.

Showing posts with label பதிவர்வட்டம். Show all posts
Showing posts with label பதிவர்வட்டம். Show all posts

Tuesday, September 04, 2007

'சற்றுமுன்' புதுப் பொலிவுடன்

சற்றுமுன் செய்தித் தளம் புதுப் பொலிவுடன் satrumun.com எனும் தனி வலைப்பதிவுத் தளமாக இன்றுமுதல் இயங்குகிறது. புதிய தளத்தில் உங்களுக்கென பயனர் கணக்கை துவங்கிய பின்னர் பின்னூட்டமிடும் வசதிகள் உள்ளன.

தமிழ்மணம் புதிய தளத்தை திரட்டுவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணப் பயனர்கள் நேரடியாக satrumun.com சென்று செய்திகளைப் பெறலாம்.

Tuesday, August 07, 2007

பட்டறையில் பங்குகொள்ளாததன் சோகங்கள்

தமிழ் பதிவர் பட்டறை எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பதை அதை குறித்த பதிவுகள் செய்திகள் மூலம் தெரிந்துகொள்ள இயல்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னால் பங்களிக்க இயலவில்லையே எனும் ஏக்கம் இப்போதைக்குப் போகாது. தமிழ் இலக்கிய வட்டம் போல பதிவர் வட்டம் என ஒன்று தெளிவாக உருவாகியுள்ளதன் வெளி அடையாளமாக இந்தப் பட்டறையை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. பட்டறையில் கலந்துகொண்டவர்கள் துவங்கியிருக்கும் பதிவுகளைப் பார்க்கையில் இன்னும் இந்த வட்டம் விரிந்து இணையத் தமிழ் சிறப்படையச் செய்யும் என்பது தெளிவாகிறது.

வேலைப் பழு அதிகமாயிருப்பதால் பதிவுலகில் கவனமில்லை. மொத்தம் 3 ப்ராஜக்ட்களில் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்... கூடவே ஆஃப்ஷோர் வேறு. (எவனோ கண்ணு போட்டுட்டான்).

மீதமிருக்கும் பதிவுலக வேலைகள்
1. சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பது
2. சற்றுமுன்னை விரிவு செய்து புதுப்பிப்பது
3. புதிய குழுப் பதிவு ஒன்றை ஆரம்பிப்பது (சர்ப்ரைஸ்)
4. சிகாகோவில் பட்டறை நடத்துவது குறித்து திட்டமிடுவது

எப்ப செய்வேனோ தெரியல.

நம்ம பட்டறையில் பட்டையை கிளப்பிய அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டும். ஊடகங்களுக்கும், மக்களுக்கும் நம் இருப்பினை வெளிச்சம் போட்டு காட்டியது உங்கள் உழைப்பு. இன்னும் தொடர்வோம்...

Thursday, July 12, 2007

சுசிலாவைக் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க...

பி. சுசுலா அவர்களின் எத்தனையோ பாடல்கள மெய், பொய் எல்லாம் மறந்து கேட்டிருப்பீங்க. 'நாளை இந்த வேளை பார்த்து' எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவங்க பாடல கேட்டதோட இல்லாமா, கேள்வியும் கேட்க வாய்ப்பு தந்திருக்கார் நம்ம ராகவன். கீழ உள்ள படத்துல மெதுவா, அவங்களுக்கு வலிக்காம ஒரு சுட்டு சுட்டி ராகவன் என்ன சொல்றாருன்னு கேளுங்க.



வருமானவரி டிஸ்கி- இந்த விளம்பரத்துக்கு காசு வாங்கப்படவில்லை...

Tuesday, July 03, 2007

வருத்தமளிக்கும் வலைப்பதிவுகள்?

அன்பு பதிவர் உலகமே..
கீழுள்ளதைப் படியுங்கள். வலைப்பதிவுகள் பற்றிய பொதுவான அபிப்பிராயங்கள் என்ன என்பதை உணர ஒரு வாய்ப்பு.

இத்தனை அருமையான சிந்தனைகளும், படைப்புக்களும் இருந்தும் நம்மை பலரும் கவனிக்காமல் இருப்பதன, வெறுப்பதன்் காரணங்களை ஆராய ஒரு வாய்ப்பு. கருத்துக்கும் எழுத்துக்கும் தொடர்பில்லாமல் நாம் பலநேரங்களில் செயல்படுவதன் விளைவு இது.

நாயே பேயே எனத் திட்டுபவர் சமத்துவம் பேசுவது நகை முரணா இல்லை வெறும்் முரணா?

இனி நண்பரின் ஆதங்கம்.

இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....

தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம்.

1. திகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் மேல்சாதி வெறியர் என்று தாக்குதலுக்கு உள்ளாவீர்கள்.

2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.

3. நதி நீர் பிரச்சனை கிருஷ்ணா - ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள். முல்லைபெரியாறு - கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள் காவிரி - கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா

4. ஹிந்தி ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.

5. எழுத்தாளர் ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.

6. திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்

7. இதிகாசம்-புராணம் ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.

8. பிறப்பாலா வளர்ப்பாலா நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.

9. ஷ ஜ ஸ க்ஷ இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.

10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.

11. பின்னூட்டம் பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்- ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.

12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்

13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது

14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.

15. கடவுள் கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்

16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.

17. போகக்கூடாத இடங்கள் 1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள் 2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள் 3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.

18. நான் செய்த தவறு நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன். 19. மதநல்லிணக்கமா - ஹா ஹா நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும். உங்கள் மதத்தவர்கள் - மத துரோகி என்றும் மற்ற மதத்தவர்கள் - உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.

19.. கொசுறு - எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம். நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள். வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.
பரிமாற்றம் தொடரும்.....

பி:கு - நண்பரின் அனுமதியின்றி இதை வெளியிடுகிறேன். அவருக்கு ஆட்சேபமிருப்பின் மின்னஞ்சல் செய்யலாம்.

