Sunday, March 11, 2007
6 வார்த்தை கதைகள்...
நிலவை அடைந்தோம். திரும்பிப் பார்த்தேன். உலகம் உருண்டைதான்.
எட்டுப்பட்டி கிராமம். ஆலமரத்தடி கூட்டம். தூக்கில் நாட்டாமை.
.E.D.E.N. விண்கலம் தரையிறங்கியது. ஆதாம் ஏவாள் வெளிவந்தனர்.
'டேய் விடுடா விடுடா'
'இருடீ'
'துரோகி விடுடா'
கால எந்திரம். தவறான கட்டளை. 'நாளையை சென்றடை'.
'அம்மா'
'மகனே!'
'போரில் தோற்றுவிட்டேனம்மா'
'என்ன?'
'அம்மா...!'
போரில் மரணம். நெஞ்சில் தோட்டா. அம்மா அழுகிறாள்.
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. சிவப்பாய் என்னது?
இன்னொரு வெர்ஷன்
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. செந்நீர் பாய்ந்தது.
Saturday, March 10, 2007
உதவி தேவை
இவருக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டியது நம்ம கடமை. இவர் பெயருக்கு ஏற்படுகின்ற களங்கத்தை துடைப்பதுவும் நம் கடமை. இத சேர்ந்து செய்ய ஒரு புது முயற்சியா கீழ்கண்ட தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படியுங்க. குழுவில் இணைந்து இவருக்கு உதவுங்கள்.
அது வேற யாரும் இல்லீங்க 'கடவுள்தான்'.
போய் படியுங்க 'கடவுள் வாழ்த்து'
திரட்டிகளில் இன்னும் சேர்க்காததால் இந்தப் பதிவு
Thursday, March 08, 2007
என் சமையலறையில்...
ஒரு மாசம் ஒண்டிக்கட்டையா கழிக்கிறதே இத்தன கஷ்டமாயிருக்குதே...
என் சாப்பாடு சுவையா இருக்கணுங்கிறதுல நான் கவனாமாயிருப்பேன். பசி இல்லைன்னா இப்படித்தான், சுவையாயிருந்தாத்தான் சாப்பிடத் தோணும். ஹ்ம். கூடவே கொஞ்சம் 'கொழுப்பும்' சேர்ந்துட்டா? மனைவியோடு சண்டை, அது இல்லியா இது இல்லியான்னு டிமாண்ட்.
இப்ப ஒருமாதமா கண்டதையும், கார்ப்பெட்ல விழுந்ததையும் எடுத்து சாப்பிட்டதுல கொஞ்சம் ஞானோதையம் பிறந்திருக்கு. இனிமே டிமாண்ட்கள் விண்ணப்பமாகவும், 'பரவாயில்லை' என்பது பாராட்டுக்களாகவும் மாறும் என வாக்களிக்கிறேன்.
முந்தா நேத்து பரோட்டாவ கரிச்சிட்டேன், பால் எக்ஸ்பையர் ஆயிடுச்சு, ஆரஞ் ஜூஸ் ஒயினா(Wine) மாறிடுச்சு, சிப்செல்லாம் பொரிக்காத அப்பளமாயிடுச்சு, காலி'ப்ளவர்' வாடிப் போச்சு என் சமையலறை மெஸ்(mess) ஆயிடுச்சுங்க. மெஸ்னா சாப்புடுற மெஸ் இல்ல சாப்பிட முடியாத மெஸ்(Messy).
வீட்டில இருக்கிற பெண்கள் 24மணி நேரமும் வேல செய்யுராங்க அதுவும் சீரியல் பாக்க பிடிக்காத பெண்கள் (என் மனைவிபோல). :) மகளிர்தினமும் அதுவுமா.. சில திருத்தங்கள் செய்யணும்னு ஆசைப்படுறேன்.
