.

Tuesday, July 25, 2006

மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்

சற்று முன் வந்த செய்தி(ஜூலை 25 2006 9:20PM). இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஐ.நா சபை பார்வையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலுமிருவர் காணாமல் போயிருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும், புஷ் பாணியில்,தீவிரவாதிகளை கொல்கிறேன் பேர்வழி என்று கொன்று குவிக்கிறது,இஸ்ரேல். இப்போது ஐ.நா சபை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பது பிரச்சனையில் இஸ்ரேலின் பக்கத்தை கொஞ்சம் வலுவிழக்கச் செய்திருக்கிறது.

கோஃபி ஆனன் இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்றிருக்கிறார்(Attack "apparently deliberate," U.N. head says-CNN). இஸ்ரேல் இதை மறுத்துள்ளது (Israel's U.S. envoy outraged by Annan comment - CNN).

அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேல், ஐ.நாவெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விஷயமா?

8 comments:

சிறில் அலெக்ஸ் said...

தவறுகளை சரிசெய்துவிட்டேன் ..நன்றி.உங்கள் பணி தொடர்க.

Anonymous said...

Israel is not acheiving anything by doing these kinds of activities. To justify the kidnapping of two soldiers, they are doing all these nonsense. What would be the reactions of the innocent victims who are stranded by these attacks. Are they going to be Christs or Gandhis?

Unknown said...

இது மிகவும் கண்டிக்கப்படவேண்டியது.

ஜோ/Joe said...

டோண்டு சாரிடம் கேட்டால் இதில் இஸ்ரேலுக்குள்ள நியாயத்தைப் பற்றி விளக்கக் கூடும்.

மருதநாயகம் said...

இஸ்ரேல் ஐ.நா.வை என்று மதித்தது இன்று மதிக்க

வஜ்ரா said...

சிறில்,

அது உண்மையான சிவஞாமன் ஜி இல்லை....ஒரு போலி...தயவு செய்து அவன் பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள்.

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர்,
நன்றி...நீக்கிவிட்டேன்.
உங்கள் கருத்தை சொல்லவில்லையே?

மணியன் said...

கொல்லப்பட்ட பார்வையாளர்களை சீக்கிய வீரர்கள் எடுத்துச் செல்லும் படம் பார்த்தேன்; கொல்லப்பட்டது இந்தியர்களோ ?

இஸ்ரேலின் இந்த அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் பக்கம் எந்த நியாயம் இருந்தாலும், இந்த போர் ஒரு வன்முறைஅரசின் (Terrorist Govt) செயலே.

சிறில் அலெக்ஸ்