.

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, September 05, 2007

தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?

என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா...படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ட - டயர்
வ - வல்கனைசிங்

ஐ - ஐஸ்கிரீம்
ப - பலூடா

ஏ - ஏரோபிளேன்
ஓ - ஓம்னி பஸ்
கலர் கிளி
கறுப்பு வெள்ளை காகம்
வான்கோழி பிரியாணி சாப்பிட்டதில்லையா இவரு?

Monday, July 02, 2007

ஷங்கரின் அடுத்த படம் கதை தயாராகிவிட்டது

இயக்குநர் ஷங்கர் சிவாஜிக்கு அடுத்ததாக எடுக்கப்போகும் படத்தின் கதை இப்போதே லீக் ஆகிவிட்டது.

ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு 'பாதிக்கப்பட்ட' உதவி இயக்குநர் 'தட்டிக்' கேட்டால் எப்படி இருக்கும்.


திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். 'நான் ஆணையிட்டால்' பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் தலைவர் வசனம் பேச ஆரம்பிக்கிறார்.

"டேய் மூதேவி. இதுவரைக்கும் எத்தன படம் எடுத்திருக்க?"
கட்டிவைக்கப்பட்டிருப்பவர் வலியால் முனகுகிறார்.
"சொல்லமாட்ட?" எம்.ஜி.ஆர் முகம் சிவக்கிறது. சிவப்பு வெளிச்சம் முகத்தில் அடிக்கிறது. சாட்டை சுழல்கிறது.
"நாலு.. நாலு படம் எடுத்திருக்கேன்"
"ம்.. ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவு?"
"முதல் படம் 10 கோடி, ரெண்டாவது 25, முணாவது 40 4வது 60 கோடி."
சாட்டை சுழல்கிறது.
"இல்ல 70.. 70"
"எத்தன கோடி லாபம் பாத்த?"
"நூறு கோடிக்கும் மேல."
"எத்தன கோடி கணக்குல காமிச்ச"
"25"
"அடப்பாவி."
"ஊர்ல ஒலகத்துல இல்லாததயா நான் செஞ்சுட்டேன். ஒவ்வொரு எம் எல் ஏவும் எவ்வளவு சம்பாதிக்கிறான், மந்திரி, எதிர்கட்சி, வட்டம், மாவட்டம்ணு அரசியல்ல என்னவெல்லாமோ நடக்குது."
"டேய் அதெல்லாம் தட்டிக்கேக்க அன்னியன், இந்தியன் தாத்தா, முதல்வன் எல்லாம் இருக்காங்கடா ஆனா உன்னப்போல அநியாயம் செய்யுற சினிமாக்காரங்கள தண்டிக்கத்தாண்டா நான் இருக்கேன்."
"நீ யாரு"
"இயக்குனன் ஹா ஹா ஹா" சிரிப்போடு சீன் மறையுது. பெயர் போட ஆரம்பிக்கிறாங்க.

படம் பேரு 'இயக்குனன்'

இயக்குனனோட ஸ்டைல் என்னண்ணா அளவுக்கதிகமா காசப்போட்டு படம் எடுக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அவங்களுக்கு பணம் குடுக்கிற கந்துவட்டிக்காரர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளி ஒரு 'மெசேஜ்' சொல்ல வர்றாரு. ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு வேஷத்துல வருவாரு. அதாவது முதல்ல எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி வந்தார்ல அதுபோல 16வயதினிலே கமல், பாட்சா ரஜினி, கடலோரக் கவிதைகள் சின்னப்பதாஸ், கட்டபொம்மன் சிவாஜின்னு பல வேஷங்களில் வந்து கொலை செய்வார்.

ஏன் இயக்குனனுக்கு இந்தக் கொல வெறி?

வழக்கம்போல ஒரு கிராமத்துப் பின்னணி ஃப்ளாஷ் பேக்.. எடுத்துக்காட்டு.

கிராமத்துல சினிமாக் கொட்டக முன்னால இட்லிக் கட வச்சிருக்கிறாங்க இயக்குனனோட அம்மா. அவங்க எவ்வளவு சினிமா பைத்தியம்ணா, ஊர்ல இருக்கிற அவங்க பண்ண வீட்ட வித்துட்டு சினிமா தியேட்டர் முன்னால கட வச்சிருக்காங்க. பாட்டுக்குள்ளாக அவங்க இட்லிக்கடையில எப்படி சந்தோஷமா இருக்காங்கண்ணு காமிக்கிறாங்க. பிரமாண்டத்துக்காக தங்க இட்லித் தட்டுல அவங்க இட்லி அவிக்கிறதா காமிக்கிறாங்க. பண்ண வீட்ட வித்த காசையெல்லாம் வச்சி கலக்குறாங்க. ரெண்டு ரூபா வடையிலேந்து எண்ணைய பிழிஞ்சு எடுக்கிறதுக்கு 100 ரூபா நோட்ட குடுப்பாங்க. அம்மாவோட சினிமா பைத்தியத்துல சொத்தெல்லாம் கரைஞ்சுடுது. அப்பா குடிக்கிறதுக்குண்ணு வச்சிருந்த காச எடுத்து சினிமாவுக்குப் போறாங்க. அப்பா துக்கம் தாங்காம சினிமா கட் அவுட்ல தூக்குல தொங்கி எறந்து போறாரு. ஒரு கட்டத்துல அம்மாவுக்கு சினிமா பைத்தியம் முத்திப் போயி பசங்களோட பாடப் புத்தகங்கள கிழிச்சி ஹீரோ அறிமுகக் காட்சியில பேப்பர் தூவுறதுக்கு எடுத்துட்டுப் போறாங்க. இதுனால பசங்க படிப்பு கெடுது. இயக்குனன் குறைஞ்ச படிப்ப வச்சிட்டு நிறைய சம்பாதிக்க என்ன வழின்னு யோசிக்கிறான்.

அவன் அம்மா தலைவர் படத்துக்கு வச்சிருந்த முதல் ஷோ டிக்கெட்ட ப்ளாக்ல வித்து 'சென்னைக்குப் போய் ஒரு பெரிய இயக்குநர் ஆயிடுப்பான்னு அனுப்பி வைக்கிறாங்க'. மிகவும் சோகமான காட்சி. "அம்மா ஒன்னோட டிக்கெட்ட வித்து...?" உருகுகிறார் ஹீரோ. அம்மா ஒரு சி.டிய எடுத்துக் காமிக்கிறாங்க. "திருட்டு வி.சி.டில நேத்தே பாத்துட்டேன்பா."

சினிமாவால பாழான தன் வாழ்க்கைய சினிமாவாலயே மீட்டெடுக்க கனவோடு சென்னைக்கு வர்றான்.

சினிமா உலகத்துல இவனோட சிம்பிள் கிராமத்து கதைகளை படமா எடுக்க யாரும் முன்வரல. எல்லாரும் ஹீரோவ பச்சையா காமிக்க முடியுமா?, இந்துமா சமுத்திரத்த செட்டிங் போட்டு பாட்டு செய்ய முடியுமா? நிலாவுல லொக்கேஷன் பண்ணலாமாண்ணு இவன டார்ச்சர் பண்ணுறாங்க.

ஒரு கட்டத்துல இயக்குனன் இது வேலைக்காகாது ஏதாவது பிசினஸ் பண்ணலாமாண்ணு பேங்க்ல போய் லோன் கேக்கிறான். பேங் மேனேஜர் இவனத் திட்டி வெளிய விடுறார். இவன் ஜன்னல்வழியா பாக்கும்போதே ஒரு ப்ரொட்யூசருக்கு கோடிக்கணக்குல காச அள்ளிக்குடுக்கிறாரு மேனேஜர். இதேபோல ஒரு கந்து வட்டிக்காரரும் சினிமாவுக்கு காசு குடுக்கிறாரு ஆனா இவனுக்கு மறுக்கிறாரு. அதுலேந்து சூடாகிறான் இயக்குனன்.

சுஜாதா டையலாக் சூடு பறக்குது.
"இண்ணைக்கு இந்தியாவுல ஒரு வருஷத்துக்கு இத்தன படம் எடுக்கிறாங்க. தமிழ்ல எடுக்கிற படங்கள் இத்தன, அதுக்கு ஆகிற செலவு இத்தன, இதுல பேங்க் லோன் இவ்வளவு, சேட்டு இவ்வளவு, கந்து வட்டி இவ்வளவு, ப்ரொட்யூசர் சொத்த வித்தது இவ்வளவு. படத்துக்கு A செண்டர்ல 10% வருமானம், Bல 10% மீதி 80% C, D செண்டர்லேந்து வருது. ஏண்ணா திருட்டு சிடி அவங்களுக்கு கிடைக்கிறதில்ல. இந்த C,D செண்டர்ல உள்ளவனுக்கு மாத வருமானம் இவ்வளவு, அவனுக்காக அரசாங்கம் செலவு செய்யுறது இவ்வளவு கோடி, அங்க நடக்குற தோழில் முதலீடு இத்தனகோடி... அப்படி பாக்கும்போது கிராமங்கள்ல நடக்கிற தொழில் முதலீட்ட விட அவங்க பாக்குற சினிமாவ்ல முதலீடு அதிகமாயிருக்குது.." அப்படியே புள்ளிவிபரங்கள அடுக்குறார் சுஜாதா.

