ஒரு அம்மாவும் அவர் மகளை கையில் வைத்துக்கொண்டு கணிணி விளையாட்டுக்கள் எப்படி பள்ளியில் விவாதிக்கப்பட்டு வீட்டில் கெஞ்சலோ கூச்சலோ போட்டு வாங்கப்பட்டு விளையாடப்படுகின்றன என்றும், இதை விளையாடுவதால் வரும் அறிவு வளர்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்தார்.
ஒரு தலமை ஆசிரியையும் இதைப்பற்றி உயர்வாகப் பேசினார்.
தொகுப்பாளர், 'இனிமேல் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லாமல் வீட்டிலேயே பொழுது போக்கவைக்கலாம்' என ஏதோ 'அப்படியே சாப்பிடலாம்' தொனியில் பேசினார்.
மாறனின் மலிவு விலை கணிணி திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கணிணிவிளையாட்டுக்கள் மூளை/அறிவு வளர்ச்சிக்கு சிறந்ததா? பெரிய கேள்வி.
இந்த சுட்டியில் இது பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகளை ஆங்கிலத்தில் பார்க்கலாம். இதற்குப் பதிலடியும் அதிலேயே இடுக்கிறது
என்ன சொல்கிறது ஆராய்ச்சி - அதீத கணிணி விளையாட்டுப் பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்று.
எனக்குத்தெரிந்த சில தகவல்கள் கீழே,
கணிணி விளையாட்டுப் பழக்கமுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில் அதிக விருப்பம் காட்டுவதில்லை, இரவு தூங்க நேரம் எடுத்துக்கொள்கிரார்கள், இவை உடல் நலனை பாதிக்கிரது.
பெற்றோருக்கும் குழந்தைகளூக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
பொதுநல எண்ணங்கள் போய் தான் தனது என்ற மனநிலை வந்துவிடுகிறது குழந்தைகளுக்கு.
உலகைப்பற்றிய அறிவை வெறும் ஒளிப்புள்ளிகளை(Pixel?) பார்த்தே தெரிந்துகொல்கிறார்கள். சிங்கத்தை பார்த்து லயன் கிங் என்கிறான், கொரில்லாவை கிங் காங் என்கிறார்கள். ஒரு மாய உலகத்தையே மென் விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்துகின்றன.
குறைந்த பட்ச நண்பர்களையே கொண்டுள்ளனர்.
வெளியே, ஊருக்கோ, சுர்றிப்பார்க்கவோ போக மறுக்கிறார்கள். இதை சில பெற்றோர்கள் நல்லதுதான், நாம தனியா என்ஜாய் பண்னலாம் என நினைக்கிரார்கள். என் ஜாய் மட்டுமே முக்கியம் ஒன் ஜாய்க்கு கம்புயூட்டர் இருக்குதே என்பது தான் இவர்களின் போக்கு.
கம்பூட்டர் கேம்ஸ் - நம் வாழ்க்கைகளை ஊடுறுவப்போவது உறுதிதான். ஆனால் இவற்றை தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம். எல்லா விளையாட்டுக்களும் எல்லாருக்கும் உகந்தல்ல. இதற்கென வார இறுதிகளில் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். பெற்றோரும் சேர்ந்து விளையாடலாம். குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பு போன்ற ஈடுபாடாவது தேவை. அவர்கள் விளையாடும்போது அந்த அறையிலிருந்தபடி நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருக்கல்லாம்.
அறிவு வளர்ச்சிக்கான, கணிதம் மற்றும் மொழி பாடங்களின் அடிப்படையில் சில மென் விளையாட்டுக்களுளன இவை அறிவு வளர்ச்சிக்கு கொஞ்சம் உதவலாம். ஆனால் படிப்பறிவு மட்டும் ஒரு முழுமனிதனை உருவாக்க முடியாதே.
