.

Friday, June 29, 2007

அறிமுகம் - தமிழ் பீட்டர்ஸ்

நண்பர்களே... தமிழ் பீட்டர்ஸ் என தமிழ் வழி ஆங்கிலம் பேச/எழுத உதவும் குழு பதிவொன்றை ஆரம்பித்துள்ளோம். தமிழ்மணத்தில் தெரிய சில நாட்கள் ஆகலாம். அதுவரை நேரடிகாகச் சென்று படிக்கவும்.

இதில் இணைந்து பதிவிட விரும்பும் மக்கள் பதிவிலுள்ள முகவரிக்கோ என் மின்னஞ்சலுக்கோ மடல் செய்யுங்கள். உங்கள் ஆதரவு இருக்கும்வரையே இந்த முயற்சி தொடரும் எனும் மிரட்டலையும் முன்வைக்கிறேன்.

என் ஆங்கிலம்ம் பேசலாம் வாங்க பதிவைப் படித்த அண்ணன் பாலபாரதி மற்றும் பொன்ஸ் அவர்களின் வேண்ட்டுகோள்களுக்கிணங்க, ரவிஷங்கர் மீண்டும் நினைவூட்டியதில் பீட்டர்ஸ் ஆரம்பமாகிவிட்டது.

:)

பீட்டர்ஸ் தளத்துக்குச் சென்று நோக்க நோக்க நொடியில் நோக்க

Thursday, June 28, 2007

தமிழ்நாட்டில் கட்சி துவங்குகிறார் டோனி ப்ளேர்

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேர் தமிழகத்தில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளார். திராவிட, மக்கள், முன்னேற்ற, காமராஜ், ராணி எலிசபெத், அண்ணா, இராஜாஜி, பெரியார், சிவாஜி, வடிவேலு, புலி, சிறுத்தை, கரடி, சிங்க்கம் போன்ற வார்த்தைகளைக் கொண்டு தன் புதிய கட்சிக்கு பெயர் ஒன்ரை தயாரிக்கச் சொல்லி இதுவரை குறைந்தது மூன்று புத்தகங்களையாவது வெளியிட்டுள்ள கவிஞர்களிடம் கேட்டுள்ளார்.

இது போல ஜாலியா, பொய்யான சிலசமயம் உள்குத்துக்களோடான செய்திகளை ஆங்கிலத்தில் தருகிற தளம் The onion.

இதுபோல விளையாட்டாய் பொய் செய்திகளை தமிழில் தர ஒரு குழு பதிவை ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன். யாராவது ஆர்வமாயிருக்குறீங்களா?

நகைச்சுவையால் சமூகப் பார்வையை உருவாக்க இயலுமா? இதுதான் இந்த முயற்சியின் அடித்தளம்.

ஐ....ஐ-ஃபோன் !!!

நாளை மார்க்கெட்டுக்கு வருகிறது ஐ-ஃபோன். ஏற்கனவே கடைவாசலில் வரிசை துவங்கிவிட்டதென்று செய்திகள்் சொல்கின்றன.

சில குறுந்தகவல்கள்...

ஐ-ஃபோனின் டச் ஸ்க்ரீன் தோலால்தொடும்போதுதான் இயங்குகிறது. கையுறை போட்டுக்கொண்டு செயல்படுத்த இயலாது.
ஸ்பீக்கர் மர்றும் வைப்ரேட்டிங் கொஞ்சம் வீக்கா இருக்குதாம்
அநேகமான ஐபாட் துணைக்கருவிகள்(Accessories) இதற்கும் பயனாகும்
பாடல்களை ரிங்டோனாக மாற்ற இயலாது. ஐ-ஃபோன் கொண்டுவரும் ரிங் டோன்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
ப்ளூடூத் இணைப்புகள் ஹாண்ட்ஸ் ஃப்ரீ மற்றும் கார் கருவிகளோடு மட்டுமே இயலும்.
தானியங்கும்்ங்கி Wifi ஹாட்ஸ்பாட் தேடும் வசதி உண்டு ஏற்கனவே பயன்படுத்தியிருந்த ஹாட்ஸ்பாட்டோடு தானே இணைக்கும்.
அலை மோடமாக பயன்படாது (Wireless modem to computer)
USB வழியாக மட்டுமே கோப்பு பரிமாற்றம் செய்ய இயலும்
உங்கள் கணினியின் உரல் சேமிப்பை(Bookmarks) உட்கொள்ளும் வசதி உள்ளது

முழுதாய் படிக்க A FAQ on what the iPhone has and what it lacks - international herald
The iPhone matches most of its hype

ஐ-போன் திரட்டி

ஐ-போன் காமெடி





மூத்திரக் குழி - சிறுகதை

மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல நாங் கேட்டது. வெத்தில போட்ட எச்சி தெறிக்க பாம்படக் கெழவி சொல்வா பாருங்க கத... சாய்ங்காலம் ஆத்தா தேடி வார வரைக்கும் அங்கனையே கெடப்போம்.

"அப்ப, கட்டபொம்மனுக்கு சமுத்திரம்னு ஒரு எதிரி இருந்தாம்." கெழவி சொல்லும். "சமுத்ரம் ஒரு கள்ளன். ராவெல்லாம் போய் களவாண்டுட்டு காலையில காணாமப் போவாங். கட்டபொம்மனுக்கு சேதி போச்சு. சமுத்திரத்த புடிக்க மாறுவேசத்துல அலஞ்சான் கட்டபொம்மன்.

ஒருநா சமுத்ரம் களவாணப் போவையில அங்கன ஒரு அழகானப் பொம்பளயப் பாத்தான். அழகுன்னா அவ்ளோ அழகு. கன்னமெல்லாம் பூப்போல இருந்துச்சு. கண்ணெல்லாம் வண்டுபோல ஓடுச்சு, அவ நடையும், ஒடையும்.. சமுத்ரம் மயங்கிட்டான். அவள எப்டியாவது புடிச்சிரணும்னு பின்னாலேயே போனாங். கொஞ்ச தூரம் கடந்த பொறவுதான் சமுத்திரம் கட்டபொம்மங் கோட்ட வாசல்ல வந்திருக்கோம்னு தெரிஞ்சுகிட்டான். அந்த அழகான பொம்புள கட்டபொம்மந்தான். அப்புறம் தப்பிக்க ஏலுமா?

பிடிபட்ட சமுத்ரத்துக்கு மரணம்னு விதியாச்சு. நம்ம மூழி மல இருக்குல்லா அந்த மல உச்சிலதான் அப்ப தலைய வெட்டுத மேட இருந்துச்சு. சமுத்ரத்துக்க கடசி ஆச என்னான்னு கட்டபொம்மங் கேட்டான். எந்தலய வெட்டும்போ அது எங்கன வுழுதொ அங்கன என்ன பொதைக்கணும்னான் சமுத்ரம். அட இவ்ளோதானான்னு சரிண்ணாங் கட்டபொம்மன். நெறஞ்ச பௌர்ணமி ராவுல ஊரே கூடி நின்னு பாக்கையில சமுத்ரந்தலய வெட்னான் ஏவலாளு. தல உருண்டு கீழ உளுந்துச்சு... அது கீழ அங்கன உளுந்து கெடக்கும்னு பாத்தா...தல மலையில உருண்டு கீழ வந்துட்டே இருந்துச்சு.. எல்லாரும் பின்னால ஓடியாராவ. தல உருளுது உருளுது உருண்டுட்டே இருக்கு. எல்லாருக்கும் ஆச்சரியம்ணா ஆச்சரியம். கடேசியா தல உருண்டு இங்க மூத்ரக்குழில இருக்க கெணத்துல வுழுந்துச்சு. கட்டபொம்மனும் அவங் கடேசி ஆசைய நெறவேத்தணுமேன்னு கெணத்துல பொணத்தபோட்டு மூடிட்டாங். அண்ணையிலேந்து அந்த எடத்துக்கு பேரு சமுத்ரக் குழின்னு ஆச்சு. நல்லா தண்ணி வந்துட்டிருந்த கெணத்துல தண்ணியே இல்லாம போச்சு. சமுத்ரக்குழிதான் பொறவு மாறி மாறி மூத்ரக் குழின்னு ஆச்சு."

பாம்படக் கெழவி சொல்லுத கதயில அந்தக் கெணறு இருக்கது மட்டுந்தான் உண்ம. கெழவிக்கு எப்டி இந்த கத தெரியும்னு யாருக்குந்தெரியாது. அவளா உண்டுபண்ணதா இல்ல அவளுக்கும் யாரோ சொன்னாவளான்னு யோசிச்சிருக்கேன். பாம்படக் கெழவி செத்தண்ணைக்கு இநதக் கதையுஞ் செத்துபோச்சி.

எங்க ஊர்ல வெளிக்குப் போற எடந்தாங்க மூத்திரக் குழி. சமுத்ரக் குழிங்கறதெல்லாம் கட்டுக்கத. கிராமத்துல கக்கூசா இருந்துச்சு? பக்கத்து ஊர்லயெல்லாம் அவனவன் வெளையில போயிருவானுவ. எங்க ஊர்ல வெளையெல்லாங்கெடையாது. ரெண்டே ரெண்டு பெரிய தெருதான். ரெண்டு தெருவுக்கும் நடுவுல மூத்ரக்குழி. சின்னக் குழியில்ல அது பெரிய எடம். காடு வளந்து கெடக்கும். பொதருக்கு நடுவுல பாழடஞ்ச கெணறு. கெணத்த தூரத்திலேந்து பாக்கத்தான் முடியும். பக்கத்துல போவமுடியாத அளவுக்கு முள்பொதரு. பாம்பும் ஓணானும் ஓடும். ராத்ரில ஒருத்தனும் போமுடியாது. அதுக்கு இருட்டு மட்டும் காரணமில்ல. மாடங்கோயில் பூசாரி சொல்த கததான் முக்கியமான காரணம்.

