.

Friday, July 21, 2006

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

எங்கு பார்த்தாலும் சிதம்பரதில் தமிழில் பாடுவது குறித்த சூடான விவாதங்கள். பதிவுகள் பல பல செய்திகளையும் கோணங்களையும் தந்தாலும் முகமூடியின் பதிவும், 100சில பின்னூட்டங்களும் பிரச்சனையை முழுமையாய் அலசியிருக்கின்றன.

உண்மையில் நம்(பதிவர்கள்) மத்தியிலிருக்கும் பிரிவினை மனப்பாங்குகளின் காரணத்தால் இந்த விஷயத்தைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த எனக்கு தயக்கமிருந்தது. இருப்பினும் சில பதிவுகளில் பின்னூட்டமிட நேர்ந்தது.

என் தயக்கத்தை உறுதி செய்யும் வண்ணம் முகமூடியின் பதிவில் ஜோவின் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்ட ஒரு பெயரிலி நம்மை வம்புக்கிழுத்துள்ளார்.

இவரின் முதல் நோக்கமென்ன, கிறித்துவர்கள் இந்து பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பதே. உண்மையில் சிதம்பர பிரச்சனை ஒரு சமூக பிரச்சனையாக (திரிக்கப்பட்டு?) கையாளப்பட்டுவருகிறது. 'தமிழ்' பிரச்சனை எனத்தான் இது அறியப்படுகிறது. இருந்தாலும் ஜோ, சிறில் எல்லாம் மூடிக்கிட்டு இருக்கணும்.

முகமூடியின் பதிவில் நான் எந்த பின்னூட்டமும் இடாதபோது என்னை கிறித்துவ அடிப்படைவாதி என முத்திரை குத்தி வம்புக்கிழுத்த பெயரிலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவருக்குத்தான் அவர் பெயரிலி ஆனால் அவர் யாரென்பது அவரின் பின்னூட்ட்டங்களில் எளிதாய் தெரிகிறது.

ஜொவின் பின்னூட்டங்கள் நாகரீகமாய், பிரச்சனைபற்றி எல்லோருக்கும் எழும் சில கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தார் என்பதும் ஒரு போதும் அவர் யாரையும் இழிவாய் பேசவில்லை என்பதும் அவரை அந்தப்பதிவிலேயே பாராட்டியிருக்கும் மற்ற பதிவர்களின் (முகமூடி உட்பட) பின்னூட்டங்கள் சொல்லும்.

சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?

முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?

மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.

எந்த கலாச்சாரமும் அழியும், புதுமைபெறும். இறப்பு எப்படி மனிதனுக்கு நிச்சயமோ அதுபோலத்தான், சில கலாச்சாரங்கள் சிதையும், மருவும், மாறும். இறப்பும், அழிவும் எத்தனை நல்லவிஷயங்கள் என்பது நடராசரின் பேரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும்.

பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா?

சரி விஷயத்துக்குவருவோம். நம் அனானியின் பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்(சிரித்துக்கொண்டே). இதே அனானி தூண்டப்படாமலே பிற மதங்களைத் தாக்கியிருக்கிறார் தன் பின்னூட்டங்களில். ஆனால் மத்தவங்கள அடிப்படைவாதின்னு நினைத்தமாட்டிலே எழுதிட்டுப்போவாரு.

எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.

54 comments:

VSK said...

முகமூடியின் பதிவுக்கு ஈடான நேர்மையான இன்னொரு பதிவு!
உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் என்னும் முறையில்[சொந்தம்!!] மனமாரப் பாராட்டுகிறேன், அதைப் பாராட்டியதைப் போலவே!

பிரச்சினைகளை நேர்மையாகவும், நியாயமாகவும், உணச்சிவசப்படாமலும் விவாதிக்க என்றுதான் அந்த தெய்வங்கள் அருளுமோ??:)
நன்றி! வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் said...

//எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.//

நான் சார்ந்த என்று கூடச் சொல்லமுடியாது ... நம் மீது.. நம் அனுமதியின்றி திணிக்கப்பட்டது கூட கேள்விகளுக்கு அப்பாற்பட்டு என்று நினைப்பது எதனால் ? பகுத்தறிவை தூண்டிக்கொள்ளாமல் இருப்பதால் தானோ !

பி.கு : பின்னூட்டம் கடைசி பத்திக்கு மட்டும்தான்

commenter said...


சொல்லவேண்டும் போல இருந்தது. அதனால் மட்டும்...

//
முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?
//
ஒரு கிறித்துவர் ஒரு Churchல் பூசைவைக்க விரும்பினால் 5 வருடம் பாதருக்கு படிக்கலாம் பின் பூசையும் வைக்கலாம்.



//மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.
//
தவறு போல தெரிகிறது.

Anonymous said...

||தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது.||

சிறில் சார் - ஒரு காலத்தில் கோயிலுக்குள் நுழைவதுகூட ஒரு சாராருக்கு இதே மாதிரி 'வீம்பாகத்தான்' இருந்தது. அப்போது சில 'வீம்பு' பிடித்த ஆசாமிகள் அதை எதிர்க்கவில்லையென்றால் இப்போதும் கோயில் படிக்கட்டைக் கழுவி வெளிவரும் தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொண்டு கும்பிடு போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். அரசியல் கட்சிகளின் தலையீடு என்கிறார்கள் - இதற்கே இந்த ராவடி, தனி மனிதனாகப்போயிருந்தால் குண்டுக்கட்டாகக் கட்டி வெளியே தூக்கி எறிந்திருக்கமாட்டார்கள்? அரசியல்வாதிகள் மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என்று ஒரு கூப்பாடு வேறு - இது மக்களுக்குச் செய்வதில்லையா? இதைச் சொன்னால், தெருவில் உள்ளவனுக்குச் சோறு கிடைக்கவில்லை, கோயில் பிரச்சினை தான் இவர்களுக்கு முக்கியமா என்று திசைதிருப்புவார்கள் - இதெல்லாம் புரியாமலா இப்படிப் பொத்தாம்பொதுவாக எழுதுகிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை இழுத்ததும் ஒரு திசைதிருப்பல் தானே? தேவைப்படாதபோது ஆபிரகாமிய மதங்களை தர்ம சாத்து சாத்திக்கொள்ளலாம், ஆனால் தனது மதத்தில் ஏதாவது குறை சொன்னால் மட்டும், 'அந்த மதத்தில் அப்படி, இந்த மதத்தில் இப்படி, என்னை மட்டும் ஏன் குறைசொல்லவேண்டும்' என்று வக்காலத்து வாங்குவதற்கு மட்டும் ஆபிரகாமிய மதங்கள் வேண்டும் - காமெடியாக இல்லை?

மணியன் said...

சிறில், இது போன்று போகிறபோக்கில் சண்டைக்கிழுத்து குளிர்காயும் தன்மை பரவி வருகிறது. இதைப் போன்ற பெயரில்லா வசைமொழிகளை புறம் தள்ளுவதே சிறந்தது. ஆரோக்கியமான விவாதங்களை திசை திருப்புவதே இவர்களின் நோக்கம். கட்டுரையின் மற்ற கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன்.

Anonymous said...

\\முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா\\

ஒரு சாதாரண கிறுத்துவர் பூசை செய்ய ஆசை படுகிறேன் என்று கூறினால் அதற்க்கு மறுப்பு என்பது நீங்கள் "முறைப்படி" ஃபாதர் இல்லை என்பதாகதான் இருக்கும். அவரின் பிறப்பு, சாதி பற்றி எல்லாம் கேள்வி எழாது. ஆனால் இங்கோ தகுதியே பிறப்பு, சாதி தானே!!!

சீமாச்சு.. said...

//
சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது.
//
இதை.. இதைத்தான் ராஜா நான் ஆரம்பத்திலேருந்து சொல்லிக்கிட்டிருந்தேன்.. யார் புரிஞ்சுக்குறாங்க.. நீங்க இன்னும் கொஞ்சம் தெளிவாச் சொல்லியிருக்கீங்க.

இந்தப் பதிவுக்கு நன்றி

என்றென்றும அன்புடன்,
சீமாச்சு..

ஜோ/Joe said...

சிறில்,
உங்களுக்கே உரித்தான தனித்தன்மையோடு கருத்துக்களை இட்டிருக்கிறீர்கள்.

அடிப்படையில் உங்கள் உட்கருத்துக்களோடு நான் பெரும்பாலும் ஒத்துப் போகிறேன் என்றாலும் சில கருத்துக்களை சொல்லலாமென்று நினைக்கிறேன்.

// மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?//

சிதம்பரத்தில் மட்டுமென்ன தமிழுக்கு தனிச்சிறப்பு என்பது உங்கள் கேள்வியானால் ,ஒரு சிறப்பு இருப்பதாக நான் அறிகிறேன் .தமிழில் புகழ்பெற்ற திருவாசகத்தை மாணிக்க வாசகர் இங்கு தான் பாடியதாகவும் அதற்கு சிவபெருமானே 'உலகெலாம்' என்று துவக்க வார்த்தையை எடுத்துக் கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.

//முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?//
முட்டாள் தனம் தான் .ஆனால் யாரும் ஃபாதர் ஆவதற்கு ஜாதி தடையில்லையே .எல்லோருக்கும் பொது விதி தானே . நீங்களோ நானோ ஃபாதர் ஆவதற்கு வழி இருக்கிறது .சிதம்பரத்தில் தீட்சிதர் மட்டுமே குறிப்பிட்ட முறைமைகளை செய்ய முடியுமென்றால் ஆறுமுக (வன்னியர்) தீட்சிதர் ஆவதற்கு வழி உண்டா?

//தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.//

தமிழ் வளர்ச்சியா ? கிழிஞ்சுது போங்க .தமிழின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தவே ததிகிணதோம் போடுறோம் ,இதுல எங்க வளர்றது.

//ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது?//
சரி இந்து மதமே கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்றால் இந்துக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு தலைமையை ஏற்றுக்கொள்வார்களா ? இந்து மதம் ஒற்றை அமைப்பாக எல்லா இடங்களிலும் ஒரே கொள்கையை வரையறுத்துக் கொள்ளாதவரை இது சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.இந்து மதத்தின் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மையே அதன் பலமும் பலவீனமும்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி எஸ். கே.
நீங்கள் என பதிவுகளை விரும்பி படிப்பீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி.

சிறில் அலெக்ஸ் said...

//பி.கு : பின்னூட்டம் கடைசி பத்திக்கு மட்டும்தான் //

புரிகிறது...கோவி கண்ணன்

சிறில் அலெக்ஸ் said...

காமெண்டர்...
சாதி அமைப்பு என்பது இந்து(இந்திய) சமூக அமைப்பு. இதை மையமாய் வைத்து விவாதிக்கவோ போராடவோ வேண்டுமானால் பொதுவாக விவாதிக்கவேண்டும். எல்லா பிரச்னைகளையும் அலசவேண்டும். ஏன் ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, இடத்தையோ, கோவிலையோ மையமாகவைத்துப் பேசவேண்டும். பிராமணர்கள்தான் சாதி பிரச்சனை செய்கிறார்கள் என்பது ஒரு மாயை, சிதம்பரத்தில் திருவாசகம் பாடினால்தமிழ் வளரும் என்பதுபோன்ற நினைப்புத்தானது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்சாதி கிறித்துவமதத்தில் இல்லை என்றா?

சிறில் அலெக்ஸ் said...

//முட்டாள் தனம் தான் .ஆனால் யாரும் ஃபாதர் ஆவதற்கு ஜாதி தடையில்லையே .எல்லோருக்கும் பொது விதி தானே . நீங்களோ நானோ ஃபாதர் ஆவதற்கு வழி இருக்கிறது .சிதம்பரத்தில் தீட்சிதர் மட்டுமே குறிப்பிட்ட முறைமைகளை செய்ய முடியுமென்றால் ஆறுமுக (வன்னியர்) தீட்சிதர் ஆவதற்கு வழி உண்டா?//

ஜோ, யார் வேண்டுமானாலும் ஃபாதர் ஆகலாம் ஆனால் எல்லா (சாதி) பாதர்களும் எல்லா பங்குகளுக்கும் அனுப்பப்படுவதில்லையே ஏன்? இதற்கும் வன்னியர் தீட்சிதர் ஆவதற்கும் நூலிழை வித்தியாசமே.. உங்களுக்கும் அது தெரியும்.

ஃபாதர் பட்டமென்பது படிப்பினால் வருவது... தீட்சிதர் என்பது பிறப்பினால் வருவது. இட ஒதுக்கீடுகூட பிறப்பினடிப்படையிலேதான் வழங்கப்படுகிறது. இல்லையா. பிறப்பினால் சிலர் சில விஷயங்களில் பலனடைகிறார்கள் சிலர் மற்றவைகளில் பயண்டைகிறார்கள். எங்கப்பா என்ன அடிக்கிறார் இனி நீதான் எங்கப்பான்னு யாராவது சொல்ல முடியுமா.

சாதி கொடுமையானதுதான் அதை முழுமையாக ஒழிப்பதுதான் குறிக்கோளாயிருக்கணும்.

சிறில் அலெக்ஸ் said...

//இந்து மதத்தின் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மையே அதன் பலமும் பலவீனமும். //

உண்மை..

சிறில் அலெக்ஸ் said...

முதலில் மிகப்பெரிய குழப்பம் சின்ன மதங்களை இந்து மதம் என்று ஒன்றுபடுத்தியதுதான்.

வைணவம் சைவம் எனத் தனித்தனி மதங்களாக இருந்திருக்குமேயானால் பிரச்சனையிருந்திருக்காது.

கிறித்துவக் கோவிலில் கிறித்துவப்பாதிருஇயார் பூசைவைக்கிறார், சைவ கோவிலில் சைவரும் அசைவ(சைவமல்லாத) கோவிலில் மற்றவரும் பூஜை செய்வதுதானே நியாயம்..?

குமரன் (Kumaran) said...

//வைணவம் சைவம் எனத் தனித்தனி மதங்களாக இருந்திருக்குமேயானால் பிரச்சனையிருந்திருக்காது.
//

பிரச்சனை இருக்குங்கறதுல எந்த ஐயமும் கிடையாது சிறில். ஆனால் இது தீர்வான்னு சொல்ல முடியலை. இப்படி தனித்தனியா சைவத்தையும் வைணவத்தையும் பிரிக்க முடியாது. புத்தகங்களிலும் சிறுபான்மை மக்களிடமும் தான் அந்த வேறுபாடு இருக்கிறதே ஒழிய பெரும்பான்மை மக்களிடம் அந்த வேறுபாடு இல்லை.

அப்படித் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கினால் எல்லையே இல்லாமல் பிரிந்து கொண்டே செல்லும் - வடநாட்டு வைணவம், தென்னாட்டு வைணவம், காஷ்மீரச் சைவம், கன்னடச் சைவம், தமிழகச் சைவம் இப்படி எண்ணில்லாத பிரிவுகளாப் பிரியும்.

VSK said...

சனாதன தர்மம் எனும் பொதுப் பெயரில் பல மதக் கோட்பாடுகள் தனிதனியேயும், ஒழுங்காகவும் இயங்கிக்கொண்டிருந்த ஒரு அமைப்பை, இந்து மதம் என்ற பெயரில் ஒருங்கிணைத்த புண்ணியம் ஆங்கிலேயரைச் சாரும்!

கத்தோலிக்கர், ப்ரோடெஸ்டன்ட்டுகள் எனவும், சுன்னி, ஷியைட் எனவும் இயங்கும் மற்ற மதங்கள் போல இதுவும் இருந்திருக்கும்,அவரவர் வழிக்கு!

அப்போது நீங்கள் சொன்னது போல சைவ, அசைவக் கோயில்கள் எல்லாம் பிரச்சினையின்றி வாழ்ந்திருக்கும்.

சமீப காலம் வரை கூட, இதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் அவரவர் வழியைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்!

காலத்தின் கட்டாயம்[கோலம்??] என, பகுத்தறிவு பிம்பங்கள் கையையும், காலையும், மூக்கையும் நுழைக்கப் போய்தான் இத்தனை குளறுபடிகள்!

இதுவும் அவன் விளையாட்டே என ரசித்திருப்போம்!

G.Ragavan said...

சிறில்,

// சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை. //

உண்மைதான். நியமங்களும் செயல் திட்டங்களும் இருந்தால் மட்டும் போதாது. அவைகள் செம்மையாகவும் இருக்க வேண்டும்.

// தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்? //

தீட்சிதர்கள் போல என்றல்ல பிரச்சனை....தீட்சிதர் மட்டுமே ஏன் என்பதும் பிரச்சனை. தமிழ் வழிபாடு என்பது எங்கும் புக வேண்டியதுதான். சிதம்பரத்தில் மட்டும் ஏன் பிரச்சனை என்றால் சிதம்பரம் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் வராது. இதுவரை அது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

Anonymous said...

||முதலில் மிகப்பெரிய குழப்பம் சின்ன மதங்களை இந்து மதம் என்று ஒன்றுபடுத்தியதுதான்.

வைணவம் சைவம் எனத் தனித்தனி மதங்களாக இருந்திருக்குமேயானால் பிரச்சனையிருந்திருக்காது.||

சிறில் அலெக்ஸ், ஏதோ ஆறுமுகச்சாமி செய்தது வீம்பு அது இது என்று எழுதியிருக்கிறீர்கள் - பிழைத்துப் போனீர்கள். அதற்கு எதிராக எழுதியிருந்தால், உங்களை இதே திரிப்புவாதிகள் வேறு விஷயத்துக்குக் குறிவைத்தால் மேலே நீங்கள் சொன்னதை இப்படித் திரிப்பார்கள் - ||வைணவம் சைவம் என்று தனித்தனி மதங்களாக இருந்திருக்கவேண்டுமென்று சிறில் அலெக்ஸ் சொல்கிறார், ஒன்றுபட்ட இந்து மதம் இருந்தால் மதமாற்றம் செய்யமுடியாதென்று இந்துமதத்தை பிரித்தாளும் சூழ்ச்சி இது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது - பௌத்தம், ஜைனம் உட்பட அனைத்தும் இந்துமதக் கருத்தாக்கங்களிலிருந்து கிளைத்து வந்தவையே என்பதை எத்தனை முறை இந்த கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்குச் சொல்லிப் புரியவைப்பது?||

மேற்கண்ட திரிப்புக்கு ஒரு ஆதாரமாக, பதிவுள் நீங்கள் சொல்லியிருக்கும் ||மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.|| ஐ உருவுவார்கள் - பாருங்கள், இந்துமதத்தில் வளையம் தடியாக இருக்கிறது, கிறிஸ்தவ மதத்துக்கு வாருங்கள், அங்கே வளையம் மெல்லிசாக இருக்கிறது என்று மறைமுகமாக சிறில் அலெக்ஸ் அழைக்கிறார் என்று திரிப்பார்கள். இந்தத் திரிப்புவாதிகளுக்கு தான் நினைப்பதை நிலைநிறுத்தியாகவேண்டும் - இதை நிலைநிறுத்த ஒரு சம்பவத்தை மட்டும் தனியாக எடுத்து அதன் வரலாற்று ரீதியான முன்காரணங்களிலிருந்து துண்டித்து, விமர்சிக்கிறேன் என்ற பெயரில் இஷ்டத்துக்குத் திரித்தும் உதைத்தும் பந்தாடுவது இவர்களுக்குக் கைவந்த கலை - அறிந்தோ அறியாமலோ உங்களுக்கும் இந்த உத்தி நிறைய அப்பீலிங்காக இருக்கிறது போல - தன்னையறியாமலே வலையில் விழட்டுமா தனசேகரா என்று பாட்டுச் சத்தம்தான் உங்கள் பதிவில் பெரிதாகக் கேட்கிறது.

நிலைமை இப்படி இருக்க, பிற கோவிலில் நடந்திருந்தால் மட்டும் இந்த மாதிரி விமர்சனங்கள் வந்திருக்காதா என்ன? அங்கேயும் இதே கேள்விகள்தான் வரும் - அதான் அங்கே நின்று ஓதக்கூடாது இங்கே நின்று ஓதக்கூடாது என்கிறார்கள், தமிழில் ஓதக்கூடாது கன்னடத்தில் ஓதக்கூடாது என்கிறார்கள் அது இது என்று. சைவர்கள், தங்கள் முதற் கோயிலாகச் சொல்லிக்கொள்ளும் தில்லையில் திருவாசகத்தையும் தேவாரத்தையும் ஓதாமல் பிறகு திருப்பதியிலா ஓதமுடியும்? 'எங்கே நின்று எந்த மொழியில் பாடினாலும் தவறில்லை' என்று ஒற்றை வாசகத்தில் கருத்தாக்க ரீதியில்கூட நேர்மையாகப் பதிலளிக்க இயலாமல், இது தமிழ் குறித்து இல்லை, கருவறைப் பிரவேசம் குறித்து, வீம்பு என்று திரி திரியென்று திரிப்பவர்களது போலித்தனம் தெரியவில்லையா சிறில் அவர்களே? வெறும் கழுத்தை மட்டும் திருப்பிப் பார்த்தால் பின்னால் இருப்பதில் ஒரு பகுதிதான் தெரியும் - நின்று முழுதாகத் திரும்பிப் பாருங்கள். கிறிஸ்துவம் அளித்த சமத்துவத்தின் குஷன் சேரில் உட்கார்ந்துகொண்டு கழுத்தைத் திருப்பி மட்டும் பார்த்து நீங்கள் கேட்ட ஒரு யதார்த்தமான கேள்வியே, அதைப் படித்தபோதே சுருக்கென்றது. என்ன செய்வது - உங்களுக்குக் கிறிஸ்தவ மதம் அளிக்கும் சமத்துவம் அளவுக்குக் கூட இல்லாமல் இங்கே கோயிலுக்குள் போவதற்கே அடிபட்டு மிதிபட்டுப் போராடி அனுமதி வாங்கி, நினைத்த இடத்தில் நிற்பதற்கும் நினைத்த மொழியில் பாடுவதற்குமே சங்கடப்பட்டுக்கொண்டு - இன்னும் பல அநியாயங்களையும் சகித்துக்கொண்டோ, இருப்பதையே உணராமலோ இன்னும் வெள்ளிக்கிழமை, பிரதோஷம், மார்கழி பஜனை என்று பரிதாபமாகத் தங்களது கடவுள்களைப் பற்றிக்கொண்டு கும்பிட்டுக்கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களைப்பற்றியும் யோசித்துப் பாருங்கள் - ஒருவேளை உங்களுக்கு இன்னும் உறைக்கும். அந்த அப்பாவிகளின் பக்தியை ஆத்திகம் என்ற ஆயுதமாக உபயோகித்து, தங்கள் அரசியலை நிலைநிறுத்திக்கொள்ளும் விருப்பமுள்ள குறுக்குப்புத்தி உள்ளவர்கள் அடிக்கும் கூத்து உங்களை நேரடியாகப் பாதித்திருந்தால் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகவும் நடுநிலைமையான பதிவு உங்களது - பிடியுங்கள் பாராட்டுக்களை.

G.Ragavan said...

// முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா? //

நிச்சயமாக. பூசை வைப்பதற்கென்று ஒருவர் வேண்டும்தான். அவர் யார் என்பதுதான் பிரச்சனையின் மையக்கருத்து. தகுதி என்பது படிப்பால் வருவதா பிறப்பால் வருவதா என்பது கேள்வி.

// மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள். //

கட்டுப்பாடுகள் என்பன காலத்தின் வழிப்பட்டவை. இன்றிருக்கும் எல்லாக் கட்டுப்பாடுகளும் நேற்றும் இருந்தன என்று சொல்ல முடியாது. என்றும் இருக்கும் என்று எதையாவது நம்பினால்.....குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...அதுவும் அழியும். இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.

ஆனால் கட்டுப்பாடுகள் என்பது என்ன? யார் விதிப்பது? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றுதான் பலமுறை இருந்திருக்கிறது. இனியும் இருக்குமென்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் இங்கு பிரச்சனை கட்டுப்பாடு பற்றி இருப்பது போலத் தோன்றினாலும் அது கட்டுப்பாடு பற்றியது அல்ல.

G.Ragavan said...

// 'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன். //

சிறில், தமிழ் உறுதியாக அழியும். தமிழ் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லாம் நிச்சயம் அழியும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வயதுண்டு. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல மொழி, மதம், கட்டிடம்....எல்லாவற்றிற்கும். எது தன்னை அடிக்கடிப் புதுப்பித்துக் கொள்கிறதோ...அது நீண்ட காலம் வாழும். எது வீறாப்பாக விடாப்பிடியுடன் இருக்கிறதோ அது விரைந்து அழியும். அவ்வளதுதான் விஷயம்.

// எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும். //

அது எப்படி ஆகும் சிறில்? எல்லாத் தொழில்களுமே சில காலத்திற்கு முன்பு குறிப்பிட்ட சாதியினரால் செய்யப்பட்டவையே. என்னுடைய சிறுவயதிலேயே நான் பார்த்திருக்கிறேன். துணியெடுக்க ஏகாலி. கீரைப் பாத்திக்கு ஒரு சாதி. மீன் விற்க ஒன்று. விவசாயத்திற்கு ஒன்று. கடை வைக்க ஒன்று. இப்படித்தானே இருந்தது. இன்று அப்படியா? எல்லாத் தொழிலிலும் எல்லாரும் இருக்கலாம் எனும் பொழுது.....இந்தத் தொழிலில் மட்டும் ஏன்? இதைத் தொழில் என்று சொல்வது தவறாகாது. நிச்சயமாக இது வருமான நோக்கில் செய்வதுதானே. அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அனைவருக்கும் ஆகாதது என்று சொல்வதே தவறு.

// பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா? //

இந்துமதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவது அல்ல. அது யாருடைய கையிலும் இல்லை. தன்னுடைய கையில் இருப்பதாக நினைப்பதுதான் அறியாமை. பழைய கோயில்கள் பல அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளன. நான் ஏன் கோயிலுக்குப் போகவில்லை. இத்தனை முறை வணங்கவில்லை என்று அரசாங்கம் யாரையும் கேட்க முடியாது. அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கோயில்கள் வரைதான். அதே நேரத்தில் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்படாத தனியார்க் கோயில்களும் உள்ளன. ஆனால் சிதம்பரம் தனியார் கோயிலா என்பதுதான் பிரச்சனையே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழன் கட்டிய கோயில். சமயக்குரவர்கள் பாடிய கோயில். பெரிய புராணத்திற்கு...இதோ இன்று சித்சபை சிற்றம்பலம் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே...அந்த அம்பலத்தின் உள்ளே இருந்து "உலகெலாம்" என்று இறையனார் ஓங்கி ஒலித்த அம்பலம். அதுவா தனியார் கோயில்? தமிழ் மதுரையில் சங்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கலாம். உண்மைதான். ஆனால் தில்லையில் அருளும் காட்டி வளர்ந்தது. இறைவனுக்கே முதல் மரியாதை உடைய திருக்கோயிலில் பெரியபுராணம் படைத்த மாண்புமிகு முதல்வரான சேக்கிழார் பெருமானுக்கு அநபாயன் கவரி வீசிய திருக்கோயில். இப்படி நம்பிக்கையின் ஆணிவேராக இருக்கும் திருக்கோயிலைத் தனியார் சொத்து என்று எப்படியய்யா மனம் ஒப்பும்?

G.Ragavan said...

இன்னொன்று சொல்கிறேன்....இந்தப் பூசாரிப் பிரச்சனையை கிருத்துவத்தில் பங்குத் தந்தையாவதோடு ஒப்பிட முடியாது. ஆனால் இதே போன்று கிருத்துவத்திலும் பிறப்பின் அடிப்படையில் தேர்வாவது ஒன்று உண்டு. ஆம். வாடிகன் நகரைக் காவல் காக்கும் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட நாட்டவர்களுக்கே உண்டு என்று அறிவீர்கள் அல்லவா. அத்தகைய பிரச்சனைதான் இந்தப் பூசாரிப் பிரச்சனை.

