.

Friday, February 03, 2006

வெட்டுடா...தூக்குடா



ஏதோ நம்மூரு ஜாதிச்சண்டை பற்றிய பதிவுன்னு நினச்சீங்கன்னா தப்பு. கோலிவுட்ல கதைக்குப்பஞ்சமாகி ஹாலிவுட்லேர்ந்து சுட்ட சிலப் படங்களப் பற்றிய பதிவு. கதை எழுதிப் பேர்வாங்கும் இயக்குநர்களுமுண்டு, காப்பியடித்தே பேர்வாங்கும் இயக்குநர்களுமுண்டு...இதில் யார் யார் என்ன கட்சி என நீங்களே முடிவு செய்யுங்கள்.

காப்பி அடிப்பதில் பலவிதம். அப்படியே, பிறமொழிப் படத்தை தமிழிலில் பெயர்களை மட்டும் மாற்றிவிட்டுச் சொல்வது, சில காட்சிகளை மட்டும் உபயோகிப்பது , படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றும் புதிதாகத் திரைக்கதை அமைப்பது, கதையின் வகையையே மாற்றி காமெடிப்படத்தை சீரியஸாகவும் ஆக்சன் படத்தை காமெடியாகவும் கொடுப்பது, இன்னும் எத்தனையோ வகைகள்.

கமல்ஹாசன் திரைப்படங்கள் பல ஆங்கிலப் படத்தின் வகையை(Genre) மாற்றி எடுக்கப்பட்டுள்ளன.

Planes Trains & Automibiles - ஒரு காமெடிப்படம். நியு யார்க்கிலிருந்து சிக்காகோ செல்லக் கிளம்பும் இரு பயணிகள். ஒருவர் படித்தவர், அலுவலகத்தில் வேலைபார்ப்பவர், நடுத்தட்டு மதிப்பீடுகளில் ஊறிப்போனவர். இன்னொருவர் சரியான வாயாடி, எதையுமே விளையாட்டாகப் பார்ப்பவர், எல்லோரும் அமைதியாக இருக்கும் ப்ளேனில்கூட சத்தம்போட்டுப் பேசக்கூடியவர். இந்த இரு எதிரெதிர் பாத்திரங்களும் எப்படி பல கஷ்டங்களுக்கு நடுவே பிரிந்தும், சேர்ந்தும் ஊர்போய்ச் சேர்கிறார்கள் என்பதே இதன் கதை. 'அன்பே சிவத்தின்' கரு இதுதான். ஒரு காமெடி படத்தை சீரியஸாகப் பண்ணும்போது கிட்டத்தட்ட புதுக் கதையாகவே மாறிவிடுகிறது.

Mrs. Doubtfire - இது பலருக்கும் தெரிந்திருக்கும். 'அவ்வை ஷண்முகியின்' கதை இதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்தில் பிரிந்துபோன தன் குடும்பத்தை ஒன்றுசேர்க்க கணவனே பணிப்பெண்ணாக மனைவி வீட்டுக்கு வருவது. ச்ஹாலிவுட்டில் கொஞம் சீரியஸ் படம். அவ்வை ஷண்முகிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதபடி இருக்கும். அப்படி கதைக்கு காமெடி கலந்த புது ரத்தம் ஊட்டியிருப்பார்கள் தமிழில். இதிலேயும் படத்தின் வகை மாற்றப்பட்டிருக்கிறது. பல காட்சிகளை Mrs. Doubtfireலிருந்து அப்படியே தமிழாக்கம் செய்துள்ளனர்.

An innocent Man - இந்தப் படத்தில் ஒரு அப்பாவியை குற்றவாளியாக ஒப்பனை செய்து ஜெயிலில் போட்டுவிடுகிறார்கள், இவர் ஜெயிலில் கஷ்டப்படுவதும் பின் வெளிவந்து பழிவாங்குவதும்தான் கதை. 'மகாநதியில்' சில காட்சிகள் இந்தப் படக்காட்சிகளோடு ஒத்துப்போகும். இரண்டு படங்களின் கரு ஒத்துப்போகும். ஆங்கிலத்தில் க்ரைம்/ஆக்சன் படம் தமிழில் சீரியஸ் டிராமா.

What about Bob - பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டர, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கவந்த்த பைத்தியக்காரர், நிஜ பைத்தியமாகவே ஆக்கிவிடும் கதை. புரியலியா? நம்ம 'தெனாலி' கதையேதான். இரண்டு படங்களிலும் ஒத்த கட்ட்சிகளும் நிறைய.

Amoros Peros - மூன்று மனிதர்களின் வாழ்க்கை ஒரு விபத்திலிருந்து மாறுகிறது. மெக்சிக்கோவில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் படம். மணிரத்தினத்தின் ஆய்த எழுத்துக்கு மூலம். காதல் ஒரு பொட்ட நாய் (Life is a bitch) என்பது Amoros Perosக்கு அர்த்தம். இந்த விபத்தில் மாட்டிக்கொண்ட மூவரின் நாய்களுக்கும் கதையில் முக்கியத்துவமிருக்கிறது.

God Father - எனக்கு மிகப்பிடித்த ஆங்கிலப்படம்(ங்கள் I & II). 'நாயகனுக்கு' இன்ஸ்பிரேஷன்.

Memento - 'கஜினி'. அதே கதை... அதே காட்சியமைப்பு.
(ரா. சு வின் பதிவைப் பார்க்கவும். சுட்டியை கண்டுபிடிக்கமுடியவில்லை).

Sliding Doors - '12B' பார்த்து இப்படி ஒரு திரைக்கதையா என வியந்தவர்களில் நானும் ஒருவன். பின்பு Sliding Doorsஐ உல்டாகூடப் பண்ணாமல் தந்திருப்பது வேதனையளித்தது.

Serendipity - 'உனக்கு 18 எனக்கு 20' மற்றும் 'ஜே. ஜே' படங்களின் கதை இதிலிருந்து எடுக்கப்பட்டுல்லது. ஜே. ஜேயில் பல காட்சிகளும் ஒத்துப்போகின்றன 18/20 நான் பார்த்தில்லை.


Bourne Identity - சுய நினைவை இழந்த ஒரு ஒற்றனின் கதை. அவர் யார் என்பதை எப்படி அறிந்து கொள்கிறார் என்பது படம். தமிழில் 'வெற்றி விழா'. 1988ல் டி.வி படமாகவும் அதற்குமுன் நாவலாகவும் வந்தது. 2002வில் பெரிய திரக்குப் படமாக்கப்பட்டது.

Dial M for Murder - 'சாவி' என்கிற திர்ல்லர் ஞாபகமிருக்கிறதா? சத்யராஜ் முதன்முதலில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்த படம். Dial M for Murder ஒரு ஹிச்காக்(Hitchcock) படம்.

சங்கரின் பாய்சில் வரும் பல காட்சிகள் அப்படியே ஒரு ஆங்கிலப்படத்தில் பார்த்திருக்கிறேன். பெயர் ஞாபகமில்லை.

பழைய படங்கள் பலவும் பழைய கறுப்பு வெள்ளை ஆங்கிலப் படங்களிலிருந்து சுடப்பட்டுள்ளன. Prince and Pauper நாடோடி மன்னனானது தெரிந்திருக்கும். The Parent Trap (1961) தமிழில் 'குழந்தையும் தெய்வமும்'.

இப்படி வெட்டி, தூக்கி படம் பண்ணுவது தப்பென்று சொல்ல இயலவில்லை. சில நேரங்களில் ஒரு பழைய கதை புதிய பரிமாணத்தில் சொல்லப்படுவது சுவாரஸ்யம்தான். ஆனால் இவர்கள் பலர் ஏதோ மூளைய பிளிஞ்சு கத செய்த மாதிரி சொல்லிக்கிறாங்க.

ஏன் காப்பி அடிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ? சட்ட சிக்கல்களால்கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.

உங்களுக்குத்தெரிந்த சில காப்பி படங்களை சொன்னால் தொகுக்கலாம். பின்னூட்டமிடலாம், இல்லை cvalex@யாஹூ.காமிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

17 comments:

சின்னவன் said...

1. 100 vathu Naal = Eyes of Laura Mars

2. My dear Maarthandan = coming to America

3. Criminal = Fugitive


4. Feb 14, & kunal/sonali film = You got mail

5. Parthen Rasithen = My best friends wedding

6. Roja = Frantic

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல் லிஸ்ட்.. நன்றி சின்னவன்.
குணால் சொனாலி படம் 'காதலர் தினம்'.

Anonymous said...

Nine to Five - Magalir mattum
Sam

நிலா said...

big = new

Anonymous said...

It is not just kollywood getting inspired by Hollywood. Satyajit Ray
has alleged that E.T was based on his script. I have read this in his biography. You can also read about this in Wikepedia entry on E.T.
Sam

Unknown said...

நம்மில் நிறைய பேருக்கு தெரியாத ஒரு படம், ரஜினியின் 'அருணாசலம்' = Trach**** Millions (forgot the name). அப்பட்டமான காப்பி. தேர்தலில் நிற்பதிலிருந்து, கடைசி காட்சியில் சம்பளம் கொடுப்பது வரை. A bit old movie...

