.

Wednesday, June 13, 2007

'சிவாஜி' பற்றிய பதிவுகள்

சிவாஜி வாயிலே ஜிலேபி.

மேல உள்ளத க்ளிக்கினா 'சிவாஜி' குறித்த பதிவுகளைப் பார்வையிடலாம். வலப்பக்க பட்டையிலும் அப்டேட் ஆகும்.

இதுல இடப்பக்கம் பாத்தீங்கண்ணா கால வரிசைப்படி பார்க்க வசதி இருக்குது.

சிவாஜி பற்றி பதிவு வந்தா உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துற வசதியும் உண்டு. Explore it.

இதுதான் Google Blogsearchன் மாயம்.

தேடினா! கிடைக்கும்!

பாபா 'சுருக்கம்'னு பின்னூட்டியதால இந்த சேர்க்கை.

இணையம் முழுவதிலும் தேட கூகிளை பயன்படுத்துவதைப்போல பதிவுகளில் தேட Blog search உதவுகிறது. Advance Blogsearchல போனீங்கண்ணா இன்னும் அதிக வசதிகள் இருக்குது.

உதாரணத்துக்கு சிறில் என்கிற பெயர் பதிவுகளில் எங்கேயெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்குன்னு ஒரு தேடல் செஞ்சேன். அதுல என்னுடைய பதிவுகளை 'without words' எனும் பெட்டியில் 'theyn cvalex useenthis muttom' என்று உள்ளிட்டேன். இதனால் என் பதிவுகளைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் சிறில் எனும் பெயர் எங்கெல்லாம் இருக்குதுண்ணு எளிதா கண்டுபிடிக்க முடிந்தது.

இப்படி தேடிக் கிடைப்பவற்றை RSS அல்லது Atom ஓடையாகவும் பெறலாம்.

பாலபாரதிக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கலாம்.
:)

உலகெங்கும் பா.க.சவினர் போடும் பதிவுகளை தொகுக்க எளிதாயிருக்கும்.

சுய ஆய்வுக்கான கேள்வி

யார் பெயர் பதிவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனப் போட்டிவைத்தால் யார் ஜெயிப்பார்கள்?

1. Baby பாரதி
2. 'சமீபத்தில் பிறந்த' டோண்டு
3. 'Snap நிதியரசர்' பாஸ்டன் பாலாஜி
4. 'Sound' செல்லா
5. 'யானைப் பாகி' பொன்ஸ்

7 comments:

Boston Bala said...

சுருக்கமா சொல்லியிருந்தாலும், முக்கியமான பதிவு :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

காலத்தால் போட்ட பதிவு சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது

:)

பருத்திவீரன் வாயில பக்கோடா - இதைச் சொடுக்கினா கூகுள் பதிவுத் தேடல் குறித்த இடுகையைப் பார்க்கலாம் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'Snap நிதியரசர்' பாஸ்டன் பாலாஜி//

பாபா, நீங்க நிதி அரசர் ஆயீட்டீங்களா?
வாழ்த்துக்கள்! :-)
எப்ப பாஸ்டனில் பார்ட்டி? (அந்த டீ பார்ட்டி எல்லாம் சொல்லி சமாளிக்கக் கூடாது சொல்லிட்டேன்)

Anonymous said...

வலப்பக்கம் இருப்பதில் சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள்னு தெரியுது. கிளுக்குனா தேன்கூட்டுக்கு போது. ஆனால் காசியின் வலைக்கு போகலே.

காசி திரட்டியை ஊத்தி மூடிச்சு சேவை செய்யப் போயி ஒரு மாமாங்கம் ஆகுது.

இன்னும் எப்படி சிந்தனை சிதறும்?

Anonymous said...

YOU'RE THE FIRST PERSON TO LINK THE BLOG SEARCH...!?

ENNAMO PONGA SIVAJI RELEASE VARAVARIKUM ITHU MATHIRI THAN ETHAVATHU MOKKAI MATTER ODTIKITU IRUKKUM POLA

BYE
KA

சதுர் said...

ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.

பொன்ஸ்~~Poorna said...

பெரியவங்க பட்டியலில் என்னைச் சேர்த்து ஏங்க வம்பை விலைக்கு வாங்க வைக்கிறீங்க ;))

link:yourblogname.blogspot.com -> இதைப் போட்டுத் தேடி, அந்த தேடும் செயலின் ஓடையை எடுத்து வச்சிகிட்டா, உங்க பதிவுக்கு யாரெல்லாம் லிங்க் கொடுத்து எழுதுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.. என் ப்ளாக்கர் பதிவில் இதுக்குன்னு ஒரு இடம் கட்டி வச்சிருந்தேன்..

சிறில் அலெக்ஸ்