மேலும் சில ஆதங்
கங்களை அவரது பக்கத்திலேயே சென்று படியுங்கள்

Thursday, June 21, 2007

7க்கும் 9க்கும் நடுவில்

7 ஏன் பயங்கரமான நம்பர் தெரியுமா?
ஏண்ணா seven ate nine.

இப்ப வலைப்பதிவுல 8 போட்டாத்தான் லைசன்ஸ் குடுப்பாங்களாம். சேவியர் அவர்கள் அன்பாய் அழைத்ததன்பேரின் என்னைப் பற்றி 8 குறிப்புக்கள்.

என்னத்த சொல்ல. பலமுறை சொல்லியாச்சே... சரி ரிப்பீட்டானா மன்னிச்சுருங்க.

1. பிறந்து வளர்ந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகிய கடற்கரை கிராமம் முட்டத்தில். முட்டம் போன்ற ஒரு எளிய கிராமத்திலிருந்து வந்து எங்களாலேயும் கலக்க முடியும்ணு காமிக்குறோம்ல. அதான் பெருமையான விஷயம்.

2. ரெம்ப மிஸ் பண்றது எங்க ஊரத்தான். என்னதான் சிக்காகோ சியாட்டல்னு சுத்துனாலும் நம்ம சொந்த ஊர்ல இருந்தக் காலங்கள் மறக்க இயலாதவை. இப்பவும் சினமா எதுலையாச்சும் முட்டம் காண்பிச்சாங்கண்ணா நினைவுகள் 'அடி ஆத்தாடீ'ன்னு பறந்துடும்.

3. திருப்பத்தூர் டான் போஸ்கோ பள்ளிக்கூடத்துல +1 & +2 படிச்சத மறக்க முடியாது. பள்ளியில கிட்டத்தட்ட ஒரு ஹீரோ அந்தஸ்த்து கெடச்சது. அங்க நடந்த எல்லா நிகழ்ச்சிகள்லேயும் நான் மேடையில இருப்பேன். மேக் அப் போட்டுகிட்டோ அல்லது இல்லாமலோ. நான் மேடைக்கு வந்ததும் கூட்டம் தன்னாலே சிரிக்கும். அருமையான ஆசிரியர்கள். ஒரு தோழனப் போல வளர்த்து விட்டாங்க. நான் மீண்டும் போக விரும்பும் ஒரு இடங்களில் ஒன்று என் பள்ளிக்கூடம், டான் போஸ்கோ, திருப்பத்தூர்.

4. பள்ளிக்கூடப் போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் 15 வருஷமா ஒண்ணுமே எழுதாம பின்பு வலைப்பதிய ஆரம்பிச்சேன். அதற்கு வழிகாட்டி ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஒரு சிறந்த அனுபவமா, அங்கீகரிப்பா அமைந்துவிட்டது பதிவுகள். இணைய போட்டிகளில் கிடைத்த வெற்றிகள் பெருமைக்குரியவை. தேன்கூடு போட்டிகளில் முதல் பரிசு இரண்டாம் பரிசுன்னு இருமுறை கிடத்தது. தமிழ் சங்கத்தின் கவிதைப்போட்டியில் முதல் பரிசு, அன்புடன் குழுமத்தில் என் பாட்டுக்கு கிடைத்த 2ஆம் பரிசு. சுவையான, ஊக்கமூட்டும் அனுபவங்கள்.

5. கடந்த ஏப்ரல் 22ல் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு அருமையான அனுபவம். பதிவுலக மக்களை சந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பு. மக்கள் தொலைக்காட்சி பேட்டி, தினகரன்ல படம்ணு அமர்களமாயிடுச்சு வேற. இன்னும் பெரிய நிலையை நோக்கி நாம (பதிவர்கள்) பயணிக்கணும் மக்களும், ஊடகமும் நம்மைத் தேடி வரவேண்டும். இந்த சந்திப்பில் என்னுடைய எழுத்தை மக்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என நேரடியா தெரிய முடிந்தது. பாலபாரதி, வரைவனையான், லக்கிலுக், ரோசாவசந்த், நாமக்கல் சிபி, பொன்ஸ், பாஸ்டன் பாலா, பிரகாஷ், வடுவூர் குமார், பாலராஜன் கீதா, சுகுணா திவாகர், ஓகை, மோகன்தாஸ், கிருபா ஷங்கர், தருமி, ஓசை செல்லா, நவீன், தங்கவேல், ஜி.ரா, கௌதம், இன்னும் பல நண்பர்களையும் சந்திக்க முடிந்ததுல ரெம்ப மகிழ்ச்சி. முதலில் வந்த தொலைபேசி அழைப்புக்களிலேயே ரெம்ப ஆடிப்போயிட்டேன். இணைய நண்பர்கள் இனிய நண்பர்கள்.

6. இன்னொரு பெருமை தரும் விஷயம் சற்றுமுன். இதற்கு நான் முழுமையான காரணம் அல்ல. நண்பர்கள் சும்மா அசுர வேகத்தில் சற்றுமுன்னை வளத்துட்டாங்க. இப்ப பேரச் சொன்னாலே அதிருதுல்ல. :) (thought only spoils the life) சற்றுமுன் விரைவில் இன்னும் பெரிதாக செயல்பட வேண்டிய முயற்சிகளை எடுக்க திட்டம் இருக்கிறது். சென்னை வந்தபோது பாலபாரதியின் ஆபீசுக்கு போயிருந்தேன். (அத ஆபீஸ்னு சொல்லலாம்முங்களா?) அங்க ஒருவர் தீவிரமா சற்றுமுன் வாசித்துட்டிருந்தார். அப்பத்தான் எனக்கு இதன் வெற்றி முதன் முதலாய் புரிந்தது.

விளம்பர இடைவெளி: சற்றுமுன் போட்டிக்கு உங்கள் படைப்புக்களை அனுப்பிவிட்டீர்களா?

இன்னும் ரெண்டு பாயிண்ட் எழுதணுமா? ஹையோ...

