.

Thursday, January 26, 2006

குஷ்புவும் போலி டோண்டுவும்

பின்னூட்டங்களை முறைப்படுத்துவதுபற்றி தமிழ்மணத்தின் மின்மடல் காலையில் கிடைத்தது.
சில வாரங்களுக்குமுன் அடிபட்டு, மிதிபட்டு, நைந்துபோன 'கருத்து சுதந்திரம்' என்ற தலைப்புதான் ஞாபகம் வந்தது.

போலி டோண்டுவுக்கு கருத்து சுதந்திரமிருக்கா இல்லயா?

புனை பெயர்களுக்குள் மறைந்துகொண்டு என்னவேண்டுமானாலும் சொல்பவர்களுக்குள்ள சுதந்திரம் ஏன் போலி டோண்டுவிற்கில்லை?

கெட்டவார்த்தைகளைத் தவிர்த்தால் போலி டோண்டுவின் கற்பனா சக்தி சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது. MAXIM குஷ்புவை பற்றி எழுதியிருப்பதை நம்மில் பலர் அங்கீகரிக்காவிட்டாலும் எதிர்க்கவில்லை என்பதே நிஜம். அத்தகைய நகைச்சுவையை, அது நம்மை பற்றியே இருந்தாலும், ரசிப்பதே ஆரோக்கியம் என்பது என் கருத்து.


போலிடோண்டு நிஜ டோண்டு அல்ல என்கிறபட்சத்தில் அவர் எழுதுவதை ஏன் கருத்தில் கொள்ளவேண்டும்? பெனாத்தல் என்ற பேரில் வரும் கிண்டல்களையும், இட்லிவடையின் டாப் டென்னையும் ரசிக்கும் நாம், ஏன் போலி டோண்டுவை ரசிக்க முடியவில்லை? இவைகளுக்கும் போலிடோண்டுவுக்கும் கெட்டவார்த்தை மட்டுமே வித்தியாசமாகப் படுகிறது.

போலி டோண்டுவுக்கு ஒரு வேண்டுகோள். கெட்ட வார்த்தையை தவிர்க்கவும். உங்கள் கற்பனை பலமானது, ரசிக்கத்தக்கது. அதை நேர்வழியே பயன்படுத்துங்கள். டோண்டு கெட்டவார்த்தை எழுதாமல் எதிர்பார்க்கும் பின்விளைவுகளைத்தான் நீங்களும் எதிர்பார்கிறீர்கள் என்றால், ஒரு போலி வலைப்பதிவில், இட்லிவடை, மற்றும் பெனாத்தல்போலோ எழுதிவிட்டுப் போங்கள். சும்மா பின்னூட்டங்களிடுவது கோழைத்தனம். இதனால் நீங்கள் யாரைத் தாக்க நினக்கிறீர்களோ அவர்கள் பயனடைகிறார்களே தவிர வேறொன்றுமில்லை.

பின்குறிப்பு: யோவ் போலி டோண்டு, இதப்பாத்துட்டு என்னப்பத்தி எதாவது எழுதுன கீச்சுடுவேன் மவன :)

13 comments:

Kasi Arumugam said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...

சிறில்,
comment moderation என்பதற்கும் யார் பின்னூட்டம் இட முடியும் என்பதற்கும் சம்பந்தம் இல்லையென நிலைக்கிறேன் .யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம் .ஆனால் அவை பதிவில் தெரிவதற்கு முன்னர் நீங்கள்(வலைப்பதிவு சொந்தக்காரர்) அவற்றை படித்து அனுமதிக்கலாம் .அல்லது கட்டுப்படுத்தலாம் .இது தான் என் சிற்றறிவுக்கு எட்டியது..

மற்றபடி போலி டோண்டு போடும் ஆட்டத்துக்கு நிஜ டோண்டுவின் தேவையற்ற சுய விளம்பரங்களும் ,பீத்தலும் ,அனுதாபன் வேண்டி அவர் எப்போதும் போலி டோண்டு புராணம் பாடுவதும் ஒரு காரணம் .

சிறில் அலெக்ஸ் said...

மன்னிக்கவும். 'Comment moderation' வேறு 'Blogger Only' வேறு எனத் தெரியாததால் அப்படி எழுதிவிட்டேன்.

சுட்டியதற்கு நன்றி. பதிவையும் மாற்றிவிட்டேன்.