நான் ஒலி FMல சொன்ன மாதிரி, சமத்துவம், பெண்ணியம், அடிமைத்தனம் அது இதுன்னு என்ன பேசினாலும் அடிப்படையில மனிதனை மனிதனாய் பாக்கும் பண்பு வேணும். 'அன்பு' ஒன்றைத்தான் எல்லா மனிதனும் மனுஷியும் எதிர்பார்க்கிறாங்க. நம் பார்வையில் அன்பிருந்தா சமத்துவம் சகோதரத்தூவம் எல்லாமே வந்துரும்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
.
ஜீன்ஸ் - சிறுகதை
"என்னடா? என்ன லேட்டு?"
"ரெம்பெல்லாம் லேட்டில்லப்பா. அம்மா இருக்காங்களே..."
"எத்தன மணிக்கு வந்த?"
"7 மணிக்கு."
"ம்"
"பைக் வாங்கி மூணுமாசத்துல இது எத்தனாவது முறை?"
"அம்மா! கார்த்தி பர்த்டேமா. அப்பவே சொன்னேன்ல?"
"எங்க போனீங்க?"
"ஸ்பென்சர் ப்ளாசா. சப்வே."
"ஓ. வெளிய சாப்பிட்டாச்சா?"
"பார்டின்னா சாப்பிடாமலாம்மா?"
"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துல நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."
"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."
"அம்மா இப்ப என்ன ஆச்சு. என் ஃப்ரெண்ட்செல்லாம் நைட் ஷோ முடிச்சுட்டுதான் வீட்டுக்குப் போறாங்க. நாந்தான் வீட்டுக்கு வந்துட்டேன் தெரியுமா?"
"ஓ அதுவேறயா? ஏன் போயிருக்கவேண்டியதுதானே."
"விஜி. நம்ம ஃபீலிங்க புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறாங்க குழந்தைங்க. பெருமைதானே."
"என்னங்க சொல்றீங்க? இந்த விஷயத்துல ரெம்ப செல்லம் குடுக்குறீங்க. அவங்கள கெடுக்கிறதே நீங்கதான். சனி ஞாயிறானா பைக் எடுத்துட்டு காலையில போனா சாயங்காலந்தான் வர்றாங்க. பெருச பாத்து சின்னதும் கெட்டுப்போகுது."
"எங்க போறாங்க? கோயிலுக்குப் போயிட்டு. ஹோம்ல போய் பாட்டிய பாத்துட்டு வர்றாங்க."
"இல்லண்ணு சொல்லல கொஞ்சம் வீட்ல இருந்தா என்னங்க? நாளைக்கே ஒரு.."
"நாளைக்குள்ளத அப்புறம் பாத்துக்கலம் விஜிம்மா"
"இப்ப தெரியாதுங்க காதல் கீதல்னு வந்து யாரையாவது கூட்டிட்டு வரும்போது தெரியும்."
"என்னடா? லவ் பண்றியா?"
"இன்னும் இல்ல."
"என்னடா இப்டி சொல்லிட்ட.. ஹ ஹா"
"சிரிங்க நல்லா சிரிங்க. என்ன கிண்டல் செய்றதா நினச்சுகிட்டு அவங்கள ஸ்பாயில் பண்றீங்க."
"விஜி.. பல தடவ சொல்லிட்டேன். அவங்களுக்குன்னு சில உரிமைகள் இருக்குதும்மா. அவங்க கடமையெல்லாம் ஒழுங்கா செஞ்சுட்டு உரிமைய பக்குவமா பயன்படுத்துற வரையிலும் அதுல நாம தலையிடுறது நல்லால்ல."
"நீங்க ஏதோ அமெரிகாவுல இருக்குறீங்கன்னு நினைக்காதீங்க. நம்ம ஊர்ல குழந்தைங்கள சரியா வளக்கலைன்னா நாலு பேர் நாலு விதமா சொல்வாங்க"
"அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னே வாழ்க்கையில எல்லா முடிவையும் எடுத்துகிட்டிருந்தா அது வாழ்க்கையில்ல விஜி. சீரியசா யோசிச்சா அது அடிமைத்தனம்."
"தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டீங்களா? அவங்கள முன்னால வச்சுகிட்டு இதையெல்லாம் சொல்லித்தாங்க. நம்ம காலத்துல இப்டியா வெளிய சுத்திகிட்டும், ப்ரெண்ட்ஸ் வச்சுகிட்டும் இருந்தோம்."
