Friday, February 10, 2006
எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்
ஒரு புகைவண்டி பயணத்தில் பார்வையில்லாத ஒருவர் பாடியபடியே நன்கொடை கேட்டுக்கொண்டு வந்தார்.
"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்"
டி. எம். எஸ் குரலில் அருமையான ஒரு பாடல். பாடலின் இறுதியில் "கந்தனே உனை மறவேன்.. கந்தனே உனை மறவேன்.." என தூக்கிப்பாடுவார். மிக இனிமையான அர்த்தம் மிகுந்த பாடல். கந்தனே என்பதை நீக்கி கடவுளே எனப் பாடினால் எல்லா கடவுளர்களுக்கும் பொருந்திவிடும் இந்த வரிகள்.
இதே தொகுப்பில் "அழகென்ற சொல்லுக்கு முருகா", "ஓராறு முகமும்", "சொல்லாத நாளில்லை", "உள்ளம் உருகுதையா உன்னைக் காண்கையிலே" அற்புதமான பாடல்கள். மெய்மறந்து ரசித்திருக்கிறேன்.
யாராவது இந்தப் பாடல்களை வார்த்தைகளோடு பதிவிட்டால் மீண்டும் கேட்கலாம்.
இளைய ராஜா பாடிய 'ஜனனி ஜனனி', தாய் மூகம்பிகை படத்திலிருந்து. இந்தப் பாடலை கேட்கும்போதெல்லம் கண்ணோரம் ஈரம் கசியும், அத்தனை பக்தி மயமான ஒரு பாடல். அருமையான வரிகள். யார் எழுதிய பாடலென்று தெரியவில்லை. குழுவினர் பாடும்போது தீபன் சக்ரவர்த்தியை தனியாகக் கண்டுகொள்ளலாம்.
எம். எஸ். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் பாடல்களென்று நினைக்கிறேன், ஒன்பது கிருஷ்ணன் பாடல்கள். அத்தனையும் ரத்தினங்கள்.
டி. எம் எஸ் பாடிய, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே', எஸ். பி. பி பாடிய 'ஆயர்பாடி மாளிகையில்', ஜானகியின் 'கோகுலத்து பசுக்களெல்லாம்' , எல். ஆர். ஈஸ்வரி பாடிய, 'கோபியரே கோபியரே', எம். எஸ். வீ யே பாடிய ஒரு அருமையான பாடல் 'அமர ஜீவிதம் சுவாமி...' என நினைக்கிறேன், எல்ல பாடல்களும் எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத்தான் நகருவேன்.
எம். எஸ். வி இதேபோல வேளங்கண்ணி மாதா பாடல்களும் இசையமைத்துள்ளார் அவையும் இனிமையான பாடல்கள்.
எல். ஆர். ஈஸ்வரியின் 'தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி', அவர் குரலுக்கேற்ற இசையமைப்பு. 'கற்பூர நாயகியே கனகவல்லி', 'செல்லாத்தா எங்க மாரியாத்தா, 'வேற்காட்டில் வீற்றிருக்கும்', இவர் குரலில் மற்ற இனிமையான பாடல்கள்.
சீர்காழி பாடிய 'வினாயகனே வினை தீர்ப்பவனே'. சின்ன வயதில் இவர் கச்சேரியில் பாட நேரடியாக கேட்டிருக்கிறேன்.
இன்னும் 'மருத மலை மாமணியே முருகையா', 'திருச்சந்தூரில் கடலோரத்தில்'' எல்லாம் மறக்க முடியாத பாடல்கள்.
பாடல்களை பதிக்கும் வலைப்பதிவாளர்கள் யாரவது இவற்றை தொகுக்கலாம். பரிசாக 10 பின்னூட்டங்கள். எவ்வளவு பாடல்கள் இல்லையோ அதற்கேற்றாற்போல் பின்னூட்டங்கள் குறைத்துக்கொளளப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
30 comments:
???
நாகூர் Hainfa வின்
" கடவுளிடம் கை யேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...."
இந்த வரிசையில் சேறும்.
இந்த வார இறிதியில் என்னுடைய பாதள அறையில்(basement) நீங்கள் கேட்ட பாடல்களை தேடிக் கிடைத்தால் அனுப்புகிறேன். you can also try at www.musicindiaonline.com
கால்கரி சிவா
நேரமின்மை கருதி அந்தப்பதிவை சீக்கிரம் முடிக்க நேர்ந்தது.
நாகூர் ஹனிபாவின் பாடல்களை விட்டுவிட்டேன்.
