.

Tuesday, August 07, 2007

பட்டறையில் பங்குகொள்ளாததன் சோகங்கள்

தமிழ் பதிவர் பட்டறை எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பதை அதை குறித்த பதிவுகள் செய்திகள் மூலம் தெரிந்துகொள்ள இயல்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னால் பங்களிக்க இயலவில்லையே எனும் ஏக்கம் இப்போதைக்குப் போகாது. தமிழ் இலக்கிய வட்டம் போல பதிவர் வட்டம் என ஒன்று தெளிவாக உருவாகியுள்ளதன் வெளி அடையாளமாக இந்தப் பட்டறையை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. பட்டறையில் கலந்துகொண்டவர்கள் துவங்கியிருக்கும் பதிவுகளைப் பார்க்கையில் இன்னும் இந்த வட்டம் விரிந்து இணையத் தமிழ் சிறப்படையச் செய்யும் என்பது தெளிவாகிறது.

வேலைப் பழு அதிகமாயிருப்பதால் பதிவுலகில் கவனமில்லை. மொத்தம் 3 ப்ராஜக்ட்களில் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்... கூடவே ஆஃப்ஷோர் வேறு. (எவனோ கண்ணு போட்டுட்டான்).

மீதமிருக்கும் பதிவுலக வேலைகள்
1. சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பது
2. சற்றுமுன்னை விரிவு செய்து புதுப்பிப்பது
3. புதிய குழுப் பதிவு ஒன்றை ஆரம்பிப்பது (சர்ப்ரைஸ்)
4. சிகாகோவில் பட்டறை நடத்துவது குறித்து திட்டமிடுவது

எப்ப செய்வேனோ தெரியல.

நம்ம பட்டறையில் பட்டையை கிளப்பிய அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டும். ஊடகங்களுக்கும், மக்களுக்கும் நம் இருப்பினை வெளிச்சம் போட்டு காட்டியது உங்கள் உழைப்பு. இன்னும் தொடர்வோம்...

4 comments:

MSATHIA said...

என்னையும் அந்த சோகத்துல சேத்துக்குங்க.

புதிய குழுவா? என்ன அது. சீக்கிரம் சொல்லுங்க

-சத்தியா

மாசிலா said...

உங்கள் ஏக்கத்தை நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது சிறில் அலெக்ஸ் ஐயா. பதிவுலகில் நீண்ட காலமாக பல சாதனைகளையும் சேவைகளையும் செய்துவரும் நீங்கள் இல்லாமல் பட்டறை நடந்து முடிந்தது அவர்களுக்கும் ஒருவகையில் ஒரு குறையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

மாசிலா,
பாராட்டுக்கு நன்றி. ஆனால் பலரோடு ஒப்பிடுகையில் நான் ரெம்ப கத்துக்குட்டி.

:))

சிறில் என்றே அழையுங்கள் ஐயாவெல்லாம் வேண்டாம் ப்ளீஸ்.
:))

துளசி கோபால் said...

அவுங்கெல்லாம் தூள் கிளப்பி இருக்காங்கப்பா. நல்லா இருக்கட்டும்.

எல்லாரையும் பார்த்துப் பேசும் அருமையான ச்சான்ஸ் போச்சு(-:

சிறில் அலெக்ஸ்