"நம்ம காலத்துலன்னு நீ சொல்லுறத வச்சே அது கொஞ்சம் பழசாயிடுச்சுன்னு சொல்லலாம்ல. அப்ப இந்த வசதியெல்லாம் இல்ல அதனால நாம பயன்படுத்தல. இருந்த வசதிகள வச்சுத்தான் வாழ்க்கையும் இருந்துச்சு. தூர்தர்ஷன் போயி கேபிள் வந்துச்சில்லையா? எவ்வளவு பெரிய மாத்தம்."
"கேபிள் வந்ததுக்கும் இப்ப நான் சொல்றதுக்கும் என்ன சம்பந்தங்க?"
"எனக்கு இன்னொரு தோச போதும். இருக்கு விஜி. காலம் மாறுது. பல ஆப்ஷன்ஸ் கிடைக்குது. ஊடகம் சொல்லிக் குடுக்குது. பார்ட்டிக்குப் போறது சரின்னுது, ஃபேஷன் ஷோ நல்லதுங்குது, டேட்டிங்க்னா என்னன்னு உனக்கு முன்னால தெரியுமா? இன்னும் என்னென்னெல்லாமோ. நல்லதப் பார்த்து அனுபவிக்கிற வசதிய நம்ம குழந்தைகளுக்கு செய்துதரணும். காலம் மாறுது நாம மாறிக்கிறோமோ இல்லையோ. நம்ம காலம் போயிடுச்சு விஜி. மனுசனுக்கு வயசாகிறது நாம செல்லுபடியாகமப் போறோங்கிறதத்தான் குறிக்குதில்லையா? நான் ஜீன்ஸ் போட்டதயே ஒன்னால ஏத்துக்க முடியல. எவ்வளவு கம்ஃபர்டபிள் தெரியுமா?. நீ சுடிதாருக்கு மாறினப்ப கல்யாணமான பொண்ணுக்கு ஏன் சுடிதார்னு யோசிச்ச. இப்ப? இதப்போலத்தான் புது கலாச்சாரமெல்லாம். பழகிடுச்சுன்னா நாம விரும்ப ஆரம்பிச்சுடுவோம். நம்ம காலத்துல இப்டி இல்லையேங்கிறது கவலையாயிரும்."
"இந்தக் காலம் ஒங்களுக்குத்தான் ஒத்துப்போகும். ரெண்டு பொம்பளப் புள்ளைங்கள வளர்த்து ஆளாக்குறது எவ்வளவு கவனமா செய்ய வேண்டியது? உங்களுக்கேது இந்தக் கவலையெல்லாம். அவள்கள வாடா போடான்னு கொஞ்சிகிட்டு எடுத்ததுக்கெல்லாம் வளஞ்சு குடுக்குறீங்க."
"பொண்ணுங்களுக்கும் தங்களப் பத்தி முடிவெடுக்க உரிமையிருக்குதும்மா. உன்னோட பாயிண்ட்படி பாத்தாலுமே இவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாமே பொண்ணுங்கதானே. கார்த்திகா மட்டும் பாக்க ஆம்புள மாதிரி இருக்கா ஆனா எவ்வளவு நல்ல பொண்ணுங்க."
"எனக்கு என்னன்னா.."
"...கவலப்படாத விஜி. நான் இருக்கேன்ல."
"எங்க இருக்கீங்க?"
"இனிமேல் இருப்பேன். சென்னையில ரீஜனல் மேனேஜர் ப்ரமோஷன். பாஸ் ஊர்லேந்து வந்ததும் லெட்டர் தருவார். நோ மோர் டூரிங்."
"ஐயோ! நிஜமாப்பா?"
"ஆமாண்டா செல்லம்."
.
