.

Friday, May 25, 2007

RSS தான் சிறந்தது - 1

பதிவர்களே. RSS பற்றிய பல பதிவுகளை படித்திருப்பீங்க. இது இன்னுமொரு RSS பதிவு என்றில்லாமல், பதிவுகளை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் RSS எப்படி பயனுள்ளதாக அமைகிறது எனப் பார்க்கும் பதிவு.

இந்த சொதப்பல் பில்ட் அப் ஒரு பராபரப்பை உண்டாக்கத்தான். இந்தப் பதிவின் நோக்கம் உங்களுக்கென நீங்களே ஒரு திரட்டியை உருவாக்க என்ன வேண்டும் என்பதைச் சொல்வதே. ஒரு கேள்வி பதில் வடிவத்துல சொல்லட்டுமா?

எனக்கே நான் திரட்டி செய்ய இயலுமா? ஆமாங்க ஆமா.

ஏன் தனி திரட்டி?
எல்லாம் ஒரு பந்தாதான்... மத்த நன்மைகள் உங்களுக்குத் தெரியாதா?

அடிப்படையில என்ன விபரங்கள் தேவை?
நீங்க திரட்ட விரும்பும் பதிவுகளின் சுட்டி அல்லது பதிவின் அல்லது தளத்தின் ்RSS சுட்டி.

இதுக்காக RSSல சேரணுமா? அல்லது இது வேற RSSஆ? இது வேற டெக்னிக்கல் ்சமாச்சாரRSS - Real Simple Syndication (மலையாளியா இருந்தா simble) Rich Site Summary எனவும் இதை வழங்குகிறார்கள். RSS தமிழில் செய்தி ஓடை அல்லது வெறுமனே ஓடை(Feed) என மொழிபெயர்கலாம்(பெயர்்த்திருக்கிறார்கள்)்.

எனக்கு RSS பிடிக்காதே?
RSS இல்லைன்னா ஆட்டம்தான். அதாவது Atom. அது இன்னொரு வகையான ஓடை ஆனா பரவலா RSSதான் பயன்படுத்துறாங்க.

உதாரணமா ஒண்ணு சொல்லுங்களேன்... இப்ப என்னோட பதிவுக்கு RSS ஓடை http://theyn.blogspot.com/feeds/posts/default?alt=rss அல்லது http://theyn.blogspot.com/feeds/posts/default மட்டும் பயன்படுத்தலாம். எல்லா Blogger பதிவுகளுக்கும் இந்த சுட்டி பயன்படும். http://theyn.blogspot.com என்பதுக்கு பதில் உங்களுக்கு விருப்பமான பதிவின் பெயரை போட்டுக்கணும்.

Wordpress feed எப்படி இருக்கும்?
http://balabharathi.wordpress.com/feed/ நம்ம அண்ணன் பால பாரதியின் feed இது.

சரி இந்த சுட்டிய வச்சி என்ன செய்யுறது? நிறைய செய்யலாம்.
1. RSS வாசகக்கருவிகள்/செயலிகள் (Readers) பலதும்்ய இருக்குது அதுல சேர்த்து படிக்கலாம்.
2. புதிய ப்ளாகரின் வார்ப்புருவில் ELEMENTஆக சேர்க்கலாம்
3. உங்க வலைப்பக்கத்தில் தெரியச் செய்யலாம்
4. பல தளங்களில் உள்ள செய்திகளை ஒருங்கிணைத்து ஒன்றாக்கலாம்.

இன்னும் நிறைய செய்யலாம்.

வாசக செயலிகள்(Readers) எப்படி பயன்படுத்துவது? ரெம்ப எளிமையா வேணுமின்னா உங்க கூகிள் மெயில் ஐடிய வச்சுகிட்டு்வச்ச்சிகிட்டு கூகிள் ரீடர்ல போயி பயன்படுத்தி பார்க்கலாம். இத எப்படி ப்பயன்படுத்துவதுன்னு இந்தப்்தப் பதிவப் பாத்து தெரிஞ்சுகுங்க.

ரெம்ப எளிமையா வடிவமைச்சிருக்காங்க. போங்க Feedஅ சேருங்க. படியுங்க.