G.Ragavan said...

// கிறித்துவக் கோவிலில் கிறித்துவப்பாதிருஇயார் பூசைவைக்கிறார், சைவ கோவிலில் சைவரும் அசைவ(சைவமல்லாத) கோவிலில் மற்றவரும் பூஜை செய்வதுதானே நியாயம்..? //

நிச்சயமாக. கிருத்துவின் மேல் நம்பிக்கை உள்ளவர்தானே பூசை வைக்கிறார். அவர் பிறப்பால் கிருத்துவரா? நம்பிக்கையால் கிருத்துவரா?

அதுபோல பிறப்பால் எதுவாக இருந்தாலும் நம்பிக்கையால் சைவனாகவோ அசைவனாகவோ இருந்தால் அந்தந்தக் கோயிலில் பூசை செய்ய விரும்பினால் அதற்குத் தடை ஏன்?

கௌசிக் பாய் என்று பிறப்பால் இஸ்லாமியராக இருந்தவர் கௌசிக முருகன் ஆலயம் கட்டி நிர்வகிக்கவில்லையா? இதே தமிழ்நாட்டில் நடந்ததுதானே...முருகன் எழுந்து ஓடிவிடவில்லையே.

அர்ச்சகர் வேலையை அரசாங்க வேலையாக்கி, சம்பளமும் கூட்டி, நெறி முறைகள் வகுக்க வேண்டும். அதற்காக இப்பொழுது இருக்கும் அர்ச்சகரை வெளியேற்றுவது அல்ல தீர்வு. வயதால் ஓய்வாகும் ஒரு அர்ச்சகருக்குப் பிறகு இன்னொருவர் வர வேண்டும் என்றால் அது தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

G.Ragavan said...

// சாதி கொடுமையானதுதான் அதை முழுமையாக ஒழிப்பதுதான் குறிக்கோளாயிருக்கணும். //

இதுவும் உண்மை. சாதி ஒழிப்பு என்பது மேல்சாதி என்று சொல்லப்படுகின்றவரை அழித்துக் கீழ்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவரை மேலே கொண்டு வருவதல்ல. எல்லாருக்கும் பொதுவாய்ச் செய்வது. இதற்குத் தேவையான பக்குவம் இன்றைக்கு எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. எந்தச் சாதிக்கும் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். இதுவே மத விஷயம் என்றால்...அந்தப் பக்குவமும் எந்த மதத்தாருக்கும் பொதுவாக இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி என்பது என் கருத்து.

சிறில் அலெக்ஸ் said...

குமரன்,
பிரச்சனை பிரிவினயென்றால் தீர்வுஎன்ன.எல்லாரும் எல்லா கோவிலிலும் பூஜை செய்யவும்,பட்டங்கட்டவும் அனுமதிக்கப்படவேண்டுமென்பது தீர்வாகுமா? அப்படீன்னா எனக்கு இயேசுமேல நம்பிக்கை இருக்குன்னு சொன்னா ஒரு ஐயர் வந்து சர்ச்சில் பூஜை செய்யவும் அனுமதிக்கணுமே.

என் வாதம் என்னன்னா. ஒரு கோவிலை சட்ட ரீதியா யார் நிர்ணயிக்கிறார்கள் என்பது வரையறுக்கப்பட்டிருக்கப்பட்டிருந்தால் அவர்களின் சட்டதிட்டப்படிதான் அந்தக் கோவிலின் நடவடிக்கைகள் நடத்தவேண்டியுள்ளது. சட்டத்தை மீறுவதை நிச்சயம் கேள்விகேட்கலாம்.

Boston Bala said...

மனதில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி எங்களுடன் பகிர்வதற்கு நன்றிகள் பல.

----நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.----

ஹ்ம்ம்ம்

----நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? ----

சொல்லத்தான் நினைக்கிறேன்... ஆனா;, வார்த்தைதான் வரமாட்டேங்குது :-)

சிறில் அலெக்ஸ் said...

//தீட்சிதர்கள் போல என்றல்ல பிரச்சனை....தீட்சிதர் மட்டுமே ஏன் என்பதும் பிரச்சனை. தமிழ் வழிபாடு என்பது எங்கும் புக வேண்டியதுதான். சிதம்பரத்தில் மட்டும் ஏன் பிரச்சனை என்றால் சிதம்பரம் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் வராது. இதுவரை அது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. //

யோசிச்சுப்பாருங்க எல்லா கோவில்களின் மேலும் யாருக்காவது உரிமை இருக்கத்தான் செய்கிறது. எத்தனை ஊர்களில் தங்கள் கொவிலின்மேலுள்ள உரிமையைவிட்டுக்கொடுப்பார்கள்?

எனக்குத்தெரிந்து யாருமில்லை., ஒரே சாதிக்குள் கோவிலின் சட்டதிட்ட மீறல்களின் பேரில் வெட்டிக்கொள்ளும் கதைகள் கேட்டிருக்கிறோமே.

சட்டப்படி யாருக்கு உரிமை இருக்கிறதோ அவர்கள் அந்தந்தக் கோவிலை தத்தம் வழிமுறைக்கேற்ப நடத்துவதுதானே முறை.

இதில் என்ன குழப்பம் என்று எனக்குப் புரியவில்லை.

கேரளத்திலுள்ள ஒரு கிறீத்துவக் கோவிலில் எங்கள் ஊர்ப்பக்கமுள்ள ஒரு குறிப்பிட்ட ஊரிலுள்ள மக்கள்தான் கொடி தூக்கிச்சல்லவேண்டும் என் சட்டமிருக்கிறது.

இதை யார் கேட்டாலும் விட்டுத்தருவதில்லை இவர்கள். இதெல்லாம் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.

சாதி என்பது கருவறைக்குள் நுழைவதைவிடப் பெரிய பிரச்சனை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் அது ஒரு குறிப்பிட்ட இனத்தை கீழே கொண்டுவருவதன் மூலம் சரியாகிவிடும் என எண்ணுவதும் தவறு.

சிறில் அலெக்ஸ் said...

அன்னனிமஸ்,
கிறித்துவம் சமத்துவமளிக்கிறதா? சமத்துவம் வெறும் மதம்சார்ந்த விஷயமா? எல்லா கோவில்களிலும் யார்வேண்டுமானாலும் பூசை செய்யலாம், வணங்கலாம் என செய்துவிட்டால் சமத்துவம் வந்துவிடுமா?

எங்கள் ஊர்பக்கத்திலிருந்து சென்னை வந்தவர்கள் யாரும் கிறீத்துவர்களேயென்றாலும் தங்களை மீனவர்கள் என அறிமுகப்படுத்தவதில்லை. இதுதான்யா சமுதாயம் நமக்குத்தரும் சமத்துவம். மீன்காரன் என்றால் இழிவாம்.

மற்ற பின்னூட்டங்களில் கேட்டதையே கேட்கிறேன். உங்கள் ஊர் கோவிலுக்கு பக்கத்து ஊர்க்காரன் கொடை எடுக்கிறானென்றால் கத்தியை தீட்டிக்கொண்டு வருவதில்லையா?

சமத்துவம் என்பது ஒரு நிலை (Status) நாம் இருக்கும் நிலை. இதை நாமேதான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அடுத்தவனை என் நிலைக்குக் கீழே கொண்டுவருவதுதான் எனக்கு சமத்துவமென்பது ஒரு வழி. நான் எல்லோருக்கும் சமம் என எண்ணுவது இன்னொரு வழி.

இரண்டாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டபின்னும் ஏன் இன்னும் மேலே வர முடியாமல் திணறுகிறார்கள்?

அதிகாரம் செய்பவனைக் கண்டுகொள்ளாமல் முன்னேறிக்க்ண்டிருப்பவர்களுதான் உயர்நிலையை அடைகிறார்கள். அடுத்தவனை குறைகூறிக்கொண்டேயிருப்பவர்கள் அப்படியே இருக்கிறார்கள்.

கூத்தாடி said...

//ஆனால் சிதம்பரம் தனியார் கோயிலா என்பதுதான் பிரச்சனையே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழன் கட்டிய கோயில். சமயக்குரவர்கள் பாடிய கோயில்.//

ராகவன் சொல்வதில் என்க்கு முழு உடன்பாடு உண்டு..முகமூடியின் பதிவில் நடந்த விவாதத்தில் சாதி சண்டை தலை தூக்கிய்ய மாதிரி இருந்தது..

சிதம்பரம் போயிருந்த போது அங்கு நடந்த கூத்துக்களைப் பார்த்து வெறுத்தது உண்டு ..இந்த ஆறுமுக சாமி விவகாரத்தில் என்க்கு உடன்பாடு இல்லை என்றாலும் ..சிதம்பரம் தனியார் கோஒவில் என்று கூறுவதை எதிர்த்த விவாதம் கண்டு மகிழ்கிறேன்..

இந்து மதத்தில் பலருக்கும் குல தெய்வம் /குடும்பக் கோவில் எனப் பலத் த்னியார் கோவில்கள் இருக்கலாம் ..அதையும் சிதம்பரம் கோவிலையும் ஒன்று என எழுத்த்க் கொள்ள முடியாது ..அரசர்கள் எழுதிக் கொடுத்து இருக்கல்லம் ..ஆனால் இப்போதய மக்கள் ஆட்சியில் பெரும்பானமையோர் கருத்துக்கு மதிப்பளித்து அதை அரசே ஏற்க வழி செய்ய வேண்டும் ..இது நிஜமாக பிஜேபி போன்றோர் செய்ய வேண்டியது ..ஆனால் அவர்களின் அரசியல் ஆன்மீகம் சம்பந்தப் பட்டதல்ல சாதி சம்பந்தப் பட்டது ..

