.

Friday, May 25, 2007

RSS தான் சிறந்தது - 1

பதிவர்களே. RSS பற்றிய பல பதிவுகளை படித்திருப்பீங்க. இது இன்னுமொரு RSS பதிவு என்றில்லாமல், பதிவுகளை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் RSS எப்படி பயனுள்ளதாக அமைகிறது எனப் பார்க்கும் பதிவு.

இந்த சொதப்பல் பில்ட் அப் ஒரு பராபரப்பை உண்டாக்கத்தான். இந்தப் பதிவின் நோக்கம் உங்களுக்கென நீங்களே ஒரு திரட்டியை உருவாக்க என்ன வேண்டும் என்பதைச் சொல்வதே. ஒரு கேள்வி பதில் வடிவத்துல சொல்லட்டுமா?

எனக்கே நான் திரட்டி செய்ய இயலுமா? ஆமாங்க ஆமா.

ஏன் தனி திரட்டி?
எல்லாம் ஒரு பந்தாதான்... மத்த நன்மைகள் உங்களுக்குத் தெரியாதா?

அடிப்படையில என்ன விபரங்கள் தேவை?
நீங்க திரட்ட விரும்பும் பதிவுகளின் சுட்டி அல்லது பதிவின் அல்லது தளத்தின் ்RSS சுட்டி.

இதுக்காக RSSல சேரணுமா? அல்லது இது வேற RSSஆ? இது வேற டெக்னிக்கல் ்சமாச்சாரRSS - Real Simple Syndication (மலையாளியா இருந்தா simble) Rich Site Summary எனவும் இதை வழங்குகிறார்கள். RSS தமிழில் செய்தி ஓடை அல்லது வெறுமனே ஓடை(Feed) என மொழிபெயர்கலாம்(பெயர்்த்திருக்கிறார்கள்)்.

எனக்கு RSS பிடிக்காதே?
RSS இல்லைன்னா ஆட்டம்தான். அதாவது Atom. அது இன்னொரு வகையான ஓடை ஆனா பரவலா RSSதான் பயன்படுத்துறாங்க.

உதாரணமா ஒண்ணு சொல்லுங்களேன்... இப்ப என்னோட பதிவுக்கு RSS ஓடை http://theyn.blogspot.com/feeds/posts/default?alt=rss அல்லது http://theyn.blogspot.com/feeds/posts/default மட்டும் பயன்படுத்தலாம். எல்லா Blogger பதிவுகளுக்கும் இந்த சுட்டி பயன்படும். http://theyn.blogspot.com என்பதுக்கு பதில் உங்களுக்கு விருப்பமான பதிவின் பெயரை போட்டுக்கணும்.

Wordpress feed எப்படி இருக்கும்?
http://balabharathi.wordpress.com/feed/ நம்ம அண்ணன் பால பாரதியின் feed இது.

சரி இந்த சுட்டிய வச்சி என்ன செய்யுறது? நிறைய செய்யலாம்.
1. RSS வாசகக்கருவிகள்/செயலிகள் (Readers) பலதும்்ய இருக்குது அதுல சேர்த்து படிக்கலாம்.
2. புதிய ப்ளாகரின் வார்ப்புருவில் ELEMENTஆக சேர்க்கலாம்
3. உங்க வலைப்பக்கத்தில் தெரியச் செய்யலாம்
4. பல தளங்களில் உள்ள செய்திகளை ஒருங்கிணைத்து ஒன்றாக்கலாம்.

இன்னும் நிறைய செய்யலாம்.

வாசக செயலிகள்(Readers) எப்படி பயன்படுத்துவது? ரெம்ப எளிமையா வேணுமின்னா உங்க கூகிள் மெயில் ஐடிய வச்சுகிட்டு்வச்ச்சிகிட்டு கூகிள் ரீடர்ல போயி பயன்படுத்தி பார்க்கலாம். இத எப்படி ப்பயன்படுத்துவதுன்னு இந்தப்்தப் பதிவப் பாத்து தெரிஞ்சுகுங்க.

ரெம்ப எளிமையா வடிவமைச்சிருக்காங்க. போங்க Feedஅ சேருங்க. படியுங்க.

Firefox உலவி வச்சிருக்கீங்கண்ணா Sageணு ஒரு அருமையான Add-in இருக்குது. இத வச்சி நீங்க விசிட் அடிக்கிற தளங்களில் ஏதாச்சும் Feed (ஓடை) இருக்குதான்னு எளிதில் தேட முடியும்.

இலவச RSS readerகள் எக்கச்சக்கமாயிருக்குதுங்க. கூகிளாண்டவர்கிட்ட கேட்டா அள்ளிக் கொடுப்பார். ஆனா நான் இந்த பதிவு வரிசையில கூகிள் ரீடர வச்சித்தான் உதாரணங்கள் தரப்போறேன்.

ரீடர்ல பதிவுகள எளிதா சேக்கிறதுக்கு என்ன செய்யலாம்? ஒரு எளிய வழி என்னண்ணா OPML என்கிற கோப்ப வச்சி எளிதா சேத்துக்கலாம். OPML என்பது ஓடைகளின் தொகுப்பை கொண்ட கோப்பு(File). இதையும் ரீடர்களிலேந்துதான் பெற இயலும். இல்ல ஏற்கனவே இருக்கிற திரட்டிகள் இதப் பகிர்ந்துகிட்டாங்கன்னா எடுத்துக்கலாம. அல்லது உங்க வலையுலக நண்பரிடம் கேக்கலாம்் (நண்பர்கள் OPML பகிர்ந்துக்க விருப்பப்பட்டால் தெரிவிக்கவும்) என்னோட ஓடை தொகுப்புக்கள் வேணுமின்னா மின்னஞ்சல் செய்யவும் (cvalex @ yahoo .காம்). என்னோடது முழுமையானதில்ல ஆனா 200பதிவுகள் கிட்ட இருக்குது.

