.

Wednesday, May 23, 2007

பூவானது மனம்

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவு

அன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன்.

பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். (அட மானசீக குருக்களா.. எங்கிட்ட இருக்கிறது ரெண்டே ரெண்டு கட்ட வெரல்தான் அத கட் பண்ணிரமாட்டீங்களே?)

பாடல் போடணும்னு தோணியதுக்கு காரணம், கையில நேரமிருந்துச்சு, வீட்ல (அப்ப) யாருமே இல்ல, முக்கியமா கம்போஸ் பண்ணி போட்டிக்கு அனுப்புறது சிரமமான வேலை அதனால நிறையபேர் செய்யமாட்டாங்க. அப்ப இண்டர்நேஷனல் லா ஆப் நிகழ்தகவுப்படி வெற்றி வாய்ப்பு அதிகம்.

சரின்னு 2வது மாடி பால்கனிலேந்து யோசிச்சதுல ஒரு கவித வந்துச்சு. தனிமைய ஹீரோ எஞ்ஞாசாய் பண்ணுறப்ப பாடுறமாதிரி ஒரு பாட்டு. நம்ம நிழல்கள் 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' மாதிரி.

'பூவானது மனம்,
வண்டாயிரம் வரும்,
தேனூறிடும் நிதம்'

முதல்ல மெட்டோட இதத்தான் போட்டேன். அடுத்த சில மணி நேரமா வேறெதுவும் தோணல. இதையே பாடினேன்.

மீண்டும் பால்கனி.

கீழே புல்வெளி. மெலிதாய் காற்று. மரங்கள் அசைய ஆரம்பித்தன. பறவைகள் பேச ஆரம்பித்தன. கவிதை பிறந்தது. (செம பில்ட் அப் மச்சி).

'இயற்கையை பாடவே, இதயமும் பூக்குதே' ஆரம்பிச்சேன்.

'கடவுளின் சாயலா? - இயற்கை கனிமக் கூடலா?' ம்ம்.. சரியில்ல
'கடவுளின் சாயலா? - இயற்கை கவிதைக் கூடலா?' ஓகே.

இன்னும் சில வரிகள்.

என்னுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்கு லேப் டாப்ப எடுத்துட்டு போய் ரெக்கார்ட் பண்ணினேன். அப்புறம் Flush பண்ணிட்டு வெளிய வந்துட்டேன். ஏன்னா நான் ரெக்கார்ட் பண்ணினது பாத்ரூம்ல வச்சி. அங்கதான் வெளி சத்தம் குறைவா கேக்கும்.

போட்டிக்கு பாடல் போய் இப்ப இரண்டாம் பரிசு பெற்றிருக்குது.

சும்மா சொல்லக்கூடாது போட்டியில மற்றபாடல்களெல்லாம் தூள். அருமையா மெட்டமைத்து, ப்ரொபஷனலா (பாத்ரூம் அல்லாத) ரெக்கார்டிங் செஞ்சு, இசை சேர்த்து கலக்கியிருந்தாங்க.

அன்புடன் போட்டி அறிவிப்புக்கள் ஒவ்வொண்ணா வருது. முதல்ல இயல் கவிதை மாலன் நடுவராயிருந்தார். இரண்டாவது ஒலிக்கவிதை. இதுல என் கவிதை இடம்பெறல. ஆனா குழப்பத்துல நான் வெற்றி பெறலண்ணு நினச்சு அன்புடன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள கண்டபடி திட்டிட்டேன்...மானசீகமாத்தான்.

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் சேதுக்கரசி, கவிஞர் புகாரி, ப்ரியன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் இன்னூம் தூள் கிளப்பிடலாம்(அந்த நேரம் நான் வீட்ல தனியா இருந்தா).

ஷங்கரின் சிவாஜிக்கு அடுத்த படமான 'பதிவன்' படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர். ('பதிவன்' - The Post.)

இந்த பாட்டுக்கு இந்த பில்ட் அப் தேவையான்னு நீங்களே கேட்டு முடிவு பண்ணுங்க.