==~~~~~~~~~~~==
நன்றி: தமிழோவியம்
==~~~~~~~~~~~==
Wednesday, March 07, 2007
இப்பவே கேளுங்க ஒலிFM-மகளிர் தின நிகழ்ச்சி-சிறப்பு விருந்தினராக ஒரு பதிவர்
மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சியில் தேனான* பதிவர் ஒருவர் தோன்றி பேச இருக்கிறார் கூடவே சக பதிவர்கள் நிர்மல், அருட்பெருங்கோவின் கவிதைகளுடன்.
* நாந்தாங்க அது
சென்னை வருகிறேன் + நாகர்கோவில் சந்திப்பு
மார்ச் 31 சென்னை வந்து சேர்கிறேன். ஒரு மாதம் விடுமுறை.
இயன்றவரை சென்னை பதிவுலக நண்பர்களை சந்தித்துவிட ஆசை. எப்படிப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏப்ரல் 14 துவங்கி வரும் வார இறுதியில் நாகர்கோவில் பகுதிக்கு உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். நாகர்கோவில் பகுதி பதிவர்கள் சிலர் ஒரு பெரிய அளவு சந்திப்பை செய்யலாம் என நினைக்கிறோம். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்ட பதிவாளர்கள் நாகர்கோவிலில் பதிவர் கூட்டத்துக்கு ஒப்புக்கொண்டால் ஒரு பெரிய அளவில் சந்திப்பை ஒருங்கிணைக்கலாம். நாகர்கோவில் இலக்கிய வட்டத்திற்கும், பொதுமக்களுக்கும் பதிவுலகை அறிமுகம் செய்யும் விதமாக பெரிதான கூட்டம் ஒன்றை செய்யலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளவும். cvalex @ yahoo .com. இதை ஒருங்கிணைக்க விருப்பம் உள்ளவர்களும் தெரியப் படுத்துங்கள்.
சென்னை கவுண்ட்டவுன் நம்ம பாபா கவுண்ட்டவுனாட்டம் ஒடிக்கிட்டிருக்குது.
ஒரு வினாடிண்றது இவ்வளவு நேரமா? :)
.
Tuesday, March 06, 2007
மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்...
தராசு : பந்த் பயன் தருமா? [மீனா]
நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை
எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது
ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை.
பேட்டி : மேதா பட்கர் பேட்டி - வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து]
நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்
செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் துடைத்துக் கொள்கிறீர்கள். அதே போல் முகத்தை தண்ணீரால் கழுவும் பொழுது, கையால் தரையில் இருக்கும் மண்ணை தொட்டு அதனை கொண்டு முகத்தில் தேய்த்து முகத்தை கழுவுகிறீர்கள். இவ்வளவு எளிமையை எப்படி கடைபிடிக்க முடிகிறது?
கவிதை : உறுதிகொள் தமிழா!! [கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்]
நீ வளர்ந்த மொழியை நீ வளர்க்க
மறுத்தல் நியாயமோ? சொல் தமிழா!
பேட்டி : எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஒரு இ-நேர்காணல் [திருமலை கோளுந்து]
புத்தகங்களை நண்பர்களா ஆக்கிக் கொண்ட இந்த 17 வருடங்களில்
புத்தகங்களும் அதற்கு இணையாக நான் சந்திக்கும் மனிதர்களும் என்று இன்றைய வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. தினமும் கற்றுக்கொள்ள எனக்கு ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் நான் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன்
World Cup 2007 : முதல் சுற்றில் இந்தியாவின் வாய்ப்பு [மணிகண்டன் அழகப்பன்]
எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த
அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள்.
திரைவிமர்சனம் : தாமிரபரணி [மீனா]
ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் விஷால் மற்ற படங்களிலிரிந்து வேறுசிறுகதை : மனசாட்சி சொன்னது [குகன்]
பட்டு இதில் நன்றாக நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து,
அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.
கவிதை : காதலே, என் கணவனே! [சுரேஷ், சென்னை]
சிறுகதை : ஜீன்ஸ் [சிறில் அலெக்ஸ்]துப்பட்டாவின் வீழ்ச்சியும் சேலையின் விலகலும் கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!
"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துலகவிதை : அத்தை பெண்கள் என்னும் அழகிகள் [கார்த்திக் பிரபு]
நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."