"சினிமாவுல முதலீடு குறஞ்சா வங்கிகள் என்ன மாதிரி தொழில் செய்யுறவங்களுக்கு கடன் தரலாம்ல, ்தரலாம்லதொழில் முதலீட்டுக்கு கந்துவட்டிக் காரன் குறஞ்ச வட்டியில கடன் தருவான்ல?" இதுதான் படத்தின் மையமா இருக்குது.

க்ளைமேக்ஸ்ல 'இயக்குனன்' சீர்திருத்தத்த கொண்டு வர்றான். மக்களெல்லாம் சினிமாவுக்கு ஒருதரம் போய் பாத்துட்டு அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. ரசிகர் மன்றங்கள் ஒவ்வொண்ணா குறையுது, எல்லாரும் வங்கி, தனியார்கிட்ட கடன் வாங்கி சிறப்பா தொழில் செய்யுறாங்க.

அதோட படம் முடியல.. கடைசியா ஒரு ட்விஸ்ட் பண்ணுறார் டைரக்டர். டி.வி.யில வரக்கூடிய செல்வி, செல்வி, செல்வி பாட்டு கேக்குது, திரையில செல்வியா ராதிகா வர்றாங்க. "நீதானேடா சீரியல் டைரக்டர்? சீரியல எப்ப முடிப்ப?" கத்திய ஓங்க. 'சினிமா கில்லர சீரியல் கில்லராக்கிட்டீங்களே'. படம் முடியுது.

Friday, June 08, 2007

பதிவர்களுக்கான புத்தகம் அறிமுகம் - Pure ஜல்லி


பின்குறிப்பு: இந்த புத்தகத்தை எழுதியவர் பாஸ்டன் பாலா அல்ல பால பாரதியும் அல்ல.

தொடர்ந்து ஜல்லி பதிவுகள்னு கவலைப் படாதீங்க மக்களே! இப்போ இதுதான் முடியுது!

Wednesday, May 23, 2007

பூவானது மனம்

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவு

அன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன்.

பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். (அட மானசீக குருக்களா.. எங்கிட்ட இருக்கிறது ரெண்டே ரெண்டு கட்ட வெரல்தான் அத கட் பண்ணிரமாட்டீங்களே?)

பாடல் போடணும்னு தோணியதுக்கு காரணம், கையில நேரமிருந்துச்சு, வீட்ல (அப்ப) யாருமே இல்ல, முக்கியமா கம்போஸ் பண்ணி போட்டிக்கு அனுப்புறது சிரமமான வேலை அதனால நிறையபேர் செய்யமாட்டாங்க. அப்ப இண்டர்நேஷனல் லா ஆப் நிகழ்தகவுப்படி வெற்றி வாய்ப்பு அதிகம்.

சரின்னு 2வது மாடி பால்கனிலேந்து யோசிச்சதுல ஒரு கவித வந்துச்சு. தனிமைய ஹீரோ எஞ்ஞாசாய் பண்ணுறப்ப பாடுறமாதிரி ஒரு பாட்டு. நம்ம நிழல்கள் 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' மாதிரி.

'பூவானது மனம்,
வண்டாயிரம் வரும்,
தேனூறிடும் நிதம்'

முதல்ல மெட்டோட இதத்தான் போட்டேன். அடுத்த சில மணி நேரமா வேறெதுவும் தோணல. இதையே பாடினேன்.

மீண்டும் பால்கனி.

கீழே புல்வெளி. மெலிதாய் காற்று. மரங்கள் அசைய ஆரம்பித்தன. பறவைகள் பேச ஆரம்பித்தன. கவிதை பிறந்தது. (செம பில்ட் அப் மச்சி).

'இயற்கையை பாடவே, இதயமும் பூக்குதே' ஆரம்பிச்சேன்.

'கடவுளின் சாயலா? - இயற்கை கனிமக் கூடலா?' ம்ம்.. சரியில்ல
'கடவுளின் சாயலா? - இயற்கை கவிதைக் கூடலா?' ஓகே.

இன்னும் சில வரிகள்.

என்னுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்கு லேப் டாப்ப எடுத்துட்டு போய் ரெக்கார்ட் பண்ணினேன். அப்புறம் Flush பண்ணிட்டு வெளிய வந்துட்டேன். ஏன்னா நான் ரெக்கார்ட் பண்ணினது பாத்ரூம்ல வச்சி. அங்கதான் வெளி சத்தம் குறைவா கேக்கும்.

போட்டிக்கு பாடல் போய் இப்ப இரண்டாம் பரிசு பெற்றிருக்குது.

சும்மா சொல்லக்கூடாது போட்டியில மற்றபாடல்களெல்லாம் தூள். அருமையா மெட்டமைத்து, ப்ரொபஷனலா (பாத்ரூம் அல்லாத) ரெக்கார்டிங் செஞ்சு, இசை சேர்த்து கலக்கியிருந்தாங்க.

அன்புடன் போட்டி அறிவிப்புக்கள் ஒவ்வொண்ணா வருது. முதல்ல இயல் கவிதை மாலன் நடுவராயிருந்தார். இரண்டாவது ஒலிக்கவிதை. இதுல என் கவிதை இடம்பெறல. ஆனா குழப்பத்துல நான் வெற்றி பெறலண்ணு நினச்சு அன்புடன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள கண்டபடி திட்டிட்டேன்...மானசீகமாத்தான்.

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் சேதுக்கரசி, கவிஞர் புகாரி, ப்ரியன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் இன்னூம் தூள் கிளப்பிடலாம்(அந்த நேரம் நான் வீட்ல தனியா இருந்தா).

ஷங்கரின் சிவாஜிக்கு அடுத்த படமான 'பதிவன்' படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர். ('பதிவன்' - The Post.)

இந்த பாட்டுக்கு இந்த பில்ட் அப் தேவையான்னு நீங்களே கேட்டு முடிவு பண்ணுங்க.

வர்ட்டா... 'அவசரமா' ரெக்கார்டிங் இருக்குது. ஹி ஹி ஹி.


poovanathu -comp
poovanathu -comp.w...
Hosted by eSnips


பாடல் கேட்க மேலே சுட்டுங்க

பூவானது

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே
மலை தரும் பாடங்கள் என்ன

மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது
0
துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோஷம் கொள்ளுதே

அள்ளி அள்ளி வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால் கண்ணீரைச் சிந்துதே

வன்முறைகள் தேவையில்லை சொல்லாமல் சொல்லுதே
வானத்தில் ஏறிவரும் மேகங்களும்

யாருக்கும் தடையின்றி மழை பொழியும்

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதை கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா
பூவானது மனம்

வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது ...

புகாரியின் பாராட்டு

அன்பின் சிறில் அலெக்ஸ்,
கலக்கிட்டீங்க போங்க!
இயற்கையைப் போற்றும் இந்த அருமையான கவிதையையும் எழுதி மெட்டும் போட்டு அழகாய்ப் பாடியும் இருக்கிறீர்களே, அடடா!
பாட்டு ஓய்ந்தபின்னும் கேட்டுக்கிடக்கிறது என் செவி!
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, இசையமைத்து, பாடலாய்ப் பாடி தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி


நடுவர் இசைக்கவிஞர் இரமணன் மதிப்பீடு
1 பூவானது
கணப்பொழுதும் இடைவெளியின்றி இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கும் பாடங்களைக் கேட்குமாறு இந்தப் பாடல் பணிக்கிறது. சன்னமான சொற்கள்; பொருத்தமான மெட்டு; 'கடவுளின் சாயலா? இயற்கை கவிதைக் கூடலா?' என்பது இந்தப் பாடலின் ஜீவ வரி. இனிய கவிதை இது.
இயற்றியவரே மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும், உணர்ச்சி, அவர் குரலைக் கேட்கும்படிச் செய்கிறது.


//அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும்,//
:(((

Monday, March 26, 2007

கிரிக்கமெண்ட்ஸ் = கிரிக்கெட் + கமெண்ட்ஸ்

உலகக் கோப்பை பற்றிய கசப்பான நினைவுகளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போதே நம் பதிவர்காள் தொடர்ந்து 'சற்றுமுன்னில்' விட்டுக்கொண்டு வந்த பின்னூட்டங்களில் சுவாரஸ்யமானவை சிலவற்றை கீழே தொகுத்துள்ளேன். சற்றுமுன் குழு இதை சிறப்பாக செய்திருந்தது. ஏதோ பதிவர்கள் எல்லாருமே சேர்ந்து மேட்ச் பாத்ததுபோல அமைந்திருந்தது. Over to கிரிக்கமெண்ட்ஸ்.

sksanu said...
191க்கு இந்தியா ஆல் அவுட்!என்னத்தெ சொல்றது.இவங்களையெல்லாம் சக்கரைத் தண்ணியத் தெளிச்சு எறும்புப் புத்திலெ தூக்கிப்போடணும்.

ஜோ / Joe said...
கிரிக்கெட் கடவுள் 26 பந்துகளில் 7 ரன் ,பங்களாதேஷுக்கு எதிரே .ஹும்.பொதுவா இந்தியா செத்த பாம்பை நல்லா அடிப்பாங்க .ஆனா இங்கே பங்களாதேஷ் செத்த பாம்பு இல்லை போலிருக்கு.