பதிவ சேத்தாச்சு அப்புறம்?
கூகிள் ரீடர்லேந்தே உங்க பதிவுகள படிக்க ஆரம்பிக்கலாம். ஆனா அதுக்கும் மேலேயும் சில சூப்பர் விஷயங்களெல்லாம்ம் இருக்குது....

அடுத்த பதிவுல பாக்கலாம்....

அடுத்து வரும் கேள்விகள்
எப்படி ஓடைகளை வகைப்படுத்துவது?
ஓடைகளை ஒருங்கிணைப்பது எப்படி?
நாமே RSS ஓடைகளை உருவாக்குவது எப்படி?
என் ஓடைகளை தெளிவா பார்வையிட இயலுமா?
என் தனி திரட்டி செய்வது எப்படி?

மேலதிக விபரங்களுக்கு

1. விக்கிபீடியா - RSSனா இன்னா நைனா?
2. விக்கிபீடியா - ஆட்ம்னா இன்னாமே?
3. கூகிள் வாசிககாகச்சோல்ல எல்ப்(help)
4. கூகிள் ரீடர் எங்க இருக்குது மாம்ஸ்?

7 comments:

✪சிந்தாநதி said...

சிறில் அழகாக விளக்கி இருக்கீங்க. நிறைய பேருக்கு இது பற்றிய சந்தேகங்கள் இருக்கும்.

அப்புறம் ஒரு சின்ன திருத்தம்

பிளாக்கர் பதிவுகளில் இருக்கும் முதன்மை ஓடை RSS இல்லை. அது Atom ஓடை தான்.

அதாவது http://theyn.blogspot.com/feeds/posts/default
என்பது Atom ஓடை.

http://theyn.blogspot.com/feeds/posts/default?alt=rss
என்பது தான் RSS ஓடை.

மேலும் RSS ஓடையை விட அதிக விவரங்கள் கொண்டது Atom ஓடை தான். சில பதிவுகளில் இரண்டுக்கும் வித்தியாசம் காண முடியாது. ஆனால் சில இடங்களில் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும்.

பொதுவாக ஓடைகளில் feed என்ற சொல் மட்டும் உள்ள ஓடைகள் Atom ஓடைகள் தான்.

✪சிந்தாநதி said...

உண்மையில் பிளாக்கரில் RSS ஓடை இல்லை. சில திரட்டிகள் Atom ஓடையை திரட்டாது என்பதால் திரட்டிகளை ஏமாற்ற default?alt=rss என்ற இணைப்பு பயன்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால் பிளாக்கரில் இரண்டு ஓடைகளிலும் ஒரே விவரங்கள் தான் தெரிகின்றன.

சுந்தர் / Sundar said...

ஆஹா ... நல்லா தலைப்பு வச்சிங்க ! .. நான் அந்த RSS னு நெனைச்சு வந்து பாத்தா ... இது WEB2.0 RSS ...

பதிவிற்கு நன்றி ... தேவையான பதிப்புதான் .

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//பிளாக்கர் பதிவுகளில் இருக்கும் முதன்மை ஓடை RSS இல்லை. அது Atom ஓடை தான்.

அதாவது http://theyn.blogspot.com/feeds/posts/default
என்பது Atom ஓடை.

http://theyn.blogspot.com/feeds/posts/default?alt=rss
என்பது தான் RSS ஓடை.

மேலும் RSS ஓடையை விட அதிக விவரங்கள் கொண்டது Atom ஓடை தான். சில பதிவுகளில் இரண்டுக்கும் வித்தியாசம் காண முடியாது. ஆனால் சில இடங்களில் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும்.

பொதுவாக ஓடைகளில் feed என்ற சொல் மட்டும் உள்ள ஓடைகள் Atom ஓடைகள் தான்.//

இந்தத் தகவல் எனக்குப் புதுசு..பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சிறில், நீங்கள் rss, feed விழிப்புணர்வு குறித்து எழுதுவது கண்டு மகிழ்ச்சி.

சிறில் அலெக்ஸ் said...

தலைங்களா நெம்ப நன்றி..
ஒரு டிஸ்கஷனாவே இதக் கொண்டடு போகலாம் நல்லாயிருக்கும்..

நிறைய தகவல்பிழைகள் வெரலாம்.. என்னது என்கிரதவிட எப்படி செய்வது என்பதிலும் என்ன செய்யலாம்ங்கிறதுலயுந்தான் நான் குறியாயிருக்கேன்.

✪சிந்தாநதி said...

ரவி
எனக்கும் சமீபத்தில் தான் தெரிந்தது.

ஐஈ-7 ல் இருக்கும் feed பட்டன் பதிவுகளின் ஓடையை காட்டும். அதில் தான் இப்படி தெரியவந்தது. அதனால் அதன் வேறுபாடு குறித்து அறிய பல ஓடைகளை சோதித்த போது அறிந்த விவரங்களே இவை.

✪சிந்தாநதி said...

சிறில் உங்கள் முயற்சி நல்லா இருக்கு. ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்வது தான் வலைப்பதிவுகளின் மூலம் நாம் பெறும் மிகச்சிறந்த விஷயம்.

சிறில் அலெக்ஸ்