கூத்தாடி said...

//சமத்துவம் என்பது ஒரு நிலை (Status) நாம் இருக்கும் நிலை. இதை நாமேதான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அடுத்தவனை என் நிலைக்குக் கீழே கொண்டுவருவதுதான் எனக்கு சமத்துவமென்பது ஒரு வழி. நான் எல்லோருக்கும் சமம் என எண்ணுவது இன்னொரு வழி.
//
பாரட்டியே தீர வேண்டிய எண்ணங்கள் ..கண்டிப்பாய் ஒத்துக் கொள்கிறேன்

Anonymous said...

Alex,
very honest article, but still waste of time , let us not waste our times in between davinci codes or chidambaram conflicts.
i am expecting more litrary articles from u
through your articles you several times proved ur equanimity.

keep it up my friend.
raghs

சிறில் அலெக்ஸ் said...

கூத்தாடி மற்றும் ராகவனு பின்னூட்டங்களுக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

//sk said ...சனாதன தர்மம் எனும் பொதுப் பெயரில் பல மதக் கோட்பாடுகள் தனிதனியேயும், ஒழுங்காகவும் இயங்கிக்கொண்டிருந்த ஒரு அமைப்பை, இந்து மதம் என்ற பெயரில் ஒருங்கிணைத்த புண்ணியம் ஆங்கிலேயரைச் சாரும்!//

இந்துமதத்தை ஒருங்கினைத்தது ... ஆங்கிலேயர்கள் அல்ல ... மொகலாயர்கள் ... அக்பர் காலத்தில் இந்திய மதங்கள், பவுத்தம் உள்பட அனைத்தும் ஒரே மதம் போல ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு கலந்தது... புத்தமதம் இந்தியாவில் அழிந்ததற்கு அதுவும் காரணம்...

இந்து - இஸ்லாம் ஒற்றுமைக்காக அக்பர் தீன் இலாகி என்ற புதிய மதப்பிரிவை ஏற்படுத்தினார். அவர்மறைவிற்கு பிறகு அதுவும் மறைந்தது.

Anonymous said...

அனானிமஸாக வந்து கலகம் செய்யவில்லை. நான் ஒரு சிவப்பு விளக்கு பகுதியில் பிறந்ததால் என்னை அடையாள படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் என் உயிர் உள்ளவரை இந்த தீண்டாமையை எதிர்ப்பேன். உங்கள் பதிவிற்கு இட்ட பின்னூட்ட்ங்கள் என் கோபத்தின் வெளிப்பாடே !!!

மீண்டும் சந்திப்போம்.

சிறில் அலெக்ஸ் said...

// நான் ஒரு சிவப்பு விளக்கு பகுதியில் பிறந்ததால் என்னை அடையாள படுத்திக்கொள்ள விரும்பவில்லை//

சாரு நிவேதிதா மாதிரி கதையா?

Muthu said...

சிறில்,

அனானியை நீங்க கண்டிச்சது வரை சரிதான்.ஆனால் மற்ற சில கருத்துக்கள் அவ்வளவு நியாயமாக(குறைந்தபட்சம் என் பார்வையில் இருந்து) இல்லை.நிறைய பேர் அவைகளை சுட்டிக்காட்டியாயிற்று.மரபை காண்பித்து எதுவரை நியாயப்படுத்தலாம் என்பதற்கு என்ன லிமிட் என்பதை நீங்கள் தெளிவுப்படுத்தி இருக்கலாம்.சிலரை சந்தோஷப்படுத்த எழுதியது போல் உள்ளது.(இது தவறாகவும் இருக்கலாம்.சொல்லவேண்டும் என்று தோன்றியது.சொல்லிவிட்டேன்)

VSK said...

சிதம்பரம் கோயிலில் மட்டுமல்ல; எல்லாத் தமிழ்க் கோயில்களிலும் தமிழில் பாடத் தடையில்லை என்ற உண்மையை மரைத்து, தொடர்ந்து திரித்துக் கூறி வருபவர்கள்தான் தமிழ் எதிர்ப்பாளர்கள் எனக் கருதுகிறேன்.
எங்கு பாடுவது என்பதில்தான் தகராறு என்பது தெரிந்தும் இப்படி கூறுபவர்களைப் பார்த்து தமிழன்னை நிச்சயம் வருந்துவாள்!
இவர்கள் வந்துதான் காப்பாற்ற வேண்டும் என்னும் நிலையினில் நிச்சயமாகத் தமிழ் இல்லை.
திரும்பத் திரும்ப ஒரே பொய்யைக் கூறிவரின் அது உண்மையாகும் என்கின்ற கோயபல்ஸின் தத்துவத்திற்கும், இதற்கும் அதிக வேறுபாடு இல்லை.
இப்படி எல்லாம் இல்லாததைச் சொல்லி தமிழை இழிவு படுத்த வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஐயா ஆரூரான்,
மொழி உணர்வும், தன்மானமும் தமிழர்களுக்கே உள்ள உரிமைச்சொத்தா.. அடுத்தவன் மனுசனே இல்லையா?

இந்த ஆயிரம் ஆண்டு கதைகளெல்லாம் ஏன் இலங்கையில் கேட்கும் தனி நாடுக்கு ஏன் ஒத்துப்போவதில்லை? (இலங்கைத் தமிழர்களின் மனதை புண்படுத்த இதைக் கேட்கவில்லை)

உலகின் எல்லா இனங்களும் இடம்பெயர்ந்திருக்கின்றன இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றன. இதன்மூலம் பல கலாச்சாரங்கள் அழிந்தும் புதியன உருவாகியும் வருகின்றன..தலைவா கொஞ்சம் வ்இலகி நின்று உலகைப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

சின்னச் சின்ன வட்டங்களில், அடையாளங்களில் நிற்கவா ஆறறிவோடு நாம் இருக்கிறோம். விலங்குகள்தான் ஒண்ணுக்கடித்து தன் எல்லையை குறியிட்டுக்கொள்ளும் நாம் ஏன்?

தமிழை வாழ வையுங்கள் உணர்வுகள் டாட் காம் போல தொண்டு செய்யுங்கள் வாழ்த்துகிறேன். அடுத்தவனை அழித்துத்தான் என் கலாச்சாரம் வளரவேண்டுமென்பது எப்படி நியாயம்? அது தீவிரவாதம்.

சிதம்பரத்துக்கும் தமிழுக்கும் தொடர்பிருக்கிறது சரி ஆனா ஆறுமுகத்துக்கும் சிதம்பரத்துக்கும் தொடர்பில்லையே...

உண்மையில் தமிழ்தான் பிரச்சனையென்றால் தீக்சிதர்கள் தமிழில் ஓதவேண்டுமென்றல்லவா போராடியிருக்கவேண்டும்? மேலும் நான் சொன்னது போல தமிழகத்தில் எல்லாமே தமிழில் என்றல்லவா இருக்கவேண்டும்?

உண்மையில் தமிழ் ஒரு வியாபாரப் பொருள்போல மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படுகிறது. இதை சில விஷாயமறிந்த தமிழர்களும் கண்மூடிக்கொண்டு ஆவன செய்வதுதான் அதிர்ச்சியளிக்கிறது.

ஆரூரான்...திருச்சிற்றம்பலம் அவ்வலவு முக்கியமென்றால் இத்தனை நால் தமிழர்கள் எப்படி விட்டுவைத்தார்கள்?

சரி வரலாற்றின்படிதான் நீங்கள் வாழப்போகிறீர்களென்றால் சேர, சோழ பாண்டியர்கள் வெட்டிக்கொண்டு செத்தது போல சாகப்போகிறீர்களா அல்லது ஆதாம் ஏவாள் போல மாறப் போகிறீர்களா?

இன்றைய நிலமை பற்றி பேசுங்கள் சார். த்ஹமிழை சாக விடமாட்டேன் என்று நீங்கள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் போதே ஊரெல்லாம் தமிழ் டமிலாகிக்கொண்டிருக்கிறது.. அதிலும் 'இன்னா நைனா எப்டி கீற' என சொல்பவன் சுத்தத் தமிழன் ஆனா "ஏன் ஓய் ஜலம் கிடைக்குமா?"ன்னு சொன்னா சமஸ்கிருதம் பேசுறவன்.

தமிழன் என்கிறது ஒரு அடையாளமா? அதுக்கும் சாதியால் கிடைக்கும் அடையாளத்துக்கும் என்ன வித்தியாசம்?

தமிழ் என்பது ஒரு மொழி தலைவா...
மிகவும் அழகான ஒரு மொழி. அது ந்நிச மொழி என சொல்பவனுக்கு என்ன மூளைக்குறைவோ அதே மூளைக்குறைவுதான் தமிழ் மட்டுமே சிறந்தது எனச் சொல்பவர்களுக்கும் இருக்குதென்பதை மறக்கவேண்டாம்.

//இந்து மதத்தின் அழகே யாராலும் கட்டுப்படுத்தப்படாதது தான், //

அழகாய் சொன்னீங்க.. அப்ப கட்டுப்பாடுகளை விதிக்கும் இடங்கள் இந்து வழிபாட்டுத்தலமில்லையென்றால் அங்கே ஏன் சார் போறீங்க?