வர்ட்டா... 'அவசரமா' ரெக்கார்டிங் இருக்குது. ஹி ஹி ஹி.


poovanathu -comp
poovanathu -comp.w...
Hosted by eSnips


பாடல் கேட்க மேலே சுட்டுங்க

பூவானது

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே
மலை தரும் பாடங்கள் என்ன

மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது
0
துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோஷம் கொள்ளுதே

அள்ளி அள்ளி வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால் கண்ணீரைச் சிந்துதே

வன்முறைகள் தேவையில்லை சொல்லாமல் சொல்லுதே
வானத்தில் ஏறிவரும் மேகங்களும்

யாருக்கும் தடையின்றி மழை பொழியும்

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதை கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா
பூவானது மனம்

வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது ...

புகாரியின் பாராட்டு

அன்பின் சிறில் அலெக்ஸ்,
கலக்கிட்டீங்க போங்க!
இயற்கையைப் போற்றும் இந்த அருமையான கவிதையையும் எழுதி மெட்டும் போட்டு அழகாய்ப் பாடியும் இருக்கிறீர்களே, அடடா!
பாட்டு ஓய்ந்தபின்னும் கேட்டுக்கிடக்கிறது என் செவி!
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, இசையமைத்து, பாடலாய்ப் பாடி தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி


நடுவர் இசைக்கவிஞர் இரமணன் மதிப்பீடு
1 பூவானது
கணப்பொழுதும் இடைவெளியின்றி இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கும் பாடங்களைக் கேட்குமாறு இந்தப் பாடல் பணிக்கிறது. சன்னமான சொற்கள்; பொருத்தமான மெட்டு; 'கடவுளின் சாயலா? இயற்கை கவிதைக் கூடலா?' என்பது இந்தப் பாடலின் ஜீவ வரி. இனிய கவிதை இது.
இயற்றியவரே மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும், உணர்ச்சி, அவர் குரலைக் கேட்கும்படிச் செய்கிறது.


//அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும்,//
:(((

32 comments:

ilavanji said...

சிறில்,

அசத்திட்டீங்க போங்க! இதுக்கெல்லாம் நெம்ப தெகிரியம் வேணும் பார்த்துக்கிடுங்க!

அடுத்து என்ன? American Idol ஆ!? :)))

சிறில் அலெக்ஸ் said...

//இதுக்கெல்லாம் நெம்ப தெகிரியம் வேணும் பார்த்துக்கிடுங்க! //

கேக்குறதுக்குத்தானே? :)

//அடுத்து என்ன? American Idol ஆ!? :))) //

என் ஹேர்ஸ்டைல் சரியில்லையே. :)

Boston Bala said...

பாடல் கேட்டுட்டு வரேன்...
வாழ்த்துகள் :)

மணிகண்டன் said...

நல்லா இருக்கு சிறில். கூடிய சீக்கிரம் பாடலாசிரியராகவோ பாடகராகவோ ஆக வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி மணிகண்டன்,

பாடகராகவோ பாடலாசிரியராகவோவா.. இசையமைப்பாளர விட்டுட்டீங்களே

:)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இத மட்டும் மொதல்லயே பதிவு செஞ்சு அமெரிக்கன் ஐடல்ல குடுத்திருந்தீங்கன்னா, இன்னித்தேதிக்கு அந்த ப்ளேக்குக்கு பிளேக் மாதிரி இருந்திருக்கலாம். சான்ச விட்டுட்டீங்களே..

சரி பரவாயில்ல விடுங்க. எங்கூர்லயும் ஒரு டுபாக்கூர் நிகழ்ச்சியிருக்கு. கனேடியன் ஐடல்னு. அதுக்கு அனுப்பிருவமா? ;)

-மதி

பி.கு.: பாட்டை இன்னும் கேக்கல. :)

சிறில் அலெக்ஸ் said...