'தேவன் உண்மை தூதரே' எனும் ஒரு பாடல்.. ஹிந்தி பாடல் ஒன்றின் மெட்டில் அமைந்தது அதுவும் கேட்பதற்கு அருமையான பாடல்
வருகைக்கும் பங்களிப்புக்கும் நன்றி சிவா.
'எல்லா புகழும் இறைவனுக்கே.. அல்லா ஒருவனே துணை நமக்கு'
ஆயர் பாடி மாளிகையில் - எஸ்.பி.பியா - ஜேசுதாஸ் இல்ல?
அப்புறம் - தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், வேறென்ன வேண்டும் என்றார் - இயேசு வேறென்ன வேண்டுமென்றார்....
அப்புறம் டி.எம்.எஸ் - சிவாஜிக்காகப் பாடிய, தேவனே என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்....
அப்புறம் - கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...
எஸ்.பி.பி தான் நண்பன் .. நீங்க சொல்லியிருக்கிற பாடல்களும் சூப்பர்.
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்குமென்றார்..
Cyril,
Nagore Hanifa used lots of hindi movie song tunes i guess.....i remember one song used to be in the tune of ""VAADha karle saajna"". I used to like that one.....All the songs youve mentioned have been my favourites too.mmmm i wouldnt call favourites...you kinda relate those songs with yr childhood..so they become dear to yoou.you get what i say??...Thamizh typing kashtam.....adhavida thamizh la ezhudara alavu theriyaadhu.....ellam pechu thamizh thaan.....
Radha
""VAADha karle saajna" - 'தேவன் உண்மை தூதரே'.
they sure do remind me of my school days. Also some Aiyappan songs.
There was a time when lot of movie songs were made into Aiyappan Songs.
Including one on tune of 'hawa hawa'.
நல்ல பாடல்களாப் போட்டிருக்கீங்க சிறில். கோ.கணேஷ்ன்னு ஒருத்தர் இருந்தார் (அவரோட ஸ்டார் வாரத்துக்கு அப்புறம் அவரைக் காணலை). அவர் நீங்க சொன்ன பல பாடல்களுக்கு வரிகளைக் கொடுத்திருக்கார். இங்க பாருங்க.
http://bhakthipadal.blogspot.com/
Good selection of songs.
இதில் அநேகமான பாடல்கள் என் ப்ளே லிஸ்டில் இருக்கின்றன.
வீரமன்ணியின் 'பகவான் சரணம்', எம்.எஸ்ஸின் 'குறை ஒன்றும் இல்லை'
கத்தோலிக்கப் பாடல்கள் சில:புனித அந்தோனியாரில் 'மண்ணுலகில் இன்று', உன் திரு யாழில் என் இறைவா, இறைவன் நமது வானகத் தந்தை'
Hanifa பாடல்கள் இணையத்தில் எங்காவது உள்ளனவா? சிறு வயதில் கேட்டது.
இதர பாடல்கள் குறித்து நான் இட்ட ஒரு பதிவு இங்கே:
http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_15.html
நன்றி குமரன்
//(அவரோட ஸ்டார் வாரத்துக்கு அப்புறம் அவரைக் காணலை). //
அவர் எரிஞ்சு விழற நட்சத்திரம் போல. பலபேர் இப்படி இருக்காங்க.
நன்றி நிலா. உங்கள் பதிவிலுள்ள பாடல்களை அப்புறமா கேட்கிறேன்.
'உம் திரு யாழில் என் இறைவா'..
தாகூரின் வரிகளை கடன் வாங்கி எழுதிய பாடல்.
ஹனீபா பாடல்களைத் தேடவேண்டும்.
ராஜ்,
//என் இரு விழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவேண்டும் திருக்குமரா" //
ரெம்ப நாள் ஆச்சு இந்தப்பாடல் கேட்டு.
நீங்கள் சொன்ன அத்தனை பாடல்களும் எனக்கும் பிடிக்கும். குறிப்பாக கற்பனை என்றாலும்....அமர ஜீவிதம்....ம்ம்ம்ம்..அப்புறம் கோகுலத்தில் ஒரு நாள் ராதை...
அப்புறம்...நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை...அல்லா அல்லா
அப்புறம் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் - புனித அந்தோணியார் - வாணி ஜெயராம்
கிண்கிணி கிண்கிணி என மாதா கோயில் மணியோசை - டீ.எம்.எஸ்
தேவன் திருச்சபை மலர்களே
திருச்செந்தூரில் போர் புரிந்து - சீர்காழி, டீ.எம்.எஸ்
ஹரி ஹரி கோகுல ரமணா - டீ.எம்.எஸ், பி.சுசீலா, டி.எல்.மகராஜன் - திருமால் பெருமை
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா - முக முத்து
இன்னும் நெறைய இருக்கு. அடிக்கடி வந்து சொல்றேன்.
