.

Tuesday, January 17, 2006

ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

இளையராஜாவின் சமீபத்திய இன்னிசை நிகழ்ச்சி ஒரு ஆத்மார்த்த அனுபவமாக இருந்தது. 'ஜனனி ஜனனி' என ராஜா பாட ஆரம்பித்ததும் எழுந்த கரகோஷங்களைவிட கண்ணீர்த்துளிகள் அதிகம். சில தலைமுறைகளை தன் ஆர்மோனிய விரல்களில் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜா. இவர் வேண்டுகோளுக்கிணங்கி கூட்டம் குறைவாகவே கைதட்டியது என்றால் பாத்துக்கொளுங்கள். இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் ஏதோ ஒரு மலையாளப்பாடலின் ஹம்மிங் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியிருந்தது எரிச்சலாகவே இருந்தது.

பாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் அவர் கூறியதற்கும் சம்மந்தமில்லயோ எனத்தோன்றியது.

கமல் ஓரிரு வரிகளாவது பாடியிருக்கலாம்.

ஷ்ரேயா கோஷல், சாதனா சர்க்கம் குரல்கள் அபாரம். சாதனா சர்கம் போனபிறவியில் தமிழச்சியாயிருந்திருக்கணும், இந்த பிறவியில் தமிழ்பாடும் பல தமிழச்சிகளுக்கு பாடம். அருமையான தமிழ் உச்சரிப்பு.

ஷ்ரேயா , "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே" எனப் பாடினார், நம்ம ரசிகர்கள் வழக்கம்போல கைதட்டி சரியாப் பாடச் சொன்னார்கள்.

எஸ்.பி.பி வழக்கம்போல மெருகேற்றிக்கொண்டிருந்தார். இந்த சின்னக்குயில் சித்ரா ஏந்தான் இப்படி அனியாயத்துக்கு பெர்பெக்டா பாடுறாங்கண்ணே தெரியல.. மேடைப்பாடகர்களின் மீதான நம் எதிர்பார்ப்பு இவர்களால் அதிகமாகிறது.

இன்றய பாடகர்களில் கார்திக் அபாரமாகப் பாடினார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' கேட்டது சுகம்.

இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார். வெறும் சோறு சாபிட்றவங்களுக்கு சப்பாத்தி எப்படி வெறுக்குதோ அதுபோலத்தான் ராஜாவைக் கேட்டவர்களுக்கும் மற்றவை கசக்குது.

தன் காம்பட்டீஷனை அவர் குறைத்து பேசுவதும், "எங்க காலத்துல,," எனத்துவங்கி அவர் பேசும் கருத்துகளும் புலம்பலாகத்தான் படுகின்றன.
ரஹ்மான் காலத்தில் ராஜா இசை மீண்டும் எழுச்சியடைந்திருக்கிறதப் பார்த்தால் இவருக்கு 70, 80களில் போட்டி இருந்திருந்தா இன்னும் கலக்கியிருப்பார்னு தோணுது.

கச்சேரியில் பார்த்திபனின் நச்சரிப்பு தாங்கமுடியல. தமிழ் மக்கள் சார்பில் ஒத்துக்கிறோம் நீங்க கிரியேட்டிவான ஆள்தான் அதுக்காக இப்படியா? கச்சேரியில அடக்கி வாசிப்பதும் ஒரு அழகுதான் பார்த்திபன். இவர் பேச்சை குறைத்திருந்தால் இன்னும் சில பாடல்கள் கேட்டிருக்கலாம்போல.
ஜெயாவில், தொகுப்பில் தொலைந்து போனவையோ என்னவோ, இளையராஜாவின் பல பழைய சூப்பர்ஹிட்கள் மிஸ்ஸிங்.

எஸ். பி. முத்துராமன் ராஜா எப்படி தன்முயற்சிக்கு உதாரணம் எனக்கூறினார். மேடையிலிருந்த இசைக்கலைஞர்களுக்காக கைதட்டச் சொன்னார். எவ்வளவு பணிவாக இருக்கிறர் இவர். எத்தனை சூப்பர்ஹிட் படங்கள் தந்திருக்கிறர். கமல், ரஜினியின் அடையாளங்களாக விளங்கும் சில படங்களைத் தந்திருக்கிறார். இவரும் எளிய துவக்கமே கொண்டிருந்தவர் என்பதை மறக்கமுடியுமா?

பவதாரிணி ஏனோ மேடையில் பாடும்போது நல்லா பாடுறதில்லை. சித்ரா போன்றவர்கள் ஏன் இத்தனை வருஷம் பீல்டுல இருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது.

மொத்ததில் அருமயான ஒரு நிகழ்ச்சி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்.

பழைய ஞாபகங்கள் சில வந்து போவது நிச்சயம்.

4 comments:

ஜோ/Joe said...

சிறில்,
நானும் பார்த்தேன்.உங்க கவரேஜ் நல்லா இருக்கு .வாலிய விட்டுடீங்களே!

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,

வாலிய ... வலியத்தான் விட்டேன். எழுதுறமாதிரி எதுவுமே பேசல்ல அவரு.

ஜோ/Joe said...

சிறில்,
கமல் பாடாதது எனக்கும் ஏமாற்றமே.(கமல் ரசிகனாச்சே..ஹி.ஹி)

அப்புறம்,உங்க மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியிருந்தேன்.பாத்தீங்களா?

கீதா said...

//இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார்//

இது 100 சதவிகிதம் உண்மை

//வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்//

எதுவுமே கிடைக்கலிங்க..:(

சிறில் அலெக்ஸ்