Firefox உலவி வச்சிருக்கீங்கண்ணா Sageணு ஒரு அருமையான Add-in இருக்குது. இத வச்சி நீங்க விசிட் அடிக்கிற தளங்களில் ஏதாச்சும் Feed (ஓடை) இருக்குதான்னு எளிதில் தேட முடியும்.

இலவச RSS readerகள் எக்கச்சக்கமாயிருக்குதுங்க. கூகிளாண்டவர்கிட்ட கேட்டா அள்ளிக் கொடுப்பார். ஆனா நான் இந்த பதிவு வரிசையில கூகிள் ரீடர வச்சித்தான் உதாரணங்கள் தரப்போறேன்.

ரீடர்ல பதிவுகள எளிதா சேக்கிறதுக்கு என்ன செய்யலாம்? ஒரு எளிய வழி என்னண்ணா OPML என்கிற கோப்ப வச்சி எளிதா சேத்துக்கலாம். OPML என்பது ஓடைகளின் தொகுப்பை கொண்ட கோப்பு(File). இதையும் ரீடர்களிலேந்துதான் பெற இயலும். இல்ல ஏற்கனவே இருக்கிற திரட்டிகள் இதப் பகிர்ந்துகிட்டாங்கன்னா எடுத்துக்கலாம. அல்லது உங்க வலையுலக நண்பரிடம் கேக்கலாம்் (நண்பர்கள் OPML பகிர்ந்துக்க விருப்பப்பட்டால் தெரிவிக்கவும்) என்னோட ஓடை தொகுப்புக்கள் வேணுமின்னா மின்னஞ்சல் செய்யவும் (cvalex @ yahoo .காம்). என்னோடது முழுமையானதில்ல ஆனா 200பதிவுகள் கிட்ட இருக்குது.

பதிவ சேத்தாச்சு அப்புறம்?
கூகிள் ரீடர்லேந்தே உங்க பதிவுகள படிக்க ஆரம்பிக்கலாம். ஆனா அதுக்கும் மேலேயும் சில சூப்பர் விஷயங்களெல்லாம்ம் இருக்குது....

அடுத்த பதிவுல பாக்கலாம்....

அடுத்து வரும் கேள்விகள்
எப்படி ஓடைகளை வகைப்படுத்துவது?
ஓடைகளை ஒருங்கிணைப்பது எப்படி?
நாமே RSS ஓடைகளை உருவாக்குவது எப்படி?
என் ஓடைகளை தெளிவா பார்வையிட இயலுமா?
என் தனி திரட்டி செய்வது எப்படி?

மேலதிக விபரங்களுக்கு

1. விக்கிபீடியா - RSSனா இன்னா நைனா?
2. விக்கிபீடியா - ஆட்ம்னா இன்னாமே?
3. கூகிள் வாசிககாகச்சோல்ல எல்ப்(help)
4. கூகிள் ரீடர் எங்க இருக்குது மாம்ஸ்?

இளமை புதுமை (அ) வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது

பின் நவீனத்துவ தலைப்பு அல்லது பின் நவீனத்துவ தலைப்பை படித்து என்னதோ ஏதோன்னு நினைச்சீங்கண்ணா மன்னிக்கவும்.

நண்பர் சிந்தாநதியின் பேருதவியோடு அடைப்பலகை அல்லது டெம்ப்ளேட் அல்லது வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டுள்லது அல்லது மறுவடிவமைக்கப்பட்டுள்ளது அல்லது (டேய்.. போதும்டா அல்லது).

கிட்டத்தட்ட ஒரு மினி திரட்டிபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. சற்றுமுன் செய்திகள், திரட்டிLESS - திரட்டிகளில் சேர்க்கப்படாத பதிவுகள் சில, தமிழோவியம் வாராந்திரி, நான் கவனிப்பில் வைத்திருக்கும் பதிவுகள் சில, படித்ததில் பிடித்தவை அப்புறம் மாற்று பரிந்துரைகள் எல்லாம் இங்கேயே தெரியும்படி வச்சிருக்கேன்.

ஒரே ஒரு கவலை.. இது லோட் ஆக நேரம் எடுக்குதான்னு தெரியணும்.

உங்க கருத்தை சொல்லுங்க அல்லது செப்புங்க அல்லது எழுதுங்க ப்ளீஸ்.

உங்களுக்கே நீங்கள் ஒரு மினி திரட்டி செய்துகொள்வது எப்படின்னு விரைவில் ஒரு பதிவப் போட்டு பாடம் எடுக்கிறேன்.