தம்பி said...
நம்ம பொழப்புதான் சிரிப்பா சிரிக்குதுன்னா அங்க பாகிஸ்தான் பொழப்பு குய்யோ முறையோ அழுவுது. என்ன நடக்குதுன்னே தெரில

bangalorean said...
வருத்தமான செய்தி : பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிவாஜிநகர் பக்கம் அதிகமான போக்குவரத்து நெருக்கடி. பங்களாதேஷ் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும்போதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருக்கிறோமா என்றே சந்தேகம் :(

ஆன்லைன் ஆவிகள் said...
ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

தென்றல் said...
பங்களாதேஷ்: 60/1/(11 ஓவர்;5.45RR)/ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் .../ஏங்க... இருக்கிற tension பத்தாது-னு....

சிறில் அலெக்ஸ் said...
Bangladesh 54-1 these guys are playing great. hitting easy boundries. Sixes, yes I said sixes.Pathetic.We will face Pakistan's fate against West Indies, only it is Bangladesh.

icarus prakash said...
தமீம் நாலும் ஆறுமாக விளாசுகிறார். CRR : 5.5. சான்ஸே இல்லை... எல்லாரும் டீவியை ஆஃப் பண்ணிட்டுப் போய் படுங்க,.

தம்பி said...
Patel to Iqbal, THATS OUT!! Caught!!

icarus prakash said...
இருந்தாலும் டவுட்டுதான்..... அடுத்த அஞ்சு ஓவருக்குள்ளே இன்னும் ரெண்டு மூணு விக்கெட் எடுத்தா சான்ஸ் இருக்கு

icarus prakash said...
ச்சேஎ... கேவலமான டிராப்..., தோனி கொஞ்சம் ஒழுங்கா விளையாடுப்பா

cricket said...
prakash: what do you think abt paki innings

icarus prakash said...
i was shocked , to say the least

cricket said...
impossible : victory is far away. current runrate is about 5+ runs a over and bangladesh looks very possitive

cricket said...
gonna sleep now. there is no point in watching the match. waste of time

தம்பி said...
//பங்களாதேஷ் இந்தியாவிற்கு நல்லதொரு சுண்ணாம்பு தடவி வீட்டிற்கு அனுப்ப பார்க்கறாங்க...//யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!

Anonymous said...
// தம்பி யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!//உண்மைய சொன்னா ஏன் கோபப்படுறீங்கனு புரியல...

bangalorean said...
Holy crap :( i stay near muslims area. lots of crackers :( when ever 4 was hit by bangladesh ashamed

தம்பி said...
நாளைக்கு தினத்தந்தி நியூஸ்.பயந்து பம்மிய இந்தியாபாய்ந்து குதறிய பங்களாதேஷ்

Vicky said...
// kadavuLE ipadiye pochunna chance irukku

Dravid: இன்னுமா இவங்க நம்மள நம்பறாங்க
Zaheer: அது அவங்க தலைவிதி தல

சிறில் அலெக்ஸ் said...
Another good boundry..Who is the underdog hereoh make it two.Bangladesh Sure to win.:)India is the new Bangladesh.

Radha Sriram said...
how cruel can you get??! (no smiley!)

Anonymous said...
saga pora nerathula sankara sankara ... oru wicket pochchu

சிறில் அலெக்ஸ் said...
17 from 46 balls. 5 wickets down.Is there hope?

Anonymous said...
ungalukku paiththiyama ? hopes ?? :))

Anonymous said...
tai kannadi potta kunda ippo santhoshama??? :(

(மேலுள்ள கமெண்ட் எனக்கு - :))

"வற்றாயிருப்பு" சுந்தர் said...
இந்த வாணவேடிக்கையை பங்களாதேஷ்கிட்ட காட்டிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!யுவா விக்கெட் விழுந்த அடுத்த பந்துல டெண்டுல்கள் ஒரு 4. அப்றம் 1. 396 ஆயிடுச்சு. 400 உறுதி.

சிறில் அலெக்ஸ் said...
இன்றைக்கு மழை வரப் போவுதுங்க.இந்தியா சூப்பர் 8 போறது ரெம்ப சந்தேகம்.. என்னை நீங்க சபிச்சாலும் பரவாயில்ல.ஒரு பெட்டிங் வச்சுக்கலாமா?:)

மணிகண்டன் said...
ரெண்டு முறை LBW ஆகி, மூன்றாவதாக பேட் செய்ய கிடைத்த வாய்ப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெயசூரியா. நல்லாயிருங்க அம்பையர்ஸ்.

சிவபாலன் said...
சிறில்என்ன இப்படி டென்சன் ஏத்திறீங்க.. நம்ம ஆளுங்க இன்னை தோத்துட்டா .. அவ்வளவுதான்.. :)

மணிகண்டன் said...
எனக்கென்னவோ அப்பையர்களையும் சேர்த்து இலங்கைக்கு 13 பேர் ஆடறாங்களோன்னு தோனுது.அம்பையர் ஹார்ப்பர் டவுன் டவுன்!

சிறில் அலெக்ஸ் said...
அங்க பெவிலியன்ல நம்ம க்ரெக் சாப்பல் கழுத்த தடவிகிட்டு உக்காந்துகிட்டிருக்காராம்.:))

மணிகண்டன் said...
//சிபா,என்ன கேள்வி இது. பங்களாதேஷ் கிட்ட அந்த அடி அடிச்சிட்டு அடுத்த மேட்சல இப்படி யாராவது தடவுவாங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவிங்க சி.பா //

சந்தோஷ்,
நீங்க சொல்றது படி பார்த்தா ஒரு அணி தடவிகிட்டே தான் இருக்கனும், இல்லை அடிச்சிகிட்டே தான் இருக்கனும். எந்த டீமும் ஒரு நாள் ஆடின மாதிரி இன்னொரு நாளும் ஆட முடியாது. அப்படி ஆடினா அவங்க வின்னிங் % 100 இருக்கனும். ஆஸ்திரேலியாவொட வின்னிங் % கூட கிட்டத்தட்ட 63% கிட்ட தான். இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? (உங்களைன்னு சொல்லலை பொதுவா ஃபிக்ஸிங்னு சொல்ற எல்லாருக்கும் சொல்றேன்)

சிறில் அலெக்ஸ் said...
//இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? //க்ரெக் சசப்பலின் நிலமை என்னவாகும்ணு தெரியவேண்டாமா?க்ரிக்கெட்ட பொறுத்தவரைக்கும் நீங்க தீவிர பக்தர் நான் நாத்திகன் ஆயிட்டேன்.:)

VSK said...
Dravid's gamble with Ganguly paid off!!Sanggakara out caugt Patel bowled BT[Bengal Tiger]:))

சிறில் அலெக்ஸ் said...
//Dravid's gamble with Ganguly paid off!!//some one agrees it is all Gamble.:)

Boston Bala said...
---இந்தியாவிற்க்கு முதல் மாட்ச் அவுஸ்திரேலியாவோ, தென்னாபிரிக்காவோதான். ---இந்த மேட்சையே பிக்ஸ் செய்யறப்போ, அடுத்த ஆட்டத்தையும் 'வாங்கிடலாமே' ;))

Anonymous said...
எப்படியும் இலங்கையைத் தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவும்.தமிழனைக் கொல்லும் நாடு வெற்றியடையக் கூடாது.ஒரு இலங்கைத் தமிழன்

VSK said...
இங்கே இருக்கறவங்க[பின்னூட்டம் போடறவங்க] எல்லாரும் இது மேட்ச் ஃபிக்ஸிங்னு முடிவு பண்ணிகிட்டு பின்னூட்டம் போடற மாதிரி இருக்கு.இது நல்லால்லே!சொல்லிட்டேன்!இந்தியா மேலியும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கப்பா!தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!:))

Boston Bala said...
---தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!---அதானே.. நானும் இதையேத்தான் சொல்றேன் :Pஎன்ன திறமை என்பதில்தான் இரு அணியினரும் வேறுபடறாங்க ;)

சந்தோஷ் aka Santhosh said...
//Depending on spinners at the 47th over??What the hell is Dravid thinking?bad.... very baaaad!//டென்ஷன் ஆகாதிங்க SK. அவங்களும் எம்முட்டு நேரம் தான் நல்லா விளையாடாத மாதிரி நடிக்க முடியும் சொல்லிங்க. அவங்களை அடிங்கடா அடிங்கடான்னு சொல்லி நம்ம ஆளுங்க பவுலிங் போட்டா அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லுங்க.

Boston Bala said...
---Depending on spinners at the 47th over??What the hell is Dravid thinking?---அதே... அதே! அகர்கர் எதற்கு இருக்கிறார்?அவர்தானே ரன் தானம் தரவேண்டும் ;)

மணிகண்டன் said...
Good competitive score. chances are 50-50. For match fixers 100-0 in favour of India :)

தமிழ்பித்தன் said...
//இம்முட்டு அடிச்சா அப்புறம் இந்தியா எப்படி ஜெயிக்கிறது. ஒரு வேளை அவ்வுளவு அடிச்சா bermuda bowlers வந்து பவுலிங்க் போடுவாங்களோ?//நானும் இதைத்தான் நினைத்தேன் அவர் கேட்டுட்டார் ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கையரின் பந்தா அல்லது இந்தியரின் பட்டா என்று?