"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."
நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின் இறுதியில் எடுக்க பட்ட
புகைப் படங்களிலும் என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.
Monday, March 05, 2007
ரவுசு மச்சீ...
:))
'பாடல் கேளீரோ?'
யாருயா அங்க 'பதிவுக் கயமைன்னா' என்னான்னு கேட்டது?
:))
.
.
'பாடல்' கேளீரோ?
Sunday, March 04, 2007
'வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்'
'மொழி'. வாவ்.
தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என என்னை நம்பவைத்த இன்னுமொரு படம் 'மொழி'.
பின்னிரவில் தூங்கிய அசதியோடு, இப்படி ஒரு 'சோகமான' படத்துக்குப் போகிறோமே என சலித்துக்கொண்டேன். படம் துவங்கியதிலிருந்து வீடு வந்து இதை எழுதிக்கொண்டிருக்கும்வரை ஏதோ மூளையை சலவை செய்து வைத்ததுபோல ஒரு புத்துணர்ச்சி. படம் சோகமா? இருக்கலாம் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களைப்போல நாம் மகிழ்ச்சியா இருக்கிறோமா என எண்ணினால் நிச்சயம் சோகம் வரலாம்.
அழுத்தமான ஒரு கதைக்கு எதார்த்தமான, கதையோடு இழையோடும் இரசிக்கத்தக்க நகைச்சுவையோடு கூடிய காட்சியமைப்பை செய்வித்து பாத்திரங்களை வாழவிட்டிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.
அமெரிக்காவில் USA என ஒரு தொலைக்காட்சி சேனல் உண்டு . அவங்களோட விளம்பரக் குறிப்பா 'Characters Welcome' எனச் சொல்வாங்க. '(வித்தியாசமான)கதாபாத்திரங்களை வரவேர்க்கிறோம்' எனப் பொருள் கொள்ளலாம். அந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள்பல வித்தியாசமான பாத்திரங்களை முன்வைத்திருக்கும்.
'மொழி', 'Characters Welcome'.
தமிழ் சினிமாக்களில் எளிதில் பார்த்துவிட இயலாத பாத்திரங்களை படைத்திருக்கிறார்கள்.
உலகையே அன்பொழுகப் பார்க்கும் ஹீரோ. முன்னாலெல்லாம் Angry young man ஹீரோக்கள பாக்கலாம். இப்போ well balanced young man தான் ஹீரோ(நான் போக்கிரி இன்னும் பாக்கல :). இந்தப் படத்து ஹீரோவும் அப்படித்தான்.
ஹீரோவ விடுங்க அவரவிட அவரது நண்பர் ரெம்ப சூப்பர். எப்போதும் சிரித்துக்கொண்டே, சிரிப்பூட்டிக்கொண்டே. பொதுவாக பலரும் சீரியசா எடுத்துக்கிற விஷயங்கள கொஞ்சம் சிரிப்பு கலந்த பார்வையில் எடுத்துக்கிறதுல கெட்டிக்காரர்.
காது கேளாத, வாய் பேச இயலாத ஹீரோயின். ஆனா இவரது இயலாமை இதுவல்ல. உடலின் இயலாமையை அவர் வென்றுவிட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எல்லா உடற்திறனும் கொண்டவர்கள் சாதித்திராததையெல்லாம் இவள் சாதித்திருக்கிறாள். ஆனால் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு அனுபவம் இவள் மனதை ஊனமாக்கிவிடுகிறது.
ஹீரோயினின் நண்பி. இவரின் பாத்திரம் ரெம்ப இயல்பா படைக்கப்பட்டிருக்குது. இவரின் வாழ்வில் ஏற்படும் ஒரு திருப்பம் கதாநாயகிக்கு மனமாற்றத்துக்கு வழிவகுக்குது.
