.

Tuesday, February 07, 2006

ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்

அமெரிக்கா உலகை ஜனநாயகப் படுத்தும் அரிய(?) பணியை மேற்கொண்டுள்ளது. எல்லா நாடுகளும் ஜனநாயக நாடாகிவிட்டால் இவர்களை எதிர்க்க ஆளிருக்காது என எண்ணிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இன்றைய ஜனநாயகங்களில் ஒருசில நாடுகளைத்தவிர மற்றவை அமெரிக்காவின் கைப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதை ஜனநாயகத்தை உருவாக்கும் போராகமாற்றியமைத்துள்ளது அமெரிக்கா.


ஜனநாயகம் மட்டுமே தனிமனித, சமுக விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது இவர்களின் பிரச்சாரம். சோரம்போன, ஜனநாயகத்தின்பேரில் மக்களை வெறும் ஓட்டுப் போடும் பொருட்களாக உபயோகித்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஜால்ராபோடும் சில இராணுவ ஆட்சிகள் ஜனநாயகமாக இவர்கள் கண்களுக்குத் தெரிகிறது.

ஜனநாயகம் என்பது வெறும் ஓட்டுப்போடும் உரிமைபெற்ற மக்கள் கூட்டம் என்பதுதான் அமெரிக்காவின் நிலையாகப்படுகிறது. ஈராக்கில் ஒவ்வொரு ஓட்டெடுப்பின் போதும் அமெரிக்க ஊடகங்களில் வெற்றி ஆரவாரம் கேட்கமுடிகிறது, ஆனாலும் ஈராக்கில் யுத்தம் ஓய்ந்தபாடில்லை.

அமெரிக்காவில் சில காலங்களுக்கு முன்னிருந்த தனிமனித சுதந்திரங்கள் இபோது பறிக்கப்பட்டுள்ளன. மூன்றம் தர முறைகளை தன் மக்கள் மீதே பயன் படுத்துகிறது அமெரிக்கா. மக்களின் தொலைத்தொடர்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. தன் சொந்த மக்களை பயம் காட்டி, அவர்களின் உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக உயர்த்திக்காட்டுவது வேடிக்கை.

உலகப் போலீசாகத் தன்னை அறிமுகப்படுத்தும் அமெரிக்காவின் தகுதிகள் என்னென்ன? மனித வரலாற்றில் இந்த நாட்டின் பங்குதான் என்ன? எல்லா இயற்கை வளங்களும் நிரந்த ஒரு பூமிப் பரப்பை செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அவர்களின் மரபுகளையும் ஏன் வம்சத்தையுமே அழித்து ஆட்கொண்டனர். ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்று கறுப்பின மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாடி அடிமையாக்கிக் கொண்டனர். தனி நாடாகவேண்டி தம் சொந்த சகோதரர்களான ஆங்கிலேயருடன் போரிட்டனர், போரில் வெற்றிபெற சில கீழ்த்தரமான யுக்திகளை கையாண்டனர். ஜப்பானென்ற ஒரு குட்டி நாட்டை எதிர்க்கத் துணிவில்லாமல் அணுஆயுதம் கொண்டு தரைமட்டமாக்கினர். தாங்கள் விரும்பாத அரசங்கங்களை அழிக்க இவர்கள் வங்கிக்கொடுத்த துப்பாக்கிகளும் சொல்லிக்கொடுத்த யுக்திகளும்தான் இன்று இவர்களைக் குறிபார்க்கின்றன.

அமெரிக்கா தன்னை சிறந்த வழிகாட்டியாக நடத்திக்கொண்ட நேரங்கள் இருந்தது ஆனால் அவற்றிலெல்லாம் செற்றை வாரி இறைக்கின்ற காலம் இது. மக்களின் ஓட்டை பெற்றுவிட்ட ஒரு அடக்குமுறை அரசாங்கமே இங்கு செயல்படுகிறது.