Wednesday, May 23, 2007

பூவானது மனம்

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவு

அன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன்.

பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். (அட மானசீக குருக்களா.. எங்கிட்ட இருக்கிறது ரெண்டே ரெண்டு கட்ட வெரல்தான் அத கட் பண்ணிரமாட்டீங்களே?)

பாடல் போடணும்னு தோணியதுக்கு காரணம், கையில நேரமிருந்துச்சு, வீட்ல (அப்ப) யாருமே இல்ல, முக்கியமா கம்போஸ் பண்ணி போட்டிக்கு அனுப்புறது சிரமமான வேலை அதனால நிறையபேர் செய்யமாட்டாங்க. அப்ப இண்டர்நேஷனல் லா ஆப் நிகழ்தகவுப்படி வெற்றி வாய்ப்பு அதிகம்.

சரின்னு 2வது மாடி பால்கனிலேந்து யோசிச்சதுல ஒரு கவித வந்துச்சு. தனிமைய ஹீரோ எஞ்ஞாசாய் பண்ணுறப்ப பாடுறமாதிரி ஒரு பாட்டு. நம்ம நிழல்கள் 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' மாதிரி.

'பூவானது மனம்,
வண்டாயிரம் வரும்,
தேனூறிடும் நிதம்'

முதல்ல மெட்டோட இதத்தான் போட்டேன். அடுத்த சில மணி நேரமா வேறெதுவும் தோணல. இதையே பாடினேன்.

மீண்டும் பால்கனி.

கீழே புல்வெளி. மெலிதாய் காற்று. மரங்கள் அசைய ஆரம்பித்தன. பறவைகள் பேச ஆரம்பித்தன. கவிதை பிறந்தது. (செம பில்ட் அப் மச்சி).

'இயற்கையை பாடவே, இதயமும் பூக்குதே' ஆரம்பிச்சேன்.

'கடவுளின் சாயலா? - இயற்கை கனிமக் கூடலா?' ம்ம்.. சரியில்ல
'கடவுளின் சாயலா? - இயற்கை கவிதைக் கூடலா?' ஓகே.

இன்னும் சில வரிகள்.

என்னுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்கு லேப் டாப்ப எடுத்துட்டு போய் ரெக்கார்ட் பண்ணினேன். அப்புறம் Flush பண்ணிட்டு வெளிய வந்துட்டேன். ஏன்னா நான் ரெக்கார்ட் பண்ணினது பாத்ரூம்ல வச்சி. அங்கதான் வெளி சத்தம் குறைவா கேக்கும்.

போட்டிக்கு பாடல் போய் இப்ப இரண்டாம் பரிசு பெற்றிருக்குது.

சும்மா சொல்லக்கூடாது போட்டியில மற்றபாடல்களெல்லாம் தூள். அருமையா மெட்டமைத்து, ப்ரொபஷனலா (பாத்ரூம் அல்லாத) ரெக்கார்டிங் செஞ்சு, இசை சேர்த்து கலக்கியிருந்தாங்க.

அன்புடன் போட்டி அறிவிப்புக்கள் ஒவ்வொண்ணா வருது. முதல்ல இயல் கவிதை மாலன் நடுவராயிருந்தார். இரண்டாவது ஒலிக்கவிதை. இதுல என் கவிதை இடம்பெறல. ஆனா குழப்பத்துல நான் வெற்றி பெறலண்ணு நினச்சு அன்புடன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள கண்டபடி திட்டிட்டேன்...மானசீகமாத்தான்.

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் சேதுக்கரசி, கவிஞர் புகாரி, ப்ரியன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் இன்னூம் தூள் கிளப்பிடலாம்(அந்த நேரம் நான் வீட்ல தனியா இருந்தா).

ஷங்கரின் சிவாஜிக்கு அடுத்த படமான 'பதிவன்' படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர். ('பதிவன்' - The Post.)

இந்த பாட்டுக்கு இந்த பில்ட் அப் தேவையான்னு நீங்களே கேட்டு முடிவு பண்ணுங்க.