இந்த நாலுபேரும் முக்கிய பாத்திரங்கள். இன்னும், கடுகடுப்பான காலனி செக்ரட்டரி, அவர் மகன் சாப்பாட்டு பிரியன், ஹீரோவை ஒருதலையா காதலிக்கும் காலணிப் பெண், 1984லேயே மனது உறைந்துபோன ஒரு மன நோயாளி பேராசிரியர்(டி.வி புகழ் பாஸ்கர்), ஹீரோவிடம் பூ விற்க வரும் வாய்பேச இயலாத, காது கேளாத சிறுமி இன்னும் பல பாத்திரங்கள் திரையில் மிளிர்கின்றன. Characters Welcome.
அன்னியர்களோடு நாம் கொள்ளும் உறவுகளில் அதிகபட்ச ஆழமானது என்ன? காதல்? திருமணம்? ஒரு மாற்று சிந்தனையாக சோதித்துப் பாருங்கள், நம் உறவுகள் அனைவருமே அன்னியர்கள்தான். இப்போதில்லை என்றாலும் ஒரு காலத்தில நமக்கு அன்னியர்களாய்த்தானிருந்திருக்கிறார்கள், நம் பெற்றோர்கள் உட்பட. ஆக நம் உறவுகள் எல்லாமே அன்னியர்கள், இதே பார்வையை கொஞ்சம் திருப்பினால் அன்னியர்கள் எல்லாருமே நம் உறவினர்களாயிருவாங்க. இதுபோன்ற சிந்தனையில் பின்னப்பட்டிருக்கும் உறவு வலைகளில் பாத்திரங்கள் பரிமளிக்கின்றன. அன்னியர்கள் என்பதைவிட, நாம் இன்னும் நண்பர்களாகாதவர்கள் என்பதே பொருத்தமானதாயிருக்கும்.
நிச்சயம் பார்க்கவேண்டிய படம் 'மொழி'. சோகமான படமல்ல இது. காட்சிக்கு காட்சி இயக்குனரின் brilliance தெரிகிறது. கடைசியில் வரும் பாடல் கொஞ்சம் சோர்வையளித்தாலும் படத்தின் மற்ற நல்ல அம்சங்களுக்காக இதை மன்னிக்கலாம்.
குறிப்பிடத்தக்கவகையில் வசனம் எழுதியவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. அருமையான வசனங்கள். பின்னணி இசையிலும், சில பாடல்களிலும் முத்திரை பதிக்கிறார் வித்யாசாகர். திடீரென கவனித்தேன் பின்னணியில் அழகிய ஜாஸ் இசை அளித்திருந்தார். வைரமுத்துவின் வரிகளில் 'காற்றின் மொழி' பாடல் மிகவும் அருமை.
இதுவரை நீங்கள் தமிழ் படமே பாத்திருந்ததில்லையென்றாலும் இந்தப் படத்த பார்க்காம இருக்காதீங்க. I highly recommend it. இந்தப் படத்த தவறா விளம்பரம் செய்யுறாங்கன்னு படுது. விளம்பரத்த பார்த்துட்டு சோகமான படம்னு நினச்சுட்டேன்.
சிகாகோவில் ரஜினி படத்துக்கு அடுத்ததாக அரங்கு நிறைந்து, அடுத்த காட்சிக்காக காத்திருந்து படம் பார்த்த மக்கள் கூட்டத்தை முதன் முதலில் பார்க்கிறேன்.
படம் முடிந்ததும் கைதட்டினேன், எல்லோரும் தொடர்ந்தனர்.
'வார்த்தயில்லாமலே பாஷை உண்டாகலாம்'. இது இசைக்கும் காதலுக்கும் மிகவும் பொருந்தும். மொழியில் இந்த இரண்டுமே அழகாக கையாளப்பட்டிருக்கின்றன.
இயக்குனருக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள். இப்படி ஒரு படத்தை தயாரித்து மிகவும் வித்தியாசமான நடிப்பில் ஒளிர்ந்திருக்கும் ப்ரகாஷ் ராஜுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். ஜோ, இத்தனை வருடம் நடித்ததின் பலன் மொத்தமும் இந்தப்படத்தில் தெரிகிறது.
'மொழி', பேசாம போய் பாருங்க (pun intended).
.
சிறில் அலெக்ஸ்
சுசிலாவைக் கேளுங்கள்...