7. எனக்கு பிடித்த உணவுன்னா மீன்வகைகள்தான். (வேற என்னவாயிருக்க முடியும்?) நண்டு எறால் மீனுண்ணு ஒரு கட்டு கட்டிட்டிருந்த என்ன டையபட்டீஸ் இருக்குண்ணு கட்டி போட்டுட்டாங்க. இப்பெல்லாம் ரெம்ப யோசிச்சு சாப்பிடவேண்டியிருக்கு. இனிமையானவன்ணா டையபட்டீஸ் உள்ளவண்ணு அர்த்தமா? என்ன இருந்தாலும் உடம்ப வெயிட்ட குறச்சிட்டு அளவா சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்வதுல ஒரு ஆனந்தம் இருக்குது. சும்மா பதிவேண்ணு இருக்காம இப்பெல்லாம் காலையில அரைமணி நேரம் ஜாகிங் சாயங்காலம் டென்னிஸ். ஆபீஸ் சீட்ல உக்காந்து கால ஆட்றதெல்லாம் எக்சர்சைஸ் இல்லையாம்..

8. நான் இப்டி இணையத்துல ஓரளவு தெரியப்பட்ட பதிவர் என்பதை என் மனைவியத் தவிர என் குடும்பத்தில் யாரும் முழுதாய் உணரவில்லை. மக்கள் டிவி பேட்டியைக் கூட என் பெற்றோர் முழுதாய் பார்க்கவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான தகவல்ணே சொல்லலாம். தோராயமா ஏதோ நான் எழுதுறேன் என்கிற தகவல்தான் அவங்களுக்கு தெரியும். அவங்களும் படிக்க ஆரம்பிச்சுட்டா கூச்சமாப் போயிரும் எனக்கு. :)

அப்படா ஒரு ்வழியா வழியா 8 போட்டுட்டேன். அடுத்து 8 பேரக் கூப்பிட்டு சங்கடத்துல ஆழ்த்தணுமாம்.

1. புளியமரம் தங்கவேல்
2. விவசாயி இளா
3. நிர்மல்
4. சிவபாலன்
5. சர்வேசன்
6. மணியன்
7. கவிதா(33% இட ஒதுக்கீட்டில்*)
8. அருட்பெருங்கோ

* இட ஒதுக்கீடு அணிலுக்குத்தான் கவிதாவுக்கல்ல :)

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Wednesday, June 13, 2007

'சிவாஜி' பற்றிய பதிவுகள்

சிவாஜி வாயிலே ஜிலேபி.

மேல உள்ளத க்ளிக்கினா 'சிவாஜி' குறித்த பதிவுகளைப் பார்வையிடலாம். வலப்பக்க பட்டையிலும் அப்டேட் ஆகும்.

இதுல இடப்பக்கம் பாத்தீங்கண்ணா கால வரிசைப்படி பார்க்க வசதி இருக்குது.

சிவாஜி பற்றி பதிவு வந்தா உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துற வசதியும் உண்டு. Explore it.

இதுதான் Google Blogsearchன் மாயம்.

தேடினா! கிடைக்கும்!

பாபா 'சுருக்கம்'னு பின்னூட்டியதால இந்த சேர்க்கை.

இணையம் முழுவதிலும் தேட கூகிளை பயன்படுத்துவதைப்போல பதிவுகளில் தேட Blog search உதவுகிறது. Advance Blogsearchல போனீங்கண்ணா இன்னும் அதிக வசதிகள் இருக்குது.

உதாரணத்துக்கு சிறில் என்கிற பெயர் பதிவுகளில் எங்கேயெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்குன்னு ஒரு தேடல் செஞ்சேன். அதுல என்னுடைய பதிவுகளை 'without words' எனும் பெட்டியில் 'theyn cvalex useenthis muttom' என்று உள்ளிட்டேன். இதனால் என் பதிவுகளைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் சிறில் எனும் பெயர் எங்கெல்லாம் இருக்குதுண்ணு எளிதா கண்டுபிடிக்க முடிந்தது.

இப்படி தேடிக் கிடைப்பவற்றை RSS அல்லது Atom ஓடையாகவும் பெறலாம்.

பாலபாரதிக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கலாம்.
:)

உலகெங்கும் பா.க.சவினர் போடும் பதிவுகளை தொகுக்க எளிதாயிருக்கும்.

சுய ஆய்வுக்கான கேள்வி

யார் பெயர் பதிவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனப் போட்டிவைத்தால் யார் ஜெயிப்பார்கள்?

1. Baby பாரதி
2. 'சமீபத்தில் பிறந்த' டோண்டு
3. 'Snap நிதியரசர்' பாஸ்டன் பாலாஜி
4. 'Sound' செல்லா
5. 'யானைப் பாகி' பொன்ஸ்

Friday, June 08, 2007

பதிவர்களுக்கான புத்தகம் அறிமுகம் - Pure ஜல்லி


பின்குறிப்பு: இந்த புத்தகத்தை எழுதியவர் பாஸ்டன் பாலா அல்ல பால பாரதியும் அல்ல.

தொடர்ந்து ஜல்லி பதிவுகள்னு கவலைப் படாதீங்க மக்களே! இப்போ இதுதான் முடியுது!

ஒரு ஓடை நதியாகிறது - 2

ஓடைகளை கூகிள் ரீடரில் சேர்த்து படிப்பது எப்படி எனப் பார்த்தோம்்.

ஓடைகளை ஒழுங்குற சேர்த்து உங்களுக்கென ஒரு தனி திரட்டி செய்துகொள்வது எப்படீன்னு பார்க்கலாம்.

என்னோட பக்கப்பட்டையில் கவனிப்பில் இருப்பவை என ஒரு குறும்பட்டை(Widget) இருக்குது பாருங்க. இதில் நான் பொதுவாக விரும்பிப் படிக்கும் சில பதிவுகளின் ஓடைகளை ஒன்றாக்கியிருக்கிறேன்.