"திருவாங்கூர் மகாராசங்கிட்ட கரியாளுண்ணு ஒரு மந்த்ரவாதி இருந்தாங். மகா கெட்டிக்காரெய்ன். அவனுக்குத் தெரியாத மாந்த்ரீகமே கெடையாது. மழ வேணும்னா கொண்டு வருவான், போர்ல செயிக்கவெப்பாங், நோயக் கொணமாக்குவான், கரியாள் இருந்தவரைக்கும் மகராசாவுக்கு எதிரிண்ணு ஒருத்தனுமில்ல. நான் சொல்லுதது ஒரு அஞ்நூறு அறநூறு வருசத்துக்கு முன்னால. மனுசனுக்கு எந்த ஆச வந்தாலும் தப்பிச்சரலாம் பெண்ணாச வந்துச்சுண்ணா?" கண்ண உருட்டிட்டு எச்சரிக்கமாறி கேப்பாரு. "கரியாளு மகாராசாவுக்க மக மேல ஆச வச்சாங். அவள யாருக்குந்த் தெரியாம, அவளுக்கே தெரியாம மந்திர சக்தியால அடஞ்சான். அவளுக்கும் கொளந்த உண்டாச்சு.

மகாராசா யாரையெல்லாமோ சந்தேகப்பட்டாரு ஆனா கரியாள மட்டும் சந்தேகிக்கவேயில்ல. அவ்ளோ நம்பிக்க, பாசம். கரியாளு நேராக் கேட்ருந்தா மகளக் குடுத்ருப்பான் ராசா. கோவத்துல ராசா கரியாளக் கூப்டான். எம் மவளுக்கு இதச் செஞ்சவன் அணுவணுவா சாவணும்னாம். கரியாளுக்கு அரசனுக்குத் துரோகம் பண்ணிட்டோமேன்னு வருத்தமாப் போச்சு. நேரா போனான் அரசன்ட. 'ராசா ஒம்ம மவளக் கெடுத்தவன அழிக்கப்போறேன். ஆனா நம்ம நாட்டு எல்லைய உட்டு வெளியப் போனாத்தான் இதச் செய்யமுடியும். எனக்கு ஒரு குதிர தா'ண்ணான். ராசா குதிரயக் குடுத்தான். அன்னைக்கு ராத்ரி கரியாளு குதிரயில ஏறி நம்மூரு மூத்ரக் குழிக்கு வந்தான். அங்க வச்சி அவனோட பூசைய ஆரம்பிச்சாங். மந்திரஞ் சொல்லச் சொல்ல அவன் ஒடம்பு கொஞ்சம் கொஞ்சமா அழிய ஆரம்பிச்சுச்சு. இதுக்கெடையில ராசாவுக்கு சந்தேகம் வந்துச்சு. கரியாளு ஏன் எல்லைய விட்டுப் போறாண்ணு அவன் போன தெசைக்கு அவனத் தேடி வந்தாரு.

ராசா வரச்ச பூச உச்ச கட்டத்துக்கு போயிட்டிருக்கு. வேண்டாம் வேண்டாம்னு கெஞ்சுறாரு ராசா. ஆனா... கரியாளு ஒடம்பு அழிஞ்சுபோச்சு. கரியாளு மந்த்ரவாதி செத்த பெறவு அவனோட மொத்த ஆயுதமெல்லாம் அங்கனையே சுத்திட்டிருக்கு. ராத்ரியில அங்கன சத்தங் கேக்கதும், கூத்தும் கும்மாளமும் நடக்கதும் அதுக செய்யதுதாம்ப்டே."

பூசாரிக் கத சொல்லையில அவரு மொகத்தப் பாத்துக் கேட்டியண்ணா இன்னும் பயந்துருவிய. கெடா மீச ஆடும், அவரு புருவமே மெரட்டுத மீசதான், பெரீய கிர்தா, நீண்ட தலமுடி தேகமெல்லாம் முடி, கம்பீரமான ஆளு. ஒரு கட்டத்துல கண்ண ஒரு உருட்டு உருட்டுவாரு, அப்பவே கரியாளு இவர்தானோண்ணு தோணும்.

மந்த்ரவாதியோட ஆயுதம்ணா கத்தி கபடாயெல்லமில்ல. அதெல்லாம் குட்டி பிசாசுவ. அவன் ஏவலுக்கு காத்துருந்து சொல்றதச் செய்யுற குட்டி பிசாசையெல்லாம் ஆயுதம்ணு சொல்வாவ.

நான் சின்னதாயிருக்கும்போ ஊர் தெருவுல வெளக்கெல்லம் கெடையாது. ஏழுமணிவாக்குல செமையா இருட்டிரும். அங்கன பண்ணையார் வீட்டு முத்தத்ல லாந்தருக்கு கீழ ஒக்காந்து ஊர் பிள்ளவ எல்லாம் படிக்கும். அந்த இருட்ல மூத்ரக்குழி பக்கம் யார் போவா? அதனால கரியாளு கதைய ஊர்ல நம்பவேண்டியதாத்தான் போச்சு.

இதுல அவனவன் கற்பனையும் சேந்துரும். நேத்து ராத்ரி பனமரம்போல ஒரு ஆளு நட்ந்து போச்சுண்ணு ஒருத்தஞ் சொல்வான், இன்னொருத்தன் முதுவுல யாரோ அடிச்ச மாறி இருந்துச்சு, திரும்புனா யாருமேயில்லம்பான், அந்தப் பக்கம் போனா எருக்கம் வாசன வருதும்பான், ஒருத்தஞ் சூடம்ணு சொல்வாங். ஆனா எனக்கு நம்பிக்கயில்லாமயிருந்துச்சு, எந்தாத்தா சாவுற வரைக்கும்.

அப்போ எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். 1965ன்னு நெனைக்கேன். விடியக்காலம். எங்க ஆத்தா ஒப்பாரி சத்தம் கேக்க முழிச்சேன். "எல ராசா. ஒங்க தாத்தா மூத்ரக் குழியில செத்து கெடக்காம்."ணா. எப்டி ஓடுணேன்னே தெரியாது புதரத்தாண்டி கல்லு முள்ளு பாக்காம ஒட்டிப் போனேங். கெணத்தடி பொதருக்குள்ள தாத்தா செத்து கெடந்துச்சு. வாயில கொஞ்சம் ரத்தம் ஒறஞ்சுபோயிருந்துச்சு. கண்ணு பெருசா யாரையோ பயத்துல வெறிச்சு பாத்தமாறி, கழுத்துல கருஞ்செவப்பா தோலு சுருங்கியிருந்துச்சி. எங்கப்பா கல்லுல உக்காந்து அழுதிட்டிருந்தாவ. என்னக் கூப்ட்டு பக்கத்துல நிக்கவச்சி கட்டி புடிச்சாவ. "தாத்தாவப் பாத்தியால?"ண்ணு அழுதுட்டே கேட்டாவ. பெறவு விசும்பிட்டே இருந்தாவ.

ஊரெல்லாம் இதாம் பேச்சு. மாவெளையான் பேய் நெரிச்சு செத்துட்டாண்ணு சொன்னாவ. அண்ணையிலேந்து இருட்டுனதுக்கப்புறமா மூத்ரக்குழி பக்கமே போமாட்டேன். தாத்தாவ பேயடிச்சுச்சுன்னு ஊர்ல எல்லாரும் இண்ணை வரைக்கும் பேசுவாவ.

ஒரு நாலு வருசத்துக்கு முன்னால ஒரு தற்கொல கேஸ் விசயமா பெரியாஸ்பத்ரி பொண அறைக்குப் போவேண்டியிருந்துச்சு. அங்க டாக்டர் நமக்கு தெரிஞ்ச ஆளு. ரெண்டு மூணு கேசக் காமிச்சாரு. அப்ப ஒரு பொணத்த பாத்தேன். அப்டியே எந்தாத்தா செத்த கணக்குலேயே கெடந்துச்சு. அதே முழி, வாயில ரத்தம் எந்தாத்தனுக்கு கழுத்துல இருந்தாப்ல செவப்பா தடம். டாக்டர்ட கேட்டேன் 'என்ன கேஸ் இதுண்ணு'. 'கழுத்த நெரிச்சு கொன்னுசுக்காங்கப்பா'ண்ணாரு. மூத்ரக்குழி பேயடிச்சு எந்தாத்தா செத்ருக்க வாய்ப்பில்லண்ணு தெரிஞ்சது. எந்தாத்தா செத்து கொஞ்ச நாள்லயே அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் தகறாறாயிருந்துச்சு. கூட்டி கழிச்சா தாத்தாவக் கொலதான் செஞ்சிருப்பானுவ. ஊர்ல இருந்த பேய் பயத்துல இதையெல்லாம் யாரு பாக்கா. அப்ப போலிஸ் ஸ்டேசனெல்லாம் டவுன்லதான் இருந்துச்சு. ஊர்ல வெட்டு குத்துன்னாலே போலிசுக்கு தெரியாது. கெழவன் செத்ததையா பாக்கப்போறானுவ? யாரு கொன்னதுண்ணு இப்பவா தேட முடியும்? எங்கப்பனாகூட இருக்கலாம்.

அந்த நாத்தம் புடிச்ச மூத்ரக் குழிக்கு இத்தன கதையாண்ணு யோச்சிச்சிருகேன். மாதாக் கோயில் சாமியார் ஒருத்தருண்டு. பேரு எரோணிமூஸ். பக்தியான ஆளு. எங்ககிட்ட நல்லா பழகுவாரு. அவர் காலத்துலதான் மாடன் கோயில் திருநாளைக்கு கீழ தெருவுல மாதா கோயில் வரைக்கும் லைட் போடுத பழக்கம் ஆரம்பிச்சுது. அவரு ஒரு மூத்ரக் குழி கத சொல்வாரு.