மஞ்சூர் ராசா said...

இன்னும் நிறைய பாக்கி இருக்கும் போல தெரியுதே.
சினிமான்ன ஒடனே பிடிச்சிட்டிங்க

இசையைக் காப்பி அடிப்பதையும் அப்படியே எடுத்து விட்றது....

சின்னவன் said...

அது Brewster's Million

சிறில் அலெக்ஸ் said...

இன்னும் சில பின்னூட்டங்கள் மட்டுறத்தலின் போது தொலைந்த்துவிட்டன. மின்னஞ்சலிலிருந்து எடுக்க முயற்சி செய்கிறேன்.

மஞ்சூர்.. இசையில் காப்பியடித்ததை வாழ்நாள் முழுதுமாய் தொகுத்துக்கொண்டே இருக்கலாம்.

கொஞ்சம் விஷயங்களை சேகரித்துவிட்டு வருகிறேன்.

Anonymous said...

//இசையைக் காப்பி அடிப்பதையும் அப்படியே எடுத்து விட்றது
//

Check this site

சிறில் அலெக்ஸ் said...

dubaivaasi has left a new comment on your post "வெட்டுடா...தூக்குடா":

நம்மில் நிறைய பேருக்கு தெரியாத ஒரு படம், ரஜினியின் 'அருணாசலம்' = Trach**** Millions (forgot the name). அப்பட்டமான காப்பி. தேர்தலில் நிற்பதிலிருந்து, கடைசி காட்சியில் சம்பளம் கொடுப்பது வரை. A bit old movie...

சிறில் அலெக்ஸ் said...

நிலா has left a new comment on your post "வெட்டுடா...தூக்குடா":

big = new

சிறில் அலெக்ஸ் said...

Anonymous has left a new comment on your post "வெட்டுடா...தூக்குடா":

Nine to Five - Magalir mattum
Sam

சிறில் அலெக்ஸ் said...

Boston Bala has left a new comment on your post "வெட்டுடா...தூக்குடா":

அமோரஸ் பெரஸ் அல்லது ஆயுத எழுத்தா என்று எஸ் ராமகிருஷ்ணன் 'அட்சரம்' வலைப்பதிவில் அலசினார். கொஞ்ச நாள் கழித்து சன்னாசியும் தன் பக்க எண்ணங்களை வைத்தார்.

அமொரஸ் பெரஸிலும் ஆய்த எழுத்திலும், ஒரு விபத்தும் அதை சுற்றிய மூன்று பேரின் கதைகளையும் சொல்லியிருந்தார்கள். ஸ்பானிஷ் படத்தில் மூன்று சிறுகதைகளை வெவ்வேறு விதமாக ஒளிப்பதிந்து காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆய்த எழுத்தில் ஒரே கதையில் வரும் மூன்று நபர்களின் வாழ்க்கை முன்னும் பின்னுமாகக் காட்டப்படுகிறது என்பதைத் தவிர வேறு எங்கே ஒற்றுமை :-)

இன்னும் என்னுடைய புலம்பல், பதிவு, ரம்பம் வேண்ட்டுமானால், முந்தையப் பதிவைப் பாருங்களேன்.

சிறில் அலெக்ஸ் said...

சில விடுபட்ட பின்னூட்டங்களை மின்னஞ்சலிலிருந்த்து வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

பாலா.. நானும் ஆய்த எழுத்து பற்றி நீங்கள் சொன்னதைத்தன் சொல்லியிருக்கிறேன்.

இரு படங்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது. அம்ரோஸ் பெரோஸிலிருந்து குறந்த பட்ச இன்ஸ்பிரேஷனாவது கையாளப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

நீங்கள் சொல்வது சரியே.. இது அப்பட்டமான காப்பி அல்ல.

ஆய்த எழுத்து எனக்கு பிடித்த படம்தான். மணி எனக்கு பிடித்த டைரெச்டொர்தான். :)

Boston Bala's links

எஸ் ராமகிருஷ்ணன் 'அட்சரம்'
http://snapjudge.blogspot.com/2005/05/s-ramakrishnan-atcharam.html

http://dystocia.blogspot.com/2004/10/blog-post_07.html

http://etamil.blogspot.com/2004/06/blog-post_22.html

சிறில் அலெக்ஸ் said...

Anonymous has left a new comment on your post "வெட்டுடா...தூக்குடா":

It is not just kollywood getting inspired by Hollywood. Satyajit Ray
has alleged that E.T was based on his script. I have read this in his biography. You can also read about this in Wikepedia entry on E.T.
Sam

சிறில் அலெக்ஸ்