இதை செய்ய கூகிள் ரீடரில் உங்களுக்கு பிடித்த பதிவுகளை ஒரு Folderல் போட்டு வைக்கவேண்டும். கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.

இப்ப எனக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளை Watching எனும் Folderல் போட்டுவைத்திருக்கிறேன். இனி போய் Watching எனும் Folderஐ Public ஆகா மாற்றி அதற்கான ஓடையை பெற இயலும்.

இது குறித்து ரவிஷங்கரின் விரிவான பதிவு இதோ.

சரி. இப்படி உங்களுக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளைச் சேர்த்து ஒரு ஓடை உருவாக்கியபின்னர் அடுத்து திரட்டி செய்வதுதான் மிச்சம்.

ஓடைகளை அழகுற ஒருங்கிணைக்க Pageflakes எனும் தளம் இருக்கிறது.

pageflakes.com போய் ஒரு கணக்கை துவங்குங்க. Create a Page எனப் போட்டு ஒரு பக்கத்தை ஏற்படுத்துங்க. அடுத்ததா ADD FEED என்பதை சுட்டி உங்க ஓடைகளை சேர்க்க ஆரம்பிக்கலாம். உங்கள் பக்கத்தை மாற்றி வடிவமைக்க வார்ப்புருக்களும் உள்ளன. வெறும் ஓடைகள் மட்டுமன்றி சின்ன விளையாட்டுக்கள், கருவிகள், பயனுள்ள செயலிகள் என பலவற்றை உங்கள் தளத்தில் சேர்க்க முடிகிறது. இதற்கு ADD FLAKE எனும் சுட்டியை தேர்ந்தெடுங்கள்.

இதில் பல ஓடைகளை ஒன்றாக காண்பிக்க இயலும்.

அடுத்து Share என்பதைச் சுட்டி உங்கள் திரட்டியை வெளியிடுங்கள். உங்கள் திரட்டிக்கென ஒரு உரல்/சுட்டி கொடுக்கப்படும்.

உங்கள் திரட்டியை ஒரு குழுவிற்குள்ளாய் பகிர்ந்து கொள்ளவும் இயலும்.

அவ்வளவுதான். நீங்களும் திரட்டிசெய்துவிட்டீர்கள்.

என்னுடைய Page Flakes திரட்டி இதோ.

இது பாஸ்டன் பாலாவின் திரட்டி

இதை செய்துவிட்டு பின்னூட்டத்தில் காண்பியுங்கள். (ஹோம் வொர்க்).

வேறு கேள்விகள் இருந்தாலும் கேளுங்க.
சமயம் இல்லாததால் இப்படி சுருக்கி வெறும் தகவல்களையே தருகிறேன். மன்னிக்கவும்.

Friday, May 25, 2007

RSS தான் சிறந்தது - 1

பதிவர்களே. RSS பற்றிய பல பதிவுகளை படித்திருப்பீங்க. இது இன்னுமொரு RSS பதிவு என்றில்லாமல், பதிவுகளை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் RSS எப்படி பயனுள்ளதாக அமைகிறது எனப் பார்க்கும் பதிவு.

இந்த சொதப்பல் பில்ட் அப் ஒரு பராபரப்பை உண்டாக்கத்தான். இந்தப் பதிவின் நோக்கம் உங்களுக்கென நீங்களே ஒரு திரட்டியை உருவாக்க என்ன வேண்டும் என்பதைச் சொல்வதே. ஒரு கேள்வி பதில் வடிவத்துல சொல்லட்டுமா?

எனக்கே நான் திரட்டி செய்ய இயலுமா? ஆமாங்க ஆமா.

ஏன் தனி திரட்டி?
எல்லாம் ஒரு பந்தாதான்... மத்த நன்மைகள் உங்களுக்குத் தெரியாதா?

அடிப்படையில என்ன விபரங்கள் தேவை?
நீங்க திரட்ட விரும்பும் பதிவுகளின் சுட்டி அல்லது பதிவின் அல்லது தளத்தின் ்RSS சுட்டி.

இதுக்காக RSSல சேரணுமா? அல்லது இது வேற RSSஆ? இது வேற டெக்னிக்கல் ்சமாச்சாரRSS - Real Simple Syndication (மலையாளியா இருந்தா simble) Rich Site Summary எனவும் இதை வழங்குகிறார்கள். RSS தமிழில் செய்தி ஓடை அல்லது வெறுமனே ஓடை(Feed) என மொழிபெயர்கலாம்(பெயர்்த்திருக்கிறார்கள்)்.

எனக்கு RSS பிடிக்காதே?
RSS இல்லைன்னா ஆட்டம்தான். அதாவது Atom. அது இன்னொரு வகையான ஓடை ஆனா பரவலா RSSதான் பயன்படுத்துறாங்க.

உதாரணமா ஒண்ணு சொல்லுங்களேன்... இப்ப என்னோட பதிவுக்கு RSS ஓடை http://theyn.blogspot.com/feeds/posts/default?alt=rss அல்லது http://theyn.blogspot.com/feeds/posts/default மட்டும் பயன்படுத்தலாம். எல்லா Blogger பதிவுகளுக்கும் இந்த சுட்டி பயன்படும். http://theyn.blogspot.com என்பதுக்கு பதில் உங்களுக்கு விருப்பமான பதிவின் பெயரை போட்டுக்கணும்.

Wordpress feed எப்படி இருக்கும்?
http://balabharathi.wordpress.com/feed/ நம்ம அண்ணன் பால பாரதியின் feed இது.

சரி இந்த சுட்டிய வச்சி என்ன செய்யுறது? நிறைய செய்யலாம்.
1. RSS வாசகக்கருவிகள்/செயலிகள் (Readers) பலதும்்ய இருக்குது அதுல சேர்த்து படிக்கலாம்.
2. புதிய ப்ளாகரின் வார்ப்புருவில் ELEMENTஆக சேர்க்கலாம்
3. உங்க வலைப்பக்கத்தில் தெரியச் செய்யலாம்
4. பல தளங்களில் உள்ள செய்திகளை ஒருங்கிணைத்து ஒன்றாக்கலாம்.