சன் டி.வி எதற்கு திடீரென இப்படி ஒரு தொகுப்பைத் தரவேண்டுமென்பதற்கு உள் அர்த்தமிருக்கலாம். இப்பெல்லாம் இவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தமிருக்கிறது. இதே தொகுப்பில் கணிணி விளையாட்டுக்களால் வரும் தீங்கையும் அதை சரிசெய்யும் முறைகளையும், கவனமாயிருக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியிருந்தால் தொகுப்பு முழுமையானதாயிருக்கும்.
பிள்ளைகள் விளையாட இடமில்லாதபடி ஊரமைப்பும், பள்ளிகளும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது. பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடிவந்து கம்பூட்டர் கேம்ஸ் ஆடிக்கொண்டிருகின்றனர் பிள்ளைகள். குழந்தைகள் பலர் ஊரிலிருந்துவரும் நம் சொந்தக்காரர்கள்கூடப் பழகவே தயங்குகிறார்கள்.
முன்பெல்லாம்,"அம்மா சுப்ரமணியன் என்ன கிள்ளிட்டான் என அழுது வரும் பிள்ளைகள் இனி,"அம்மா, சூப்பர்மேன் என்ன சுட்டுட்டான்னு" வந்து நிக்குமோ என்னவோ?
More Links on CGshttp://www.timesonline.co.uk/article/0,,2-1976339,00.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3485918.stm
http://news.bbc.co.uk/2/hi/health/4594376.stm
மிச்சத்தத கூகிளில் தெடுங்களேன்...:)
10 comments:
சிறில்,
கணினி விளையாட்டுகளில் நீங்கள் சொன்ன தீமைகளும் இருக்கின்றன.
ஆனால் பல நல்லனவும் இருக்கின்றன. மிக முக்கியமாக reflex கள். இதற்கு மருத்துவப் பூர்வமாக சான்றுகள் உள்ளன.
மேலும் உங்களுக்கே தெரிந்திருக்கும். கம்புயூட்டர், டிவி பார்ப்பதால் கண் கெட்டுப் போகும் போன்ற கப்ஸாக்கள்.
இதைப் பற்றித் தனிப்பதிவிட ஆசை.
நன்றி
உங்கள் கருத்து சரியானதே. எனக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. பொன்னியின்செல்வனை முழுமூச்சாக இரண்டு நாட்களில் படித்தவன், இப்போது ஆனந்த விகடனை எடுத்தால் ஏதாவது படம் பார்ப்பதோடு சரி. ஆனால் குமுதத்தை இணையத்தில் படிக்கப் பிடிக்கிறது. இந்தியா திரும்பினால் சரியாகிவிடும் எனத் தோணுகிறது.
இராமநாதன்,
கனியிருக்க காய் கவ்ர்ந்தற்று என்பது. கனியான (கனிவான) சில கணினி விளையாட்டுக்களை தெர்ந்தெடுப்பது நல்லது. அதேதான் நீங்களும் சொல்கிறீர்கள். நன்றி.
உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
மகேஸ்,
புத்த்கம் படிப்பது குறகிறது என்பதை பதிவில் விட்டுவிடேன், பின்னூட்டத்திற்கு நன்றி
சிறில்,
நான் செய்தியை பார்த்ததும், நீங்க சொன்னது எல்லாம் தோன்றியது. நல்ல கட்டுரை.
கணினி விளையாட்டால் உடல் நலம் கெடுவது நிச்சயம், குறிப்பாக குழந்தைகளின் எலும்புகள் தேயும், கண் பார்வை கெடும்.
நான் கண்ணாடி போட கணினி விளையாட்டும் ஒரு காரணம்.
பிரின்ஸ், மேக்ஸ் பெயினி, ஏஜ் ஆப் எம்பயர், குருஷேடர், இப்படி என்னற்ற ஆட்டங்கள் இரவு பகல் தெரியாமல் ஆடியிருக்கிறேன், வெறி பிடித்து, நண்பர்கள் வட்டத்தில் யார் வெகுவிரைவில் ஆட்டத்தை முடித்தார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை விட விரைவாக முடித்து இருக்கிறேன்.
மேலும் குழந்தைகள் சுடுவது, ரத்தம் வருவது போன்ற வன்முறை கலந்த ஆட்டங்கள் பார்க்கும் போதும் விளையாடும் போது பாதிக்கப்படுகிறார்கள்.
தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்தால் நல்லது. தொடர்ந்து விளையாட அனுமதி கொடுக்கக்கூடாது.
//குழந்தைகளின் எலும்புகள் தேயும், கண் பார்வை கெடும்.
//
பரஞ்சோதி,
நானும் ஒரு மருத்துவன் என்ற வகையில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்களை மிக தீவிரமாக எதிர்க்கிறேன்.
//நான் கண்ணாடி போட கணினி விளையாட்டும் ஒரு காரணம்.
//
என்று எந்த கண் மருத்துவராவது கூறியிரிந்தால், அவர் மருத்துவரே அல்ல என்றும் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
பரஞ்ஜோதி,
பாராட்டுக்கு நன்றி.
சிறில்,
அவசியமான அருமையான கட்டுரை.பாராட்டுக்கள்!
இராமநாதன்,
கணிணி,தொலைக்காட்சி-யில் அதிக நேரம் செலவிடுவதால் கண் பாதிக்கப்படுவதில்லையா? மேல் விபரம் தாருங்களேன்.
இங்கே சிங்கையில் ,கணிணி முன் வேலை செய்பவர்கள் ,45 நிமிடத்திற்கொருமுறை பார்வையை விலக்கி சிறிது நேரம் தூரத்திலிருக்கும் எதாவது ஒன்றை பார்க்கும் படி சுகாதார அமைச்சு அறிவுறுத்துவதாக வானொலியில் சொல்கிறார்கள் .அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பரஞ்சோதி,
போன பின்னூட்டத்தில் உங்கள் மருத்துவரைப் பற்றி சற்று கடுமையாக கூறிவிட்டேன். அம்மாதிரி செய்திருக்கக்கூடாது. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஜோ,
உண்மை கணினி, தொலைக்காட்சி பார்ப்பதால் கண் கெட்டுப்போகும். என்னடா நேத்திக்கு ஒண்ணு இன்னிக்கு ஒன்று சொல்றேன்னு பாக்கறீங்களா. ஆங்கிலத்தில் சொன்னால் எளிதாக இருக்கும். அதனால். Using the Computers / TVs per se dont cause eye diseases like how a bacteria causes disease. Rather, Ergonomics which includes the angle of viewing, distance from the screen etc may affect your eyes. I think i didnt get that point across properly last time. American Association of Opthalmologists have found that there is NO evidence directly linking computers to anything. The same eye problems may occur even from reading a book if done improperly.
So the advice by Singaporean Health Ministry is valid. Only we blame the screens, whereas the eye diseases inevitably result from improper usage.
I once again apologize to Paranchothi adn Cyril.
Regards
இராமநாதன் மன்னிப்பு எல்லாம் எதற்கு சொல்லுறீங்க, அப்படி ஒன்றும் நீங்க தவறாக சொல்லவில்லை என்று நான் ஒரு பின்னோட்டம் இட்டேன், வரவில்லையே ஏன்?
சரி, இராமநாதன்,
நான் என் அனுபவத்தாலும், மற்றவர்கள் சொன்னதை வைத்தேன் சொன்னேன்.
மேலும் குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி, கணினி முன்னால் அமராமல் இருக்க நாம் கண் கெட்டு போயிடும் என்று சொல்வதில் தவறில்லை.
எல்லாம் சரி,
இங்கே கணினி விளையாட்டில் விருப்பம் இருப்பவர்கள் யாருமே இல்லையா? புதிய புதிய விளையாட்டுகளைப் பற்றிய தகவல்கள் சொல்லலாமே.
பரஞ்சோதி has left a new comment on your post ""அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."":
மருத்துவ நண்பர் இராமநாதன்,
நான் என் அனுபவத்திலும் மற்றவர்கள் சொல்லக் கேட்டதால் சொன்னேன். மருத்துவ ரீதியில் உங்க கருத்தை அறிய வந்தால், நீங்களே சொல்லிட்டீங்க. நன்றி.
Post a Comment