//சரி பரவாயில்ல விடுங்க. எங்கூர்லயும் ஒரு டுபாக்கூர் நிகழ்ச்சியிருக்கு. கனேடியன் ஐடல்னு. அதுக்கு அனுப்பிருவமா? ;)//

மதி...
கனேடிய ஐடல் அடுத்த வருச்ம வரக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா. :)

பி.கு: பாட்டக் கேளுங்க.

நிர்மல் said...

கலக்குங்க சிறில்.

பாட்டு இன்னும் கேட்கல.

ஜோ/Joe said...

ஐயா!
இப்போ என்ன கோடம்பாக்கத்துலயா இருக்கீங்க ? 'முட்டம் சின்னப்பதாஸ்' மாதிரி 'முட்டம் சிறில் அலெக்ஸ்'-ன்னு பேர் மாத்திகிட்டா ஒரு கெத்தா இருக்குமுல்ல! :)

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நிர்மல்.

பத்மா அர்விந்த் said...

பாராட்டுக்கள் சிறில்.

ஷைலஜா said...

அசத்தறீங்க அலெக்ஸ்...பாராட்டு..

Udhayakumar said...

பாட்டு சூப்பர்.

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் சிறில்! பாட்டக் கேட்காமயே மொக்கைப் பின்னூட்டம் போடுறாங்களா மக்கள்? அப்ப நம்ம பின்னூட்டத்தைப் போட்டுக் கலக்கவேண்டிய நேரம் வந்தாச்சு!

"துள்ளித் துள்ளி முயல்களும்
சந்தோஷம் கொள்ளுதே
அள்ளி அள்ளி வாழ்க்கையைக்
கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால்
கண்ணீரைச் சிந்துதே
வன்முறைகள் தேவையில்லை
சொல்லாமல் சொல்லுதே"

இந்த வரிகளின் இசை துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோசம் கொள்வதைப் போலவே துள்ளிக்குதிக்கிறது. ஆங்கிலத்தில் lilting மெலொடி என்பார்களே, அதைப் போல.

"மலை தரும் பாடங்கள் என்ன
மனிதனின் சிறுமையைச் சொல்ல"

- மிகவும் உண்மை. கிராண்ட் கான்யனைப் பார்த்தபோது இந்தப் பிரம்மிப்பிலிருந்து ஓய சிலகாலம் ஆனது.

"நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன"

- நயனமாய் என்பது அழகான சொல். மோனையுடன் நன்றாக வருகிறது. இந்த இடத்திலும் மெட்டு அப்படியே நதியின் ஓட்டத்தைப் போல், நாணலின் அசைவைப் போலுள்ளது.

1970-80-களின் இளையராஜா இசையின் தாக்கத்தை ஆங்காங்கே காணமுடிகிறது :-) "கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட" என்ற திரைப்படப்பாடல் ஒன்றையும் நினைவுபடுத்துகிறது. ஒருவேளை அதே ராகமாகவோ ராக ஜன்யமாகவோ இருக்கலாமோ என்னவோ. நீங்கள் ஒரு மாத விடுமுறையில் ஊருக்குப் போகும்போது கடைசி நிமிடத்தில் அவசரமாகப் பதிவு செய்து அனுப்பிய பாடலிலேயே இந்த நேர்த்தி! வாழ்த்துக்கள்...

சேதுக்கரசி said...

உங்க பாட்டை நடுவருக்கு அனுப்பும்போது நினைச்சேன்... வெற்றிபெறப் போகுதுன்னு. நம்ம கால்குலேசன் சரிதேன்.

//2வது மாடி பால்கனிலேந்து யோசிச்சதுல ஒரு கவித வந்துச்சு//

இதத்தான் "விழுந்து விழுந்து" யோசிக்கிறதும்பாங்களா?

//குழப்பத்துல நான் வெற்றி பெறலண்ணு நினச்சு அன்புடன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள கண்டபடி திட்டிட்டேன்...மானசீகமாத்தான்.//

ம்.. இப்ப தெரியுது சங்கதி.. நற..நற..