//அரசாங்கம் வழிபாட்டு முறைகளைக் கட்டுப்படுத்துமாறு கூறவில்லை, //

கோவிலில் பலியிடக்கூடாதென்பதும் யாருக்கு பரிவட்டம் கட்டலாம் கட்டக்கூடாதென்பதும் ஏன் கட்டுப்பாடா தெரியல உங்களுக்கு?

சிறில் அலெக்ஸ் said...

முத்து(தமிழினி),
மரபைக் காட்டி எல்லோரும் பல விஷயங்களை செய்கிறார்கள். என் பின்னூட்டங்களில் தெளிவாக சொல்லியிருக்கிறேன், அரசின் சட்டங்களை மீறாதவரைக்கும் இவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

எல்லா கோவில்களிலும் தூய தமிழில் பூஜை செய்ய எல்லோரும் தயாரா? அது இயலுமா?

யாரைய்ம் சந்தோஷப் படுத்தும் நோக்கத்தில் எதையும் எழுதவில்லை இப்படி ஊராரின் பதவியையும் உரிமைகளையும் ஏதோ பாட்டன் காலத்து காரணங்களை காட்டி பறிக்கும் மக்கள் மத்தியில் வாழ்கிறோமே என்கிற பயம்தான்.

நாளைக்கே அந்தக்காலத்தில் உன்னை ஏமாற்றி மதம்மாற்றினார்கள் நீ முருகனைத்தான் வழிபடவேண்டும் என ஒருவர் கிறித்துவக் கோவிலில் சொல்வார் அதுவும் பலருக்கு நியாயமாகப்படும் இல்லையா?

நீ என்னை ஆயிரமாண்டு அடித்தாய் நான் உன்னை ஐம்பதாண்டு அடிக்கிறேன் என்பதுதான் சமூக சம நீதியா?

புரியாமல்தான் கேட்கிறேன்.

Muthu said...

சிறில்,

//நீ என்னை ஆயிரமாண்டு அடித்தாய் நான் உன்னை ஐம்பதாண்டு அடிக்கிறேன் என்பதுதான் சமூக சம நீதியா?//

எனக்கு புரியவில்லை.
அனைவருக்கும் சம உரிமை கேட்பது எப்படி அடிப்பதாகும்?

அரசின் சட்டங்கள் என்கிறீர்கள்.அது சம உரிமையை மறுத்தாலும் ஏற்பீர்களா?

சிறில் அலெக்ஸ் said...

முத்து(தமிழினி),
எல்லோருக்கும் 'சம உரிமை' எல்லா இடத்திலும் கிடைக்கிறதா?

அதெப்படி பார்ப்பனர்கள் மட்டும் தங்கக் உரிமையை விட்டுக்கொடுக்கும்படி செய்தால் சம உரிமை வந்துவிடும்?

ஊர்பக்கம் உள்ள கோவில்களிலும் இப்படி யாருக்கோ இருக்கும் உரிமையை பறித்துத்தான் சம நீதி பெறப்படுகிறதா?

திரும்பவும்..கோவிலில் யாருக்கு உரிமை என்பது இப்போதைய பிரச்சனை என்கிற பட்சத்தில், அதில் சட்ட ரீதியான சர்ச்சைகள் இருக்கும்போது நிச்சயம் உரிமை கேட்டு சட்ட ரீதியாக போராடலாம்.
அதைத்தான் செய்கிறார்களா? தெரியவில்லை.

அரசின் சட்டங்கள் சம உரிமையை மறுத்தால் நிச்சயம் ஏற்கமுடியாதுதான். அதற்கு சட்ட பூர்வமாக நீதிமன்றங்கள் மூலம் தீர்வுகாணவேண்டுமில்லையா?

அரசின் சட்டங்கள் பிராமணரல்லாதவருக்கு அநீதி இழைக்கிறதா? அப்படி என்ன சட்டங்கள்?

தமிழ் 'நாடு' தனி நாடல்ல.. ஒரு மாநிலம்தான் என்பதை பலரும் மறந்துவிடுகிறோம்.

சிறில் அலெக்ஸ் said...

ஆரூரான்,
ஒரு மனிதனுக்கு எது அடையாளம் என்பதை அவனே தீர்மானிக்கட்டும். அடையாளங்களை நீங்கள் புகுத்தவேண்டாம்.

இதைத்தான் நான் பதிவின் கடைசியில் கேட்டிருந்தேன்.. எப்ப நாம மனுசன மனுசனா பார்க்கப் போறோம். இந்த மொழி இன மத அடையாளங்கள விட்டுவிட்டு? இந்த மாதிரி செய்ய ஆரம்பிச்சா பலருக்கும் வேலையுமிருக்காது அடையாளமும் இருக்காது.

என்னை கிறித்துவன் என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? என்பெயரை வைத்தா? ஸ்டாலின் கிறித்துவரா அல்லது குமார் எனப் பெயர் வைத்துக்கொள்ளும் கிறித்துவர்கள்தான் இந்துக்களா? கிறித்துவன் எனும் அடையாளம் இல்லாமல் என்னை பார்க்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.

மொழிதான் ஒரு மனிதனுக்கு அடையாளமென்றால் எனக்கு ஆங்கிலமும் தெரியுமே அப்ப நான் இங்க்லீஷ்காரனா?

மாயூரான்.. உண்மையில் நீங்கள் இந்தமாதிரியான விஷயங்களில் ஊறிக்கிடக்கிறீர்கள், நமக்கு அதிகம் அறிவில்லைதான். ஒரு உதாரணடதுக்குச் சொல்கிறேன்.. உலகின் மிக மோசமான தீவிரவாதிகூட தன் செயலுக்கு மிகப்பெரும் நியாயம் வைத்திருக்கிறான். தான் செய்வது ஏதோ ஒரு பெரிய தியாகம் நினைக்கிறான். உங்களை தீவிரவாதி எனச் சொல்லவில்லை... ஒரு எடுத்துக்காட்டுதான்.


நீங்கள் சொல்வதைப்பார்த்தால் தமிழன்போல ஏமாந்த ஆட்கள் யாருமில்லை போலிருக்கிறது. ஊரெல்லாம் போய் தன்னை யாராரோ ஏமாற்ற, கீழே விழுந்துகிடந்த ஒரு இனமாகவா நாம் இருந்திருக்கிறோம்.

இலங்கையில் தமிழருக்கு வரலாறு இருப்பது குறித்து மகிழ்ச்சி.

உண்மையில் எனக்கு இதுபற்றியெல்லாம் பெரிய உணர்வுகளில்லை... ஆனால் ஒரு மனிதாபிமானம்தான் முக்கியமகப்படுகிறது.

நீங்கள் சொல்லும் பல கருத்துக்க்ளுக்கும் மாற்று கருத்துக்கள் இருக்கின்றன என்பதும், அதையே நான் முன்வைப்பேன் என்பதும் உண்மை.

இந்தமாதிரி உணர்வு சம்பந்தப்பட்ட விசயங்களை விவாதித்து சம்மதிக்கவைப்பது முடியாது... வெறும் விவாதிக்கலாம் அவ்வளவுதான்.

பாலஸ்தீனம், இஸ்ரேயல் போல தமிழினமும் அழிந்துவிடும் எனும்பயத்தில் கோவிலில் மணியாட்டிக்கொண்டிருக்கும் பார்ப்பனர்களை தாக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? சரியாகிவிட்டதா?

நீங்கள் தேடும் பார்ப்பனர்கள் வேறெங்கோ இருக்கிறார்கள்.

சிதம்பரத்தில் ஓதுவது ஆறுமுகச்சாமியின் சட்டபூர்வ உரிமையென்றால் நிச்சயம் அவருக்கு அது பெற்றுத்தரப்படவேண்டுஎன்பதில் ஐயமில்லை.

சும்மா எதோ வரலாற்றில் நடந்ததை முன்வைத்து இன்றையவாழ்வை நிர்ணயிப்பதென்பது சுதந்திர இந்தியாவில் நாம் இயற்றிய பல சட்டங்களையும் நாம் பெற்ற சுதந்திரத்தையும் நாமே பழிப்பதுபோலாகும்.

தொடர்ந்து சிந்தியுங்கள். பொறுமையான பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். அதே உணர்வுகள் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மதிக்கச் சொல்கிறேன்.. அவ்வளவுதான்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'..

உணர்வுகள் டாட் காம் முகப்பில் படித்தேன்...

ஓகை said...

சிறில், இந்தப் பதிவின் பெரும்பாலான கருத்துகளுடன் நான் ஒத்துப் போகிறேன். இது பற்றிய என்னுடைய பதிவு
http://oagaisblog.blogspot.com/2006/07/blog-post_21.html

குழலி / Kuzhali said...

சிறில் அலெக்ஸ், உங்கள் பதிவை படித்தும், அதை தொடர்ந்த வாதங்களையும் கவனித்து வருகின்றேன், நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என புரியவில்லை, நாம் மீண்டும் காலத்தால் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என கருதுகிறேன், உங்களின் பதிவு மட்டுமல்லாமல் மற்றும் பலரும் மீறக்கூடாத மரபுகள் என பேசுவது எனக்கு உண்மையிலேயே கடும் அதிர்ச்சியாக உள்ளது....

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் தமிழில்(Hindu on net ல் தெளிவாக சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதியில்லை, சமஸ்கிரதம் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது) பாடக்கூடாது என்பது விதியாம் இது தொடர்பான மேல் விபரங்களுக்கு சிதம்பரத்தில் இருப்பவர்களை அணுகியுள்ளேன், இதில் என்ன வேடிக்கையென்றால் சிதம்பரத்திலேயே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு சிற்றம்பலத்தில் என்ன தமிழ் அனுமதிக்கப்படுமா என்று தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன் என்றார்கள்....