அவந்திகா said...
:-)))..காலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்so கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம்

icarus prakash said...
அப்படிப் பார்த்தா டாஸ் கூட நாமதான் கெலிச்சோம்... சூப்பர் எட்டுக்கு நேராப் போய்டலாமா? :-)

மணிகண்டன் said...
Looks like good solid start by India..keep up the good work India!

மணிகண்டன் said...
கமெண்ட் போட்ட நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்..உத்தப்பா அவுட்.

Boston Bala said...
ஏன் இந்தியா கெலிக்கும்1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...

Boston Bala said...
---நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..---சித்து சொன்னது: 'விக்கெட் என்பது வீட்டுக்கரசியைப் போல; எப்போது எப்படி திரும்பும் என்று சொல்லவே முடியாது'

சந்தோஷ் aka Santhosh said...
ஆட்டம் அங்க சூடு குறையுது. பாபா இங்க பட்டையை கிளப்புறாரு. :)).

சிறில் அலெக்ஸ் said...
மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..:)

சந்தோஷ் aka Santhosh said...
//மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..:)//அலெக்ஸ் அவங்களும் எம்முட்டுடோ டிரை பண்றாங்க பவுலிங்கை சுமாரா போட முடியலை அவங்களுக்கு நல்லா போட்டே பழக்கமாயிடிச்சி.


சிவபாலன் said...
சாப்பலின் கழுத்து காலி.. டிராவிட்டின் கடைசி போட்டி..கேப்டனாக..அட போங்கப்பா..இன்ன நோ கமன்ட்ஸ்.. இந்தியா ஜெயித்தா வருவேன்..


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(போலி)செய்தி: சேப்பல் ஓட்டம். விமானத்தின் இறக்கையை பிடித்துக்கொண்டு பறந்தார்.


சிறில் அலெக்ஸ் said...
குங்குமம் இந்த வாரம்: சேப்பலின் கழுத்து தப்புமா? கேட்கிறார் மேட்ச் ஃபிக்ஸ் செய்பவர்.சச்சினுக்கு முட்டை பிடிக்கும். ஸ்கோர் கீப்பர் சுவாஇயான பேட்டி.பெர்முடாவிடம் ஜெயித்தது எப்படி? கணிக்கிறார் ஜோதிடத்திலகம் சுந்தரம்


-L-L-D-a-s-u said...
கை அரிக்குது .. அடுத்து எங்கே பின் ஊட்டம் இடுறது ..மணிகண்டா, போஸ்ட மாத்து


சந்தோஷ் aka Santhosh said...
Commentator "Terrific batsman Shewag".shewag "இப்படி ஏத்தி விட்டு உடம்பை ரணகளம் ஆக்குறதே இவனுங்களுக்கு வேலையாப்போச்சி"காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:1. மணிகண்டன்.2. SK3.Icarus prakash


ரவிசங்கர் said...
44 comments..பட்டைய கிளப்பும் போல இருக்கே சற்றுமுன் updates ! live commentary மாதிரி மக்கள் பின்னூட்டத்தில் பூந்து விளையாடுகிறார்கள் !!


-L-L-D-a-s-u said...
குரங்கு ராதாவுக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஐ.சி.சி பரிந்துரை


சிறில் அலெக்ஸ் said...
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி

என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை

தங்கச்சி அழாதம்மா..அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.

பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?

மணிகண்டன் said...
எப்பா யாராவது ஷேவாக்குக்கு பேட்டை கீழே வச்சுகிட்டே ஓட கத்துக்குடுங்கப்பா


மணிகண்டன் said...
//how can we watch this match live? //why do you want to watch this match live?


சிறில் அலெக்ஸ் said...
//மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும். //சந்தோஷ்.. என்னது இது.. நம்பிக்கை நாயகமா நீங்க..சைட் பெட்டிங் இந்தியா 200 தாண்டாது..


சிறில் அலெக்ஸ் said...
//Amit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.from cricinfo //Amit is a match fixer from Mumbaifrom satrumun(fake) news.


சிறில் அலெக்ஸ் said...
கவுண்டமணி: டேய் என்னடா டி.வி முன்னால உக்காந்துகிட்டு அழுதுட்டிருக்கீங்க. காந்தி செத்து பல வருசம் ஆவுதேடா?வடிவேலு: அண்ணே வேணாம் சிரிச்சுருவேன்.. வேணாம்.


சந்தோஷ் aka Santhosh said...
தோனி "ஏற்கனவே விட்டை ஒடச்சிட்டாங்க இப்ப என்ன உடைக்கப்போறாங்களோ தெரியலையே?"அப்படிங்கிற கவலையோட போறாரு.


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(Faking news) தோனி வீடு காலி செய்யப்பட்டது.. காலின்னா 'காலி'


சந்தோஷ் aka Santhosh said...
இந்த கமெண்டேட்டருங்க அடிக்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. போன drinks breakல போயி டிராவிட்டே துணியெல்லாம் pack பண்ணி எடுத்து வெச்சிட்டாரு. இந்த commentators ஜெயிச்சிடுவாங்கன்னு இன்னும் செல்லிட்டு இருக்காங்க.


சந்தோஷ் aka Santhosh said...
எனக்கு தெரிஞ்சி உத்தப்பாவோட பேரை மாத்தினா சரியாப்போயிடும்மு நினைக்கிறேன். எல்லாரும் அவரோட பேரை ஊத்தப்பா ஊத்தப்பான்னு சொல்றாங்க அதனால அவரு விளையாடுற மேட்சு எல்லாம் ஊத்திகிதோ? பேரை மாத்து பேரை மாத்து.


அவந்திகா said...
''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''இது என்னமோ அம்மா சொல்லீட்டு சிரிச்சாங்க..எழுதி வாங்கீட்டு வந்து டைப் பன்ணி இருக்கேன்..உங்களுக்கு புரிஞ்சா சிரிங்கஇப்ப இதுக்கு meaning கேட்டா அடிக்க வந்துடுவாங்க


சந்தோஷ் aka Santhosh said...
//நாமக்கட்டி விலை குறையும்//-- தினமலர் செய்தி.இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி.


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(Faking news) சச்சினின் டூத் ப்ரஷ் காணவில்லை. வீட்டுக்கு பொருட்களை அடுக்கி வைக்கும்போதூ தேடினார். 'ஊத்த'ப்பாவை சந்தேகிக்கிறார்கள்.


அவந்திகா said...
Anna even if India looses..SATRUMUN has won...everyday it strikes a centuryCONGRAAAAAAAATS SATRUMUN..:--)))....


சிறில் அலெக்ஸ் said...
பஞ்ச் லைன்ஸ்:

ரஜினி: நான் ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்தது மாதிரி.
கமல்: அவன நிறுத்தச் சொல்லு.. சும்மா விக்கட் எடுத்துகிட்டே இருக்கானே அவன நிறூத்தச் சொல்லு.
விஜயகாந்த்: தெருவுல வெளயாடிட்டு டீமுக்கு வர்றவனுக்குத்தான் தெரியும் சும்மா ரெக்கமெண்டேசன்ல வந்தவனுக்கெல்லாம் இப்படிதான்.
சத்யராஜ்: அட கிரிக்கட்டையே புரிஞ்சிக்கமாட்டீங்குறீங்களே.. அவுட்டு அவுட்டு(தகடு தகடு ஸ்டைல்ல).
வடிவேலு: இத்தன விக்கட் விழுந்தும் நின்னு 4 அடிக்கிறாரே இவரு எவ்வளோ நல்லவருடா.:))

கவிதா said...
Boost is the secret of our Energy !!!


Anonymous said...
இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?



சற்றுமுன்னின் முயற்சியில் பங்கெடுத்த பதிவர்களுக்கும் அனானிகளுக்கும் நன்றி . இந்த முயற்சியை துவக்கியவர் சற்றுமுன் உறுப்பினர் பதிவர் சிந்தாநதி. பாராட்டுக்கள்.

அப்டியே போய் நம்ம மனிகண்டன் விரக்தில ஒரு பதிவு போட்டு கலாஞ்சிருக்காரு படியுங்க.
அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

.

Wednesday, February 14, 2007

கொசுபுடுங்கி கவிதை

கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு இருந்தாலும் ஐடியா நல்லா இருந்ததால கீழ உள்ள கவிதையப் போட்டேன். (அடடா பின்னூட்டங்கள பதிவாப் போட்டாலே சீக்கிரம் 400 போட்டிரலாம்போல).

காதல் பரிசாய்
உறிஞ்சிக் கொடுத்தேன்
ஒரு துளி இரத்தம்

தியேட்டர் போகலாம் என்றாள்.

மூட்டை பூச்சிகளோடு
மோத வேண்டாம்என்றேன்.

பீச்சுக்கு? என்றாள்
ஈக்கள் இருப்பது போதாதா அங்கே

பார்க்?

காதலர்கள் அங்கே கூடினால்
காவல்துறை நசுக்கிவிடும்

அவள் சொன்னாள்
come on darling B+.