//அடுத்த வருடம் இன்னூம் தூள் கிளப்பிடலாம்(அந்த நேரம் நான் வீட்ல தனியா இருந்தா)//

அன்புடன்ல நாங்க கவிதைப் போட்டி வைக்கிறப்பயெல்லாம் இதான் சாக்குன்னு தங்கமணியை ஊருக்கு அனுப்பிருங்க.. எப்படி ஐடியா? :)

PRABHU RAJADURAI said...

congrats...

சிறில் அலெக்ஸ் said...

//Boston Bala said...
பாடல் கேட்டுட்டு வரேன்...
வாழ்த்துகள் :) //

போனவரக் காணலியே... :((

சிறில் அலெக்ஸ் said...

நன்றி பத்மா, shy-லஜா, உதயக்குமார்.

:)

சிறில் அலெக்ஸ் said...

//இப்போ என்ன கோடம்பாக்கத்துலயா இருக்கீங்க ? //

ஹாலிவுட்லதான் :)


//'முட்டம் சின்னப்பதாஸ்' மாதிரி 'முட்டம் சிறில் அலெக்ஸ்'-ன்னு பேர் மாத்திகிட்டா ஒரு கெத்தா இருக்குமுல்ல! :) //

விட்டுடுங்க பாவம்! முட்டம் என்ன குத்தம் செஞ்சுச்சு :)

Anonymous said...

பாடல், மெட்டு, குரல் மூன்றுமே சூப்பரோ சூப்பர்.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் நாம் இருவரும் பேசிய 10 நிமிடங்களில் இந்த கவிதையையும் அதற்கு பொருத்தமாக நான் அமைத்த ட்யூனையும் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தேன். அதை உங்களுடையதைப்போல் போட்டிக்கும் அனுப்பி, இரண்டாவது பரிசும் பெற்று விட்டீர்களே, இது நியாயமா? :-(

நல்லா இருங்க 'தேவா' அலெக்ஸ்.

பி.கு.: உயர்வு நவிற்சியாகக் கொள்ளவும். நன்றாக உள்ளது.

சிறில் அலெக்ஸ் said...

//பாடல், மெட்டு, குரல் மூன்றுமே சூப்பரோ சூப்பர்.//

நன்றி க்ருபா.

//சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் நாம் இருவரும் பேசிய 10 நிமிடங்களில் இந்த கவிதையையும் அதற்கு பொருத்தமாக நான் அமைத்த ட்யூனையும் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தேன். அதை உங்களுடையதைப்போல் போட்டிக்கும் அனுப்பி, இரண்டாவது பரிசும் பெற்று விட்டீர்களே, இது நியாயமா? :-(//

பால்கனி முதல் பாத்ரூம்வரைக்கும் விபரம் எழுதி பதிவு போட்டாலும் இப்டி கேக்குறது நியாயமா :))

Boston Bala said...

ஜஸ்ஸி கிஃப்டும் இளையராஜாவும் சேர்ந்த மாதிரி ஹஸ்கி பெட்ரூம் குரல். நன்றாக இருக்கிறது.

இப்பொழுதெல்லாம் ஹீரோயின் மட்டும்தான் இந்த மாதிரி அருவியில் குளித்துக் கொண்டே பாடி வருகிறார்கள். ஹீரோவுக்கு இதே பாடல் ஹை-பிட்ச்சில் குத்தாட்டமாக அட்வைஸ் மழையாக மாற்றி இருப்பார்கள்.

எழுத்தில் பார்க்கும்போது நீண்டதாகப் பட்ட பாடல், கேட்கும்போது டக்கென்று முடிந்து போன உணர்வு. (இது நிஜமாகவே பாஸிடிவ் காமெண்ட்தான் :) பின்னணி இசை, ஆரம்ப ஆலாபனை, நடுவே துக்கடா, ஏஆர் ரெஹ்மானின் ரெண்டு ட்யூன் டெம்பிளேட் எல்லாம் கொடுத்தால் பிரும்மாண்டமாக இருக்கும் :D

எப்படியோ... வருங்கால 'இசை முனிவர்' எனக்கு அறிமுகமானவர் என்பது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சியே :)

தமிழ்ப்படங்களுக்குத் தேறுவது கஷ்டம்தான். எல்லா வார்த்தைகளும் தெளிவாக விளங்குவதால் 'போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது' ;)

---ரெக்கார்டிங் தியேட்டருக்கு லேப் டாப்ப எடுத்துட்டு போய் ரெக்கார்ட் பண்ணினேன். அப்புறம் Flush பண்ணிட்டு வெளிய வந்துட்டேன். ---

:)))

இதோடு விடாமல், அவ்வப்போது பாடல் இயற்றி, பாடிப் பதிந்துப் பகிரவும்.