தவறுக்கு மன்னிப்பு கோருவது இழிவானதா? அதைப் போல ஒரு உயர்ந்த குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

உங்கள் நற்பணி தொடரட்டும்.

Kasi Arumugam said...

தன் இடுகையிலிருந்தே தன் வார்த்தைகளை எடுத்துவிட்ட சிறில் அவர்கள் செய்கைக்குப்பின் என் மறுமொழியும் அர்த்தமிழந்துவிடுகிறது. எனவே அது நீக்கப்படுகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்,

உங்கள் கருத்துச் சுதந்திரத்தை நான் மதிப்பதற்கும் உங்களுக்குகருத்துச்சுதந்திரம் உண்டா என நான் முடிவெடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

பெனாத்தல் மற்ற வலைப்பதிவர்களைக் கிண்டல் அடித்தது உண்மைதான். யாரையும் புண்படுத்தி இருக்காது என்றே இன்னும் நம்புகிறேன். ஆனால் கிண்டல் அடிக்கப்பட்ட விஷயம் என்ன? அவர்களின் வலைப்பதிவுகள் - சொந்த வாழ்க்கையோ அல்லது முரண்பாடுகளோ அல்ல என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா அல்லது கிண்டல் எல்லாம் கிண்டல் என்று ஒரே மூட்டைக்குள் அடைத்துவிட்டீர்களா?

போலி டோண்டுவின் கற்பனையையும் நகைச்சுவையையும் ரசித்திருக்கிறீர்கள். அது உங்கள் ரசனை - அவருடைய கற்பனைகள் அனைத்தையும் (இன்று காலை என் வலைப்பதிவில் வந்தது உள்பட) படித்திருக்கிறிர்களா என்ற சந்தேகம் எழுந்தாலும்.

உங்கள் நடை நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்.

சிறில் அலெக்ஸ் said...

சுரேஷ். உங்கள் கருத்துக்கு நன்றி. நான் பெனாத்தல்களையும் ரசித்தேன். ரெம்ப நல்லா காமெடி பண்ணியிருக்கீங்க. என் பதிவைப்பற்றிய காமெடி கருத்தை அப்பாவி ஆறுமுகம் வெளியிட்டிருந்தார் அதிலும் எனக்கு வெறுப்பில்லை. "சைவ மீன் கறி" என போலி டோண்டு கற்பனை செய்தது விழுந்து விழுந்து சிரித்தேன். அதுவே டோண்டுவிற்கு எதிரானதாயில்லாமலிருந்த்தால் நாமெல்லாம் சிரித்திருக்கலாம். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் உங்கள் நன் நக்கலை தொடருங்கள். :)

எலோரும் இண்டர்நெட்டு மக்கள் என்பதே என் கருத்து.

வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் சைவ மீன் கறியை ரசித்திருந்தால் அதை மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் நூற்றிலொன்றாக வந்த அந்தப் பின்னூட்டத்தை மட்டும் வைத்து, போலி டோண்டுவின் கற்பனையை ரசிப்பதாகச் சொல்வது எப்படி? உண்மையில் நீங்கள் ரசிப்பவராயிருந்தால் அதே கீழ்த்தரமான வக்கிர குணம் உங்களுக்குமிருக்கு என்றல்லவா அர்த்தப்படும்? உண்மையில் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை வாசித்திருக்கிறீர்களா என்பதே சந்தேகம்தான்.

Anonymous said...

Hi Cyril and Joe:
I am being a coward so as not to be the next target of Poli Dondu. I dont want my name dragged into this issue but I think you guys have not understood the seriousness.

Let me try to explain:

Is it appropriate to "order" people not to comment on Dondu's blog? Do you ever know that POli Dondu sent threatening comments to people who did so (even on posts which didnt contain his trade mark opinion)?
"சுயவிளம்பரங்களும் ,பீத்தலும் ,அனுதாபன் வேண்டி அவர் எப்போதும் போலி டோண்டு புராணம் பாடுவதும்" It is Dondu's blog. He can air what suits him. If you dont like it you can either try to prove his case wrong or just ignore him. But sending comments with vulgarities and threats tells that the person is ill-bred.

Cyril, if need be I can send you his comments about Kasi and his family. If you find in an enjoyable reading, then I think you are one of those perverts and there is no point talking to you.
Cheers.