+ = (Positive)
============

மணிகண்டன் கேள்விகளுக்கு என் பதில்

மணிகண்டன் கிரிக்கட் கேள்விகளக் கேட்டு ஒரு பதிவு போட்டிருக்கார்...பின்னூட்டமாய் நான் அளித்த பதில்கள்.

எல்லாமே சரியான விடைகள்.

1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?
அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச்

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லது
அமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும்

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?
ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?
ஓப்பனிங் பௌலர்

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?தொடர்ந்து நல்லா ஆடியவர்

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?
டெஸ்ட் போட்டி அதிகமா ஆடறவங்க 'வீரர்' இல்ல

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?
அட இந்தியராத்தான் இருக்கணும்

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?
சரியா மெயிண்டைன் பண்ணாத மைதானம்

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?
ஓடத் தெரியாதவர்

10. 'Obstructing the Field' என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?
தடி மாடு

எப்டி நம்ம க்ரிக்கட் அறிவு?

Sunday, February 11, 2007

ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50" ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது.

இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.

இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். "இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. 3. சமமாவது" (All results are possible now. Srilanka may win, India may win or it may be a tie). இந்த சாத்தியங்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இல்லையா? விளையாட்டில் இது மூன்றைத் தவிர வேறென்ன சாத்தியங்கள்? மழை வராததைச் சொல்லுகிறாரோ என்னவோ.

இன்னுமொன்று எல்லா வர்ணணையாளர்களும் போதுவாக பயன்படுத்துவது, "Every run counts from now on", அப்ப இதுக்கு முன்னால எடுத்த ரன் எல்லாம் எச்சில் போட்டு அழிச்சிருவாங்களா?

நம்ம வர்ணணையாளர்கள் செய்யும் இன்னொரு காமெடி என்னண்ணா ஒவ்வொரு ஷாட்டும் பேட்ஸ்மேனும், ஒவ்வொரு பாலையும் அந்த பௌலரும் ஏதோ பயங்கரமா ப்ளான் பண்ணி ஆடுற மாதிரி சொல்றது. உதாரணத்துக்கு ஒரு தடிமனான வெளிப்புற விளிம்பு ஆகுதுன்னு வையுங்க. (திரும்ப படிச்சுப் பாருங்க புரியும்). என்ன அழகா அத அடிச்சார்னு சொல்வாங்க. (Thick outside edge). உண்மையில் பேட்ஸ்மேன் தடுமாறியிருப்பார். பாதி ஓடுனதுக்கப்புறம்தான் பந்து எங்க போனதுன்னு அவருக்கே தெரியும் ஆனா 'என்ன அழகா பந்த திசைதிருப்பி வழிகாட்டினார்'னு வர்ணிப்பாங்க.

அப்பீலுக்கு அவுட் குடுத்தா கட்டம் போட்டு காட்டி அவுட் இல்லன்னு நம்பவைப்பாங்க குடுக்கலேன்னா அவுட்டுன்னு நம்பவைப்பாங்க.

தேவையில்லாம அம்புக்குறியும் வட்டமும் போட்டு ஃபீல்ட் பொசிசன் சொல்லுவாங்க.

இதுகளக் கேட்டு கேட்டு கமெண்ட்ரிக்கு கமெண்ட் அடிச்சிட்டு எப்படியும் கெலிச்சுடலாம்னு இருக்கும்போது...

பேசாம ஒரிஜினல் ப்ளான்படி கேசினோவுக்கே போயிருந்திருக்கலாம். அங்கேயாவது The house always winsனு நமக்குத் தெரியும்.

இதுல புதுசா பவர்ப்ளே(Powerplay)ன்னு ஒண்ணு. நானும் ஏதோ பந்த சும்மா தூக்கிபோட்டு பேட்ஸ்மேன் four, sixனு அடிச்சுத் தள்றதுதான் 'பவர்' ப்ளேன்னு நெனச்சேன். அம்பயர் பெருசா வட்டம் போடும்போதே எனக்குத் தோணியிருக்கணும் அதுல ஒண்ணூமிலேன்னு.

இலங்கை வேகப் பந்து வீச்சாளர் ஒருத்தர் மாங்கா அடிக்கிறமாதிரி போடுறாரு. தலையெல்லாம் டை அடிச்சுகிட்டு வந்தாரே அவர்தான். இவருடைய ஆர்ம் அக்சன் பத்தி யாரும் கமெண்ட் அடிக்கல. ஏன்னா கை வளஞ்சிருக்குன்னு சொல்லி இலங்கைகாரங்க தப்பிச்சுக்குவாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குதுபோல.

கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட 'அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு' சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)

ஸ்ரீசாந்த் அடிக்காமல்போன அந்த சிக்சரால் ஒரு இரவின் விழிப்பு வீணாப் போச்சு. இலங்கை டீம் தளராமல் விளையாடினர். They deserve it man! (or woman!).

Friday, February 09, 2007

ச்ச்சும்மா டைம் பாஸ் மச்சினிச்சி - வலைமுத்து கவிதை

உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா?
உன் டெம்ப்ளேட்டில் நான் கருவியா காலியிடமா?
உன் கருத்துக்களில் நான் சூப்பரா சூனியமா?
உன் கவிதைகளில் நான் கவுஜையா கானாவா?
உன் ஸ்மைலிகளில் நான் :)ஆ :(ஆ?
உன் வாக்குகளில் நான் தம்ஸ் அப்பா தம்ஸ் டவுனா?
உன் திரட்டிகளில் நான் தமிழ்மணமா தேன்கூடா?
உன் வகைப்படுத்தலில் நான் பொதுவானவையா நகைச்சுவை/நையாண்டியா?
உன் குழுப் பதிவில் நான் அட்மினா(Admin) ஜஸ்ட் அட்மிட்டடா?(Just admitted)
பின்னூட்டுபவர்களில் நான் ஆனானியா அதர் ஆப்சனா?
உன் பெயர்களில் நான் உண்மையா புனைபெயரா?
உன் ப்ரொஃபைலில்(Profile) நான் நீயா போலியா?

உன் சைட் பாரில் பத்து சுட்டி
என் சைட் பாரில் பத்து சுட்டி
தூரத்தில் எவனோ தூன்னு துப்புறான்
இணையத்தின் வழியே எச்சிலையே அனுப்புறான்.



சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தார் பாஸ்டன் பாலா.
தலைப்பு உபயம் லக்கி லுக்கார்.

.

Tuesday, February 06, 2007

'போலி' - செய்வதெப்படி?

தேவையானப் பொருட்கள்

மைதா-இரண்டு கோப்பை
கடலைப்பருப்பு- ஒன்னரை கோப்பை
வெல்லம்-ஒரு கோப்பை
தேங்காப்பூ-அரைக்கோப்பை
ஏலப்பொடி-கால் தேக்கரண்டி
மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி
உப்புத்தூள்-கால்தேக்கரண்டி
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
நெய்-கால்க்கோப்பை

செய்முறை
மைதாவில் உப்புத்தூள், மஞ்சத்தூளைப் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை சொட்ட வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைபருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காப்பூவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.

பிறகு மைதாமாவிலிருந்து சிறிய எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.

பிறகு பூரணத்தை சிறிது எடுத்து அதன் நடுவில் வைத்து மூடி மீண்டும் கட்டையால் தேய்க்கவும். இதேப்போல் எல்லா மாவையும் செய்து வைக்கவும்.

பிறகு தோசைகல்லை காயவைத்து தயாரித்த போளிகளை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் நெய்யை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

தலைப்பை பார்த்துவிட்டு வேறெதாவது எண்ணத்தில் வந்தீர்களானல் மன்னிக்கவும். ப்ளீஸ், தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது என பின்னூட்டம் போடாதீங்க.
:)))))

குறிப்புக்கு நன்றி: அறுசுவை

சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))

பதிவுலகில் இன்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம்... சண்டைக் காட்சிகளும் சோகக் காட்சிகளும் நிறைந்த...



Its not a movie on WAR. It is WAR.

Wednesday, January 31, 2007

தேன்200:உடன்பிறப்பே...

கடிதம்

உடன்பிறப்பே,
இது எனது 200வது பதிவு. இப்போதுதான் 100போட்டு ஆடிக்கொண்டிருந்தேன் அதற்குள் 200 எகிறிவிட்டதை நினைக்க நினைக்க இருநூறு திருக்குறள்களை மனப்பாடம் செய்துவிட்ட பெருமை தோன்றுகிறது.

வலைப்பதிவராய் வெற்றிபெற்றிருக்கும் சிலரில் இந்த சிறிலும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

நீ இன்றி இது சாத்தியமா? எண்ணிப்பார். உனது (பின்)ஊட்டங்களை அள்ளித் தந்து என்னை மேலும் மேலும் எழுதச் செய்து உன்னையே நீ சோதனைக்குள்ளாக்கிகொள்ளும் அந்த துயரத்தை எண்ணிப்பார். இரவுபகலாய் விழித்திருந்து (பகலில் விழித்திருப்பது எனக்கு கஷ்டம்) நான் எழுதிய இந்தப் பதிவுகளை அன்றே நீ படிக்காதிருந்தால் இன்று 200 போட்டிருப்பேனா எண்ணிப்பார்.