1600வாக்குல இங்கனோடி ஒரு வெள்ளக்கார சாமியாரு வேதம் பரப்பிட்டே போனாராம். அவரு இங்கோடி வரையில பயங்கர தாகம் எடுத்துச்சாம். அப்ப மூத்ரக்குழி இருக்க எடத்துலயெல்லாம் வயக்காடாம். வயலுக்கெல்லாம் அங்க இருந்த ஒத்தக் கெணத்துலேந்துதான் தண்ணியடிப்பாவளாம். அப்ப அந்த சாமியாரு இந்த கெணத்துபக்கமா வந்து தண்ணி கேட்ருக்காரு. ஆனா ஊர்க்காரனுவெல்லாஞ்சேந்து தண்ணி குடுக்கமாட்டேன்னுட்டாவ. அந்த சாமியாரும் கண்ண மூடிட்டு மந்திரம் சொல்லிட்டு சிலுவையத் தூக்கி காட்னாராம். எல்லார் கண்ணுமுன்னாலயும் கெணத்து தண்ணி வத்திப்போச்சாம். அண்ணையிலேந்து அந்தக் கெணத்துல தண்ணியிலாமப் போவ, வயக்காடெல்லாம் கருவேலங்காடாச்சுன்னு சொல்வாரு எரோணிமூஸ்.

இந்தக் கத நல்லாயிருக்கேண்ணு நம்ம இஞ்சினியர் பயகிட்ட கேட்டேன். ஒரு சிரி சிரிச்சான். "மாமா. இந்த எடத்துல வயக்காடு இருந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்ல. அந்தக் கெணறு இருக்கே அது தோண்டி, இங்க தண்ணி வராதுண்ணு பாதில மூடிட்டானுவ. இப்பவும் அங்கோடி தேடுனா தண்ணியே கெடைக்காது"ம்பான்.

இப்டியாபட்ட மூத்ரக்குழி, என் தாத்தனுக்கு நெனவு தெரிஞ்ச நாள்லேந்தே ரெண்டு தெரு மக்களும் காலையில வெளிக்கு ஒதுங்குற எடமாத்தான் இருந்துச்சு.

அவனப் புடிச்சி இவனப் புடிச்சி 11 வருசத்துக்கு முன்னால, எங்க ஊர்வழியா பஸ் வுட்டானுவ. பஸ்ல வர்ற போற வெளியாட்கள் எல்லாரும் இந்த எடம் வந்துச்சுண்ணா மூக்கப் போத்திக்கிருவானுவ. எங்களுக்கு சங்கடமாயிருந்தாலும், ஊர் பயவ ஒதுங்க ஒரு எடம் வேணுமே?

அப்ப ஒருநா, நம்ம மஸ்கத் பண்ணையார் அங்க ரோட்டோரமா சைக்கிள உருட்டிட்டு வந்தாங். பண்ணையார்னா யாரோ எவரோன்னு நெனைக்காதிய. எங்கூட படிச்ச பய. கஞ்சப்பய. அப்பந்த் தாத்தன் சேத்துவச்ச சொத்த வச்சு பொழப்பு நடத்துதான். ஆனா எங்கூட நல்லா பழகுவான். வேல வெட்டி இல்லாததால சைக்கிள்ள போயி தோப்பு தொறவ பாத்துட்டு எங் கடைக்கு வந்து கத பேசுததுதான் அவன் பழக்கம். எதுல உட்டென்.. ஆங் பண்ணையாரு சைக்கிள உருட்டிட்டு வரும்போது 19ஆம் நம்பர் பஸ்லேந்து எவனோ மூத்ரக்குழியப் பாத்து காறித் துப்பிட்டான். அது நேரா மஸ்கத் பண்ணையார் மூஞ்சில போய் பட்டுச்சு. அண்ணைக்கு கடைக்கு வரும்போதே கெட்டவார்த்தயால அறுத்துட்டே வந்தான். எல என்னாச்சுண்ணேன். சொன்னாங். 'இந்த மூத்ரக் குழிய தூக்கணும்ல'ண்ணான்.

நானும் அவனும் போயி எம் எல் ஏவப் பாத்து பேசுனோம். அவன் பண்ணையாருக்கு தூரத்து சொந்தம். ரெண்டுவாரங் களிச்சு வாங்கண்ணான். போனோம். அண்ணாச்சி அந்த எடம் பூரா பொறம்போக்கு நெலந்தாண்ணான். இப்ப ஆட்கள் ஒதுங்குற எடத்த திடீர்னு தூக்க ஏலாது. அங்கன மொதல்ல ரெண்டு கக்கூஸ் கட்டுவோம். பெறவு பாக்கலாம்ணான். ரெண்டு மாசத்துல கீழ தெருவுல ரெண்டு செட்டு மால தெரிவுல ரெண்டு செட்டுன்னு அரசாங்க கக்கூஸ் கட்டி உட்டானுவ. ஊர்ல திருவிழா கணக்கா கொண்டாடுனாவ.

எம் எல் ஏ வந்திருந்தான். அப்ப ஒரு விசயஞ் சொன்னான். 'அண்ணாச்சி. இந்தப் பக்கத்துல நல்ல ஸ்கூல் எதுவும் இல்ல. ஊர்ல மூத்ரக் குழிய ஒதுக்கித் தந்தா ஒரு ஸ்கூலக் கட்டிரலாம்ணான்'. ரெண்டு தெருவுஞ் சேந்து முடிவெடுத்து இனி மூத்ரக்குழில ஒதுங்கக்கூடாதுன்னு முடிவெடுத்தோம். ஊர் கெணத்துலேந்து டாய்லெட்டுக்கு தண்ணி வசதியெல்லாஞ் செஞ்சோம். சுகாதார ஆபீஸ்லேந்து டாய்லெட்ல எப்டி போவணும்னு படமெல்லம் போட்டு காமிச்சானுவ.

அடுத்த ரெண்டு வருசத்துலேயே மூத்ரக்குழி இருந்த எடத்துல ஒரு உயர் நிலைப்பள்ளி வந்துச்சு.

அரசு உயர்நிலைப்பள்ளின்ன யாரும் அதக் கூப்பிடுறதில்ல. மூத்ரக்குழி பள்ளிக்கூடம்னுதான் கூப்டுதானுவ.


நன்றி: தமிழோவியம்

Wednesday, June 27, 2007

ஹிந்து + ஆர் எஸ் எஸ்

தற்செயலாய் பார்த்த விபரம். ஹிந்து நாளிதள் செய்திகளுக்கும் பிற வெளியீடுகளுக்குமான RSS ஓடைகளை உருவாக்கியுள்ளது. Pageflakes.com அல்லது பிற RSS சேவைகளாஇ பயன்படுத்தி உங்களுக்கென ஒரு ஹிந்து நாளிதளை நீங்களே தினசரி வெளியிடலாம். நண்பர்களுடனும் பகிர்ந்து்து கொள்ளலாம்.

http://www.hindu.com/thehindu/rss/index.htm

எனக்கென நான் உருவாக்கியுள்ள ஹிந்து நாளிதள்

RSS குறித்த என் பதிவுகள

RSS தான் சிறந்தது - 1
ஒரு ஓடை நதியாகிறது - 2

Tuesday, June 26, 2007

Monday, June 25, 2007

பூங்காவும் நானும்

சிகாகோ தாவரவியல் பூங்காவில் எடுத்த சில புகைப்படங்கள்

Thursday, June 21, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் - 9

9 எனக்கு ராசி நம்பர். அதான் 9வது பாகம் எங்கிட்ட வந்திருக்கு. சிந்தாநதி சிம்பிளா ஒரு ஆரம்பத்தப் போட்டு நடையக் கட்டிட்டாரு அதன் பிறகு கதையின் கேரக்டர்கள போட்டு பதிவர்கள் பொம்மலாட்டம் நடத்திட்டு வர்றாங்க. எங்க போய் முடியப் போகுதோ. கதையின் முந்தைய பாகங்கள் இதோ..

சிந்தாநதி'யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2
CVR'ன் ஞாபகம் 3
ஜி'யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8

முன்கதை சுருக்கம்
ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.

பார்த்த நியாபகம் இல்லையோ பாகம் - 9

கார் வயல்வெளிச் சாலையத் தாண்டி பிரதான சாலைக்கு வந்தது. குளிரூட்டியை இயக்கினான் வினோத். காருக்குள் மின் விசிறியின் மெல்லிய சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எண்ணற்ற கேள்விகள் நிறைந்த மௌன இடைவெளியில் வினோத்தும் பொன்னுசாமியும் வெகுதொலைவில் பிரிந்திருந்தனர்.

"மாமா." மௌன இடைவெளியின்் மோனக் கூக்குரலாய் அவன் விளிப்பு ஒலித்தது. சின்னசாமி அதற்குள் உறங்கிவிட்டிருந்தார். 'இரவு தூங்கியிருக்க் மாட்டார்' வினோத் நினைத்தான். நினைவுகள், தன் வாழ்வை மாற்றிப்போட்ட அந்த நாளை நோக்கித் திரும்பின.

"வினோத் என் ஃப்ரெண்ட் காவேரிகிட்ட வசந்த் ப்ரொப்போஸ் பண்ணப் போறான்."

"நிஜமாவா? வாவ்."

"என்ன நல்ல பொருத்தம் தெரியுமா. நம்ம விட அவங்கதான் ஐடியல்."

"அது எனக்கு அப்பவே தெரியுமே." சிரித்தான்.

"டேய். இப்ப நல்ல மூட்ல இருக்கேன் சண்டைய கெளப்பாத. நாளைக்கு ஒரு காதல் உருவாகப் போகுது. வசந்தப் பாத்தாவது ரொமாண்டிக்கா இருக்கிறது எப்டீன்னு கத்துக்க."

