச்சாச்சா?

Anonymous said...

cyril,

pattu nalla irundhudhu.edhuvarai ketadhe illai...paatula humming yaary??....adhai keta odane...Kashmir ki Khali la Asha and Rafi yoda quwwali song nyabagam vandhadhu ..en nnu theriyala....haan pattu " hai re hai" nnu aarambikkum...andha humming konjam ore maadhiri irukko??

Radha

சிறில் அலெக்ஸ் said...

ராதா,
நீங்கள் சொன்ன இந்திப்பாடல் நான் கேட்டிருக்கவில்லை. அந்தக்காலப் பாடல்களில் இந்திப் பாடல் தாக்கங்கள் பல இருக்கின்றன.

Boston Bala said...

கிழக்கு பதிப்பகம் வெளியீடாக கண்ணீரும் புன்னகையும் என்று சந்திரபாபுவின் வாழ்க்கையைத் தொகுத்திருக்கிறார் முகில். தவற விடாமல் படிக்கவும்.

சிறில் அலெக்ஸ்