வர்ட்டா... 'அவசரமா' ரெக்கார்டிங் இருக்குது. ஹி ஹி ஹி.


poovanathu -comp
poovanathu -comp.w...
Hosted by eSnips


பாடல் கேட்க மேலே சுட்டுங்க

பூவானது

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே
மலை தரும் பாடங்கள் என்ன

மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது
0
துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோஷம் கொள்ளுதே

அள்ளி அள்ளி வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால் கண்ணீரைச் சிந்துதே

வன்முறைகள் தேவையில்லை சொல்லாமல் சொல்லுதே
வானத்தில் ஏறிவரும் மேகங்களும்

யாருக்கும் தடையின்றி மழை பொழியும்

கடவுளின் சாயலா - இயற்கை
கவிதை கூடலா
மலர்களும் பேசுமா - மனித
மனதைத் தீண்டுமா
பூவானது மனம்

வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் - பூவானது ...

புகாரியின் பாராட்டு

அன்பின் சிறில் அலெக்ஸ்,
கலக்கிட்டீங்க போங்க!
இயற்கையைப் போற்றும் இந்த அருமையான கவிதையையும் எழுதி மெட்டும் போட்டு அழகாய்ப் பாடியும் இருக்கிறீர்களே, அடடா!
பாட்டு ஓய்ந்தபின்னும் கேட்டுக்கிடக்கிறது என் செவி!
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, இசையமைத்து, பாடலாய்ப் பாடி தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி


நடுவர் இசைக்கவிஞர் இரமணன் மதிப்பீடு
1 பூவானது
கணப்பொழுதும் இடைவெளியின்றி இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கும் பாடங்களைக் கேட்குமாறு இந்தப் பாடல் பணிக்கிறது. சன்னமான சொற்கள்; பொருத்தமான மெட்டு; 'கடவுளின் சாயலா? இயற்கை கவிதைக் கூடலா?' என்பது இந்தப் பாடலின் ஜீவ வரி. இனிய கவிதை இது.
இயற்றியவரே மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும், உணர்ச்சி, அவர் குரலைக் கேட்கும்படிச் செய்கிறது.


//அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும்,//
:(((

Monday, May 21, 2007

தமிழ்மணம் வாசிப்பில்

கட்டுரைகள் வாக்கியத் தொகுப்பு. கவிதைகள் வார்த்தைத் தொகுப்பு. வாக்கியங்கள் சிறப்பாய் அமைந்தால் கட்டுரை சிறக்கும். ஒவ்வொரு வார்த்தையும் கவிதைக்குப் பொருள்தரும். அப்படி வார்த்தைகளும் வாக்கியங்களும் சிறந்த சில படைப்புக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

லிவிங் ஸ்மைல் வித்யா(லிஸ்) பல கட்டுரைகள் எழுதியிருந்தபோதும் இந்தக்கவிதை கன்னத்தில் அறைகிறது. திரும்பிப் பார்க்கையில், நம் தடங்களில் மிதியுண்ட மனிதர்கள் எத்தனைபேர்? கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக லிஸ் நம் முன்வைக்கும் திருநங்கைகளைப் பற்றி நம் சிந்தனைகள் என்ன? சமூக அங்கீகாரம் ஒருபக்கம் இருக்கட்டும் நான் எப்போது இவர்களை சகாக்களாக ஏற்றுக்கொள்ளப்போகிறேன்? மயிலிறகால் பெருக்கிக்கொண்டே போகும் சில சாதுக்களைப்போல மனதுக்கும் ஒன்றிருந்தால், எள்ளல் பேச்சாலும், விலகியோடும் பார்வைகளாலும் இவர்களை மிதித்திருக்கமாட்டேனோ?


புலம்பெயர்ந்த தமிழரிடையே வற்றிப்போகும் உணர்வுகளைப்பற்றிய
கவிதை ஒன்றை அய்யனார்வரைந்துள்ளார். இந்திய, தமிழகச் செய்திகள் என்னிடத்தில் என்ன பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன? மீண்டும் ஒரூ சுயசோதனை. இப்போதெல்லாம் இதைப்பற்றிப் பதிவில் என்ன எழுதுவது என்கிற எண்ணம் மேலோங்குகிறது. செய்தியின் தாக்கத்தைவிட இதில் என் கருத்தென்ன என்பது முதலாகிறது. அறிவார்ந்த அலசல் எழுகிறபோது உணர்வுகள் வற்றிப்போகின்றன. உணர்விலிருந்து எழும் சிந்தனைகள் உயிருள்ளவை.