ராகவன்,
புனித அந்தோனியாரில் இன்னுமொரு ஏசுதாஸ் பாடல்.. கெட்டுப்பாருங்கள்,அருமையான பாடல்.
'ஆனந்தமானது அற்புதமானது நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' தத்துவமான பாடல்.
சுட்டிகளைக் கொண்டு ஒரு பதிவு விரவில் போடுகிறேன்.
சிறில்,
நீங்க குறிப்பிட்டுள்ள பாடல்கள் பெரும்பாலும் என்னிடம் இருக்கிறது. வேண்டுமென்றால் சொல்லுங்கள் அனுப்புகிறேன்.
இவையல்லாமல்
ஜெய ஜெய தேவி துர்கா தேவி
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவானி
கற்பகமே கற்பனைக்கெட்டாத அற்புதமே
இன்னும் நிறைய..
அன்புடன்
கீதா
//மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவானி//
அழகான பாடல்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அனுப்பி வையுங்கள் :)
சிறில்,
மாணிக்க வீணையேந்தும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
இந்த இரண்டு பாடலும் அனுப்பியுள்ளேன்.. வேறு பாடல் வேண்டுமெனில் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் அனுப்பவும்.
அன்புடன்
கீதா
Cyril,
Anuradha Sriram's song in Minsara Kanavu (anbenra mazhaiyilae agilangal nanaiyavae) is also a very nice and touchy song
raji
புனித அந்தோணியாரில் வாணியின் பாட்டுதான் கேட்கக் கிடைத்தது சிறில். ஏசுதாஸ் பாட்டிற்கு சுட்டி இருந்த்தால் தாருங்கள்.
இன்னொரு பாட்டு. பி.சுசீலாவின் இனிய குரலில் - சத்திய முத்திரி கட்டளை இட்டது நாயகன் ஏவின் கீதம் - விஸ்வநாதன் இசை. படம் நினைவு இல்லை.
ராகவன் பாடலின் சுட்டி நாளை தருகிறேன்.
கீதா..
பாடல்கள் கிடைத்தன நன்றி மின்னஞ்சலில் பதில் அனுப்புகிறேன்
ரஜி (ராஜி?)
அன்பென்ற மழையிலே அழகான பாடல்..
'வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்' - வைரமுத்துவின் வைர வரிகள்(எத்தனை வைரம்...:)
சிறில்,
அட்டகாசமான தொகுப்பு.
ஆனால் என்னை மிகவும் நெகிழ வைத்த பாடல் யாரும் குறிப்பிடவில்லை.
'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் "கடவுள் உள்ளமே .கருணை இல்லமே' ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் நீர் பெருகும்.
சீர்காழி பாடிய "தேவன் கோவில் ம்ணியோசை" அற்புதமான பாடல்.
பழைய பாடல் "எனையாளும் மேரி மாதா" மிஸ்ஸியம்மா படத்தில் இடம்பெற்றது என நினைக்கிறேன்.
குழந்தை ஏசு படத்தில் வரும் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்".
அன்னை வேளாங்கண்ணி படத்தில் "கருணை மழையே மேரி மாதா"
சொல்லிக்கொண்டே போகலாம்
ஜோ, அன்னை வேளாங்கன்னியில் வரும் நீலக்கடலின் ஓரத்தில் பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஒருமாதிரி கம்பீரமும் ஆன்மீகமும் கலந்த பாடல். தூத்துக்குடீல அடிக்கடி இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன். ஹோலி கிராஸ் ஸ்கூல்ல போடுவாங்க.
ஜோ
கடவுள் உள்ளமே.. வாவ்.
'கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை.. கண்ணிருக்கும்பேர்கள் கண்டது இல்லை'..
உங்கள் மற்ற பாடல்களும் எனக்குப் பிடிக்கும்..
சீக்கிரம் சுட்டி போடவேண்டியதுதான்.
"இன்னொரு பாட்டு. பி.சுசீலாவின் இனிய குரலில் - சத்திய முத்திரி கட்டளை இட்டது நாயகன் ஏவின் கீதம் - விஸ்வநாதன் இசை. படம் நினைவு இல்லை.|"
this is from kanne pappa movie sung by padmini ( in the film)
என்ன மனைவிய ஊருக்கு அனுப்பிட்டு
பக்தி பாடல் கேக்குறீங்க. சாமியாரா போற யோசனை ஏதாவது இருக்கா!!?
:)))
ஆதிபகவன்,
இது மனைவி இருக்கும்போது போட்ட பதிவு.
துன்பம் வரும்போதுதான் (இருக்கும்போதுதான்) கடவுள நினைக்கணும். ஆமா.
:))
Post a Comment