"ரொமான்ஸ் ஃபார் இடியட்ஸ் புக் எழுதியிருக்காரா அவரு?"

"இடியட்டுன்னு ஒத்துகிட்டியே."

"இல்லண்ணா ஒன்ன கா.... ஏ கிள்ளாத? நாம நாலு வரி பேசுனா அஞ்சாவது வரி சண்டதான்."

"நாளைக்கு ஈவினிங் ஷோ. சத்யம் காம்ப்ளெக்ஸ். காதலன். மறக்காம வா."

"ரெண்டுபேர் அசடு வழியுறதப் பாக்க கட்டாயம் வருவேன்."

அடுத்த நாள்.

"டேய் மச்சான் நான் லெட்டுடா ஏற்கனவே. உமாவப் பத்தி ஒனக்குத் தெரியும்ல. ப்ளீஸ் மச்சான் வண்டி வேணும்டா."

"டேய் பக்கத்துலதான் இருக்கேன் வந்துருவேண்டா?"

'என் பைக்க கேக்குறதுக்கே கெஞ்ச வேண்டியிருக்குது!'. இரவல் வாங்கிப்போன பைக் வந்து கிளம்புவதற்குள் லேட் ஆகியிருந்தது. உமா சொன்ன இடத்திற்கு வரும்போது அங்கே...அது... 'இவளா! இந்தக் காவேரியா உமா சொன்ன காவேரி?'

உமா காவேரி புராணம் பாடும்போதெல்லாம்... அவள் கவிதைகளை வாசித்தபோதெல்லாம் எப்படி புரியாமல் போனது என நொந்துகொண்டான் வினோத். தன் தோழியை மீண்டும் கண்டுகோண்டதில் மகிழ்ந்தான். 'உமாவுக்கு செம சர்ப்ரைஸ் இண்ணைக்கு.'

வசந்த் தந்த பூவைக் கையில் ஏந்தியபடி வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் காவேரி. வினோத்தா வசந்தா யாரிடம் முதலில் பேசுவது?
"வினோத்... ஏ வினோத்...எப்டி இருக்க ஆளே மாறிட்ட."

எதிரே வரும் வினோத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கையிலிருந்த பூ ரோட்டில் விழுந்தது. எடுக்க கீழே குனிந்தவள் செருப்பு தடுக்கி ரோட்டில் விழுந்தாள். "காவேரீ..." வசந்த, உமா, வினோத்தின் கூக்குரலின் மத்தியில் தண்ணி லாறி காவேரியை இடித்து தூக்கிப் போட்டது.

ஐ.சி.யுவில் ஒரு வாரம் கழிந்தது. காவேரி சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

டாக்டர் வசந்த், உமா, வினோத்தை அழைத்திருந்தார். அறையில் இரு டாக்டர்களும் நண்பர்கள் மூவரும் உட்கார்ந்திருந்தனர்.
"உங்கள்ல யாராவது காவேரியோட ரிலேட்டிவா?" டாக்டர் கேட்டார்.

"இல்ல. நான் ரூம் மேட். க்ளோஸ் ப்ரண்ட். வினோத் அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட். வசந்த் அவளோட பாய் ஃப்ரண்ட்." உமா சொன்னாள்.

"ம். பைத வே. இவர் டாக்டர் மாயன். சைக்கியாட்ரிஸ்ட். பொதுவா தலையில அடி பட்டவங்களுக்கு சைகியாட்ரிக டெஸ்ட் செய்வோம்."

"எனிதிங் ராங்்்? அவ நார்மலாத் தெரியுறாளே?" வசந்த் சொன்னான்.

"ஆமா. உடல் ரீதியா ஷீ லுக்ஸ் நார்மல்."

"அப்டீன்னா?"

"ஷீ ஹாஸ் பார்ஷியல்் அம்னீஷியா."

மூவரும் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

"பழசு பலதும் அவங்களுக்கு நியாபகமில்ல. அவங்க அப்பா பேரக் கூட ஒரு சில நேரந்தான் நியாபகம் வச்சிருக்காங்க. கொஞ்சம் டிபிக்கல்ட் கேஸ்தான்."

"கடவுளே." உமா கண்கள் நிறைந்திருந்தன.

"அவ நினைவுல இருக்கிற ஒரே ஆள் வினோத்தான்."

"வினோத்தா?" வசந்த் அதிர்ந்துபோனான்.

"யெஸ். பள்ளித் தோழன் வினோத். சின்ன வயசுல அவளோட அப்பாவுக்கடுத்ததா நெருங்கிப் பழகிய முதல் ஆண் வினோத். அது அவளுக்குள்ளால ஆழமான பாதிப்ப ஏற்படுத்தியிருக்கு. வினோத்தோட காதல ஏத்துக்காமப் போனதப் பத்தி ரெம்ப பீல் பண்ணியிருக்கா. அவளோட கவிதகள்ல அவ ஏங்கி அழக்கூடிய நட்பு வினோத்துடையதுதான்." டாக்டர். மாயன் தொடர்ந்தார்்.

"ஆனா பிரச்சன வினோத்த பிரிஞ்சதோ அவனோட நினைவுகளோ இல்ல? இப்ப அவ வினோத்தான் தன் காதனண்ணு நம்பிகிட்டிருக்கா. சொல்லப்போனா வினோத்த பிரிஞ்சதுலேர்ந்தே அவனோட ஒரு கற்பனை உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கா. இப்ப அந்த கற்கனைகள் நிஜமாயிடுச்சு. வினோத் இஸ் ஹெர் பாய் ஃப்ரெண்ட். இத அழமா நம்புறா."

"வசந்தோட நல்லா பழகினாளே டாக்டர்." உமா குழப்பத்துடன் கேட்டாள்.

"ம். அது வினோத்துடைய குணங்கள் வசந்த்கிட்ட இருந்ததால இருக்கலாம். அல்லது வசந்த வினோத்தா அவ கற்பனை செய்திருக்கலாம். ஷி இஸ் எ க்ரியேட்டிவ் பெர்சன். சிலருக்கு கற்பனைசக்தி தங்களோட தினசரி பிரச்சனைகளை சமாளிக்கவும், மனத ஸ்திரமா வச்சிருக்கவும் உதவுது."

"உங்க மூணுபேரப் பத்தியும் ஓரளவு எனக்கு தெரிஞ்சதால டாக்டர் மாயன வச்சி பேசலாம்ணு முடிவு செஞ்சேன்."

"இதுக்கு ட்ரீட்மெண்ட்."

"லாங் டெர்ம். ரெம்ப நாள் ஆகலாம். ஆனா அதுவரைக்கும் காவேரியோட கற்பனை உலகத்த கலைக்கக் கூடாது. உண்மைகள அவளால ஜீரணிக்க முடியாமப் போயிடுச்சுண்ணா. இட் மைட் பி ஃபேட்டல். உயிரே கூடப் போகலாம்".

"அப்ப..?"

"அவள வினோத்தால.. வினோத்துடைய காதலால மட்டுந்தான் காப்பாற்ற முடியும். காவேரிக்கு இப்ப இருக்கிற முழுமையான நினைவு அல்லது கனவுண்ணும் சொல்லலாம், வினோத்த பத்தினதுதான்."

உமா வினோத்தின் கையைப் பற்றி அழ ஆரம்பித்தாள். வினோத் அவளை மெலிதாய் அணைத்திருந்தான். வசந்த் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்திருந்தது.

==================================================>>>>>>>>

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக பத்தாவது பகுதியை எழுத சேவியரை அழைக்கிறேன்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

7க்கும் 9க்கும் நடுவில்

7 ஏன் பயங்கரமான நம்பர் தெரியுமா?
ஏண்ணா seven ate nine.

இப்ப வலைப்பதிவுல 8 போட்டாத்தான் லைசன்ஸ் குடுப்பாங்களாம். சேவியர் அவர்கள் அன்பாய் அழைத்ததன்பேரின் என்னைப் பற்றி 8 குறிப்புக்கள்.

என்னத்த சொல்ல. பலமுறை சொல்லியாச்சே... சரி ரிப்பீட்டானா மன்னிச்சுருங்க.

1. பிறந்து வளர்ந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகிய கடற்கரை கிராமம் முட்டத்தில். முட்டம் போன்ற ஒரு எளிய கிராமத்திலிருந்து வந்து எங்களாலேயும் கலக்க முடியும்ணு காமிக்குறோம்ல. அதான் பெருமையான விஷயம்.

2. ரெம்ப மிஸ் பண்றது எங்க ஊரத்தான். என்னதான் சிக்காகோ சியாட்டல்னு சுத்துனாலும் நம்ம சொந்த ஊர்ல இருந்தக் காலங்கள் மறக்க இயலாதவை. இப்பவும் சினமா எதுலையாச்சும் முட்டம் காண்பிச்சாங்கண்ணா நினைவுகள் 'அடி ஆத்தாடீ'ன்னு பறந்துடும்.

3. திருப்பத்தூர் டான் போஸ்கோ பள்ளிக்கூடத்துல +1 & +2 படிச்சத மறக்க முடியாது. பள்ளியில கிட்டத்தட்ட ஒரு ஹீரோ அந்தஸ்த்து கெடச்சது. அங்க நடந்த எல்லா நிகழ்ச்சிகள்லேயும் நான் மேடையில இருப்பேன். மேக் அப் போட்டுகிட்டோ அல்லது இல்லாமலோ. நான் மேடைக்கு வந்ததும் கூட்டம் தன்னாலே சிரிக்கும். அருமையான ஆசிரியர்கள். ஒரு தோழனப் போல வளர்த்து விட்டாங்க. நான் மீண்டும் போக விரும்பும் ஒரு இடங்களில் ஒன்று என் பள்ளிக்கூடம், டான் போஸ்கோ, திருப்பத்தூர்.

4. பள்ளிக்கூடப் போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் 15 வருஷமா ஒண்ணுமே எழுதாம பின்பு வலைப்பதிய ஆரம்பிச்சேன். அதற்கு வழிகாட்டி ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஒரு சிறந்த அனுபவமா, அங்கீகரிப்பா அமைந்துவிட்டது பதிவுகள். இணைய போட்டிகளில் கிடைத்த வெற்றிகள் பெருமைக்குரியவை. தேன்கூடு போட்டிகளில் முதல் பரிசு இரண்டாம் பரிசுன்னு இருமுறை கிடத்தது. தமிழ் சங்கத்தின் கவிதைப்போட்டியில் முதல் பரிசு, அன்புடன் குழுமத்தில் என் பாட்டுக்கு கிடைத்த 2ஆம் பரிசு. சுவையான, ஊக்கமூட்டும் அனுபவங்கள்.

5. கடந்த ஏப்ரல் 22ல் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு அருமையான அனுபவம். பதிவுலக மக்களை சந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பு. மக்கள் தொலைக்காட்சி பேட்டி, தினகரன்ல படம்ணு அமர்களமாயிடுச்சு வேற. இன்னும் பெரிய நிலையை நோக்கி நாம (பதிவர்கள்) பயணிக்கணும் மக்களும், ஊடகமும் நம்மைத் தேடி வரவேண்டும். இந்த சந்திப்பில் என்னுடைய எழுத்தை மக்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என நேரடியா தெரிய முடிந்தது. பாலபாரதி, வரைவனையான், லக்கிலுக், ரோசாவசந்த், நாமக்கல் சிபி, பொன்ஸ், பாஸ்டன் பாலா, பிரகாஷ், வடுவூர் குமார், பாலராஜன் கீதா, சுகுணா திவாகர், ஓகை, மோகன்தாஸ், கிருபா ஷங்கர், தருமி, ஓசை செல்லா, நவீன், தங்கவேல், ஜி.ரா, கௌதம், இன்னும் பல நண்பர்களையும் சந்திக்க முடிந்ததுல ரெம்ப மகிழ்ச்சி. முதலில் வந்த தொலைபேசி அழைப்புக்களிலேயே ரெம்ப ஆடிப்போயிட்டேன். இணைய நண்பர்கள் இனிய நண்பர்கள்.

6. இன்னொரு பெருமை தரும் விஷயம் சற்றுமுன். இதற்கு நான் முழுமையான காரணம் அல்ல. நண்பர்கள் சும்மா அசுர வேகத்தில் சற்றுமுன்னை வளத்துட்டாங்க. இப்ப பேரச் சொன்னாலே அதிருதுல்ல. :) (thought only spoils the life) சற்றுமுன் விரைவில் இன்னும் பெரிதாக செயல்பட வேண்டிய முயற்சிகளை எடுக்க திட்டம் இருக்கிறது். சென்னை வந்தபோது பாலபாரதியின் ஆபீசுக்கு போயிருந்தேன். (அத ஆபீஸ்னு சொல்லலாம்முங்களா?) அங்க ஒருவர் தீவிரமா சற்றுமுன் வாசித்துட்டிருந்தார். அப்பத்தான் எனக்கு இதன் வெற்றி முதன் முதலாய் புரிந்தது.

விளம்பர இடைவெளி: சற்றுமுன் போட்டிக்கு உங்கள் படைப்புக்களை அனுப்பிவிட்டீர்களா?

இன்னும் ரெண்டு பாயிண்ட் எழுதணுமா? ஹையோ...

7. எனக்கு பிடித்த உணவுன்னா மீன்வகைகள்தான். (வேற என்னவாயிருக்க முடியும்?) நண்டு எறால் மீனுண்ணு ஒரு கட்டு கட்டிட்டிருந்த என்ன டையபட்டீஸ் இருக்குண்ணு கட்டி போட்டுட்டாங்க. இப்பெல்லாம் ரெம்ப யோசிச்சு சாப்பிடவேண்டியிருக்கு. இனிமையானவன்ணா டையபட்டீஸ் உள்ளவண்ணு அர்த்தமா? என்ன இருந்தாலும் உடம்ப வெயிட்ட குறச்சிட்டு அளவா சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்வதுல ஒரு ஆனந்தம் இருக்குது. சும்மா பதிவேண்ணு இருக்காம இப்பெல்லாம் காலையில அரைமணி நேரம் ஜாகிங் சாயங்காலம் டென்னிஸ். ஆபீஸ் சீட்ல உக்காந்து கால ஆட்றதெல்லாம் எக்சர்சைஸ் இல்லையாம்..

8. நான் இப்டி இணையத்துல ஓரளவு தெரியப்பட்ட பதிவர் என்பதை என் மனைவியத் தவிர என் குடும்பத்தில் யாரும் முழுதாய் உணரவில்லை. மக்கள் டிவி பேட்டியைக் கூட என் பெற்றோர் முழுதாய் பார்க்கவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான தகவல்ணே சொல்லலாம். தோராயமா ஏதோ நான் எழுதுறேன் என்கிற தகவல்தான் அவங்களுக்கு தெரியும். அவங்களும் படிக்க ஆரம்பிச்சுட்டா கூச்சமாப் போயிரும் எனக்கு. :)

அப்படா ஒரு ்வழியா வழியா 8 போட்டுட்டேன். அடுத்து 8 பேரக் கூப்பிட்டு சங்கடத்துல ஆழ்த்தணுமாம்.

1. புளியமரம் தங்கவேல்
2. விவசாயி இளா
3. நிர்மல்
4. சிவபாலன்
5. சர்வேசன்
6. மணியன்
7. கவிதா(33% இட ஒதுக்கீட்டில்*)
8. அருட்பெருங்கோ

* இட ஒதுக்கீடு அணிலுக்குத்தான் கவிதாவுக்கல்ல :)

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Wednesday, June 20, 2007

செல்வம் - சிறுகதை

ரெம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன். இந்த வார தமிழோவியத்தில் வந்துள்ளது

செல்வம்.
-------------------------------

'மதுரை 20 கி.மீ'. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. 'மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா' யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது.

விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே காணாமல் கரைந்து போய்விடலாம் எனும் நம்பிக்கை வந்தது. 'நீ எனக்குப் பொறந்தவன்னா இப்டி செஞ்சிருப்பியால?' அப்பாவின் கோபக் குரல் வாகன சத்தத்தில் கரைந்து போனது.

"தம்பி கோயம்பேடு வந்துடுச்சு. தனியாவா வந்த?" பக்கத்து சீட்காரர் தலைவாரிக் கொண்டே கேட்டார்.

"இல்ல. அண்ணாச்சி பின்னால இருக்காவ." பொய் சொல்வதே இனி பாதுகாப்பானது.

"இதுக்கு முன்னால சென்னை வந்திருக்கியா?"

"இல்லண்ணாச்சி இதான் மொதோ தடவ."

சாயங்காலம்வரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றினான். 'மனம் மாற்னா ஊருக்கு பஸ் ஏறிரலாம்'.

மனம் மாறுவதாயில்லை. அப்பாவை நினைக்க நினைக்க இன்னும் தூரமாய் ஓடிப்போகத் தோன்றியது.

"தம்பி. என்னடா காலைலேந்தே இங்க சுத்துற." விழித்துப் பார்த்தான். லத்தியால் தட்டியபடி போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.

"சார். இங்கன ஓட்டல்ல வேல பாக்கேன். இன்னைக்க்கு லீவு அதான்."

"திருநெல்வேலியா?"

"நார்கோயில்."

"பஸ்ஸ்டாண்ட்ல சுத்தாத. ரூமுக்கு போய் சேரு."

பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தான். முதலில் வந்த பஸ்ஸில் ஏறினான்.
"பஸ் எங்க போது?"

கண்டக்டர் முறைத்தார். "ஒனக்கு எங்கப் போகணும்?"
"பஸ் ஸ்டாண்ட்"

"எஸ்டேட்டா?"

"ஆமா." அவர் என்ன சொல்லியிருந்தாலும் 'ஆமா' சொல்லியிருப்பான்.

அம்பத்தூர் எஸ்டேட்டை அடையும்போது இருட்டியிருந்தது.

காலையில் பெரிய ஓட்டலில் சாப்பிட்டதில் ஐம்பது ரூபாய் காலியாகியிருந்தது. சின்ன ஹோட்டலில் இரவு சாப்பாடு. 'மதுரை முனியாண்டி விலாஸ்'.

இரவு பயமுறுத்த ஆரம்பித்தது. 'வீடு எத்தனை பாதுகாப்பானது?'

கொஞ்ச தூரம் நடந்துவிட்டு ஹோட்டல் பக்கம் திரும்பி வந்தான். 'வீட்டுக்குப் போனா இன்னும் பயங்கர அடி கிடைக்கும்.' பீரோல இருந்த காசு 3000த்தை எடுத்து வந்திருந்தான். 'இப்ப போனா 2000த்த திரும்பத் தந்துரலாமோ?'

சாலையில் போக்குவரத்து குறைந்திருந்தது. கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. 'மணி ரெம்ப இருக்குமோ?'

முனியாண்டி விலாஸ் மூடப்பட்டது.
"அண்ணே மணி எத்தன?"

"11:30"

ஹோட்டல் வெளியே இருவர் பாய் விரித்துக்கொண்டிருந்தனர்.
"அண்ணாச்சி. இங்க வேல கெடைக்குமா?"

"எந்த ஊருடா தம்பி?"

"நார்கோயில்."

"இங்க என்ன பண்ற?"

"ம்... எனக்கு அப்பா அம்மா இல்லண்ணாச்சி." தான் தனிமனிதன் என்பதில் ஒரு சுகம் தென்பட்டது. "ஊர்ல ஒரு கடையில வேல பாத்தேன். இங்க வந்துர்லாம்னு வந்துட்டேன்."