'இசைக்குறிப்புகளின் அடிக்குறிப்பிலேயே
மிருகங்களை பழக்கும் வித்தையறிந்தவள்'.
எதிர்மறைகள் கவிதையை அலங்கரிக்க சிறந்த யுக்தி. ஆனால் அலங்காரத்திற்காக மட்டுமே
மிதக்கும்வெளி சுகுணா திவாகர் இந்த வரிகளை வைத்திருக்கவில்லை. 'சொற்களின் தாய்' தலைப்பிலேயே இலக்கிய நயம். கவிதை முழுக்க நிஜங்களை மாயமாக்கும் சொல்விளையாட்டு. சொற்களின் தாய் மொழிதானே?

குறைகுடம் பிரசன்னாவின் கற்பனை மழைக்கம்பிகளில் கவிதை கோர்க்கிறது, தீக்குளத்தில் பற்றுதலைத் தேடுகிறது, புத்தனைப் பரிதாபத்துக்குரியவனாக்குகிறது. காதலெனும் போதை மரத்தினடியிலேயே ஞானம் கிடைக்கையில் போதிமரங்கள் எதற்கு?

வறியவன் ஒருவன் கோவிலுக்குப் போனான். அவனை உள்ளே விட மறுத்தனர் கோவில் நிர்வாகிகள். வெளியில் நின்று கடவுளைக் கேட்டான்,"பார் என்னை வெளியேத் தள்ளிவிட்டனர்." கடவுள் சொன்னார் "என்னையும்தான்!". ஷைலஜாவின் இந்தக்
கவிதை சொல்வது இதைத்தானோ?

காதலர் விளையாட்டொன்றை கண்முன்னே காண்பிக்கிறார் தேவ். காட்சிகளின் விவரிப்பில் கட்டில் களத்தில் முத்தப் பேச்சுக்கள் சப்தமாகவே கேட்கின்றன. காதலன், காதலியோடு காற்றும் சேர்ந்துகொள்கிறது. அந்த முத்தச் சத்தம் நிலவொளியில் கரையும் முன் காதல் கலைகிறது. போரின் பிணக்குவியலில் இறந்துகிடப்பது மனிதர்கள் மட்டுமா?

'வெயில் எழுதியது' இது கவிதையா கட்டுரையா? அசரவைக்கும் நடை. வார்த்தைகள், பாலைகளுக்கு நடுவே பூத்த மலர்களைப்போல மின்னுகின்றன. வெயிலின் நிஜங்கள் சுடுகின்றன, குளிர்ருட்டப்பட்ட அறையினுள்ளும்.

சிலந்தி வலைபின்னிய கதை எத்தனைமுறை கேட்டிருப்போம் அதையே இனிக்கும் வார்த்தைகளில் உரக்கச் சொல்லியிருக்கிறார் கவிஞர். சிலந்தியைப் போலவே இன்னுமொருமுறை படிக்கலாம்.

"எதிலும் இருக்க வேண்டும்

இன்னொரு முயற்சியின் வித்து

முயற்சிகளின் மூட்டையில்

கட்டப்பட்ட வெற்றியின் அஸ்திவாரமே,

என்றைக்கும் உறுதியானது!"

திருவிழாக்கள் நம் கலாசார வெளிப்பாடுகளின் உச்சகட்டம் எனலாம். இன்றைக்கும் பல குமுகங்களில் எஞ்சிநிற்கும் கலாசாரக்கூறு கோவில் திருவிழாக்களே. மண்மணம் வீசும் திருவிழாக்கள் கோவில் திருவிழாக்கள். அதுவும் கும்பிடும் சாமி மீதே மண்மணம் வீசுமென்றால்? மது வடியும் ஊர்த் திருவிழா சுந்தரவடிவேலின் கட்டுரை முழுவதும் நினைவுகளின் கொண்டாட்டம். மண்மணம் வீசும் கட்டுரை. கொஞ்சம், மயக்கும் மதுமணமும்.

சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளின் விளைவுகளை அலசும்
பத்ரியின் கட்டுரை தோன்றுதல்களைத் தவிர்த்து நேரடி ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முன்னோடியாய் சேவியரின் இந்தக் கட்டுரையும் சிறப்பாயிருந்தது.