இன்னும் நிறைய செய்யலாம்.

வாசக செயலிகள்(Readers) எப்படி பயன்படுத்துவது? ரெம்ப எளிமையா வேணுமின்னா உங்க கூகிள் மெயில் ஐடிய வச்சுகிட்டு்வச்ச்சிகிட்டு கூகிள் ரீடர்ல போயி பயன்படுத்தி பார்க்கலாம். இத எப்படி ப்பயன்படுத்துவதுன்னு இந்தப்்தப் பதிவப் பாத்து தெரிஞ்சுகுங்க.

ரெம்ப எளிமையா வடிவமைச்சிருக்காங்க. போங்க Feedஅ சேருங்க. படியுங்க.

Firefox உலவி வச்சிருக்கீங்கண்ணா Sageணு ஒரு அருமையான Add-in இருக்குது. இத வச்சி நீங்க விசிட் அடிக்கிற தளங்களில் ஏதாச்சும் Feed (ஓடை) இருக்குதான்னு எளிதில் தேட முடியும்.

இலவச RSS readerகள் எக்கச்சக்கமாயிருக்குதுங்க. கூகிளாண்டவர்கிட்ட கேட்டா அள்ளிக் கொடுப்பார். ஆனா நான் இந்த பதிவு வரிசையில கூகிள் ரீடர வச்சித்தான் உதாரணங்கள் தரப்போறேன்.

ரீடர்ல பதிவுகள எளிதா சேக்கிறதுக்கு என்ன செய்யலாம்? ஒரு எளிய வழி என்னண்ணா OPML என்கிற கோப்ப வச்சி எளிதா சேத்துக்கலாம். OPML என்பது ஓடைகளின் தொகுப்பை கொண்ட கோப்பு(File). இதையும் ரீடர்களிலேந்துதான் பெற இயலும். இல்ல ஏற்கனவே இருக்கிற திரட்டிகள் இதப் பகிர்ந்துகிட்டாங்கன்னா எடுத்துக்கலாம. அல்லது உங்க வலையுலக நண்பரிடம் கேக்கலாம்் (நண்பர்கள் OPML பகிர்ந்துக்க விருப்பப்பட்டால் தெரிவிக்கவும்) என்னோட ஓடை தொகுப்புக்கள் வேணுமின்னா மின்னஞ்சல் செய்யவும் (cvalex @ yahoo .காம்). என்னோடது முழுமையானதில்ல ஆனா 200பதிவுகள் கிட்ட இருக்குது.

பதிவ சேத்தாச்சு அப்புறம்?
கூகிள் ரீடர்லேந்தே உங்க பதிவுகள படிக்க ஆரம்பிக்கலாம். ஆனா அதுக்கும் மேலேயும் சில சூப்பர் விஷயங்களெல்லாம்ம் இருக்குது....

அடுத்த பதிவுல பாக்கலாம்....

அடுத்து வரும் கேள்விகள்
எப்படி ஓடைகளை வகைப்படுத்துவது?
ஓடைகளை ஒருங்கிணைப்பது எப்படி?
நாமே RSS ஓடைகளை உருவாக்குவது எப்படி?
என் ஓடைகளை தெளிவா பார்வையிட இயலுமா?
என் தனி திரட்டி செய்வது எப்படி?

மேலதிக விபரங்களுக்கு

1. விக்கிபீடியா - RSSனா இன்னா நைனா?
2. விக்கிபீடியா - ஆட்ம்னா இன்னாமே?
3. கூகிள் வாசிககாகச்சோல்ல எல்ப்(help)
4. கூகிள் ரீடர் எங்க இருக்குது மாம்ஸ்?

Wednesday, May 23, 2007

பூவானது மனம்

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவு

அன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன்.

பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். (அட மானசீக குருக்களா.. எங்கிட்ட இருக்கிறது ரெண்டே ரெண்டு கட்ட வெரல்தான் அத கட் பண்ணிரமாட்டீங்களே?)

பாடல் போடணும்னு தோணியதுக்கு காரணம், கையில நேரமிருந்துச்சு, வீட்ல (அப்ப) யாருமே இல்ல, முக்கியமா கம்போஸ் பண்ணி போட்டிக்கு அனுப்புறது சிரமமான வேலை அதனால நிறையபேர் செய்யமாட்டாங்க. அப்ப இண்டர்நேஷனல் லா ஆப் நிகழ்தகவுப்படி வெற்றி வாய்ப்பு அதிகம்.

சரின்னு 2வது மாடி பால்கனிலேந்து யோசிச்சதுல ஒரு கவித வந்துச்சு. தனிமைய ஹீரோ எஞ்ஞாசாய் பண்ணுறப்ப பாடுறமாதிரி ஒரு பாட்டு. நம்ம நிழல்கள் 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' மாதிரி.

'பூவானது மனம்,
வண்டாயிரம் வரும்,
தேனூறிடும் நிதம்'

முதல்ல மெட்டோட இதத்தான் போட்டேன். அடுத்த சில மணி நேரமா வேறெதுவும் தோணல. இதையே பாடினேன்.

மீண்டும் பால்கனி.

கீழே புல்வெளி. மெலிதாய் காற்று. மரங்கள் அசைய ஆரம்பித்தன. பறவைகள் பேச ஆரம்பித்தன. கவிதை பிறந்தது. (செம பில்ட் அப் மச்சி).

'இயற்கையை பாடவே, இதயமும் பூக்குதே' ஆரம்பிச்சேன்.

'கடவுளின் சாயலா? - இயற்கை கனிமக் கூடலா?' ம்ம்.. சரியில்ல
'கடவுளின் சாயலா? - இயற்கை கவிதைக் கூடலா?' ஓகே.

இன்னும் சில வரிகள்.