பொய் சொல்வதுதான் இனி பாதுகாப்பானது.

"என்ன வேல பாத்த?"

"சிப்ஸ் கட இருக்குல்லா? அங்க பார்சல் கட்றது?" சரளமாக தனக்கு பொய் சொல்லவருகிறது என்பதில் தைரியமடைந்தான்.

"பேரென்ன?"

"செல்வம்."

"ஆங்?"

"செல்வமண்ணாச்சி."

"இங்க எடுபிடி வேலதான் கெடைக்கும்."

"போதும் அண்ணாச்சி."

"காலைல மொதலாளிட்ட சொல்லிட்டு சேந்துக்க."

"சரி. இப்ப இங்கன ஒறங்கவா?"

"இப்டி படுத்துக்க." தலைக்கு சுருட்டி வைத்திருந்த லுங்கியை தரையில் விரித்தார்.

அதற்குப் பிறகான உரையாடல்களில் பொய்களால் தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டான். அந்தப் புது பொய்யான செல்வத்தின் அப்பா சிறு வயதிலேயே இறந்திருந்தார். அப்பாவும் நடராஜன் மாமாவப் போல பனை ஏறும் தொழில் செய்தவர். அம்மா செல்வி அத்தையப் போல தீக்குளித்தாள். பள்ளித்தோழன் மகேசப் போல இவனும் தாத்தா வீட்ல கஷ்டப் பட்டு வளர்ந்திருந்தான். வளனைப் போல நாகர்கோவில் கடையில் வேலைபார்த்திருந்தான். இன்னும் ஊரில் உள்ளவர்களின் கதையெல்லாம் தன் கதையாக்கிக்கொண்டான்.

மறுநாள் முதல் ஹோட்டலில் வேலை. வேலை வாங்கித்தந்த சக்தி அண்ணனிடம் மீதமிருந்த பணத்தை கொடுத்து வைத்தான்.
"டேய் அண்ணாச்சின்னாத அண்ணேன்னு சொல்லு. நான் அண்ணாச்சியில்ல."

"எங்கூர்ல பெரியாள அப்டித்தான் அண்ணாச்... அண்ணே கூப்டுவோம்."

"ஒனக்கு மொதல்ல பேசச் சொல்லித்தரணும்போலியே."

காலை ஐந்துமணிக்கு எழுந்து காய்கறி வெட்டிவிட்டு. ஒரு குளியல். 7 மணி முதல் சமையல்கட்டில் உதவி.

"சக்தி, சின்னப் பசங்கள வேலைக்கு சேக்கக்கூடாது. நீ சொல்றேன்னுதான் சேத்தேன். கிச்சன உட்டு வெளிய அவன் தல காட்டாமப் பாத்துக்க." முதலாளி தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மாலை 4 முதல் 5 வரை ஓய்வு. மீண்டும் 5 துவங்கி இரவு 11 வரை சமையல் கட்டில். வாரம் ஒருநாள் விடுமுறை. தினம் 11 மணிக்கு காலைஉணவு 4 மணிக்கு மதிய உணவு 11 மணிக்கு இரவு உணவு. உணவு விடுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை என்பதை புரிந்துகொண்டான்.

வேலை கடினமாக இருந்தாலும் வீட்டுப்பாடம் எழுதுவதைவிட எளிதாய் தோன்றியது செல்வத்துக்கு.

ஒரு வாரத்திலேயே வீட்டை முற்றிலும் மறந்திருந்தான். அப்பா சொன்ன வார்த்தைகள் மட்டும் மறக்கவில்லை. "நீ எனக்குப் பொறந்திருந்தேன்னா.."

இருவாரங்களில் சக்தியிடம் பலமுறை அடி வாங்கியிருந்தான். வாச்மேன் சிவா சொன்னார்,"சக்திட்ட அடிவாங்கிட்டியா? இனி வளந்துடுவ. அவனுக்கு புடிச்சாத்தான் அடிப்பான். புடிகலேன்னா பேசக்கூட மாட்டான்."

மூன்று வாரங்களில் புது வாழ்க்கை இயல்பாகியிருந்தது. பக்கத்து 'அண்ணாச்சி' கடை பழக்கமாகிவிட்டது.
"அவருக்கு ஊரு நாமக்கல்லாம். ஏண்ணே அவ்வாள அண்ணாச்சீங்கிய?"

"இங்க மசாலா சாமான் விக்கிறவங்களையெல்லாம் அண்ணாச்சின்னுதான் சொல்றாங்கடா."

தியேட்டருக்கு தனியே போகப் பழகிக்கொண்டான். இரவுக் காட்சிகளில் முன்வரிசைகள் முழுவதும் இவனைப்போன்றவர்களால் நிரம்பியிருந்தது.
"எங்க கடைக்கு வேலைக்கு வாரியால?" திருநெல்வேலிக்கார அண்ணன் கேட்டான்.

"சக்தி அண்ணன் உடாது." பெருமிதமாய் பதிலளித்தான்.

புதுப்புது நண்பர்களும், அவர்களின் கதைகளும் சுவாரஸ்யம் தந்தன. நாட்கள் கடப்பதையே உணரவில்லை செல்வம்.

அன்று வழக்கம்போல சமையல்கட்டில் நின்றுகொண்டிருந்தான். மதிய சாப்பாடு முடிந்துவிட்டிருந்தது.
"டேய்..." சக்தி அழைப்பது கேட்டது. சமையல் கட்டிலிருந்து தலை வெளியே வரக்கூடாது எனும் சட்டத்துக்குட்பட்டு உள்ளிருந்தே குரல் தந்தான்.
"அண்ணே..."

"கல்லாவுக்கு வாடா." சமையல் கட்டிலிருந்து எட்டிப்பார்த்தான். ஹோட்டலில் ஒரே ஒரு கஸ்டமர் உட்கார்ந்திருந்தார். கல்லாவுக்கு வந்தான்.

ஹோட்டல் கதவருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். கசங்கி அழுக்கான சட்டை, உட்காரும் இடத்தில் வட்டமாய் அழுக்கு படிந்த வேட்டி. கையிடுக்கில் வியர்வைபட்டு தோலுரிந்த தோல்பை. கலைந்து, பல நாளாய் வெட்டப்படாத தலைமுடி. பின்னாலிருந்து செல்வத்தால் அவரை முழுதாய் பார்க்க இயலவில்லை.

"அண்ணாச்சி. இவனா பாருங்க?" சக்தி அவரைப் பார்த்துக் கேட்டான். வந்தவர் திரும்பி செல்வத்தை பார்த்தார்.

செல்வம் அவரை பயத்துடன் பார்த்தான்.

தடுமாறி அடியெடுத்து நெருங்கி வந்து செல்வத்தின் தோளில் கையை வைத்தார். இப்போது அவர் கண்களில் நீர் நிரம்பியிருந்தது செல்வத்துக்கு தெளிவாகத் தெரிந்தது. வேகமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். கண்ணீர் வழிந்தோடியது.

"ஆ..ஆ...ஐயோ ஆ"

கையிலிருந்த தோல்பை கீழே விழுந்தது. அவர் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

"ஆ... அம்மா.. ஆ." சத்தமாய் அழுதுகொண்டே மண்தரையென்றும் பாராமல் கீழே அமர்ந்தார், வீழ்ந்தார் என்றே சொல்லலாம்.

செல்வம் அவரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

"அண்ணே ..." சக்தி அவரை அழைத்தான்.

"ஐயோ...ஆண்டவா." தொடர்ந்து தலையில் அடித்துக்கொண்டார்.

"டேய் சக்தி என்ன நடக்குது இங்க? ஆள் யாரு?" வெளியே போயிருந்த கடை முதலாளி திரும்பிவந்தார்.

"சார் இவரு.." சக்தி தயங்கினான். "பையன் ஊர்லேந்து ஓடி வந்துட்டானாம். நம்ம செல்வத்தோட பேரச் சொன்னாரு அதான்.. இங்க..."

"சார் எந்திரிங்க. இங்க பெஞ்சல் உக்காருங்க." முதலாளி அவரை எழுப்பி பெஞ்சில் உட்கார வைத்தார்.

செல்வத்தை காட்டி,"நம்ம பையனா சார்?" என்றார்.

வந்தவர் அழுகையை நிறுத்தவில்லை. கைகளில் இயலாமையால் ஏதேதோ செய்கைகள் செய்தார்.
"டேய் இது யாருடா?" செல்வத்தை பார்த்து கேட்டார் முதலாளி.

செல்வம் வந்தவரையே முறைத்துக்கொண்டிருந்தான்.

"டேய் சார் கேக்குறார்ல? சொல்லு." செல்வம் கையை ஓங்கினான்.

"தம்பி அவன அடிக்காதப்பா". புதியவர் அழுகைக்கு மத்தியில் பேசினார்.

செல்வத்தின் கண்கள் பனித்திருந்தன.

"சார் எனக்கு அப்பவே சந்தேகம். இவன் ஓடிதான் வந்திருப்பாண்ணு. சரி எங்கயாவது போய் என்னதும் ஆயிரக்கூடாதேண்ணுதான் இங்க சேத்தேன். சக்தி சொன்னேனேப்பா மாத்து துணியில்லாம வந்திருக்கான் இவன் ஓடிதான் வந்துருக்கான்னு." முதலாளி சக்தியை முறைத்தார்.

"சார். இவன் என் பையன் இல்ல சார்." விசும்பலோடு சொன்னார் புதியவர். எல்லோரும் அமைதியாயினர். "இவனில்ல. எம் பையன் ஒரு மூணு மாசத்துக்கு முன்னால நான் அடிச்சிட்டேன்னு ஓடி வந்துட்டான். ஐயா. எம் புள்ளையத் தேடி நான் போகாத எடமேயில்ல. மெட்ராஸ்ல இருக்க கடையிலெயெல்லாந் தேடிட்டேன்யா. சுத்தி சுத்தி என் உயிரெல்லாம் போச்சு. ஐயோ எம் புள்ள எங்க கடந்து கஷ்டப்படுதோ? எம்புள்ள உசுரோட இருக்கா இல்லியாண்ணே தெரியலியே. ஐயோ." மீண்டும் குரலெடுத்து அழுதார்.