கடவுள் நம்பிக்கை - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு
ஒரு குட்டிப்பிசாசு பதிலளித்துள்ளது. இங்கே சிரிப்பான் போட்டுக்கொள்ளலாம். கடவுளின் இருப்பை, தேவையை குறித்த வாதங்களின் துவக்க உரையாக எடுத்துக்கொள்ளலாம் இதை.

இந்தவாரம் முழுக்க டி.வி பாணியில் அரசியல் திங்கள் துவங்கி காவியபுதன் வரை விக்கி
வலைச்சரத்தில் தொகுத்திருந்த பதிவுகளும் அவர் தொகுத்திருந்த விதமும் அருமை. பழைய பதிவுகளை அலசுவதாகட்டும் புதியவர்க்ளை அறிமுகம் செய்வதிலாகட்டும் வலைச்சரத்தின் நோக்கத்தை உணர்த்திய பதிவுகள்.

பெரியாரை அவரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல பின்பற்றுபவர்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என அவ்வப்போது எனக்கு சந்தேகங்கள் எழும். பெரியாரின் காலத்துக்கேற்ற அவரின் நடவடிக்கைகள் இன்றும் தேவையானதா என்பது உப கேள்வி.
இவரும் அதைத்தான் கேட்கிறாரோ?

இளவஞ்சியின்
இளவயது கிரிக்கெட் போட்டிகள் பற்றிய சுவையானபதிவு, வெர்டிகோ பற்றி ஜெசிலா கிறுக்கிய தகவல்கள், ஆழியூரானின் 'ரவுடி பிரேமா' சிறுகதை, மதியின் வேர்ட்பிரஸ்பற்றிய தகவல்கள், ஷைலஜாவின் அன்னையர்தினப் பதிவு, நிவேதாவின் இந்தக் கவிதை, ஜோவின் பெரியார் விமர்சனம் என இந்தவார தமிழ்மண வாசம் நிறைவாக இருந்தது.

முக்கியமான ஒரு பதிவ விட்டுட்டேனோ? ஆமா! அதை விட்டுவிட்டோம் :)


அன்புடன்
சிறில் அலெக்ஸ்

இந்த வாரப் பூங்காவில் வந்த கட்டுரை. வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கு நன்றி.

Thursday, May 17, 2007

இளையராஜா: இசைத்தட்டிலிருந்து குறுந்தட்டுக்கு...

தல இளையராஜாவ ஒரு இந்திப் படத்துக்கு இசையமைக்க கூப்பிட்டிருக்காங்க. தல புதுசா ஏதாவது போட்டு கலக்கி (திரும்பவும்) தேசிய அளவுல கால்பதிப்பார்னு பாத்தா பழச புதுசா போட்டிருக்காரு.

அமிதாப் பச்சன், தபு நடிச்சிருக்கிற சீனி கம் (சக்கர கம்மின்னு அர்த்தமா?) படத்துக்கு தலதான் ம்யூசிக்.

தன் பாடல்கள யுவன் எவனோ (தட்டச்சுப் பிழையில்லை) ரீ மிக்ஸ் பண்ணி பேருவாங்குறான் நான் பண்ணா என்னண்னு...

சும்மா சொல்லக்கூடாது தூள் பறத்தியிருக்காரு.

விழியிலே மணி விழியிலே மௌனமொழி பேசும்..
குழலூதும் கண்ணனுக்கு
மன்றம் வந்த தென்றலுக்கு

இந்த மூணு பாடல்களும் மறு-கலப்பு(re-mix ஆகா) செஞ்சிருக்காரு.

இந்தி தெரிஞ்சா இன்னும் ரசிக்கலாம். முஜ்சே ஹிந்தி நகி மாலும்.

பாடல்களைக் கேட்க.

Thursday, May 10, 2007

1000 பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

www.satrumun.com

ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?

ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.

அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்கலானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.

வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.

இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறதுஎன்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).

பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.

வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா?
இதில் பங்களித்து பயன்பெறுங்கள்.

பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.

பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.

Wednesday, May 09, 2007

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பு

சற்றுமுன்னின் சாதனை விவரம் இங்கே...

1. சற்றுமுன் 999

2. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

சற்றுமுன்... ஆயிரம் பதிவுகளை எட்டுவதை முன்னிட்டு மாபெரும் போட்டியை நடத்துகிறது. இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி.

