.

Tuesday, September 04, 2007

'சற்றுமுன்' புதுப் பொலிவுடன்

சற்றுமுன் செய்தித் தளம் புதுப் பொலிவுடன் satrumun.com எனும் தனி வலைப்பதிவுத் தளமாக இன்றுமுதல் இயங்குகிறது. புதிய தளத்தில் உங்களுக்கென பயனர் கணக்கை துவங்கிய பின்னர் பின்னூட்டமிடும் வசதிகள் உள்ளன.

தமிழ்மணம் புதிய தளத்தை திரட்டுவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணப் பயனர்கள் நேரடியாக satrumun.com சென்று செய்திகளைப் பெறலாம்.

17 comments:

கோவி.கண்ணன் said...

சற்றுமுன் சற்றுமுன் பார்த்தேன்.
'பார்' 'டீ' கிடையாதா ?

கோவி.கண்ணன் said...

நான் எனது காலங்களில் 'சற்றுமுன்' வெட்ஜெட் சேர்த்துவிட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

எதற்காக மற்றுமொரு பயனர் கணக்கு? படுத்தறீங்களே!!!

புதிய தளத்துக்கு வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

கோவி,
நீங்களே 'பார்' 'டீ' கேட்டா எப்டி? :))

காலங்களில் இணைப்பு நல்ல எடுத்துக்காட்டு

சிறில் அலெக்ஸ் said...

கொத்தனார்,
சற்றுமுன்னில் பின்னூட்டமிடுபவர்கள் பொதுவாக சீரியஸ் செய்தி வாசிப்பவர்கள்தான். இன்னும் சில புதிய பகுதிகள் விரைவில் வரவிருக்கின்றன அதற்கு கணக்கு இருப்பது அவசியம்.

கலைடாஸ்கோப் said...

வாழ்த்துகள். செய்திகளின் வேகம் பிரமிக்க வைக்கிறது! என் பதிவிலும் விட்ஜெட் - செய்தி இணைப்பு வைத்திருக்கிறேன்.

யோசிப்பவர் said...

//எதற்காக மற்றுமொரு பயனர் கணக்கு? படுத்தறீங்களே!!!

//

//இன்னும் சில புதிய பகுதிகள் விரைவில் வரவிருக்கின்றன அதற்கு கணக்கு இருப்பது அவசியம்.//

என்ன இருந்தாலும் பயணர் கணக்குத் தேவையில்லாத ஒன்று என்றுதான் நினைக்கிறேன்!!;-)

சிறில் அலெக்ஸ் said...

யோசிப்பவர்..
செய்தி வாசிக்க பயனர் கணக்கு தேவையில்லையே. பின்னூட்டமிடத்தான் கணக்கு. சும்மா போலி வந்துட்டான், போட்டுட்டான் என சண்டை போடாமல் விரூப்பமுள்ள சிலர் பதிந்துகொண்டு தங்கள் கருத்துக்களை விவாவாதிப்பது சிறந்ததாயிருக்கும்.

மற்ற பதிவுகளும் இதைச் செய்யலாம்.

சற்றுமுன்னுக்கு பெரிதாய் பின்னூட்டங்கள் வருவதில்லை. பின்னூட்டங்களை எதிர்பார்த்தும் நாங்கள் பதிவிடுவதில்லை.

கருத்துக்கு மிக்க நன்றி...
வேற அம்சங்களப்பத்தி கருத்தை எதிர்பார்க்கிறோம்.

Kasi Arumugam said...

வாழ்த்துக்கள் சிறில். ஓரளவுக்கேனும் ஒரிஜினல் செய்திகுறிப்புக்களும் இடம் பெற வழி செய்யவேண்டும். செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் said...

சிறில்,

அருமையான படைப்பு. சற்றுமுன் இன்னும் பல நிலைகள் உயர்ந்து இணைய வரலாற்றில் தனி இடம் பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

சிறில் அலெக்ஸ் said...

நன்றி கலைடஸ்கோப், மஞ்சூர் ராசா

சிறில் அலெக்ஸ் said...

காசி,
பாராட்டுக்கு நன்றி. ஒரிஜினல் செய்தி என்பது எங்கள் நோக்கமே அல்ல. ஆனால் அது வரும்போது நிச்சயம் வெளியிடுகிறோம். இதற்கு மாற்றாக ஒரு புதிய முயற்சி ஒன்றை செய்யவிருக்கிறோம். விரைவில்.

சற்றுமுன்னை digg போன்ற சேவைக்கு ஒப்பிடலாம். அதில் ஒரிஜினல் என்பதற்கே இடமில்லை படித்ததை பகிர்தல் என்பதுதான் digg.

சிறில் அலெக்ஸ் said...

மா.சி,
பாராட்டு அத்தனையும் சற்றுமுன் குழுவுக்கே. சிந்தாநதியும் ரவிசங்கரும் கலக்கிட்டாங்க. மற்ற குழு உறுப்பினர்களின் தொடர்ந்த உள்ளீட்டோட தளம் சிறப்பா வந்திருக்கு.

வடுவூர் குமார் said...

குறை/நிறை வேறிடத்தில் சொல்லிவிட்டேன்,அதற்குப்பிறகு பார்த்த/கேட்ட அந்த BBC சுட்டி மிக மிக அருமை.

Anonymous said...

செம கலக்கல்... பிரமிப்பா இருக்கு....

காசி சொன்னது போல ஒரிஜினல் செய்திகளும் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.. அதையும் கவனத்துல வெச்சுக்கங்க...

பகீ said...

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ்