.

Monday, January 23, 2006

பைபிள் கதைகள்

அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்குப் பிறகு 'பைபிள் கதைகள்' என்ற வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

இராஜாஜியின் 'மகாபாரதம்' படித்து மகிழ்ந்திருக்கிறேன், அதுபோல வெறும் கதைகள் மட்டுமே இந்தப் பதிவில் இருக்கும்.

க்ரியேஷன் துவங்கி பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான கதை/வரலாறில் சொல்லச் சுவைமிக்க சிலவற்றை தொகுக்கலாம் என்றிருக்கிறேன்.

இதைப் பற்றிய உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யவும்.

ஆதரவிருந்தால் விரைவில் 'பைபிள் கதைகள்' படிக்கலாம்.

6 comments:

ஜோ/Joe said...

சிறில்,
நல்ல முயற்சி! தொடர்ந்து கலக்குங்க!

பரஞ்சோதி said...

பாராட்டுகள் நண்பரே!

பைபிள் கதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன், கதையின் முடிவில் நீதியை சொல்லுங்க. முடிந்தால் வசனத்தோடு சொல்லுங்க.

என்னுடைய சிறுவர் பூங்காவில் லிங்க் கொடுத்து விடுகிறேன். அனைவருக்கும் பயன்படட்டும்.

அன்புடன்
பரஞ்சோதி

பால் ரவிசங்கர் said...

சிறில்,
நல்ல முயற்சி! தொடர்ந்து கலக்குங்க!

ஞானவெட்டியான் said...

கதையெனில் கருத்தும் இருக்குமே! அதையும் சிறிது விளக்குங்கள்.
காத்துள்ளேன்.

பிகு:ஆமாம். தங்கள் வலைப்பூ பற்றி தினமலரில் வந்ததாமே? வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

G.Ragavan said...

சொல்லுங்க சொல்லுங்க. கேக்குறோம். நீங்க போட்டிருக்குற படம் நோவாவின் பெட்டகம் கதைக்குரியதுதானே? இந்தக் கதை கொஞ்சம் தெரிந்ததே.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நண்பர்களே.. இது போதும். முடிந்தவரை கலக்கிரலாம்.

ஞனவெட்டியான் .. பாராட்டுக்கு நன்றி
ராகவன் .. அது நோவாவின் பெட்டகம்தான்

பரஞ்சோதி .. கதைமட்டும்தான்...நீதி அவரவர்தான் எழுதிக்கொள்ளவேண்டும்.

நம்ம ஊரில் கேட்கும் ஆயிரம் கதைகளில் இல்லாத நீதியா என்ன. உங்களுக்கு என்ன தோணுதோ அதுதாங்க நீதி.

பால் .. வாழ்துக்கு நன்றி
ஜோ .. அநியாயத்துக்கு எனக்கு சப்போர்ட் பண்ணுறீங்க.. நன்றி.

சிறில் அலெக்ஸ்