போட்டிக்கான செய்திக்கட்டுரைகளின் வகைகள்:-

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம்/வணிகம்

மேற்கண்டவற்றில் எந்த வகையின் கீழூம் செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .

செய்திக்கட்டுரைகளின் விபரம்:-

நடப்புச் செய்திகளையோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையோ தொகுத்து முடிவுகளை எட்டும் கட்டுரைகளை வரையலாம்.

ஒரு தலைப்பின் கீழ் சில செய்திகளைத் தொகுத்து முடிவுகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, 'பெண்ணியம் ' எனும் தலைப்பின் கீழ் செய்திகள் , புள்ளிவிபரங்களைக் கொண்டு கட்டுரை வரையலாம். நானோ நுட்பம் (Nanotechnology) குறித்த செய்திக் கட்டுரை எழுதலாம்.

ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் வரையலாம்.

செய்திகளை நையாண்டி செய்யும் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள் :

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 1500/- மதிப்புள்ள புத்தகங்கள்

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 500/- மதிப்புள்ள புத்தகங்கள்.

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 15 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். அதாவது கீழுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் மூன்று சமமான பரிசுகள்

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம் /வணிகம்

வித்தியாசமான கட்டுரைக்கான பரிசுகள்:-

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 500/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு)

சிறப்பு பரிசுகள் :-

போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு .

பரிசுகளில் உங்களின் விருப்பம்:-

வெற்றி பெற்றவர் விரும்பினால் பரிசுத் தொகையைத் தான் விரும்பும் ( அல்லது சற்றுமுன் தேர்ந்தெடுக்கும்) ஒரு சமூக சேவைக்கு வெற்றி பெற்றவரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும் .

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி :

பதிவர்கள் தங்கள் பதிவுகளில் பதித்துவிட்டு satrumun@gmail.com ற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யலாம் .

அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகத் தரலாம்.

எந்தப் பிரிவின் கீழ் கட்டுரை சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியரே குறிப்பிடவேன்டும். இப்படிக் குறிப்பிடப்படாத கட்டுரைகளுக்கு சற்றுமுன் குழுவே பிரிவைத் தேர்ந்தெடுக்கும் .

பதிவர் அல்லாதவர்களும் முடிந்தவரை தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். ஒருங்குறியில் எழுத இயலாதவர்கள் மட்டும் பிற எழுத்துருக்களிலும் அனுப்பலாம்.

கட்டுரைகளை அனுப்ப கடைசி நாள் : ஜூன் 10, 2007

சில விதிமுறைகள் :

போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை போட்டியில் சேர்த்துக் கொள்வது சற்றுமுன் குழுவின் முடிவே.


ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப் பட மாட்டாது.

மே 8 மற்றும் அதற்குப் பின் எழுதப் பட்ட விமர்சனக் கட்டுரைகளாக இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்

போட்டியின் விதிகளை மாற்றி அமைக்கவோ புதிய விதிகளை ஏற்படுத்தவோ உள்ள அதிகாரத்தை சற்றுமுன் தக்கவைத்துக் கொள்கிறது.

Saturday, May 05, 2007

'சற்றுமுன்...1000' மாபெரும் போட்டி

'சற்றுமுன்...' தளம் துவங்கி நூறு நாட்களுக்குள்ளாகவே ஆயிரம் பதிவுகளை எட்டப் போகிறது. வலைப்பதிவுகளில் இது பெரும் சாதனையாகவே இருக்கும்.

ஆயிரமாவது பதிவை நினைவுகூறும் விதமாகவும் இணையப் பயனர்களிடையே செய்தி விமர்சனம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் மாபெரும் போட்டி ஒன்றை ஒருங்கிணைக்கவுள்ளோம்.

மொத்த பரிசுத் தொகை ரூ. 20,000த்துக்கு மேல். 50க்கும் மேற்பட்ட பரிசுகள்.

இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி. செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட அரசியல், சமூகம், அறிவியல், வணிகம், விளையாட்டு எனும் வகைப்பாடுகளின் கீழ் கட்டுரைகள் வரையலாம்.

போட்டி குறித்த முழு விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

போட்டி குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பரிசுகளை வழங்க சற்றுமுன்னுடன் இணைய விரும்புபவர்கள் சற்றுமுன் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

சிறில் அலெக்ஸ்