தமிழா விழித்தெழு. கீபோர்ட்மேல் நீ தூங்கி விழுந்து www.xxxxxxxxxxxxxxxxx என கணினியில் தெரியுது பார். 'தவறான' தளத்துக்குச் செல்வதற்குமுன் விழித்தெழு.

உடன்பிறப்பே. என் பதிவுகளை படித்ததோடல்லாமல் சில நேரங்களில் நான் போட்டியில் வென்று ஈ புத்தகப் பரிசுகளை வாங்கவும் உதவினாய். உண்மையில் அவை 'ஈ' புத்தகங்களே. படிக்க நேரம் ஒதுக்காமல் ஈ ஆடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் தேனைப் படித்த நீ ஒரு தேனீ.

சில நேரங்களில் நான் தவறிழைத்தபோது எனை தட்டிக்கேட்டாயே உன் நேர்மையை பாராட்டுகிறேன். இடித்துரைப்பதே நட்பு. இடியாய் உரைப்பது இணைய நட்பு என்பதை செவ்வனே உணர்த்தினாய்.

காமெடி செய்தால் :) எனவும் கவலையைச் சொன்னால் :( எனவும் உன் முகபாவங்களைக் காட்டி மகிழ்வித்தாயே மறக்க முடியுமா? சிறிய புன்னகை செய்துவிட்டு LOL எனப் புழுகினாயே (புகழ்ந்தாயே) மறக்க முடியுமா? பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கே பின்னூட்டமிட்டாயே மறக்கமுடியுமா? என் பதிவுகளுக்கு இணைப்பைத் தந்தாயே மறக்கமுடியுமா? அல்ஸ்தைமர் வந்தபோதும் இந்த அன்பை மறவேன் மறவேன் எனச் சொல்லிக் கொள்கிறேன்.

இனிவரும் காலம் இனியகாலமாய் அமையட்டும். தொடர்ந்து தேனைப் பருகிவந்தால் உடல் நலம் கூடும் என்பது உனக்குத் தெரியாதா? (கூடவே லெமன் ஜூஸ் சேத்துகிட்டா இன்னும் நல்லது)

நான் 300 பதிவைத் தாண்டும்போதாவது நீ பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியிருப்பாய் என நம்புகிறேன். பதிவுகளைப் படித்து யாரும் திருந்துவதில்லை என்பதையும் நானே பதித்திருக்கிறேனே என எண்ணி வருந்துகிறேன்.

என்னை வாழ்த்திய நீ வாழ்க.
உன் குலம் வாழ்க.
உன் பதிவுகளில் பின்னூட்டம் செழிக்கட்டும்
உன் ஹிட் கவுண்டர் எகிறட்டும்
இணையம் இனியம் ஆகட்டும்
என்னை திட்டினாலும்
பின்னூட்ட எண்ணிக்கையை
உயர்த்தினாயே,
உடன்பிறப்பே!
'வரப்புயர' என்றாளே என் பாட்டி
நான் சொல்கிறேன்
மவுஸ் உயர
கீ போர்ட் உயர
மானிட்டர் உயர
என உயர உயர நீ நீடூழி வாழ்க.


(டிஸ்கி: யார் மனதும் புண்பட்டிருந்தால் மருத்துவரைப் பார்க்கவும்)

சீரியசா...
பதிவுலகில் என்னை அங்கீகரித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. வரும் பதிவுகளில் இந்த இருநூறு தந்த அனுபவங்களைப் பற்றி, நண்பர்களைப் பர்றி பகிர இருக்கிறேன். அவர்களும் தேனைப் பற்றி எழுத இருக்கிறார்கள். உங்கள் விமர்சனங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி cvalex at yahoo dot com

சிறப்பு நன்றி












நன்றி! நன்றி! நன்றி!

Friday, January 26, 2007

இந்தவாரம் வலைப்பூவில் சம்பாதித்தது

கெட்டபெயர் - 10 முறை

நல்லபெயர் - 5 முறை

பின்னூட்டங்கள் - ஏதோ சில

அனானியின் அட்டகாசம் - 6 முறை

நண்பர்களின் அறிவுரை - 4

பகைவர்களின் புகழுரை - 0

காசு பணம் - $0.000000000000000000000

வயித்தெரிச்சல் தீர ஆன்டாசிட் செலவு - $2

யாரும் கணக்கு கேட்காமலே வந்து தாங்கள் சம்பாதித்ததை (மட்டுமே!?) சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பும் பதிவர்(களு)க்கு சமர்ப்பணம்.

இந்த வருமானத்துக்கு தவறாமல் வரி கட்டுங்கள். நீங்கள் வாட்டின்கீழ் (Vat) வருகிறீர்களா எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

:)

ஒவர் டு பெனாத்தல் சுரேஷ். இதப்பத்தி ஃப்ளாஷ் பதிவொண்ணு போடுங்க.

Monday, January 22, 2007

குமுதம் வேண்டாம் குழந்தை சாமியாவது வெளியிடுவாரா?

என்சைக்ளோப்பீடியாவை புரட்டிக்கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜா. சுதா. தன் மனைவி சுதாவின் பெயரில் எழுதுபவர். அறிவியல் இலக்கியம் ஆன்மீகம் அரசியல் என இவர் கால்பதிக்காத இடமேயில்லை.

டெலிஃபோன் மணி சிரித்தது.

"ஹலோ".

"அப்பா நாந்தான்." அமெரிக்காவிலிருந்து அவர் மகன் பேசினான்.

"சொல்லுடா எப்படியிருக்க?"

"நல்லாருக்கேன்பா."

"நேத்துதானே பேசின?"

"இல்லப்பா அவ உங்கள பாக்கணுங்கிறாப்பா?"

"அவன்னா?"

"தெரியாததுபோல கேக்குறீங்களே?"

"ஓ அவளா?"

"சரி வரச்சொல்லு."

"இந்த வீக் எண்ட் சென்னை வர்றோம்."

"பர்மிஷன் வாங்காமலே ப்ளான் போட்டாச்சா?"

"ம்ம்"

அந்த வீக் எண்ட். தன் மகன் ஒரு ஜப்பானியப் பெண்ணோடு வருவதைக் கண்டு வியந்து நிற்கிறார். ஜா. சுதா.

"டேய் இவளா அவ?"

"ஆமா. பேரு டோக்கியோனா"

"ஷங்கர் படத்துல வர்ற விளையாட்டோட பேர்போல இருக்குது?"

"அது டிக்கிலோனாப்பா"

"இவங்க எந்த ஊர்?"

"ஜப்பான்ல ஒரு குக்கிராமம். என் கூட படிக்கிறா"

"டேய் ஏண்டா போயும் போயும் ஒரு ஜப்பான்காரிய.. நம்ம ஊர்க்காரி யாரையாவது..."

"அப்பா.. நான் சின்ன வயசுல வாட்ச் கேட்டேன் ஜப்பான் வாட்ச் வாங்கித் தந்தீங்க... வெளையாட பொம்ம கேட்டேன் ஜப்பான் எலக்ட்ரானிக்ஸ் பொம்ம வாங்கித்தந்தீங்க... நம்ம வீட்ல டிவி வீடியோ கார் எல்லாம் ஜப்பான் மேக்கா இருக்கும்போது பொண்ணு ஜப்பான் பொண்ணா இருக்கக்கூடாதா?"

"அதில்லடா நாம என்ன.."

"சாதீன்னு கேக்கறீங்களா? வெளிநாட்டுக்காறங்க என்ன சாதின்னு நமக்குத் தெரியாதேப்பா. சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?"

"ம்ம்ம் நீ சொல்றதும் பாயிண்ட்தான்?"

"நம்ம ஊர்ல டாய்லட் கழுவுறவரோட பொண்ண எனக்கு கட்டி வப்பீங்களா?"

"என்னடா சொல்ற?"

"ஆமா டோக்கியோனாவோட அப்பா ஜப்பான்ல..."

ஜா. சுதா மூர்ச்சையாகிறார்.

மருத்துவமனையில் விழித்தெழும்போது டோக்கியோனாவின் கண்ணீர் அவரது கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.

"டேய் நாம அமெரிக்கவுக்கே போயிடலாம். அங்க நைட் ஷியாமளன், ஸ்பீல்பர்க் போல யாருக்காவது ஸ்க்ரீன்ப்ளே எழுதி பொழச்சுக்கலாமா பாரு."

"நெனப்பப் பாரு" மகன் கோபமாய் பார்க்க மீண்டும் ஒரு குறுகிய மூர்ச்சை நிலைக்குப் போனார் ஜா. சுதா.

(டிஸ்கி: யார் மனதையும் புண்படுத்த அல்ல. ஜாலியா! கதா பாத்திரங்கள் அனைத்தும் ஷங்கர் படத்தில் வருவது போன்ற கற்பனைகளே)

Friday, December 29, 2006

2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்

இதுக்கு முன்னால போட்ட இந்தப் பதிவ படிச்சிட்டீங்களா?

