தல இளையராஜாவ ஒரு இந்திப் படத்துக்கு இசையமைக்க கூப்பிட்டிருக்காங்க. தல புதுசா ஏதாவது போட்டு கலக்கி (திரும்பவும்) தேசிய அளவுல கால்பதிப்பார்னு பாத்தா பழச புதுசா போட்டிருக்காரு.
அமிதாப் பச்சன், தபு நடிச்சிருக்கிற சீனி கம் (சக்கர கம்மின்னு அர்த்தமா?) படத்துக்கு தலதான் ம்யூசிக்.
தன் பாடல்கள யுவன் எவனோ (தட்டச்சுப் பிழையில்லை) ரீ மிக்ஸ் பண்ணி பேருவாங்குறான் நான் பண்ணா என்னண்னு...
சும்மா சொல்லக்கூடாது தூள் பறத்தியிருக்காரு.
விழியிலே மணி விழியிலே மௌனமொழி பேசும்..
குழலூதும் கண்ணனுக்கு
மன்றம் வந்த தென்றலுக்கு
இந்த மூணு பாடல்களும் மறு-கலப்பு(re-mix ஆகா) செஞ்சிருக்காரு.
இந்தி தெரிஞ்சா இன்னும் ரசிக்கலாம். முஜ்சே ஹிந்தி நகி மாலும்.
பாடல்களைக் கேட்க.
Thursday, May 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
16 comments:
புதிய மொந்தையில் பழைய கள் என்றாலும் எனக்கும் ரொம்பவே பிடித்த பாடல்களாகிவிட்டன. குறிப்பாக பாடல் மெட்டை வைத்துக்கொண்டு அவர்தந்த புதிய இசைக்கலவையை ரசிக்கலாம்.
//முஜ்சே ஹிந்தி நகி மாலும். //
இது நல்லா தெரியுது!! :))
பாட்டெல்லாம் அருமை, தமிழ்ல ;-)
இந்தி பாடல கேக்கும்போது தமிழ்ப்பாட்டுதான் மனசுல ஓடுது.
#முஜ்சே ஹிந்தி நகி மாலும்#
முஜே ஹிந்தி நஹி மாலும்- ;-)
முஜே - எனக்கு.
//குறிப்பாக பாடல் மெட்டை வைத்துக்கொண்டு அவர்தந்த புதிய இசைக்கலவையை ரசிக்கலாம். //
நிச்சயமா ரசிக்கும்படி இருந்தன.
ஆனா புதுசா ஒன்றிரண்டு பாடல்களையாவது தந்திருக்கலாம்... ஒருவேளை இயக்குநர் கேட்டுக்கொண்டாரோ என்னவோ.
////முஜ்சே ஹிந்தி நகி மாலும். //
இது நல்லா தெரியுது!! :)) //
கீழ பின்னூட்டம் பாருங்க.. இதுகூட நல்லாத் தெரியலண்றாங்க.
:))
//தமிழ்ப்பாட்டுதான் மனசுல ஓடுது. //
நிச்சயமா..
அனானி.. அதுதான் நஹி மாலும்னு சொல்லிட்டேனேப்பா
:))
9தப்ப ஒத்ஹ்துக்கிறதெல்லம் அவுட் ஆஃ பேஷன் ஆயிடுச்சு.
:)
Re-mix-னா சொல்றீங்க... எனக்கு என்னமோ அதே மெட்டை அப்படியேதான் தந்த மாதிரி இருக்கு.
Raja will be better off if he retires now.
re-mix பண்ண யுவன் இருக்கும்போது,இவர் எதுக்கு இதெல்லாம் பண்றாருன்னு தெரியல.
மதிச்சு கூப்பிட்டு பாட்டு போட சொன்னா, கெடச்ச வாய்ப்ப இப்படியா வீணாக்கரது? நச்சுனு ரெஹமான் தாள், லகானுக்கு போட்ட மாதிரி போட்டு, எல்லாரயும், ஒரு பார்வ பாக்க வெக்க வேணாம்?
என்னமோ போங்க.
ராஜாவோட தீவிர ரசிகன் நானு, இப்படி சொல்ல வச்சுட்டாரே :(
//Re-mix-னா சொல்றீங்க... எனக்கு என்னமோ அதே மெட்டை அப்படியேதான் தந்த மாதிரி இருக்கு//
ஆனா பின்னணி இசை?
சர்வே,
என்னுடைய வருத்தமும் அதுதான்.
நினைக்கிறேன் நான் கேட்டிருப்பார் இயக்குநர்னு (பாம்பே ஸ்டைல் எப்டி?)
:)
பட இயக்குனர் பாலகிருஷ்ணன் ஒரு தமிழர், அந்தப் பாதிப்பாக இருக்கலாம்
மத்தபாட்டெல்லாம் சரி. கானாபிரபா வலைப்பூவுல கேட்டுக்கிட்டேயிருக்கேன். ஆனா குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். இசைக்கோர்ப்புதான் இளையராஜா. அப்படியிருக்க அந்த மெட்டை இவர் எப்படிப் பயன்படுத்தலாம். ஒருவேளை அவருக்குப் போன் சொல்லீருப்பாரோ!
ஐந்தாவது பாடல் தலைப்பைப் பாருங்கள்!!!!
"செக்ஸபோன்" என்றிருக்கிறது!!!!
புது வாத்தியமோ?????
//ஐந்தாவது பாடல் தலைப்பைப் பாருங்கள்!!!!
"செக்ஸபோன்" என்றிருக்கிறது!!!!
புது வாத்தியமோ?????//
கழுகுக் கண்ணுயா உங்களுக்கு..
அது ஒருவகையான Organ :)
Organ = உறுப்பு எனும் பொருளும் உண்டே.
//ஒருவேளை அவருக்குப் போன் சொல்லீருப்பாரோ!//
'செக்' போட்டும் சொல்லியிருக்கலாம்
Post a Comment