சிறில் அலெக்ஸ் said...

I am not going to respond to any of the comments on this any more. So please do not expect any. May be if this happenned to me instead of Dondu, I might have been a bit more serious..... :)

In any case my post just amuses at the, commonly percieved as a cruel, prank (may not be a Prank).

In any case don't worry ..be happy..

ஜோ/Joe said...

//"சுயவிளம்பரங்களும் ,பீத்தலும் ,அனுதாபன் வேண்டி அவர் எப்போதும் போலி டோண்டு புராணம் பாடுவதும்" It is Dondu's blog. He can air what suits him. If you dont like it you can either try to prove his case wrong or just ignore him. But sending comments with vulgarities and threats tells that the person is ill-bred. //

Don't think you are so smart..whoever the poli dodu ,I am dead against his/her filty comments ..But my point is Mr.dondu have been giving too much importance to this poli dondu and I felt ,many times he voultirely induce poli dondu to get more sympathy from others .Mr.Dondu not only talking about this in his blog ,but many times he talk about this other blogs.

I hate this poli dondu ,same time I am irritated by Dondu's self proclaiming .I have told him indirectly many times ,not to bother too much and not to give so much focus on poli dondu ..But it seems he never understood.

டிபிஆர்.ஜோசப் said...

சிறில்..

நீங்க இனி வரும் இதுபோன்ற பின்னூட்டங்களுக்கு பதில் போடப் போறதில்லைன்னாலும் நான் சொல்ல வந்ததை சொல்கிறேன்..

நான் ஒவ்வொரு முறையும் டோண்டுவின் பதிவுகளில் பின்னூட்டம் இடும் பொழுதும் என்னுடைய பதிவுகளில் வரும் அருவறுப்பான பின்னூட்டங்களை முதலில் படிப்பது என் இளைய மகளாக அல்லது என் மனைவியாக இருக்கும். இருவருமே என் பதிவுகளை தினமும் வீட்டிலிருந்து படிப்பவர்கள். அவர்களுக்காக நான் தினமும் அலுவலகத்திலிருக்கும்போதும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, சொல்லுங்கள்?

ஜோ கூறியிருப்பதும் போலி டோண்டு பிரபலமடைந்திருப்பதற்கு ஒரு காரணம்தான். மறுக்கவில்லை..

But that does not mean that an blank permission could be given to this போலி!

ஆனா ஒன்னு பின்னூட்டங்கள் வருவது குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.. என்னுடைய பின்னூட்டம் வருமா, வராதா என்றே எனக்கு தெரியாத நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கே பின்னூட்டம் இடுவதிலிருக்கும் charm போய்விடும்..

அதன் விளைவாக, வெளியிடப்படும் இடுகைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது..

Anonymous said...

Cyril: Thanks for letting me comment on your blog. I just wanted to say that it is just not a prank. I only wish, hope and pray that you dont get these kind of comments from the Poli Dondu.

Joe:
Gimme a break man. I never claimed that I am smart. Unfortunately, that doesnt make you smart either.
Looks like you are a confused lot. I infer from your comment that you hate the Poli Dondu and in your personal opinion Dondu himself is the reason from the upsurge in such vulgar comments from Poli Dondu.

My simple question was why should Poli Dondu target innocent bloggers (eg. TBR Joeseph Sir) face a threat of getting his name maligned just because he posted a mundane comment on Dondus blog? Should a harmless comment lead to slandering one's mom/wife/daughter, their morality etc. This is insane.I am more interested in the problems faced by bloggers who are not at all involved in the controversies stirred by Dondu or people (like you) who are diagonally opposite to him. If Poli Dondu wants to put a check to the utterances by Dondu he has to go and take Dondu on directly but not threaten others.

kirukan said...

Its also my opinion (like Joe) for long time that, Dondu is trying to create sympathy using PoliDondu. I am so convinced because, Dondu talked and wrote more about PoliDondu than any thing else.

Although I dont have any proof, these PoliDondus are not a single person in my idea. Has anybody got proof against PoliDondu?.

Dondu says he knows. Why he is not taking any legal action then?. The same Dondu advised another blogger to put a "Mottai Pettion" when that blogger was writing about some problems in office. Does anybody think such a clever Dondu wont take legal action if he has proof?..

Then why not?.. He wants that cheap publicity and sympathy..

சிறில் அலெக்ஸ்