"ஒரு கொறையும் வச்சதில்ல எம் புள்ளைக்கு. ஒருநா பட்னி கெடந்ததில்லையே. அவன் எப்டி சார் தனியா...? ஐயோ அவன் ஆத்தா புள்ளைய பறிகுடுத்துட்டு சாவக் கெடக்கா. அவன் தங்கச்சி ரெண்டும் அழுதுட்டே இருக்குங்க. ஊரே துக்கத்துல கெடக்குது. ஒருநாளும் இல்லாம அண்ணைக்கு அடிச்சுட்டேனே. பாவி.. பாவி." தலையில் அழுந்த அடித்துக்கொண்டார்.

பெரியவர்கள் யாரும் இப்படி அழுது பார்த்ததில்லை செல்வம். ஹோட்டலின் முன்பாய் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. இவர் எதற்காக அழுகிறார் என்பதை புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. பெருந்துக்கங்கள் சந்தோஷங்களைப் போலவே விரைவில் தொற்றிக்கொள்கின்றன.

"எம் பையம்பேரு செல்வன் தம்பி. இந்தப் புள்ள யார் பெத்த புள்ளையோ?" சக்தியை பார்த்து,"தம்பி நீங்க செல்வம்னு சொன்னதும் எம் பையன் பேரத்தான் தப்பா சொல்றீங்கன்னு நெனச்சேன். சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்குடாதுன்னு சொல்லுவாங்க. ஐயோ என் புள்ளைய எங்க போயி தேடுவேன்"

"சார் அழாதிங்க. ஒண்ணும் ஆகாது. பையன் வந்துருவான்." முதலாளி ஆறுதலாய் சொன்னார். "சக்தி தண்ணி குடுப்பா. சார் இங்க சாப்பிடுங்க. போலீஸ்ட சொல்லியாச்சா?"

அவர் சாப்பிட்டு முடித்து கிளம்பியபின்தான் செல்வத்தை தேடினான் சக்தி.

செல்வம் கோயம்பேட்டிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தான்.


நன்றி: தமிழோவியம

Friday, June 15, 2007

'சிவாஜி' திரட்டி - அறிமுகம்

In case you missed the earlier post..


சிவாஜி பற்றிய பதிவுகள், விமர்சனங்கள், செய்திகளை ஒரே இடத்தில் படிக்க ஒரு திரட்டி செய்துள்ளேன். கூடவே சிவாஜி புகைப்படங்களும், வீடியோக்களும்.

ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம். கீழே க்ளிக்குங்க.

வாஜி வாஜி வாஜி

சிவாஜிக்கென தனி திரட்டி


சிவாஜி பற்றிய பதிவுகள், விமர்சனங்கள், செய்திகளை ஒரே இடத்தில் படிக்க ஒரு திரட்டி செய்துள்ளேன். கூடவே சிவாஜி புகைப்படங்களும், வீடியோக்களும்.

ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம். கீழே க்ளிக்குங்க.

வாஜி வாஜி வாஜி

Thursday, June 14, 2007

புதிய முயற்சி

சில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும். அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன். சில, நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும். அப்படி மொழி பெயர்த்தக் கவிதை/பாடல் ஒன்று கீழே.

இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க..

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா?

நீ (நீரில்) 'மூழ்குகிறேன்' எனக் கூறினாலும்

நான் என் கரங்களைத் தரப்போவதில்லை.

உன் முகத்தை முன்பே பார்த்திருக்கிறேன் நண்பனே!

ஆனால் உனக்கு நான் யார் எனத் தெரியுமா தெரியவில்லை.

நான் அங்கிருந்தேன்,

நீ என்ன செய்தாய் என்பதை கண்டேன்,

என்னிரு கண்களால் கண்டேன்.

ஆதலால், உன் புன்னகையை துடைத்துவிடு.

நீ எங்கே சென்றிருந்தாய் என நான் அறிவேன்.

எல்லாமே பொய்யின் மூட்டைகள்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

எனக்கு நினைவுள்ளது!

எனக்கு நினைவுள்ளது, கவலைப் படாதே.

எப்படி என்னால் மறக்க இயலும்?

முதன்முதலாய், கடைசியாய் நாம் சந்தித்த கணம்.

ஆனால் உன் புன்னகையின் காரணம் எனக்குத் தெரியும்.

இல்லை.. நீ என்னை ஏமாற்ற இயலாது!

அந்தக் காயம் வெளியில் தெரிவதில்லை ஆனால்

வலி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது

அது உனக்கும் எனக்கும் அன்னியமாயில்லை.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

நன்றி: தமிழோவியம்

Wednesday, June 13, 2007

'சிவாஜி' பற்றிய பதிவுகள்

சிவாஜி வாயிலே ஜிலேபி.

மேல உள்ளத க்ளிக்கினா 'சிவாஜி' குறித்த பதிவுகளைப் பார்வையிடலாம். வலப்பக்க பட்டையிலும் அப்டேட் ஆகும்.

இதுல இடப்பக்கம் பாத்தீங்கண்ணா கால வரிசைப்படி பார்க்க வசதி இருக்குது.

சிவாஜி பற்றி பதிவு வந்தா உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துற வசதியும் உண்டு. Explore it.

இதுதான் Google Blogsearchன் மாயம்.

தேடினா! கிடைக்கும்!

பாபா 'சுருக்கம்'னு பின்னூட்டியதால இந்த சேர்க்கை.

இணையம் முழுவதிலும் தேட கூகிளை பயன்படுத்துவதைப்போல பதிவுகளில் தேட Blog search உதவுகிறது. Advance Blogsearchல போனீங்கண்ணா இன்னும் அதிக வசதிகள் இருக்குது.

உதாரணத்துக்கு சிறில் என்கிற பெயர் பதிவுகளில் எங்கேயெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்குன்னு ஒரு தேடல் செஞ்சேன். அதுல என்னுடைய பதிவுகளை 'without words' எனும் பெட்டியில் 'theyn cvalex useenthis muttom' என்று உள்ளிட்டேன். இதனால் என் பதிவுகளைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் சிறில் எனும் பெயர் எங்கெல்லாம் இருக்குதுண்ணு எளிதா கண்டுபிடிக்க முடிந்தது.

இப்படி தேடிக் கிடைப்பவற்றை RSS அல்லது Atom ஓடையாகவும் பெறலாம்.

பாலபாரதிக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கலாம்.
:)

உலகெங்கும் பா.க.சவினர் போடும் பதிவுகளை தொகுக்க எளிதாயிருக்கும்.

சுய ஆய்வுக்கான கேள்வி

யார் பெயர் பதிவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனப் போட்டிவைத்தால் யார் ஜெயிப்பார்கள்?

1. Baby பாரதி
2. 'சமீபத்தில் பிறந்த' டோண்டு
3. 'Snap நிதியரசர்' பாஸ்டன் பாலாஜி
4. 'Sound' செல்லா
5. 'யானைப் பாகி' பொன்ஸ்

Friday, June 08, 2007

பதிவர்களுக்கான புத்தகம் அறிமுகம் - Pure ஜல்லி


பின்குறிப்பு: இந்த புத்தகத்தை எழுதியவர் பாஸ்டன் பாலா அல்ல பால பாரதியும் அல்ல.

தொடர்ந்து ஜல்லி பதிவுகள்னு கவலைப் படாதீங்க மக்களே! இப்போ இதுதான் முடியுது!

ஒரு ஓடை நதியாகிறது - 2

ஓடைகளை கூகிள் ரீடரில் சேர்த்து படிப்பது எப்படி எனப் பார்த்தோம்்.

ஓடைகளை ஒழுங்குற சேர்த்து உங்களுக்கென ஒரு தனி திரட்டி செய்துகொள்வது எப்படீன்னு பார்க்கலாம்.

என்னோட பக்கப்பட்டையில் கவனிப்பில் இருப்பவை என ஒரு குறும்பட்டை(Widget) இருக்குது பாருங்க. இதில் நான் பொதுவாக விரும்பிப் படிக்கும் சில பதிவுகளின் ஓடைகளை ஒன்றாக்கியிருக்கிறேன்.

இதை செய்ய கூகிள் ரீடரில் உங்களுக்கு பிடித்த பதிவுகளை ஒரு Folderல் போட்டு வைக்கவேண்டும். கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.

இப்ப எனக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளை Watching எனும் Folderல் போட்டுவைத்திருக்கிறேன். இனி போய் Watching எனும் Folderஐ Public ஆகா மாற்றி அதற்கான ஓடையை பெற இயலும்.

இது குறித்து ரவிஷங்கரின் விரிவான பதிவு இதோ.

சரி. இப்படி உங்களுக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளைச் சேர்த்து ஒரு ஓடை உருவாக்கியபின்னர் அடுத்து திரட்டி செய்வதுதான் மிச்சம்.

ஓடைகளை அழகுற ஒருங்கிணைக்க Pageflakes எனும் தளம் இருக்கிறது.

pageflakes.com போய் ஒரு கணக்கை துவங்குங்க. Create a Page எனப் போட்டு ஒரு பக்கத்தை ஏற்படுத்துங்க. அடுத்ததா ADD FEED என்பதை சுட்டி உங்க ஓடைகளை சேர்க்க ஆரம்பிக்கலாம். உங்கள் பக்கத்தை மாற்றி வடிவமைக்க வார்ப்புருக்களும் உள்ளன. வெறும் ஓடைகள் மட்டுமன்றி சின்ன விளையாட்டுக்கள், கருவிகள், பயனுள்ள செயலிகள் என பலவற்றை உங்கள் தளத்தில் சேர்க்க முடிகிறது. இதற்கு ADD FLAKE எனும் சுட்டியை தேர்ந்தெடுங்கள்.

