.

Monday, July 24, 2006

கலைக்குச் சிலை

சிவாஜி கணேசன் ஒரு மாபெரும் நடிகர் என்பதில் ஒரு சிலருக்கு எப்பவுமே சந்தேகம் இருக்கிறது. இது பெரிய உயிர்போகிற விஷயமொன்றில்லை என்றாலும் சினிமா இரசிகன் என்கிற முறையில் எரிச்சலூட்டுகிறது.

மிகைப்படுத்தும் நடிகர்(ஓவர் ஆக்டிங்) என எளிதில் இவருக்கு சான்று வழங்குபவர்கள் நடிப்பு என்றாலே மிகைப்படுத்துதல் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

நாடகங்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்திலே, முடமாய், முட்டாளாய், கம்பீர அரசனாய் கோழையாய், பனக்காரனாய் ஏழையாய், கோமாளியாய், ஏமாளியாய் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்.

இவருக்கு தமிழகம் முழுவதும் சிலை வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

13 comments:

Nakkiran said...

Answer to your post...

http://lldasu.blogspot.com/2006/07/blog-post_23.html

Unknown said...

இந்த சிலை அரசியலால் தென்மாவட்டங்களில் எத்தனை கலவரம் வந்தது என்பதை மறந்துவிட்டீர்களா அலெக்ஸ்?

சிவாஜி சிலையை தென்மாவட்டங்களில் வைத்தால் தேவர் சிலை என சொல்லி உடைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நம்ம ஊரு குப்பை தொட்டி அரசியல் பத்தி உங்களுக்கு தெரியாதா?

சீனு said...

ஆமாம் சிறில். நீங்கள் சொல்வது சரிதான்.

மிகைப்படுத்துதல் பற்றி சிவாஜியிடம் ஒரு முறை கேட்டபொழுது அவர், மேடை நாடகத்தில் நடிக்கும் பொழுது கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர்க்கும் மேடையில் நடிப்பவருடைய முகபாவங்கள் தெரிய வேண்டும் என்பதனால் அந்த over reaction கொடுக்க வேண்டியதாக கூறினார். அதுவும் சிவாஜி, எம்.ஜி.ஆர்-ன் ஆரம்ப கட்டப் படங்களாவது யதார்த்தமாக இருக்கும் (உதா, சண்டை காட்சிகள்), அதன் பின் 65-75 களில் வந்த படங்கள் தான் சற்றே மிகைப்படித்தப்பட்டு வந்திருக்கிறது.

என்ன தான் இருந்தாலும், சிவாஜி படம் பார்க்க வருபவர்களுக்கு அந்த படத்தில் வரும் ஓரங்க நாடகங்கள் போனஸ் தானே?

சிறில் அலெக்ஸ் said...

நக்கீரன்,
அந்தப்பதிவு பார்த்தபிந்தான் இதை எழுதினேன். அவர் ரெம்பவே உணர்ச்சிவசப்படுகிறார். அவருக்கு எதிர் உணர்ச்சி எனக்கு சார்(பு) உணர்ச்சி அவ்வளவுதான் :)

வீடில் பெரியவருக்கு வீட்டில் படம்.. சமுதாயத்தில் பெரியவருக்கு சமுதாயத்தில் சிலை.. இதெல்லாம் தேவைதான்.

சிறில் அலெக்ஸ் said...

செல்வன்,
//சிவாஜி சிலையை தென்மாவட்டங்களில் வைத்தால் தேவர் சிலை என சொல்லி உடைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.//

இதுவும் பாயிண்ட்..

சிலை அரசியல், சாதி அரசியல், சமய அரசியல், மொழி அரசியல் எனப் பல்வேறு வகை அரசியலில் சிக்கித் திணறி மூச்சுவிடத்தவிக்கும் நம்மால் ஒரு பெரியவரை நினைவுகூறுவதற்கும் ஆயிரம் முறை யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

இது பற்றி நான் பாபா பதிவில் சொன்னது

முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்.

சிறில் அலெக்ஸ் said...

கொத்தனார்,
காக்கைக்கு எங்கே தெரியப் போகிறது இவர் 'கா கா கா'ன்னு அதைப் புகழ்ந்தது. :)

தலையிலுள்ள எச்சத்தைப் பார்க்கிறீர்கள் சிலைவைக்குமளவுக்கு உச்சத்தை எட்டியவரின் மேன்மையைப் பாருங்க.

'ஆயிரம் முகபாவம் காட்டியவர். இன்று சிலையாய் நடித்துக்கொண்டிருக்கிறார்.'

எப்படி என் ஆறு வார்த்தைக் கதை.

பாலசந்தர் கணேசன். said...