விதிகள் பொதுப்படையாக இருக்க வேண்டும், மரபுகள் மதிக்கப்படவையாக இருக்க வேண்டுமெனில் அவைகள் எல்லோருக்கும் பொதுவானால் மட்டுமே, சிலரை பெருமை படுத்தவும், சிலரை சிறுமை படுத்தவும் இருக்கும் மரபுகளை உடைத்தெறிய வேண்டும்.

சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி,

பெரியார் பாடுபட்டு உருவாக்கிய கருத்தாக்கங்கள், உடைத்த விதிகளை மீண்டும் பிராமணியம் முழுங்குவதை கண்டு வேதனையடைகிறேன்.



//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
//
மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,

இது தொடர்பாக முத்துகுமரனின் பதிவை காணுங்கள்

http://eenpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post.html

சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.

தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.

சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,

நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.

சிறில் அலெக்ஸ் said...

முத்து(குழலி),
பிரச்சனை மரபுபற்றியா இல்லை உரிமை பற்றியா?

வெறும் மரபு பற்றியதென்றால் தமிழகத்திலுள்ள எல்லா கோவில்களிலும் தூய தமிழில், தமிழர்பண்பாடு என எதைக்கருதுகிறோமோ (இதை எந்த சாதி நிர்ணயிக்கவேண்டும் என்பது வேறொரு பிரச்சனை) அந்த முறைகளில் பூஜை நடக்கவேண்டுமென்பதை வலியுறுத்தவேண்டும் இல்லையா?

எதிர் வாதம் என்றே வைத்துக்கொண்டாலும் இதில் நியாயமிருக்கிறதா இல்லையா. தமிழகத்திலுள்ள தமிழர்கள் என தங்ககளை பிரித்துணரும் மக்கள் மத்தியில் தமிழ் முழுமையாகப் தழைத்துள்ளதா? அப்புறம் ஏன் நாமே தமிழரல்லாதவர் என ஒதுக்கும் அடுத்த்வர் தமிழை வளர்க்கவேண்டுமென நினைக்கிறோம்?

முகமூடியின் பதிவைப் பாருங்கள் பின்னூட்டத்தில் ஜீ வி கட்டுரையையும் பாருங்கள் இது மொழி பிரச்சனையே அல்ல.

தேவாரத்தை சமஸ்கிரதத்தில் மொழிபெயர்த்து ஆறுமுகம் பாடினாலும் அனுமதிக்கமாட்டார்கள் தீட்சிதர்கள்.

Anonymous said...

சிதம்பரத்தில் ஆறுமுகச்சாமி செய்தது எப்படி இருக்கிறதென்றால்,
முதன் முதலாக ராமன் ஒன்னுக்கு அடித்த இடமென்று அயோத்தியில் பார்ப்பன கும்பல் அங்கிருந்த பாபர் மசூதியை இடித்ததுடன் இல்லாமல் இன்றும் அழிச்சாட்டியம் செய்வதைப் போன்று உள்ளது.
ராமனது இடம் நம்பிக்கையின் பேரில்,ஆனால் இங்கே உரிமைப் பிரச்சனை.

வெள்ளையர்களை விரட்டமட்டும் எத்தனை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏன் அவனது சட்டத்திற்கு உட்பட்டு அடிமையாகவே இருந்திருக்கலாமே.

நேரடியாகவே களத்தில் இறங்கி பார்ப்பணீய கும்பல் பாபர் மசூதியை இடித்ததுபோல, தீட்சிதர்களை துவைத்து சிதம்பரத்திலிருந்து விரட்டியிருக்கவேண்டும்.
என்ன செய்வது தமிழர்கள் துணிவில்லா கோழைகளா இருக்கிறார்கள்.

வீம்பிற்காக சமஸ்கிருதம்,ஆகமம் என்று தொங்கிக்கொண்டிருக்கும் பார்ப்பணீயத்தை கட்டித்தொங்கவிடும் காலம் வராமலா போய்விடும்.

VSK said...

யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று பாடுவதில் எனக்கு மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை.

இதை முதலில் தெளிவாகச் சொல்லி விடுகிறேன், வேறு விதமாகப் பொருள் கொள்ளும் முன்னர்!

அங்கு ஒரு விதி ஆகமப்படியும், சட்டப்படியும் இருக்கிறது, இன்னின்னார் இங்கிங்கு நின்று பாட வேண்டும் என.

அது சரியோ, தவறோ, முறையோ, முறையற்றதோ, அதன்படி நடப்பதே மனிதப்பண்பு, பகதியுடையவர் செய்யும் செயல், அவை மாறாதவரை.

அவற்றை மாற்ற முடியுமானால், மாற்ற வேண்டும். மாறும் ஓர் நாள்!

சர்ச்சில் சொன்னது போல இவ்வுலகில் நிலையானது, மாற்றம் ஒன்றே!
[The only constant thing in this world is CHANGE!]

மாறாக, மீறத் துடிப்பது முறையற்ற செயல் என நான் கருதுகிறேன்.

ஆகம விதிகளை மதிக்காதவர் பக்திமானும் அல்ல!
சட்டத்தை மதியாதவர் நல்ல குடிமகனும் அல்ல!

அங்கிருப்பவர்கள் ஒன்றும் குண்டர்களோ, தாதாக்களோ அல்ல.

தட்டினால் விழுந்துவிடக் கூடிய தயிர்சாதக் கூட்டம்.

ஆனால், கோயில் என்றாலே சிதம்பரம் எனச் சொல்லப்படும் ஊரின் பெயருக்குக் காரணமாக அங்கு ஆடிக்கொண்டிருக்கும் இறைவனுக்குத் தொண்டு செய்து வருபவர்கள், காலங்காலமாக!

தமிழுக்கு அங்கே தடையில்லை!
ஆம்! தமிழுக்கு அங்கே தடையில்லை!

சாதியினாலும் பிறர் ஒதுக்கப்படவில்லை!
இல்லையெனில் மற்ற பார்ப்பனர்கள் உள்ளே போயிருக்கக்கூடுமே!


அந்தச் சிவனுடன் அங்கு வந்ததாகக் கருதப்படுபவர்கள் இந்த தீக்ஷிதர் எனச் சொல்லப்படும் தில்லை மூவாயிரத்தார்!

அதனால்தான், "தில்லைவாழ் அந்தணர்க்கும் அடியேன்" என சமயக்குரவர்கள் பாடியிருக்கின்றனர்.
வேறு எவருக்கும் கிடைக்காத பேறு இது.

காலம் மாறி வருகிறது!
நாத்திகம் பேசுபவர்களும் கோயிலுக்குள் சென்று இறைவனை அர்ச்சித்து வழிபடத் துடிக்கும் நாட்கள் இவை!

வரவேற்கத்தக்க மாற்றம் இது!
இறைவனின் அருளின்றி எவ்வாறு இப்படி நாத்திகர்கள் எல்லாம் கோயிலுக்குச் செல்ல ஆசைப்பட முடியும்!?

தமிழை வைத்து அவர்களையும் தன்னுடன் சேர அருளும் தனிபெருங்கருணையின் மாண்பை என்னென்று போற்றுவது!

ஆனால், அணுக வேண்டிய முறையில் அணுகாமல், ஜாதி, மொழி என எழுதியிருப்பது வியப்பை உண்டுபண்ணுகிறது.

நல்லதே நடக்கும்!
சிவன் அறிவான், நம் சிந்தையை!
இதுவும் கழிந்து போம்!
நமசிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
நன்றி.

குழலி / Kuzhali said...

//முகமூடியின் பதிவைப் பாருங்கள் பின்னூட்டத்தில் ஜீ வி கட்டுரையையும் பாருங்கள் இது மொழி பிரச்சனையே அல்ல.//
சிறில் அதே முகமூடியின் பதிவில் குறும்பனின் பின்னூட்டத்தை பாருங்கள்
/ http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

In his petition to the police, he urged that he be allowed to enter the "Thiruchitrambalam", an elevated structure "close to the sanctum sanctorum," to recite the hymns.

Generally, "special permission has to be obtained from the Deekshithars," who administer the temple, to offer worship to the Lord from Thiruchitrambalam.

Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language would be entertained.
(முகமூடி தவிர)வேறு யாருமே சிற்றம்பலத்தில் தமிழில் பாட அனுமதி உண்டு என்று சொல்லவில்லை(கோவிலில் தமிழில் பாடுவதை நானும் அங்கே கேட்டுள்ளேன், ஆனால் அப்படி பாடியவர்கள் தீட்சிதர்கள் அல்ல, மேலும் அது சிற்றம்பலத்தில் அல்ல, அவைகள் வெளியே மட்டுமே, அப்போது சிற்றம்பலத்தை அத்தனை உன்னிப்பாக நான் கவனிக்கவில்லை) அதனாலேயே சிதம்பரத்து ஆட்களை தகவலுக்காக அணுகியுள்ளேன்.