இதில் பல ஓடைகளை ஒன்றாக காண்பிக்க இயலும்.

அடுத்து Share என்பதைச் சுட்டி உங்கள் திரட்டியை வெளியிடுங்கள். உங்கள் திரட்டிக்கென ஒரு உரல்/சுட்டி கொடுக்கப்படும்.

உங்கள் திரட்டியை ஒரு குழுவிற்குள்ளாய் பகிர்ந்து கொள்ளவும் இயலும்.

அவ்வளவுதான். நீங்களும் திரட்டிசெய்துவிட்டீர்கள்.

என்னுடைய Page Flakes திரட்டி இதோ.

இது பாஸ்டன் பாலாவின் திரட்டி

இதை செய்துவிட்டு பின்னூட்டத்தில் காண்பியுங்கள். (ஹோம் வொர்க்).

வேறு கேள்விகள் இருந்தாலும் கேளுங்க.
சமயம் இல்லாததால் இப்படி சுருக்கி வெறும் தகவல்களையே தருகிறேன். மன்னிக்கவும்.

சிவாஜி - விமர்சனம்

ஷங்கர்னாலே பிரமாண்டம்தான். முழுக்க முழுக்க பிரமாண்டம் தெரிகிறது. துவக்கத்திலேர்ந்து கடைசிவரை காட்சிகள் மிக வேகமாக மாறுகின்றன. AVM லோகோவைத் தவிர வேறெதுவும் மெதுவாகச் செல்வதில்லை. இடையே சில முக்கிய டையலாக்கள், ஜோக்.

'ஏம்மா என்ன கறுப்பா பெத்த'
'வெள்ளையா இருந்தா அழுக்காயிருவேன்னுதான்'்.

பாடல் காட்சிகள் அருமையிலும் அருமை. விவேக் காமெடி கலக்கல். ரஜினி துப்பாக்கிய தூக்கிப் போட்டு அசத்துது உன ஸ்டைல்....்ஸ்டைல் ்டைல்

இதெல்லாம் சிவாஜி டிரெய்லர் பத்திய விமர்சனம்.

கூடவே.. சற்றுமுன் போட்டியில் சில சூப்பர் மாற்றங்கள் செஞ்சிருக்காங்க போய் பாருங்க, பங்கெடுங்க.

Thursday, June 07, 2007

லேஸ் கட்டுவது எப்படி?

'எப்படி?' பதிவுகளப் பாத்து ரெம்பநாளாச்சுல்ல...

Wednesday, June 06, 2007

சிவாஜி - கதை திரைக்கதை - ஆங்கிலத்தில்

இதுதாங்க சிவாஜியின் கதை, திரைக்கதை. மெயில் கோப்பா வந்தது.

டிரெயிலர் பாத்து இது எழுதியிருக்காங்களா அல்லது 3 பாட்ட இணையத்துல போட்ட கும்பலான்னு தெரியல. தீவிரவாதிகள் எல்லா இடத்திலேயும் இருக்காங்கப்பா.

படிச்சு பயன்பெறுங்க.. தமிழாக்க இப்போது நேரமில்ல.

This document is for one who eager to know about the Sivaji story (இது வேறயா)

Actual story:

Rajini is playing double role in Sivaji movie. One role will be a rich
father a well respected man among the community and other will be a
joyful son of the rich Rajini. Big Rajini was an owner of a college. He
becomes very popular among the local community by doing lot of good
things to the people surrounded.

A group of people were always against Big Rajini and were also doing
lot of activities against Big Rajini which created problems to his
college and to him. (ஸ்டோரி டிஸ்கஷன்ல இருந்தவனா?)This group which could not resist Rajini's
popularity decides to kill Big Rajini and they successfully killed Big
Rajini. After Big Rajini's death son Rajini takes all the responsibility
of his father and continues to run the college the same way like his father
use to run. Son Rajini was also humble and kind with the local
community and did lot good things to them. But few who were very
closely working with him joins hands with his fathers enemy cheats him
and takes all his fathers wealth and leaves the son Rajini with just
one rupee in the street.

Rajini (super star) tosses the one rupee coin and promises to the
people that he would get back all the wealth, fame of his father with
this one rupee. Interval. (படம் ஏற்கனவே பாத்துட்டானா இவன்? இல்ல ஷங்கரோட ஆவியா?)

In the climax super star becomes a millionaire and gets back all his
fathers wealth and fame. Then he takes a revenge on all the people who
were involved in killing his father. After all the revenge super star
gives all the money earned to his people and leaves the place tossing
the one rupee coin.the film ends.

Screenplay: (சுஜாதாவோட ஆளாயிருப்பானோ?)
The small rajini comes from US.the story begins from that.opening song
is ballelaika with nayanthara. The story moves normally with Vivek
jokes.vivek has given an excellent performance.he has been given equal
weightage to rajni in the first half.shriya is characterised as an
innocent girl.then love with shriya.sahana song.then she comes to know
about the other side of rajini with violence.she fets apart.you might
have seen that scene in the trailor.after she bangs the door,sahana sad
version.actualy rajini does all good things to people through violence
and blackmiles like a villain since he doesnt get justice through
rules.the scenes involving these sequences is one of the main
highlight.then he describes the flashback to shreya regarding why he is
doin all these.now big shivaji entrance.

THE FLASHBACK IS FOR 42 MINUTES SHARP.THIS IS THE MAIN HIGHLIGHT OF THE
WHOLE MOVIE.RAJINI WITH MOTTAI GET UP IS THE BIG RAJINI.YOU MIGHT HAVE
SEEN THOSE STILLS WITH MOTTAI RAJINI LIKE A DON. SHANKAR SAID THAT THERE
IS A SURPRISE FOR RAJINI FANS IN THE MOVIE.THE MOTTAI GET UP IS THE
SURPRISE.TAKE MY WORDS,THOSE 42 MINUTES ARE THE BEST EVER IN INDIAN
CINEMA.THALAIAVR MAY POSSIBLY GET EVEN A NATIONAL AWARD FOR THAT(ஏண்டா இந்த கொல வெறி).LOTS OF STYLE,PUNCH DIALOGUES & DEDICATED ACTING IN THAT 42 MINUTES(ரஜினி படத்துல இதெல்லாம் இல்லாமலா.. ரெம்ப கெஸ் வொர்க் பண்ணியிருக்கான்).SIMPLY SAYING;PATTAIYA KELAPRA FLASHBACK.

Since its too special,i cant say more about it.(சொல்றதையெல்லாம் சொல்லிட்டு) see it urself in the theatre(ரஜினியோட ஆளா?).that would be more interesting. Rani Mukherjee IS THE SURPRISE HEROINE in the film.she is big Rajini's pair.then big rajini is killed
as said in the story.then small rajini takes revenge & he preaches about
some ideas to our people & leaves the town.the film ends.

நான் முன்னால போஸ்ட்டர் பார்த்தே படத்தோட கதைய கெஸ்பண்ணி சில நேரம் தர்ம அடி வாங்குற நிலமைக்கு போயிருக்கேன். (ஏன்னா பசங்க பாடத்த ஏற்கனவே பாத்துட்டு சைலண்ட்டா என் கதைய கேப்பானுங்க) இது டிரெய்லர் பாத்து எழுதினதா அல்லது ஜப்பான் விசிறியின் சதியா ...
வெள்ளித் திரையில் காண்போம்.

Monday, June 04, 2007

பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!

நண்பர் பாலபாரதி சொன்ன அறிவுரையின்பேரில் Fire Fox உலவியை பயன்படுத்த ஆரம்பித்தேன். அபாரம், அற்புதம். பதிவர்களுக்கான பல கருவிகளையும் இதில் எளிதில் இணைத்துக்கொள்ள முடிகிறது.

அபாரமான RSS Reader!
Sage என ஒரு அருமையான செயலியின் துணைகொண்டு எளிதில் RSS ஓடைகளைத் தேடி, வாசிக்க இயல்கிறது.

StumbleUpon! எனும் செயலி வலையில் இருக்கும்ம் சுவாரஸ்யமானவைகளை கண்டுகொள்ள வழ்ழி செய்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தலைப்புக்களில் சிறப்பானவை என மற்றவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தளங்களை சென்று பார்க்க இயல்கிறது. நீங்களும் பரிந்துரைகள் செய்யலாம்.

StumbleUpon! வழியாக கண்டுகொண்டவற்றை சேகரித்து வைக்கவோ, மெயிலில் அனுப்பவோ அல்லது நேரடியாக பதிவில் போடவோ நினைத்தால் Clipmarks எனும் செயலியை பயன்படுத்தலாம். இதன்மூலம் தளங்களிலிருந்து படங்கள், பத்திகள் என எதையும் உங்களால் சேகரித்து பாதுகாக்க இயலும்.

Stumble! மற்றும் Clipmarks உதவியுடன் நான் செயல் படுத்தும் பதிவு இது.

எனவே பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!

முந்தைய பதிவு!

ஏழ்மையின் அழகியல்


சிரிக்கும்போதேனும் சில்லறைகள் சிதறலாம்

ஒரு கோப்பையுடன் என் குடியிருப்பு

இள'மயில்'் வறுமை?

தம்மரோ தம்

I have smile need penny. (Relate to first picture)

இணையத்தில் சுட்ட சில படங்கள். கவிதைகள் வரவேர்க்கப்படுகின்றன. நல்ல கவிதைகள் தேனில் சிறப்பு கவனம் பெறும்.

மேலும் சில சுட்ட படங்களை் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலுள்ள படங்கள் www.joeyl.com எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை

சிறில் அலெக்ஸ்