.

Wednesday, May 31, 2006

கீழே போட்டு மிதிப்போம்

தனிமை இருள் நீக்க
சிந்தனைச் சுடர் இருக்கு
அந்த மின்மினி சிகரட்டின்
சிறு வெளிச்சம் இனிஎதற்கு

புண்பட்ட மனம் ஆற்ற
பண்பட்ட நட்பு போதும்
வெண்குழல் ஊதும்போது
புண் புரையோடிப் போகும்

இளமை அழிக்கும் புகை
இனிமை குலைக்கும் புகை
இனிமேல் நமக்குப் பகை
இனிமேல் நமக்குப் பகை

உதடு கள் நடுவே
உபத்திரம் இருக்குதே
உடலினை கெடுக்குதே
உயிரினை சுருக்குதே

வெள்ளாடை போர்த்தி அது
சொல்வதுவும் புரியலியா
உள்ளே உன் உறுப்பெல்லாம்
கரிவதுவும் தெரியலையா

இன்றே முடிப்போம்
இந்த வெள்ளையனின் கதையை
பெறுவோம் மீண்டும் ஒரு சுதந்திரம்
அந்த கடைசி சிகரட்டை கீழே போட்டு மிதிப்போம்.

7 comments:

வஜ்ரா said...

தம் மடிக்கும் பழக்கம் உண்டா? :))

may 29 புகையிலை எதிர்ப்பு நாள்...உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

சிறில் அலெக்ஸ் said...

தம் அடிக்கும் பழக்கம் இர்நுதது.
மே 26 முதல் விட்டுவிட்டேன்..


:)

சீனு said...

//மே 26 முதல் விட்டுவிட்டேன்//

மே 26 முதன்...மே 29 வரையா? இல்லை, என் நண்பர்கள் பலர் விட்டுவிட்டதாக கூறினாலும், பின் ஏதோ ஒரு சந்தர்பத்தில் திரும்ப தம் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதான் கேட்டேன்.

சிறில் அலெக்ஸ் said...

தம் விடுவதென்பது ஒரு கடினமான அனுபவம்...முன்பு ஒருமுறை தோற்றுவிட்டேன்...(3 மாத இடைவெளி)
இப்போ விட மாட்டேன்..

:)

சீனு said...

நல்ல வேளை, நான் அதை மட்டும் கத்துக் கொள்ளவில்லை.

//இப்போ விட மாட்டேன்//

தம் அடிப்பதையா (அ) சபதத்தையா?

சிறில் அலெக்ஸ் said...

சீனு,
கத்துக்காதது ரெம்ப நல்லது..

//தம் அடிப்பதையா (அ) சபதத்தையா? //

கேட்பீங்கன்னு தெரியும்..

இதையே ரேவ்தி 'விட்டுடுவீன்னீங்களே' அப்படீன்ருப்பாங்க.

கால்கரி சிவா said...

நான் வெற்றிகரமாக 5 வது வருடம்

சிறில் அலெக்ஸ்