என்னுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்கு லேப் டாப்ப எடுத்துட்டு போய் ரெக்கார்ட் பண்ணினேன். அப்புறம் Flush பண்ணிட்டு வெளிய வந்துட்டேன். ஏன்னா நான் ரெக்கார்ட் பண்ணினது பாத்ரூம்ல வச்சி. அங்கதான் வெளி சத்தம் குறைவா கேக்கும்.

போட்டிக்கு பாடல் போய் இப்ப இரண்டாம் பரிசு பெற்றிருக்குது.

சும்மா சொல்லக்கூடாது போட்டியில மற்றபாடல்களெல்லாம் தூள். அருமையா மெட்டமைத்து, ப்ரொபஷனலா (பாத்ரூம் அல்லாத) ரெக்கார்டிங் செஞ்சு, இசை சேர்த்து கலக்கியிருந்தாங்க.

அன்புடன் போட்டி அறிவிப்புக்கள் ஒவ்வொண்ணா வருது. முதல்ல இயல் கவிதை மாலன் நடுவராயிருந்தார். இரண்டாவது ஒலிக்கவிதை. இதுல என் கவிதை இடம்பெறல. ஆனா குழப்பத்துல நான் வெற்றி பெறலண்ணு நினச்சு அன்புடன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள கண்டபடி திட்டிட்டேன்...மானசீகமாத்தான்.

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் சேதுக்கரசி, கவிஞர் புகாரி, ப்ரியன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் இன்னூம் தூள் கிளப்பிடலாம்(அந்த நேரம் நான் வீட்ல தனியா இருந்தா).

ஷங்கரின் சிவாஜிக்கு அடுத்த படமான 'பதிவன்' படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர். ('பதிவன்' - The Post.)

இந்த பாட்டுக்கு இந்த பில்ட் அப் தேவையான்னு நீங்களே கேட்டு முடிவு பண்ணுங்க.

வர்ட்டா... 'அவசரமா' ரெக்கார்டிங் இருக்குது. ஹி ஹி ஹி.


poovanathu -comp
poovanathu -comp.w...
Hosted by eSnips


பாடல் கேட்க மேலே சுட்டுங்க

பூவானது

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே
மலை தரும் பாடங்கள் என்ன

மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது
0
துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோஷம் கொள்ளுதே

அள்ளி அள்ளி வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால் கண்ணீரைச் சிந்துதே

வன்முறைகள் தேவையில்லை சொல்லாமல் சொல்லுதே
வானத்தில் ஏறிவரும் மேகங்களும்

யாருக்கும் தடையின்றி மழை பொழியும்

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதை கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா
பூவானது மனம்

வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது ...

புகாரியின் பாராட்டு

அன்பின் சிறில் அலெக்ஸ்,
கலக்கிட்டீங்க போங்க!
இயற்கையைப் போற்றும் இந்த அருமையான கவிதையையும் எழுதி மெட்டும் போட்டு அழகாய்ப் பாடியும் இருக்கிறீர்களே, அடடா!
பாட்டு ஓய்ந்தபின்னும் கேட்டுக்கிடக்கிறது என் செவி!
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, இசையமைத்து, பாடலாய்ப் பாடி தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி


நடுவர் இசைக்கவிஞர் இரமணன் மதிப்பீடு
1 பூவானது
கணப்பொழுதும் இடைவெளியின்றி இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கும் பாடங்களைக் கேட்குமாறு இந்தப் பாடல் பணிக்கிறது. சன்னமான சொற்கள்; பொருத்தமான மெட்டு; 'கடவுளின் சாயலா? இயற்கை கவிதைக் கூடலா?' என்பது இந்தப் பாடலின் ஜீவ வரி. இனிய கவிதை இது.
இயற்றியவரே மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும், உணர்ச்சி, அவர் குரலைக் கேட்கும்படிச் செய்கிறது.


//அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும்,//
:(((

Tuesday, February 13, 2007

சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்

முகம்தெரியாத மனிதர்களுக்காய் பலன் பாராமல் உழைப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமமில்லையா?

சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.

ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.

sakaraalai@gmail.com

எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.

இறுதிச் சடங்கு பற்றிய அறிவிப்பு.

உங்கள் வலைத்தளங்களிலும் இந்த மின்னஞ்சல் முகவரியை அறிவியுங்கள் என வேண்டுகிறேன்.




Saturday, January 27, 2007

ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்...

வயல் வரப்புல அரைக்கால் சட்டை போட்ட ஹீரோ கையில் ஒரே ஒரு சிலேட் மட்டும் உள்ளடக்கிய மஞ்சள் பையை உயர்த்தி சுத்தியபடியே ஓடி வருகிறார்..

போங்கையா பீட்டாவுக்கு மாறிட்டதச் சொல்ல ஏன் இந்த பில்ட் அப்.

சிலர் அதிக பதிவுகள் இருந்தால் மாறுவது கடினம் என்றிருந்தார்கள். என் பதிவுகளில் தேனில் மட்டும் 197 பதிவுகள் இருந்தன (ஆமமங்க விரைவில் டபுள் செஞ்சுரி) இன்னும் பல பதிவுகளையும் சேர்த்தால் எண்ணிக்கை 300 நெருங்கும். ஆனாலும் என்னால் எளிதில், 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாற முடிந்தது.

நான் ஏற்கனவே வைத்திருந்த பீட்டா கணக்கிற்கு மாறியதால் எளிதாயிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

முயன்று பாருங்கள்.

முதலில் ஒரு பீட்டா(புதிய) ப்ளாகர் கணக்கை துவங்குங்கள். சோதனை வலைப்பதிவொன்றை துவங்குங்கள். சோதனைப் பதிவிடுங்கள். லாக் அவுட் செய்து வெளியேறுங்க்கள்.

பின்னர் Blogger.com ன் முகப்பில் Switch now எனும் பொத்தானை அழுத்தி கணக்கை மாற்றிக்கொள்ளவும்.

இருந்தாலும் 'விதியாகப் பட்டது வலியது... அதை யாராலும் மாற்ற இயலாது'.

Tuesday, January 09, 2007

கில்லி 365

கில்லி துவங்கி வருடம் ஒன்றாகிறதாம். (ஒன்றுதான?)

கில்லி அருமையான முயற்சி. புதுமையானதும்கூட. கில்லியின் பரிந்துரைகள் பல சுவாரஸ்யமானவை.

இப்பெல்லாம் சீரியசா ஒரு பதிவப் போட்டா கில்லி பரிந்துரைக்குமான்னு யோசிப்பேன். பின்னூட்டங்களை விடவும் கில்லி பரிந்துரையோ பூங்காவில் தேர்ந்தெடுப்போ பெரிய பரிசாய் எண்ணப்படும் என்றே நினைக்கிறேன்.

பரிந்துரைகளின் எண்ணிக்கைகள் வரவர குறைந்து போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதை சரி செய்தால் மேலும் எங்காளால் பலன் பெறமுடியும்.

இன்னுமொரு குழு வலைப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லாததாயினும் தனது 5 வருட சேவையை பெருமிதத்துடன் நிறைவு செய்திருக்கிறது. தமிழோவியம் ஐந்து வருடம் இணையத்தில் சேவை புரிந்துள்ளது என்பதை நம்பவே முடியவில்லை. வாழ்த்துக்கள்.

தமிழோவியம் பல பதிவர்களுக்கும் பதிவுகளைத் தாண்டி எழுத வாய்ப்பளித்துள்ளது. இதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும்.

கில்லி போன்றதொரு சேவையை பதிவர்களே தங்களுக்காக செய்துகொள்ளும் வசதி தேன்கூட்டின் பெட்டகத்தில் உள்ளது. இது வந்த புதிதில் பலரும் ஆர்வமாய் பயன்படுத்துவார்கள் என நினைத்தேன். பெட்டகத்தை ஒரு பரிந்துரை தளமாகவே பயன்படுத்த இயலும் என்பதையும் பெட்டகம் பற்றிய என் பதிவில் சொல்லியிருந்தேன். பதிவுகளில் நடக்கும் சண்டைகளை கவனிக்கும் அளவுக்கு நாம் புதிய முயற்சிகளை வரவேற்காமல் விட்டுவிடுகிறோமோ என வருத்தமே மிஞ்சுகிறது.

Tuesday, January 02, 2007

(EX) நட்சத்திரம்

நட்சத்திர வாரம் இனிதே நிறைவுற்றது. வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவிற்கு நன்றி. வாசித்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி.

நண்பர்களின் பேராதரவுடன் சென்ற வாரம் எனக்கு மிக முக்கியமான வாரமாய் அமைந்தது. இன்னும் நிறைய எழுத நினைத்திருந்தபோதும் விழாக்காலத்தில் எழுத நேரமின்மையின் காரணமாய் இயலாமல் போனது. (தப்பிச்சிட்டீங்க!)

போன வாரம் போட்ட பல பதிவுகள் 5 நட்சத்திரப் பதிவுகளாய் வாக்களிக்கப்பட்டிருந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து வந்த பொடிச்சிக்கு வாழ்த்துக்கள்.

நட்சத்திரப் பதிவுகளை மீண்டும் வாசிக்க...

e-த்திச் சூடி
Sad'AM' News
2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்
சுட்டமீனும் சுறாபுட்டும்
நாவல் எழுதுறேங்க....
(மூள) நட்சத்திரம்
(சிரி) நட்சத்திரம்
(விண்) நட்சத்திரம்
(வாள்) நட்சத்திரம்
(வால்) நட்சத்திரம்

இனி பதிவுகள் குறைவாகவே தர இருக்கின்றேன். "கிறிஸ்த்துமஸ் அதுவுமா லாப்டாப்பும் கையுமா கெடக்குறீங்கன்னு" வாங்கின திட்டுல சூடு சொரண எல்லாம் எடை போட்டு பாத்தாச்சு.

குழு பதிவுகளில் தொடரந்து பதிக்க எண்ணம். தமிழோவியத்தில் ஒரு சின்ன தொடர் விரைவில் ஆரம்பம். மொத்தத்தில் ஒரு எழுத்தாளன் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போகிறான். (ஹையோ ஹையோ (அ) ஹையா ஹையா).

போன வாரம் நம்ம நிலமை...


Thursday, December 07, 2006

வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு...

வலைப்பதிவில் புகைப்படம் போடுவது பற்றி பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும். புனைபெயரைப்போல புனை படங்கள் ஊள்ள பதிவுகளே அதிகம். நான் தைரியமாய் என் படத்தை போட்டதன் விளைவு இதோ கீழே.





மூன்றாவது படத்தை யார் இப்படி செய்தார்கள் என்பதை இங்கே போய் தெரிந்துகொள்ளவும்.

இந்த வரைமுறையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

'குறும்பு' தலைப்புல இதுபோல குசும்பு செஞ்சும் பதிவு போடலாமே?


Thursday, November 30, 2006

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன், சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.

மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் இங்கே ஏன் வருகிறீர்கள் என எண்ணியோ என்னவோ நானும் என் நண்பரும் குடும்பங்களுடன் போய் சேரும்போது பூங்காவை மூடியிருந்தார்கள்.

சிவபாலன் வீட்டுக்கு வழிசொல்ல நானும் என் மனைவி, மகனும் போய் சேர்ந்தோம்.

இரண்டு முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. உள்ளே சிவபாலன் உதயக்குமாரோடு பயங்கர விவாதத்தில் இருந்திருப்பார் போல.

'அண்டக்கா கசம் அபுக்கா குசம்..' சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவு திறந்தது.

சிவபாலன். எளிமை இனிமை. அவர் எழுத்தைப் போலவே பட படவென இருக்கிறார் மனிதர். அருமையாய் உபசரித்தார். (பதிவுகள் போலவே) சமூக, அரசியல் விவாதங்களையே விரும்பிச் செய்தார். உண்மையில் அவர் சொல்வதற்கும் அவரின் கொள்கைகளுக்கும் தொடர்புள்ளது என்கிற நேர்மையைப் புரிந்துகொண்டேன்.