நன்றிகள் & வாழ்த்துகள்.

சேதுக்கரசி said...

போட்டிக்கு இன்னொரு கவிதையையும் அனுப்பி, பாட நேரமில்லைன்னு சொன்னீங்களே, அதையும் பாடலாக எதிர்பார்க்கிறோம்! (தனிமையிலே... என்ற கவிதை)

சுந்தர் / Sundar said...

super Fantastic , excellent Baalu ... (Cyril)

வாழ்த்துக்கள் !

G.Ragavan said...

என்னங்க இது...இப்பிடிக் கலக்குறீங்க...வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.

அடுத்து எப்ப திரைப்படங்கள்ள ஒங்க பாடலைக் கேக்கலாம்? நீங்களும் சின்மயியும் சேந்து கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி ஒரு பாட்டுப் பாடலாம். ஹி ஹி...உண்மையாவே பாடலாம். (ஜெயச்சந்திரன் கோவிச்சுக்கப் போறாரு). :)

நல்ல முயற்சி,என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.

சிறில் அலெக்ஸ் said...

//எப்படியோ... வருங்கால 'இசை முனிவர்' எனக்கு அறிமுகமானவர் என்பது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சியே :)//

முனிவரா.. ஆகா.. தாடி வளத்துட்டு பஜனைதான் பாடணும்போல. விமர்சனம் சூப்பர்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சுந்தர், பிரபராஜதுரை சார்.

ராகவன்.
நானும் சின்மையிம் சேந்து கன்னத்தில் முத்தமிட்டால்... இதெல்லாம் நல்லாயில்ல..

:)
நன்றி

சேதுக்கரசி said...

//நானும் சின்மையிம் சேந்து கன்னத்தில் முத்தமிட்டால்...//

ஜிரா ஒழுங்கா பாட்டைப் பத்தி தான் சொன்னார். சிறில்... நீங்க தான்....... :D

வாசகன் said...

வாழ்த்துகள் சிறில்!
இனிமே நீங்க பெரில்!

நிகழ்தகவின் ஒரு ரகசியத்தை இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களே.. எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஊக்கம் தரவா?

சிறில் அலெக்ஸ் said...

சேது அவசரத்துல உங்கள மறந்துட்டேன். துவக்கத்துலேர்ந்தே உக்கமளித்ததற்கு நன்றி. இப்பவும் விடமாட்டேங்கிறீங்க. இப்ப வீட்ல மனைவி மகன் எல்லாம் இருக்கிறாங்க. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கணும். மேலும் அமோகமாக ஆணிகள் பிடுங்கவேண்டியிருப்பதால்... தனிமையிலே தனிமையிலேய அப்புறமாத்தான் கவனிக்கணும்.

:)

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//வாழ்த்துகள் சிறில்!
இனிமே நீங்க பெரில்!//
ம்.. பெரில்... ஆங்கிலத்தில் அழிவுன்னு அர்த்தம். :)


//நிகழ்தகவின் ஒரு ரகசியத்தை இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களே.. எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஊக்கம் தரவா?//

ஊக்கமடஞ்சிட்டீங்கன்னா நிகழ்தகவுப்படி எனக்கு வெற்றிவாய்ப்பு குறைஞ்சிடுமே..?

சேதுக்கரசி said...

//சேது அவசரத்துல உங்கள மறந்துட்டேன்//

என்னதான் அவசரமா(!) ரெக்கார்டிங் இருந்தாலும் அதுக்காக இப்படியா? :D

சிறில் அலெக்ஸ்