கட்சிக்கு காசளிக்கும் கம்பெனிகள் பெறும் சலுகைகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது. இயற்கையின் சீற்றங்களின்போது மக்களை அரசு புறக்கணிக்கிறது. எங்கோ உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் மறைந்துபோகும் ஒர் ஆப்ரிக்க நாட்டில் நடக்கும் அநியாயங்களை இந்த அரசு சாதாரணமாகச் செய்துவருகிறது என்பதே உண்மை.

உலகெல்லாம் ஜனநாயகத்தை உருவாக்க இவர்கள் செய்த அடக்குமுறை பிரச்சாரத்தால் தீவிரவாத அமைப்பான ஹமாஸ் பாலஸ்தீனத்தில் மக்களின் அங்கீகாரத்தோடு ஆட்சிக்கு வந்துளளது. இவர்கள் தந்த மருந்து இவர்களுக்கே விஷமாகிப் போனது. இப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமெரிக்காவின் சொல்படி நடக்கவேண்டுமென ஆசைப்படிகிறது. உங்கள் ஓட்டு செல்லாது என பாலஸ்தீனியர்களுக்குச் சொல்லாதவரை நல்லது என நினைக்கிறேன்.

மக்களால் ஓட்டுப் போட முடிந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என நினைக்கிரார் புஷ். இந்தியர்களான நமக்குத்தெரியும் ஓட்டுப் போடுவதற்கும் உண்மையில் ஜனநாயகத்திற்கும் என்ன தொடர்புள்ளதென்பது.

'சுதந்திரம்' என்கிற பேரில் இவர்கள் துவங்கிய போர் இவர்களுக்கே எமனாக முடிந்திருக்கிறது. சர்வ வல்லமையும், இன்றைய தொழில் நுட்பங்களும் கொண்டியங்கும் ஒரு ராணுவத்தை நேற்று துப்பாக்கி ஏந்திப் பழகிய சில தீவிரவாதிகள் அடக்கிப்போடுகிறார்கள் என்பது நம்பத்தகுந்ததாயில்லை. 'அமெரிக்காவின் வலிமை இவ்வளவுதானா?' எனும் கேலிதான் எழுகிறது. போரை நீட்டுவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன் பிரசன்னத்தை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் எடுத்திருக்கும் ராணுவ முயற்சி.

மாபெரும் பொருளிழப்பையும் உயிரிழப்பையும் ஏர்படுத்தியிருக்கிற ஈராக் போர் தவறான தகவல்களின் பேரில் துவங்கப்பட்டது என்பதை அமெரிக்க அரசே மிகச் சாதாரணமாக ஒத்துக்கொள்கிறதான் மாபெரும் விந்தை. ஒர் சில ஆண்டுகளுக்கு ஒருமுரை போர் செய்தால்தான் அமெரிக்க பொருளாதாரம் நிலைப்படும் எனும் நம்பிக்கையும் பலரிடமுள்ளது.

இந்தப் போரை எதிர்க்கும் அமெரிக்கர்களே அதிகம். இந்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மக்களிடம் 30% போலவே அங்கீகாரம் உள்ளதாக பல தகவல்கள் சொல்கின்றன. ஆட்சிக்கு வரும் முன் அண்டை நாடான கனடா வரையிலும்கூடப் போயிராத ஒருவர்தான் தன்னை பன்னாட்டுக் காவலராக உயர்த்திக்காட்டுகிற புஷ்.

ஜனநாயகம் என்ற பேரில் இந்தியாவைப்பிரித்த வடு என்றும் ஆறாத புண்ணாய் மாறியுள்ளது, இதே நிலைதான் இன்று ஈராக்கிலும் காணப்படுகிறது. கையில் நீல மை போடும் ஒரு சம்பவத்திற்காக ஈரக் மக்கள் தங்கள் சொந்தச் சகோதரர்களோடு சண்டை போட தூண்டப்பட்டுள்ளனர். யுத்தகளத்தில் தொலைந்துபோன எறும்புகள்போல இவர்கள் நசுக்கப்படுகிரார்களென்பதே உண்மை.