தமிழ் திரையுலகத்துக்கு இது பொற்காலம். 2007ல் வெளிவர(மாட்டாத) படங்கள் பற்றிய முன்னோட்டம்

நோ (Sக்கு எதிர்சொல்) ப்ரொடக்சன்ஸ் வழங்கும் 'நிழல்':
நிழல், ரெண்டு பணக்காராப் பசங்களோட கதை. அண்ணன், தம்பி, ரெண்டுபேர். ஒருத்தன் வாழ்க்கைய கொஞ்சமா எஞ்சாய் பண்றான் இன்னொருத்தன் ரெம்ப டூ மச்சா எஞ்சாய் பண்றான். அண்ணன் தியேட்டர் ஓணர். தம்பி இந்தியாவிலேயே பெரிய விளம்பரக்கம்பெனி வச்சிருக்காரு. ரெம்ப உல்லாசமான வாழ்க்கை. கடைசில யார் இதுல எயிட்ஸ் வராம சர்வைவ் ஆகிறாங்கண்றதுதான் கத.

டுபாக்கூர் ப்ரொடக்சன்சின் 'ரெண்டரை':
மூணு மாதவன், ஒருத்தன் வெட்டிப் பய, ஒருத்தர் குருடு, இன்னொருத்தர் அரை லூசு. படம் கலக்கல் காமெடியா வரப் போகுது, முக்காவாசி டையலாக் வடிவேலுக்குத்தான். பேசிக்கிட்டே இருக்காரு. 'எப்படித்தான் நம்மளவச்சி காமெடி பண்றாங்களோன்னு?' ஒரு டையலக்வேற.

கே. எஸ். சிரிக் குமாரின் 'புவியியல்' :
வரலாறு எடுத்தாச்சு அடுத்தது புவியியல்தானே? வழக்கமா வரக்கூடிய பணக்கார வீட்டு பின்னணி. கதை ரெண்டு வார்த்தையில சொல்லிடலாம். ஆனா திரைக்கதை? வார்த்தையில சொல்ல முடியாது. பூமி பிரச்சனை(ரேண்டே வார்த்தையில சொல்லிட்டேன்). பணக்கார அண்ணன் தம்பிங்க சொத்த பிரிக்கிறதுல நடக்குற சண்டைய மையமா வச்சி புவியியல். படத்துக்கு ஆங்கிலத்துல 'Bad Father'னூ பேரு.

பேக்கிரி :
விஜய் பேக்கிரி வச்சு நடத்துறவரா வர்றார். 'தமிழ் நாட்டு கேக்கத்தின்னா தாகம் தீந்து போகும்டா.. தலைவா உன் கேக்கத்தின்னா காகம் வெள்ளையாகும்டா' பாட்டுடன் எண்ட்றி தர்றார் விஜய். வழக்கமான தெலுங்கு ரீ மேக் கதைன்னாலும் அங்கங்கே மானே தேனே எல்லாம் சேர்த்திருக்காங்க.

திருவிளையாடல் ஆ! ரம்பம்:
வழக்கமான முடிச்சுகளுக்கு புதுப் புது ட்விஸ்ட் வச்சு வரக்கூடிய படம். இப்ப வந்த படமும் அதமாதிரிதானேன்னு நினச்சீங்கன்னா என் பொறுப்பில்ல. தனுஷ் புதுசா எதுவுமே பண்ணாத இன்னொரு படமா இது இருக்கும் எல்லாரும் பேசிக்கிறாங்க. ரஜினிகாந்தின் பழைய பாட்டு ஒண்ண ட்ரம்ஸ் பீட்டோட போட்டு தாக்கியிருக்காங்க. 'என் சோகக் கதையக் கேளு' ரஜினி பாட்டில்லையா?

F
ஈ இயக்குனர் எடுக்கும் அடுத்த படம். என்னங்க ஆங்கிலப் பெயர்னு கேட்டா? ஈக்கு அப்புறம் Fதானேங்கிறார் மனுசன். தமிழகத்துல பஸ்லயெல்லாம் 12B, 47Dன்னு வச்சிருக்காங்களேன்னு லாஜிக் வேற. ப்ரொட்யூசர் வரி விலக்கு கிடைக்காதேன்னு கவலைப்படுறதால படத்துக்கு 'உ'ன்னு பேர் வச்சாலும் வைப்பாங்க. F, சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருத்தர் வைரஸ் ஒன்ன டெவலப் பண்ணி வச்சிட்டு ஒலகத்துல உள்ள கம்ப்யூட்டரையெல்லாம்... என்னது? இந்தக் கத ஏற்கனவே தெரியுமா?

சீமானின் தங்கச்சி:
தம்பி படத்த அப்படியே உல்டா பண்ணி தங்கச்சின்னு எடுக்கிறார். ஹீரோயின் ஒரு தமிழ் கவிதாயிணி. வார்த்தைக்கு வார்த்தை ஆம்பிள கவிஞர்கள் பேரச்சொல்லி திட்டுறமாதிரி டையலாக். கவிதைகள்ள வரும் வார்த்தைகள சென்சார் போர்டுல கட் பண்ணச் சொன்னதால படத்துல 20 நிமிஷம் அமைதியாவே இருக்குமாம்.

கிளை நகரம்:
A true story. அண்மையில் சென்னைக்கு அருகில் உருவாக்கப்படப் போவதா இருந்த துணை நகரம் பற்றிய கதை. ஒரு பெரிய நடிகர் தன் வேலக்காரங்களுக்காக இது வராம தடுக்கிறார். அவருக்கு முடி முளைச்சதும் படப் பிடிப்பு ஆரம்பம்.

சீரக சிந்தாமணி:
விஷால் ரகுவரன் காம்பினேஷன் அடுத்தது தரப்போற அதிரடி படம். சிலப்பதிகாரம் சிவப்பதிகாரமானதப் போல சீவக சிந்தாமணிய சீரக சிந்தாமணின்னு மாத்திட்டாங்க. டிஸ்கோ பாடல்கள பத்திய ரிசர்ச் பண்ண விஷால் சென்னைக்கு வர்றாரு. அங்க ரகுவரன பாக்கிறார். என்னது? இந்தக் கதையும் உங்களுக்கு தெரியுமா?

அ, இ, ஆ, ஈ:
இது பார்ட்டிBun சாரோட படமுங்க. எதையாவது டிபரண்டா செய்யணும்னு நீங்க நினைபீங்க ஆன இவரு எல்லாத்தையுமே டிபரண்டா செய்ய நினைப்பார். ரெம்ப கிரியேட்டிவா எடுக்கப்பட்ட படம்(னு அவர் சொல்லிகிறாரு). படத்தோட துவக்கவிழாவில எல்லாரையும் தலைகீழா உக்காரச் சொல்லி மேடையயும் தலைகீழா போட்டு வச்சிருக்காரு. ஹீரோயின் உதட்டுல 'வருக'ன்னு எழுதிவச்சி இதுதான் 'அழைப்பு இதழ்னு' சொல்லியிருக்காரு Partyபன். இவருக்கு மட்டும் எப்டீங்க இப்டி தோணுது?

இன்னும் கமல் அதிபர் புஷ் வேடம் பூணும் 'புஷ்ஷாவதாரம்', ஆர்யா கூத்தடிக்கும் 'கொட்டாரம்', பாக்கியராஜ் இயக்கும்,'லாறிஜாதம்', சிம்புவின் 'ஜொள்ளவன்', பரத் நடிக்கும் 'தம்(Dhum) மகன்', 'சித்திரம் பேசாதடி', 'கிழக்கு கடற்கரை லாட்ஜ்' , 'அழகாய் இருக்கிறாய் அசிங்கமாய் பேசுறாய்' போன்ற படங்கள் வர இருக்கின்றன.

பார்க்கத் தவறுங்கள்.

ரெம்ப கடிச்சிட்டேனோ?

Wednesday, December 27, 2006

(சிரி) நட்சத்திரம்

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.

ஹலோ ஹவ் ஆர் யூங்க,
என் பேரு A. மாந்தவன், 'ந்' சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க.

நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.

முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,"ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. ஈசியா இருக்குமே?"ன்னு.

ஒரு இணைய வரி விளம்பரத் தளத்துக்குப் போனேங்க. நம்ம ஊரு பொண்ணா இருந்தா நல்லாருக்குமேன்னு."Help! Asian woman wanted" அப்படீன்னு போட்டேங்க. நெறைய நண்பர்கள் இதுக்கு படத்தோட பதிலனுப்புனாங்க.

அம்மாகிட்ட காமிச்சேன். "டேய், ட்ரெஸ் போடாத பொண்ணுங்க வீட்டுவேல எப்டிடா செய்வாங்கன்னு." சொல்லிட்டாங்க. அதனால என் நண்பர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு நானே வீட்டு வேலையெல்லாம் செஞ்சுகிட்டிருக்கேனுங்க.

இன்னொரு நண்பன் டெய்லி எனக்கு மெயிலனுப்பிச்சு நான் UK லாட்டரில வெற்றி பெற்றதாகவும் சின்ன தொக ஒண்ண அனுப்புனா பெரிய தொக ஒண்ணு கிடைக்கும்னு மெயில் அனுப்பிட்டிருந்தாரு. எனக்கு லாட்டரி விழுந்திருக்குன்னு எனக்கே தெரியாது ஆனா இவரு எத்தன கவனமா பாத்து இதச் சொல்லியிருக்காரு பாத்தீங்களா? நல்ல நண்பருங்க. இப்பத்தான் இவருக்கு 500 டாலர் அனுப்பி வச்சேன். கூடிய சீக்கிரத்துல பணக்காரனாயிடுவேன். என்ன நல்லெண்ணம் பாத்தீங்களா என் நண்பருக்கு.