உதயக்குமார் எனும் விளையாட்டுப்பிள்ளை வந்திருந்தார். பீர் மணம் மாறாத முகம். (ரெம்ப இளையவர்னு சொல்ல வர்றேங்க) மத்தபடி அவர் சவுண்ட் பார்டின்னு தெரியும் தண்ணி பார்ட்டியான்னு தெரியல. வலைப்பதிவுகளில் சீரியசான இளைஞர். நேரிலும்.

மூவரும் ஏதோ சின்ன வயசுலேர்ந்தே பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள் போல பேசிக் கொண்டோம். வலைப் பதிவுகளில் அப்படி ஒரு அறிமுகம் கிடைக்கிறது. ஒருவரைப் பற்றிய முன் அனுமானங்களை அவரின் எழுத்திலிருந்தே செய்துகொள்ள முடிகிறது(ஓரளவுக்கு சரியாகவே) . சின்னச் சின்ன விவாதங்களே புரிந்தோம். கலந்துரையாடல். சீரியசாக எதையும் விவாதிக்கவில்லை எனச் சொல்லலாம்.

சிவபாலன் மனைவி மசால் வடை பரிமாற சந்திப்பு சூடு பிடித்தது. அடுத்து டீ இன்னும் இனிப்புடன் உபசரிப்பு தொடர்ந்தது. மசால்வடை போண்டா வடிவில் திரித்து செய்யப்பட்டிருந்தது. (வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இருக்கவேண்டும் எனும் விதிமுறைக்கேற்ப.)

நண்பர்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி. வரும் கோடையில் மெகா சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம்.

வலைப்பதிவர் சந்திப்பு என்பதை விட நண்பர்களின் சந்திப்பு எனச் சொல்லலாம். நிறைவான சந்திப்பு இனிவரும் சந்திப்புக்களுக்கு முத்தாய்ப்பு.

விடை பெறும்போது உதயக் குமார் நண்பர்களோடு கசினோ ராயேல் பார்க்கப் போவதாகச் சொன்னார்.

கூடவே வந்துகொண்டிருந்தார். ஹைவேயில் காரை விட்டபோது காணாமல் போயிருந்தார்.

இன்னும் சந்திப்போம். மகிழ்வோம். (போண்டா) பகிர்வோம்.

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

கரும்பு விலை தன்னாலத்தான் ஏறிப்போச்சுன்னு ஜெ சொல்வது
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.

இந்த மாத தலைப்பு 'குறும்பு'. சும்மா கலாட்டாவா எழுதுங்க.

நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.

பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

Monday, November 27, 2006

நன்றி

நவம்பர் தேன்கூடு போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் போட்டி நடத்திய தமிழோவியம் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் நன்றி.

தேன்கூடு நடத்திய முதல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும் பெனாத்தல் சுரேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது. நவம்பரில் எனது 'சொர்க்கம் இலவசம்' கதைக்கு முதல் பரிசும் அவருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்).

மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி.


கூடவே ஒரு சின்ன போட்டி.

அடுத்த மாதப் போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பை பின்னூட்டுங்கள். கடைசி போட்டி என தேன்கூடு அறிவித்திருப்பதால் சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

தலைப்பு போட்டிக்குப் பரிசு பாராட்டு மட்டுமே. :)

Friday, November 24, 2006

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு

நன்றி அறிவித்தல் விடுமுறையை ஒட்டி சிக்காகோவில் சில பதிவர்கள் சந்திக்கலாம் என இருக்கிறோம். நாளை(11/25/2006) மாலை 4 மணிக்கு சிக்ககோ தாவரவியல் பூங்காவில் சந்திப்பு நடக்க இருக்கிறது. கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தனி (cvalex at yahoo)மடலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பின்னூட்டங்கள் இடவும்.

குறைந்த அவகாசமே தரமுடிந்ததற்கு வருந்துகிறோம்.

Thursday, November 23, 2006

வான்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

நன்றிஅறிவித்தலை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் அமெரிக்ககவில். இதுக்காக குளிர்காலத்தில், வெளியே போகமுடியாதபடியான தட்பவெட்பத்தில் நான்குநாள் லீவ் வேற விட்டுட்டாங்க. Thanksgiving பொங்கலைப் போன்றதொரு திருவிழாவாக உருவெடுத்து இன்று எல்லாத் துறையினரும் குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாக மாறியிருக்கிறது. நவம்பரின் நாலாவது வியாழன் தாங்க்ஸ்கிவிங். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறுசில நாடுகளிலும் thanksgiving கொண்டாடப்படுகிறது.

பொங்கலில் பொங்கல் வைப்பதுபோலவே தாங்ஸ்கிவிங் ஸ்பெஷல் என்னண்ணா வான்கோழி (Turkey) ஒண்ண முழுசா ரோஸ்ட் செய்து குடும்பமா உக்காந்து சாப்புடுறதுதான். டர்க்கி ரோஸ்ட் பண்ணும்போது 'டர்க்கியோ டர்க்கி..டர்க்கியோ டர்க்கி..'ன்னு யாரும் கத்தமாட்டாங்க.

வான்கோழி மேல பட்டரத்தடவி, உள்ளார வேண்டிய மூலிக சாமான்கள புகுத்தி நல்ல மணம் வரும்படியா, பேக்கிங் அவன்ல வச்சு ரோஸ்ட் பண்ணவேண்டியதுதான். அட இவ்வளவுதானான்னு கேக்காதீங்க.

இங்கே போய் பாருங்க.

பி.கு: எல்லாரும் அது எப்படி செய்வது இது எப்படி செய்வதுன்னு போடுறாங்களேன்னு நெனச்சதுல வந்தது இந்தப் பதிவு.

சிறில் அலெக்ஸ்