(டைமில் வந்திருந்த ஒரு தலையங்கத்தின் பாதிப்பில் எழுதியுள்ளேன்)

நான் இந்தப்பதிவை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டுப் போய் பார்த்தால் Boston Bala ஒரு பதிவை போட்டுவைத்துள்ளார்(சுட்டி கீழே). விரைவில் இருவரும் ஊர் வந்து சேரும் நிலை வந்தாலும் வரலாம் :)
http://etamil.blogspot.com/2006/02/blog-post_07.html

6 comments:

Ram.K said...

பெரிய மனுசங்க நினைக்கறதெல்லாம் 'ஒண்ணா' இருக்குமாமே !!!

நான் பதிவைச் சொல்கிறேன்.

:-))

Unknown said...

//ஜனநாயகம் என்ற பேரில் இந்தியாவைப்பிரித்த வடு என்றும் ஆறாத புண்ணாய் மாறியுள்ளது, இதே நிலைதான் இன்று ஈராக்கிலும் காணப்படுகிறது. கையில் நீல மை போடும் ஒரு சம்பவத்திற்காக ஈரக் மக்கள் தங்கள் சொந்தச் சகோதரர்களோடு சண்டை போட தூண்டப்பட்டுள்ளனர். யுத்தகளத்தில் தொலைந்துபோன எறும்புகள்போல இவர்கள் நசுக்கப்படுகிரார்களென்பதே உண்மை.//

நானும் வாரேன் ஊருக்கு :-)). அருமையான பதிவு.

Amar said...

//ஜப்பானென்ற ஒரு குட்டி நாட்டை எதிர்க்கத் துணிவில்லாமல் அணுஆயுதம் கொண்டு தரைமட்டமாக்கினர்.//

Pearl Harbour.
Japan was not a "small" nation by any means.

They were up until Burma conquering every nation in their path from the East including a few regions in China.

The horiffic memories of Japanese invasion is still kept alive in China.The rapes and murders of the Japanes were unprecedented.

Ever wondered why the Nipponese and Chinese relations are so fragile and why China takes offense if the Japanese PM visits a war memorial ?

Sorry, Cyril, this post of your is devoid of facts such as the ones above.

//ஜனநாயகம் என்ற பேரில் இந்தியாவைப்பிரித்த//

How does democracy divide a nation?

And, if I may ask, what would be your alternative to Democracy?

Communist regimes that kill your children in the mothers womb just because you already have a kid?

Or the Saudi type Wahhabi regime ?

WHAT IS YOUR ALTERNATIVE?

சிறில் அலெக்ஸ் said...

Samudra...
I was using some facts that I could use to prove my point sure you have yours. There are times when America has really shown the way, but their mistakes are greater and they have always been willing to sacrifice any other nation's interest for their own.

Democracy may not devide a nation, but India did go through a nasty partition, and Iraque is on its way to another.

it is a fact that America went on war based on false intelligence (not even improper intelligence)

it is a fact that America is the only nation to use Nuclear bomb ever.

it is a fact that iraqi pepole hate the war. it has done them more damage than good..

That's all I am trying to imply.

I agree that I have used facts to reflect only one side of a story, so does Bush and his people.

Thanks for the feedback Samudra. I will try to be little less emotional next time.

//What is my alternative?// I am not against democracy at all, but I believe
that "Democracy is not a gift but an achievement".

சிறில் அலெக்ஸ் said...

பச்சோந்தி போகிறபோக்கில் என்னையும் பெரியமனுசனாக்கீட்டீங்க..
:-(

Santhosh said...

இப்ப சமீப காலமா தீவிரவாதிகளுக்கு எதிரான போர்(war on terrosism) என்பது பிசுபிசுத்து போய் விட்டதால் புஷ் தான் சண்டை போடுவதற்கு புதிதாக ஒரு காரணம் தேடி உள்ளார், ஒரு நாள் இவர்கள் இவை அனைத்திற்கும் திருப்பி பதில் செல்ல வேண்டி வரும் ஆனால் அதற்கான விலை மிகவும் அதிகமாக இருக்கும்.

சிறில் அலெக்ஸ்