//வெறும் மரபு பற்றியதென்றால் தமிழகத்திலுள்ள எல்லா கோவில்களிலும் தூய தமிழில், தமிழர்பண்பாடு என எதைக்கருதுகிறோமோ (இதை எந்த சாதி நிர்ணயிக்கவேண்டும் என்பது வேறொரு பிரச்சனை) அந்த முறைகளில் பூஜை நடக்கவேண்டுமென்பதை வலியுறுத்தவேண்டும் இல்லையா?
//
சமூகபிரச்சினைகள் தோசையல்ல ஒரே நேரத்தில் திருப்பி போட, கூழ் போன்றது, ஓரிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கிண்ட முடியும், சிதம்பரத்தை ஆரம்பமென்று வைத்துகொள்ளுங்களேன்... என்ன செய்ய நந்தனார் காலத்திலிருந்து இது வெறும் ஆரம்பமாகவே இருக்கின்றது.

எந்த சமூகநீதியும், உடைப்பும் ஒரே சமயத்தில் எல்லா இடத்திலும் நடந்துவிடாது, கடல் முழுதும் உப்பென்றாலும் தண்டியிலும் வேதாரண்யத்திலும் தான் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பம்.

சிறில் மரபு விதியென்றால் அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அது உடைக்கப்பட வேண்டும், மரபு, விதி பேசுபவர்கள் யாரும் என் முதல் பின்னூட்டத்தில் சொன்னதற்கு எந்த பதிலும் இல்லை அந்த கருத்துகள் கீழே

சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி,

பெரியார் பாடுபட்டு உருவாக்கிய கருத்தாக்கங்கள், உடைத்த விதிகளை மீண்டும் பிராமணியம் முழுங்குவதை கண்டு வேதனையடைகிறேன்.

தருமி said...

//எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை. - சிறில்//உங்களின் இந்த கருத்து எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இதற்கு எதிர்மறையாகக் குழலி கொடுத்துள்ள (கீழேயுள்ளது)கருத்தோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்.

//விதிகள் பொதுப்படையாக இருக்க வேண்டும், மரபுகள் மதிக்கப்படவையாக இருக்க வேண்டுமெனில் அவைகள் எல்லோருக்கும் பொதுவானால் மட்டுமே, சிலரை பெருமை படுத்தவும், சிலரை சிறுமை படுத்தவும் இருக்கும் மரபுகளை உடைத்தெறிய வேண்டும். -குழலி //

சிறில் அலெக்ஸ் said...

முத்து(குழலி),
காலத்துக்கேர்ப்ப விதிகளை, மரபுகளை உடைத்தெறியவேண்டும், சடங்குகளை மாற்றியமைக்கவேண்டுமென்கிறீர்கள்..
அப்படீன்னா ஏன் கோவிலில் மிருக பலி கூடாதென்கிற மாற்றத்தை எதிர்க்கவேண்டும்?

விதிகள் எல்லோருக்கும் சமமாயிருக்கவேண்டுமென்கிறீர்கள் இது எல்லா இடத்திலும் சாத்தியமாகாது. இன்னும், பிரச்சனை வெறும் விதிகளை தளர்த்துவது பற்றியல்ல, தீட்சிதர்களுக்கு கோவிலின் மேலுள்ள உரிமையை விட்டுக்கொடுக்கச் செய்யும் முயற்சிபோலவே தெரிகிறது.

சிதம்பரத்தை ஏன் ஆரம்பமாகக் கொள்ளவேண்டும்? உங்கள் வீட்டை முன்னேற்ற அடுத்தவன் வீட்டில் கொள்ளைபோடுவதெப்படி நியாயமாகும். முதலில் நாமெல்லாம் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துவிட்டு பிறகு வெளியே வருவோம்.

சட்டபூர்வமாக தீட்சிதர்களுக்கு கோவிலில் உரிமையில்லையென்றால் அதை சட்டபூர்வமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஆறுமுகச்சாமிக்கு உரிமை பறிக்கப்பட்டுள்ளதென்றால் அதையும் கேட்டுப்பெறலாம். தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனத்திற்கு தங்கள் விதிகளை விதிப்பது (அது எந்த சட்டத்தையும் மீறாதவரையில்) நியாயமானதில்லையா.

இங்கே சிறுநீர் கழிக்காதே முதல் கோவில் வருமானம் யார் யாருக்குப் போய் சேரவேண்டுமென்பதுவரைக்கும் விதிகளும் மரபுகளும், கிளை சட்டங்களும்தான் நம் கோவில்களை கட்டுப்படுத்துகின்றன. அடுத்து கோவில் வருமானத்தில் பங்குகேட்டு ஒருவர் வருவார் அவருக்காகவும் வாதாடுவோமா?

பெரியார் செய்தது ஒரு புரட்சி, அது யாரையும் குறிபார்த்து செய்யப்பட்டதில்லை. நானும் அதைத்தான் சொல்கிறேன், எல்லோரையும் தமிழுக்கு மாற்றுவோம். எல்லா கோவில்களிலும்...பள்ளிவாசல்கள் முதல் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பூசை செய்யும் சர்ச்சுகளிலும் இந்த விதிகளை அமுலுக்கு கொண்டுவருவோம்.

கோவில், சர்ச், பள்ளிவாசல்களெல்லாமே இறைவனைத் தேடிவரும் பக்தர்களுக்குத் தேவையான வசதியை செய்துதரும் நிறுவனங்கள்.
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு சேவையை அளிக்கின்றன.. எல்லா கோவிலும் ஒரேசேவையை அளிப்பதென்பது கலாச்சாரங்களை அழிப்பதுபோலாகும்.

உங்களுக்கு சேவை செய்யும் கோவிலைத்தேடி வழிபடுவதே சிறப்பாகும்.

தீண்டத்தகாதவர் எனச் சொல்வதும் விதிதான் ஆனால் சட்டம் அதை உடைத்தெறிந்திருக்கிறது. அது ஒருவருக்கான உரிமையை வழங்கும் செயல். இதுமாதிரி உரிமையைப் பறிக்கும் விஷயமல்ல.

விதிகள் எல்லோருக்கும் சமம் என்றால் பொதி சிவில் சட்டம் கொண்டுவரவேண்டுமென்கிறீர்களா? சட்டமே எல்லோருக்கும் பொதுவில்லை என்கிறப்போது ஒரூ கோவிலின் விதிகள் எம்மாத்திரம்?

அடுத்தவரின் காலணிக்குள் இருந்து (நன்றி: ஆங்கிலம்) கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பிரச்சனயிலுள்ள அநீதி புரியலாம்.

ஜோ/Joe said...

சிறில்,
பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்கள் பல மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றன . ஆரூரான் அவர்களுடைய பல கருத்துக்களை உண்மையிலேயே நீங்கள் படித்து புரிந்து கொண்டு தான் பதிலிறுக்கிறீர்களா என எனக்கு விளங்கவில்லை.

தமிழகத்தில் தமிழின் முக்கியத்துவம் குறித்த உங்கள் கருத்துக்கள் குறித்து நான் வெகுவாக வேறுபடுகிறேன்.

இப்போது விளக்கமாக பின்னூட்டமிட நேரமில்லை .

suvanappiriyan said...

சிறில் அலெக்ஸ்!

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று சொன்ன பூங்குன்றனாரும் கணியன் பூங்குன்றனார் என்று தன் ஊரையும் சேர்த்து சொன்னதை மறந்து விட வேண்டாம்.

நீங்கள் அமெரிக்காவில் ஐந்து தலைமுறையாக வாழ்ந்தாலும் அமெரிக்கர்களுக்கு நீங்கள் இந்திய வம்சாவளிதான். இந்தியர்களுக்கு நீங்கள் மதறாசிதான் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

-சுவனப்பிரியன்

Anonymous said...

ஆரோக்கியமான, சிந்தனையை தூண்டும் விவாதங்கள். பின்னூட்டங்கள் பல்வேறு தளத்து, கோணங்களை காட்டுகிறது. ப்ளாக் உலகில் எழுத்தில் உள்ள விவாதம் படமாக வந்தால் இன்னும் எளிமையாக இருக்கும்; அந்த காலமும் விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்.
போகிற போக்கில் ஒரு கருத்து. இங்கு பலர் எத்தனை தலைமுறையாக வேறு நாட்டில் வாழ்ந்தாலும் நாம் வேற்று நாட்டுகாரன் தான் சொல்லி சென்றார்கள். மற்ற நாட்டில் எப்படியோ, அமெரிக்காவில் அப்படி இருப்பது போல் தெரியவில்லை. நாம் வேண்டுமானால் நான் இந்த வம்சாவழி, எங்க கலாச்சாரம் பிரமாதம் என்று சொல்லி அடையாள படுத்தி கொள்ளலாம்.

சீனு said...

//அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.//
அப்போ இனிமேல் நீங்கள் தமிழில் எழுத வேண்டாமே! சாகிறவனுக்கு உயிர் கொடுக்கலாம் அல்லவா? (Correct me if I'm wrong).

சிறில் அலெக்ஸ் said...

சீனு,
சரியா கேட்டீங்க. 'சாகிறதென்றால்' என்கிற வார்த்தையிலிள்ள பெரிய'IF' முக்கியமானது.

தமிழ் சாகும் நிலையில் இல்லை. அது நல்லாத்தான் இருக்குது. மற்ற மொழிகள்தான் செத்துக்கிட்டிருக்கு. அப்படியே தமிழை காப்பத்தணுமென்றாலும் சினிமா டைட்டில் கோயில் வழிபாடு தவிஉர்த்து இன்னுமெத்தனையோ செய்யலாம்.

நான் தமிழில் எழுதுவது நிச்சயம் மொழி உணர்வில் மொழிவளர்ப்பதற்காக அல்ல.

சிறில் அலெக்ஸ்