இன்னொரு நண்பரும் இதப்போல தினமும் நைஜீரியாவுலேந்து மெயில் அனுப்புவாரு. அவரு பேங்க் மேனேஜராம் ஆப்ரிக்காவுல நியோமியாங்கிற இடத்துல இருந்த அரசர் அவங்க பேங்குல ரெம்ப பணம் போட்டுட்டு செத்துப் போனாராம். அந்தப் பணத்த நம்மகூட பங்குபோடணுமாம். அதுக்கும் கொஞ்சம் காசு கேட்டிருந்தாரு. கொடுத்திருக்கேன். சீக்கிரம் அதுவும் வந்து சேந்த்துடும். எனக்கு என்ன பயம்ணா அந்த அரசப் பதவிய எனக்குத் தந்துட்டா ஆப்ரிக்கா போகணுமே?

இப்படி எனக்கு தினமும் மெயில் வந்துகிட்டே இருக்குதுங்க. ஆனா எல்லா மெயிலும் தனியா SPAM அப்டீங்க்ற Folderல போயி சேந்திரும். என் இணைய நண்பர்கிட்ட மெயில் அனுப்பிச்சு SPAMனா என்னண்ணு கேட்டேன். அவரு Special, Personal, Afeectionate Mails. அப்படீன்னாரு.

LonelyGirl69 அப்டீன்னு ஒரு தோழிய சாட்டிங்ல புடிச்சேன். ரெம்ப அருமையா பேசுவாங்க. கிழுகிழுப்பாயிருக்குமுங்க. ரெம்ப சீரியசா அவங்கள லவ் பண்ண ஆரம்பிச்சேனுங்க. அவங்க போட்டோ அனுப்பச் சொன்னேன், அனுப்பினாங்க. என்ன அழகாயிருந்தாங்க தெரியுமா? என் பிரண்டு ஒருத்தங்கிட்ட காமிச்சேன் அவன் பொறாமையில இது ஆஞலீனா ஜோலிங்கிற நடிகையோட படம்டான்னுட்டான்.

என் இணைய தோழி ஆஞலினா ஜோலி மாதிரி இருக்கலாம்லன்னு சொன்னேன். அவன் சிரிக்கிறான். பொறாமைங்க. சரி நம்ம போட்டொவையும் அனுப்பிவைப்போமேன்னு அனுப்பினேன் அதுக்கப்புறம் lonelyGirl69 என்கூட சாட் பண்றதே இல்லங்க.

ஒருநா ஒரு சோகமான மெயில் வந்துச்சுங்க ஒரு சின்னப் பையனுக்கு மூளையில ஏதோ ப்ராப்ளமாம். இதுவரைக்கும் அந்த வியாதி யாருக்கும் வந்ததேயில்லையாம். பாவம் அந்த சின்னப்பையன். அவனுக்கு மாசா மாசம் காசனுப்புவேன். பலபேரு இதப்பத்தி எனக்கு மெயிலனுப்பியிருக்காங்க. இதுலெ என்னண்ணா ரெண்டு வருசமா இந்தப் பயனுக்கு 10 வயசுதான் ஆகுதுங்க. இன்னைக்கும் அப்டித்தான் மெய்யில் வருது.

இன்னொரு நண்பர் ரெம்ப நாள மெயில் அனுப்பிட்டேயிருப்பாரு. ஒங்க ஆண்மைய பெரிதுபடுத்தணுமான்னு கேட்டு. இது நல்ல விஷயந்தானேன்னு அவருக்கும் காசனுப்பினேன் ஒரு பாட்டில் மாத்திரைய அனுப்பினாரு. அதுல சொல்லியிருந்தமாதிரியே சாப்பிட்டேன். இப்ப ரெம்ப நல்ல பலன் கெடச்சிருக்குது.

அதாவது அந்த மருந்து சாப்பிட்டதுலேர்ந்து எனக்கு 'அந்த' மாதிரி எண்ணங்களே கொறஞ்சுபோச்சுங்க. இப்ப எனக்கு ஆண்மை பெருசா இருந்தா என்ன சின்னதா இருந்தா என்ன? எப்படி ஒரு நிரந்தரத் தீர்வு பாத்தீங்களா. இணைய நண்பர்கள் இணைய நண்பர்கள்தாங்க.

நான் தனியான ஆளுங்க. அதுக்கு இணையத்துல ஒரு சொலூஷன் கெடச்சது. 'Are you single? Call this number'னு ஒரு மெயில ஒரு தோழி அனுப்பினாங்க. போன்போட்டு பேசினா அவ்வளவு இனிமையான குரல். ரெம்ப நேரமா பேசினோம். எதெல்லாமோ பேசினோம். ஆனா ட்ரெஸ் போட்டுட்டு பேசினா அவங்களுக்குப் பிடிக்காதாம். ஒவ்வொண்ணண கழட்ட சொல்லிட்டாங்க ரெம்ப ஜாலியா இருந்துச்சு. அந்த மாசம் ஃபோன் பில் செமையா போயிடுச்சு. ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுஸ் ஃபோன் வேறையா. வேலையிலேர்ந்தே தூக்கிட்டாங்க.

அட தோழிக்காக இதுவுமில்லண்ணா எப்டி?

சாட்ல ஒருநா ஒரு தொழி என் க்ரெடிட் கார்டு நம்பரச் சொன்னா என் அக்கவுண்ட் பாஸ்வோர்ட சொல்றதா சொன்னாங்க. அட இந்த விளையாட்டு நல்லா இருக்குதேன்னு அவங்களுக்கு விபரத்த தந்தேன். ஆனா தப்பா கெஸ் பண்ணிட்டாங்க. நாலு தடவைக்கப்புறம் நானே சரியான விடைய அவங்களுக்குத் தந்தேன்.

இன்னைக்கும் பல தோழர்கள்கிட்டேந்து மெயில் வந்துட்டே இருக்குது. என் படம் அங்க இருக்குது போய் பாருன்னு ஒரு தோழி, AOL மைக்ரொசாஃப்ட் இணைஞ்சி காசு தர்றாங்கன்னு ஒரு தோழர். இந்த சர்வே எடுத்தா ப்ளாஸ்மா டி.வின்னு ஒருத்தர், இந்த மெயில 10 பேருக்கு அனுப்பினா சொர்க்கம் போகலாம் இல்லண்ணா நரகம்னு சிலர்.

தினம் தினம் இணையத்துல என்னையும் ஒரு நண்பனா ஏத்துக்கிட்டு மெயில் அனுப்புற எல்லா நண்பர்களுக்கும் இந்த A. மாந்தவனின் நன்றிகள். 'ந்' சைலன்டுங்கோவ்.

Thursday, November 30, 2006

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

கரும்பு விலை தன்னாலத்தான் ஏறிப்போச்சுன்னு ஜெ சொல்வது
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.

இந்த மாத தலைப்பு 'குறும்பு'. சும்மா கலாட்டாவா எழுதுங்க.

நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.

பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

Thursday, November 02, 2006

சொர்க்கம் இலவசம்

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். 'சித்ரகுப்தன் காலிங்' கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். 'காலையிலேயா?' பீட்டர் முணுமுணுத்தார்.

நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.

பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.

கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.

பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.

இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.

அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.

"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.

"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"

"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"

"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."

"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"

"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."

"எம்.டியா?"

"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."

"சரி என்ன மீட்டிங்?"

"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."

"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."

"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."

"ஐயையோ அப்படி இல்லீங்க.."

"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"

"ஏழுமைலையான்கூடவா?"

"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."

"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"

"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."

"இங்க மட்டும் என்ன வாழுது?"

"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "

"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"

"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "

"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"

"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."

"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."

"என்ன ஜோக்கா?"

"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"

"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."

"இந்த ஐடியா நல்லாயிருக்கே."

"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."

"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."

"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."

"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."

"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"

"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."


"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."

பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.

"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."

"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."

"சரி யோசிச்சு சொல்லுங்க."

"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."

"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"

"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."

"சொல்லுங்க பீட்டர்..."

........

சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.

"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."

Monday, October 30, 2006

bundle of greens - கட்டு கட்டு கீரக் கட்டு

போன பதிவில் இது என்ன என சில ஆங்கில வரிகலைத் தந்து கேட்டிருந்தேன் கட்டு கட்டு கீரக்கட்டு பாட்டுத்தேன் அது.

பல நேரங்களில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரிஜினல் பாடலைவிட ரசிக்கத்தக்கதாய் இருக்கும். இட்ந்தப் பாடலின் மொழிபெயர்ப்பும் அது போலவே. பாட்டப் போட்டுட்டு கீழே ஓடும் துணைதலைப்புக்களை (sub-titile - இது நம்ம மொழி பெயெர்ப்புங்கோய்) பார்க்க மறந்துடாதீங்க.


சிறில் அலெக்ஸ்