லார்டு லபக்கு தாஸின் கேள்வியினை ஒரேடியாக விலக்கி விட முடியாது. சிவாஜி ஒரு மிக பெரிய கலைஞன் என்பதிலும் மிகுந்த பாராட்ட பட வேண்டியவர் என்பதிலும் சந்தேகமில்லை. மக்கள் வரிபணத்தில் தான் வைக்க வேண்டுமா, இவர்களிடம் இல்லாத காசா, சொந்த பணத்தில் தான் வைக்கலாமே! என்றும் அவர் கேட்டுள்ளார். செய்திருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மக்கள் வரி பணத்தில் சினிமா காரர்களின் பணமும் இருக்கிறது என்பதை மறந்து விட கூடாது. சிவாஜியினால் தமிழகத்திற்கு பெருமையே.அவருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. மக்கள் பணத்தில் வைத்ததும் தவறு இல்லை. ஆனால் மக்கள் வரிபணத்தில் சிறந்த நடிகர், நடிகை என்று வருடா வருடம் வாரி இறைப்பதை தவிர்க்கலாமே!!!

Anonymous said...

INSTALLATION OF SHIVAJI STATUE IS NOT PURELY DUE TO HIS SERVICE TO TAMIL FILM AND AFFECTION OF KALAIGNAR SHOWN ON SHIVAJI. HE WANT TO HEAR VIEW OF OTHERS INCLUDING JAYA ON INSTALLATION OF SHIVAJI STATUE IN MARINA BEACH SIDE.IF THERE IS NO OBJECTION FROM OTHERS,THIS WILL BE HELPFUL WHEN KALAIGNAR FAMILY WANT TO INSTALL STATUE FOR HIM IN MARINA BEACH.EVERYBODY KNOWS THAT IF KALAIGNAR DOES SOMETHING, THIS WILL BE BENEFIT TO HIM AND HIS FAMILY ONLY.

கோவி.கண்ணன் [GK] said...

//"கலைக்குச் சிலை" //

சீறில்,
ஏதோ ஒரு படத்தில் வினுசக்ரவர்த்தி சொல்லும் வசனம் தான் ஞாபகம் வருகிறது ... அது

"ஆமாம் பெருசா சாதிச்சவங்கள்லாம் என்ன ஆனாங்க தெரியுமா ? கருப்பா சிலையாகி காக்கா குருவிக்கு கக்கூஸ் ஆனாங்க"

சிலைகளைப் பார்க்கும் போது இது எனக்கு எப்பொழுதும் ஞாபகம் வரும் :)

மகேஸ் said...

நடிகர்களை நடிகர்களாகப் பார்க்க வேண்டிய நாம் தெய்வங்களைப் பார்ப்பது போலப் பார்க்கிறோம். அவர் நன்றாக நடித்தார் என்றால் விருது கொடுத்துக் கவுரவிக்கலாம். அதற்கு மேல் சிலை, மணிமண்டபம் கட்டுவது எல்லாம் நம் அரசு, பணத்தை ஊதாரித்தனமாக்ச் செலவு செய்வதையே காட்டுகிறது.

நடிகர்களுக்குச் சிலை எதற்கு? அவர் நடித்தார், நாம் காசு கொடுத்துப் படம் பார்த்தோம், அவர் சம்பாதித்தார். அவருக்கு ஏன் சிலை?

நெல்லுக்கு ஏற்றம் இறைத்தாரா?,
களை பறித்தாரா?,
நாற்று நட்டாரா?
பிறகு எதற்குச் சிலை?

நம் நாட்டில் உள்ள அறிவியல் அறிஞர்களுக்குச் சிலை வைத்தோமா?
இல்லை. பிறகு எப்படி நாட்டின் உயர்விற்குப் பணி செய்தவர்களைக் கவுரவிப்பது? நம் சந்ததியினருக்கு எப்படி நல்ல ரோல் மாடல்களை அறிமுகம் செய்வது?

நாமும் பொறுப்பில்லாமல், சினிமாவில் நடித்தவர்களையெல்லாம் ஆட்சி செய்ய அமர்த்தினால் எப்படியிருக்கும்? இப்படித்தான்.

உடனே என்னை புனித பிம்பம் என்று சொல்லி ஒரு கூட்டம் கிளப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. :))

சிறில் அலெக்ஸ் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களுக்கு சிலை வைக்கப்படவேண்டும். என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்தின் பல கடமைகளில் இதுவுமொன்று.

கோவி.கண்ணன் said...

//சிறில் Alex said...
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
//
ச்சே... ச்சே இப்படி ஒட்டுமொத்தமாக நன்றி சொன்னால் பின்னூட்டம் போடுகிறவர்களுக்கும் மனசு ஒடிஞ்சி போகாதா ?
:)))

சிறில் அலெக்ஸ்